Sunday, March 04, 2007

போயஸ் தோட்டத்தில் புதையுண்ட பீஜே

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..)

ஒவ்வொரு காலகட்டத்திலும், நமது சமுதாயத்தில் சில புல்லுருவிகள் உருவாகி, நம்மை வழிகேட்டின்பால் இட்டுச் செல்ல எத்தனிக்கின்றனர்.

அந்த வரிசையில், நவீன அபூஜஹல், திருவாளர் பீஜேயும் ஒருவராகி இன்னும் குறிப்பாக சொல்வதானால், இதுவரை தோன்றிய வழிகேடர்களுக்கெல்லாம் தலைவராகவே உருவெடுத்து வருகிறார்.

இவரது சமீபத்திய நடவடிக்கைகளை காணும் உண்மை முஸ்லிம்கள் முகம் சுழிக்கின்றனர். அவரது முந்தய கால செயல்பாடுகளினால் கவரப்பட்டவர்கள், இவரின் தற்கால நிலை கண்டு கவலைப்படுகின்றனர்.

மார்க்கத்தை மற்றவர்கள் கூறுபோடுவதாக கூப்பாடு போட்டவரின் தற்போதய நிலை என்னவென்றால், மார்க்கம் தன்னிஷ்டப்படி இருக்க வேண்டும். தன்னுடைய விளக்கத்தின் படிதான் செயல்பட வேண்டும். அத்தகையோர் தான் முஸ்லிம்கள். மற்றவர்கள் முஸ்லிம்களல்லர் என தன்னுடைய அடிவருடிகளுக்கு அருளாசி வழங்கி வருகின்றார்.

புலியைப் பார்த்து சூடு போட்டுக் கொண்ட பூனையைப் போல, தமிழக முஸ்லிம்களின் தனிப்பெரும் நம்பிக்கை நட்சத்திரமாய் ஜொலிக்கும் தமுமுகவை கண்டு, அதேபோல் தானும் ஒரு இயக்கம் காண வேண்டுமென்ற தனியாத தலைமை பித்துபிடித்து, தமுமுகவை கைப்பற்ற தகிடுதத்தங்கள் செய்து பார்த்தார். பலிக்கவில்லை. பதவி மற்றும் பண பித்து பிடித்த காரணத்தால், தீட்டிய மரத்தையே பதம் பார்க்கும் கோடாலி காம்பாய் மாறி இயக்கத்தை உடைக்க முயற்சித்தார். அந்தோ பரிதாபம் அதிலும் தோல்வி தான்.

ஆறே மாதத்தில் தமுமுகவை ஒழித்து விடுவேன் என சூளுரைத்தவர், அதனைச் சொல்லியே போயஸ் தோட்டத்தில் பெட்டி பரிவர்த்தனை செய்தவர், சொன்னபடி செய்ய முடியாததாலும் பெட்டி கொடுத்தவருக்கு விசுவாசமாய் இன்றும் போயஸ் தோட்டத்து கருத்துக்களையே பிரதிபலித்து வருகிறார்.

தமுமுகவை உடைக்க முயற்சித்து முடியாமல், தனது அடிவருடிகள் சிலரோடு வெளியேறியவர், தமுமுக தொண்டர்களால் போஷிக்கப்பட்ட உணர்வு வார இதழை எரிகிற வீட்டில் பிடுங்கியது இலாபம் என கைப்பற்றிக் கொண்டு சென்றார்.

அன்று முதல் இன்று வரை அப்பத்திரிக்கையை தமுமுகவின் மீது அவதூறு பரப்புவதற்காக உபயோகப்படுத்தி வருகிறார். அதாவது தமுமுகவின் விரலை திருடி அதனைக் கொண்டே தமுமுகவின் கண்ணைக் குத்தும் திருப்பணியில் ஈடுபட்டுள்ளார்.

அந்த திருடப்பட்ட பத்திரிக்கைக்கு சமீபத்தில் விலையேற்றத்தையும் அறிவித்தார்.

