Friday, November 17, 2006

அவசரகுடுக்கை ததஜ உமரின் அறியாமை

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்

மனிதன் என்பவன் ஒன்று சுயபுத்தியுள்ளவனாக இருக்க வேண்டும், அல்லது பிறர் சொல்லைக் கேட்டு தன்னைத் தானே திருத்திக் கொள்ளும் சொல்புத்தி உள்ளவனாக இருக்க வேண்டும்.

இவை இரண்டுமில்லாமல் மனிதன் எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு ததஜவின் உளறுவாய் உமர் மிகச் சிறந்த உதாரணமாகும்.

இது குறித்து தரங்கெட்ட தறுதலை ஜமாஅத் ஆழமான ஆலோசனை செய்வது நல்லது. பொய்யன் தீன் முஹம்மதுவை தலையில் தூக்கி வைத்து ஆடி விட்டு, அவரது தப்புத்தாளங்களை பட்டியலிட்டபின் தலை குப்புற வீசி எறிந்த தறுதலை ஜமாஅத், இந்த உளறுவாய் உமரின் பித்தலாட்டங்களையும், ததஜவிற்கே எதிரான உளறல்களையும் ஏற்றுக் கொள்கிறதா அல்லது தீன் முஹம்மதுவைப் போல் தூக்கி வீசப்போகிறதா.. ..?

முகவைத்தமிழன் வெளியிட்ட ஷரீஅத் தீர்ப்பாய லெட்டர், பல விதங்களில் தறுதலை ஜமாஅத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது உளறுவாய் உமரின் அடுத்தடுத்து வெளிவந்து கொண்டிருக்கும் உளறுவாய் உமரின் ஈ மெயில் மூலம் அறிய முடிகிறது.

ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்று சொல்வார்கள். சராசரி அறிவுள்ள ஒருவனே ஆத்திரப்படும் பொழுது அறிவை இழந்து விடுகிறான் எனில், அறிவு என்பது அறவே இல்லாத உளறுவாய் உமர் எப்படி அறிவார்த்தமாக சிந்திக்க முடியும்.

உளறுவாய் உமரின் கண்டுபிடிப்பிற்குள் செல்வதற்கு முன், அவர் எடுத்து வைத்துள்ள ஒரிஜினல் எது போர்ஜரி எது என்ற அறிவுப்பூர்வமான (??) விளக்கத்தைப் பார்ப்போம்.

1. நாடு தழுவிய ஒரு மாபெரும் மக்கள் இயக்கம் தனது கிளை நிர்வாகத்திற்கு எழுதும் கடிதத்தில் ஒரே ரெஃபரன்ஸ் நம்பரில் இரு கடிதங்களை எழுத மாட்டார்கள்.

 தரங்கெட்ட தறுதலை ஜமாஅத் எப்பொழுது இந்தியாவெங்கும் விரிவுபடுத்தப்பட்டது?
 அதிமுக என்று இருந்ததை திடுதிப்பென்று அ.இ.அ.திமுகவாக மாற்றப்பட்டது போல், போயஸ் தோட்டத்து பொன்மகளின் ஆலோசனையின் பேரில் ததஜவும் மாற்றப்பட்டதா?
 அல்லது காத்தான்குடி ஜமாஅத் லெட்டர் விஷயத்தை இலங்கை ஜமாஅத் என இட்டுக்கட்டி எழுதி, அது சுட்டிக்காட்டியவுடன், இல்லை.. ..இல்லை அந்த நாட்டு தலைநகரை பயன்படுத்தி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிடுவதைப் போல என அசடு வழிந்தார்களே இதுவும் அதைப்போலத் தானா?
 அல்லது தனது வழமையான பில்ட்அப் ரகங்களில் இதுவும் ஒன்றா?

மாபெரும் மக்கள் பேரியக்கம்???!

எது மாபெரும் மக்கள் பேரியக்கம் என்பதில் இன்னும் என்ன குழப்பம். தோட்டத்திலிருந்து பாய்ச்சப்பட்ட பணப்பயிரைக் கொண்டு கூட, கும்பகோண பொதுக்கூட்டத்திற்கு அரசு அனுசரணை இருந்தும் இலட்சம் பேர் கூட ஆதரவு தெரிவிக்காமல் புறக்கணிக்கப்பட்டதே அதுவா மாபெரும் மக்கள் பேரியக்கம்.. .. ..???

ஜெயலலிதா, பன்னீர் செல்வத்திற்கு பயப்படுவதை விட சமுதாய மக்களுக்கும், வல்ல அல்லாஹ்விற்கும் பயந்து கொள்ளுங்கள்.

ஒரே ரெஃபரென்ஸ் நம்பரில் இரு கடிதங்கள்

இது குறித்து விரிவாக இறுதியில் விளக்கப்படும்.

2. ஒரு காரியத்தை ரகசியமாக செய்யச் சொல்லுபவர்கள் எங்கள் பெயரை சொல்லாதீர்கள் என்றே சொல்வார்கள்.

உண்மை தான். வெட்கம் மானம் சூடு சொரணை உள்ள அனைவரும் அப்படித்தான் சொல்வார்கள். ஆனால் திருவாளர் கிரிமினல் பிஜே அப்படிப்பட்டவரல்லர். முற்றிலும் வித்தியாசமானவர். மேற்குறிப்பிட்ட பண்புகளிலிருந்து மாறுபட்டவர். ஆதாரம் தேவைப்படுபவர்கள், கோவை பாஷா முதல் ஏர்வாடி காசிம் உள்ளிட்ட சிறைவாசிகளை அணுகி விளக்கம் பெறலாம்.

தவிர 'தான்' எனும் தலைக்கனம் தலையையும் தாண்டி வியாபித்திருப்பவர். எந்த சந்தர்ப்பத்திலும் தனக்கென ஒரு (இலாஹி மொழியில்) எருமைக் கூட்டம் கிடைக்குமென்ற இறுமாப்பில் உள்ளவர். மீறி எவராவது செயல்பட்டால் மவ்லவி ஹாமித் பக்ரிக்கு ஏற்பட்டதைப் போல கதி ஏற்படும் என்ற பீதியினாலும் பலரை அடக்கி விடலாம் என்ற ஆணவ குணம் படைத்தவர்.

எனவே அவரது விஷயத்தில் இந்த அடிப்படை ஏற்புடையதல்ல.

3. ஒரிஜினல் கடிதத்தில் ஃபோர்ஜரி கடிதத்தில் கூறப்படும் சம்பவங்களும் காலமும் (தேதியும்) மிக முக்கிய ஆதாரங்களாகும்.

இப்படி குறிப்பிடப்பட்டிருப்பதன் மூலம் ஒன்று ஒரிஜினல் மற்றொன்று ஃபோர்ஜரி என நிரூபிக்க பிரயத்தனப்படுகிறார்.

பாவம். இரண்டுமே ஒரிஜினல் தான். இதற்கு ஆதாரமாக நாம் குறிப்பிடுவது இவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள சம்பவங்களும் காலமும் (தேதியும்) தான்.

உளறுவாய் உமர் 15.12.2005 கடிதத்தை அசல் என்றும் 15.09.2005 கடிதம் போலியானது, ஃபோர்ஜரியாக உருவாக்கப்பட்டது என்றும் கூறுகிறார்.

அப்படியானால்.. .. ..

மக்கா கூட்டமைப்பு சார்பாக முடிவு எடுக்கப்பட்டு அவதூறு பரப்பும் மெயில்களுக்கான தலைமையின் அங்கீகாரம் கோரி அனுப்பப்பட்ட கடிதத்திற்கான பதில் எங்கே?

பாவம்.. .. போர்ஜரியாக 15.12.2005 தேதியிட்டு போலி கடிதம் தயாரித்த தறுதலை ஜமாஅத் தலைமை கவனக்குறைவால் இதனை தவற விட்டு விட்டது.

அல்லாஹ் மிகப்பெரிய சூழ்ச்சிக்காரன். எனவே தான் தறுதலை ஜமாஅத் தலைமை 10.08.2005 இல் மக்காவிலிருந்து அனுப்பப்பட்ட கடிதத்திற்கு போர்ஜரியாக உருவாக்காமல், அவசர அவசரமாக 08.12.2005 இல் தம்மாம் நகரில் நடைபெற்ற உள்குத்து விவகாரங்களுக்காக அனுப்பப்பட்டது போன்ற தோற்றத்துடன் 15.12.2005 தேதியிட்ட கடிதத்தை உருவாக்கினார்கள் போலும்.

இதனை நாம் சுட்டிக்காட்டியுள்ளதால், உடனடியாக சுதாரித்து மேலும் ஒரு ஃபோர்ஜரி கடிதம் வெளியிடப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

ஆக, மக்காவில் கூடி சதியாலோசனை செய்ததும் (10.08.2005), தம்மாமில் கூடிய உள்குத்து சமரச கூட்டமும் இரு பிரதேசங்களில் இரு வேறு காலங்களில் நடந்த உண்மை சம்பவம். இவை இரண்டுமே ஒரே மவ்லவியின் (?) தலைமையில் நடந்ததால் முடிச்சுப் போட்டு இழுத்து மூட நினைப்பது முட்டாள் தனம்.

பாயிண்ட் நம்பர் 4 ஆக உளறல் உமர் குறிப்பிட்டுள்ளதை புரிந்து கொண்டவர்கள் விளக்கமோ மறுப்போ எழுதலாம்.

5,6,7,8 மற்றும் 9 ஆம் எண் இடப்பட்டுள்ள விஷயங்கள் அனைத்தும் ஒன்றுதான். அரைத்த மாவையே வெவ்வேறு வார்த்தைகளில் எழுதி வெவ்வேறு பாயிண்ட்கள் போல படம் காட்ட முயற்சித்துள்ளார்.