ஒரு காலத்தில் முஸ்லிம் பத்திரிக்கைகளில் முதலிடத்தைப் பெற்றிருந்த அவ்விதழ் தற்சமயம் போயஸ் தோட்டத்தில் புதையுண்டு போன தறுதலை ஜமாத் தலைவன் பீஜேவின் சுயபுராண இதழாக மாறிவிட்டதால் சர்க்குலேசன் சறுக்கிக் கொண்டு போய் அதள பாதாளத்தில் விழுந்துள்ளது.

சுனாமியில் சுருட்டிய பணத்தில் சுமார் 2 இலட்சத்தை சுவீகாரம் அளித்தும் சுகப்படாத காரணத்தால் விலையேற்றி உள்ளனர்.

ஆனால், அதைவிட அப்பத்திரிக்கையின் தரத்தை உயர்த்த முயற்சிப்பது நன்று.

முஸ்லிம் சமுதாய பிரச்சனைகளுக்காக குரல் கொடுப்பது இப்பொழுது அருகிப்போயுள்ளது. சட்டமன்ற தேர்தல் தோல்விக்குப்பின், போயஸ் தோட்டத்து மகாராணி முஸ்லிம் சமுதாயத்தை தொடர்ந்து சீண்டி வருகிறார்.

அவற்றை கண்டிக்க உணர்வுக்கு சமுதாய உணர்வில்லை. காரணம் போயஸ் தோட்டத்து பெட்டியில் புதையுண்டதால் தானோ?

முதலில், ஐஎஎஸ் அதிகாரி முனீர் ஹுதாவை சாடினார். முனீர்ஹுதா தனது பதவியை துஷ்பிரயோகம் செய்து கோவை சிறைவாசியான அப்பாவி அப்துந்நாஸர் மஃதனிக்கு உதவினார் என நா கூசாமல் ஜெயலலிதா குற்றம் சாட்டினார்.

தமுமுக வன்மையாக இதனை மறுத்து அறிக்கையும் ஆர்ப்பாட்டமும் நடத்தியது. ஐஎஎஸ் அதிகாரிகள் சங்கமும் தனது கண்டனத்தை வெளியிட்டது.

ஆனால் போயஸ் தோட்டத்தில் புதையுண்டு போன பீஜே மூச்சு விடவில்லை.

இரண்டாவதாக, செல்வி (?) ஜெயலலிதா ஐபிஎஸ் அதிகாரி ஷகீல் அஹமது குறித்து விஷம் கக்கினார். அறிக்கை வெளியிட்டார்.

தமுமுகவும் ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கமும் தமது கண்டனங்களை பதிவு செய்தன. அப்பொழுதும் மம்மியின் டம்மி பிஜே மவுனம் காத்தார்.

மூன்றாவதாக, தற்சமயம் இஸ்லாமிய எதிரி ஜேஜே. வக்ஃப் சொத்தை அரசாங்க சொத்தாக எண்ணி திண்டிவனம் பஸ் நிலையத்துக்காக தாரை வார்த்த விஷயம் அறிந்து தமுமுக கொதித்தெழுந்தது. கண்டன அறிக்கையும் ஆர்ப்பாட்டமும் நடத்தியது.

இப்பொழுதும் ஜேஜேவின் பினாமி பீஜே பேச மறுக்கிறார்.

அதனால் தான் அறுதியிட்டு கூறுகிறோம், போயஸ் தோட்டத்தில் பீஜே புதையுண்டு போயுள்ளார்.

எனதருமை இஸ்லாமிய சொந்தங்களே!

இஸ்லாத்தின் எதிரிகளோடு இணைந்து முஸ்லிம் சமுதாயத்தை வஞ்சிக்கும் இந்த இனத்துரொகி பீஜேவை நம்பலாமா?

சிந்தியுங்கள் செயல்படுங்கள். தறுதலை ஜமாஅத் ததஜ தலைவரின் தகுதியை புரிந்து கொள்ளுங்கள்.

மதுர நாயகம்
04.03.2007

0 Comments:

Post a Comment

<< Home