பரிதாபம். முயற்சி தோல்வியுற்றதால் இதனை அல்லாஹ் எங்களுக்கு காட்டிக் கொடுத்தான் என கூறுவதோடு புலம்பலை முடித்துக் கொண்டுள்ளார்.

10,11 இல் பிஸ்மில்லாஹ்வை வைத்து கதையளக்க முயற்சித்தவர், தனது தலைமை அவ்வப்போது தோணுகிறது போல் அரபியிலும், தமிழிலும் எழுதியுள்ளார்கள் என்ற உண்மை விளங்கியதால்

'ஒருவேளை ததஜ தலைமையிலிருந்து ஏதாவது ஒரு கடிதத்தில் அரபியில் எழுதப்பட்டதை எடுத்துக்காட்டி விட்டாலும்.. .. ..' எனக் குறிப்பிட்டு தனது தோல்வியை ஒப்புக் கொள்வதுடன், முகவைத்தமிழன் வெளியிட்ட 15.09.2005 கடிதம் உண்மையானது தான் என சாட்சியம் கூறி நிற்கிறார்.

வாழ்த்துக்கள். தாமதமாகவேனும் உண்மையை ஒப்புக்கொண்டமைக்கு நன்றி.

என்றாலும் அவர் முதலாம் குறிப்பு எண்ணில் 'ஒரே ரெஃபரென்ஸில் இரு கடிதங்களை' என்பது குறித்து, அதில் வெளிப்பட்டுள்ள அவரது அறியாமை குறித்து நாம் இங்கு அவசியம் குறிப்பிட்டாக வேண்டும்.

பொதுவாகவே தறுதலை ஜமாஅத்தினர் ஒன்றை மற்றொன்றாக புரிந்து கொள்வதில் போட்டி போடுவார்கள் என்பது ஊரறிந்த ரகசியம்.

 அதிலும் குறிப்பாக தவ்ஹீத் என்று நினைத்து தக்லீது செய்வது.
 ஜே ஏ க்யூ ஹெச் என எழுதியிருந்ததை எம் ஹெச் ஜே என விளங்கிக் கொண்டது.
 யான்புவை சவுதியின் மேற்கிலிருந்து கிழக்கு கரையோரமாக இடம் பெயரச் செய்தது.

என பட்டியல் நீளுமளவிற்கு ஒன்றை மற்றொன்றாக புரிந்து கொள்ளும் அறிவாளிகள் (?)

அதே சூத்திரத்தின் அடிப்படையில் உளறுவாய் உமர் ரெஃபரென்ஸ் நம்பராக புரிந்து கொண்டுள்ளது எது என விவரிக்கும் முன்,

இவர் சுட்டிக்காட்டும் அடிப்படையில், ஷரீஅத் தீர்ப்பாயத்திலிருந்து வெளியான அனைத்து கடிதங்களுமே இந்த ஒரே ரெஃபரென்ஸ் நம்பரை மட்டுமே கொண்டிருக்கும் என்பது திண்ணம்.

இத்தகைய அறிவாளி (?) களால் நிரம்பியுள்ளது தான் மாபெரும் மக்கள் பேரியக்கம்(?)ததஜவிற்கு இதைவிட தலைகுனிவு வேறொன்றும் தேவையில்லை.

உளறுவாய் உமர் சுட்டிக்காட்டுவது Reg 333/200 என்று கடிதத்தின் வலது மூலையிலுள்ள எண்ணைத்தான். பாவம் அவருக்கு இதனை Fax செய்தவர்கள் ஒழுங்காகச் செய்திருந்தால் ஒருவேளை இந்த எண்ணை 333/2003 எனப் புரிந்து கொண்டிருப்பார்.

என்றாலும் இது அவர் குறிப்பிடுவது போல் ரெஃபரென்ஸ் நம்பரா? - அதுதான் இல்லை.

ஷரீஅத் தீர்ப்பாயம் என்ற அமைப்பின் ரிஜிஸ்ட்ரேஷன் நம்பர் தான் அது. ரிஜிஸ்ட்ரேஷனுக்கும் ரெஃபரன்ஸ்க்கும் வித்தியாசம் தெரியாத இந்த முனையும் மூளையும் மழுங்கியவரை ததஜ தலைமை என்ன செய்யப் போகிறது.

தீன் முஹம்மதுவை திரும்பி அனுப்பியது போல் ஓரம் கட்டப்போகிறதா. அல்லது ஆள் பற்றாக்குறையினால் உமரை வைத்து மேலும் அசிங்கப்படப் போகிறதா பொறுத்திருந்து பார்க்கலாம்.

வஸ்ஸலாம்
ராவுத்தர் 15.11.2006


0 Comments:

Post a Comment

<< Home