Wednesday, November 15, 2006

உளறுவாய் உமரின் கோயபல்ஸ்தனம்

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்

ததஜவின் உளறுவாய் உமரின் உளறல்களுக்கு எல்லையே இல்லை.

தனக்கென்று எந்த சொந்த சரக்கும் இல்லை. பிரபலமான ஒன்றைப் பின்பற்றி எதையாவது உளறிக் கொண்டிருப்பதே தனது தலையாய பணி என்பதனை, உளறுவாய் உமர் மீண்டும் நிரூபித்துள்ளார்.

'முல்லா' என்பவர் எழுதும் உரையாடல் பாணி, தனது உரைநடையை விட அதிகமானவர்களால் அங்கீகரிக்கப்படுகிறது என அறிந்ததால், உரைநடையை உரையாடலாக மாற்றி உலவ விட்டுள்ளார்.

பாவம். உளறல் உமருக்கு இன்னமும் ஒரு விஷயம் புரியவில்லை. உரைநடையோ, உரையாடலோ அவற்றில் உண்மை இருந்தால் மட்டுமே அங்கீகாரம் பெறும். அல்லாமல் உளறல் உமர் எழுதுவது போல் உண்மையோடு கற்பனையை கலந்து கட்டி அடித்தால், தீன் முஹம்மதுவைப் போல திருதிருவென முழித்துக் கொண்டு திரும்பிப் பாராமல் ஓட வேண்டி வரும்.

முன்னரே ஒரு முறை நாம் குறிப்பிட்டுள்ளோம்.

இந்த உளறுவாய் உமர் சமயத்தில் எதிராளியை குற்றம் சாட்டுகிறாரா அல்லது தனது தலைவன் கிரிமினல் பிஜேவை குற்றம் சாட்டுகிறாரா என சந்தோசப்படும்படியாக எழுதுவதில் அவருக்கு நிகர் அவரே தான்.

தனது மெயிலில் தமுமுக தலைவரை கோயபல்ஸ் எனக் குறிப்பிடும் இவர், அதற்கான காரணமாக தமுமுக தலைவர் எழுதிய கண்மணிகளுக்கான கடிதத்தில் தமுமுகவிலிருந்து ஓடிச் சென்ற ஓடுகாலிகளை கோயபல்ஸ் எனக் குறிப்பிட்டாராம். அதனால் இவர்களும் அவரை கோயபல்ஸ் எனக் கூறுகிறார்களாம்.

உலகம் அறிந்து வைத்துள்ள உண்மை என்னவெனில், ஒரு பொய்யை மீண்டும், மீண்டும் கூறி அதனை உண்மைப்படுத்த முயன்ற மதிகெட்ட மந்திரி தான் கோயபல்ஸ். அதனால் தான் பொய்யை உண்மைப்படுத்த மீண்டும் மீண்டும் தனது பலத்தை பிரயோகிக்கும் ஜார்ஜ் புஷ், டோனி பிளேர், பிஜேபியினர், ததஜவினரை கோயபல்ஸ் என நாம் கூறுகிறோம்.

அதல்லாமல் ஒருவர் கோயபல்ஸ் என்று சொன்னார் என்பதற்காக, அவரை கோயபல்ஸ் என பட்டம் சூட்டுவது என்பது தரங்கெட்ட ததஜவினரின் தரத்தை உறுதிப்படுத்துவதாக உள்ளது. மனநிலை பாதிக்கப்பட்டு பைத்தியமாகத் திரிபவர்கள் மட்டுமே தன்னிடம் என்ன சொல்லப்படுகிறதோ அதனை அப்படியே திருப்பி சொல்லும் இயல்புடையவராக இருப்பர். அவ்வகையில் இவர்கள் பைத்தியங்கள் என நாம் புரிந்து கொள்ளலாம்.

ஆனால் உண்மையான பைத்தியங்களுக்கு மட்டுமே உலகிலுள்ள எல்லா நாட்டு சட்டங்களும் இஸ்லாமிய ஷரீஅத் சட்டமும் அவர்களின் அறியா செயல்களுக்கு மன்னிப்பு வழங்கப்படுகின்றன. இவர்களைப் போன்ற காரிய கிறுக்கர்களுக்கு இம்மையிலும் இழிவு தான். மறுமையிலும் பேரிழப்பு தான். அத்தோடு கொடும் வேதனையும் உண்டு என்பதனை நினைவூட்டுகிறோம்.

ததஜ தலைவன் கிரிமினல் பிஜே தான் தமுமுக மீது இட்டுக்கட்டி அதனை மீண்டும் மீண்டும் கூறி உண்மைப்படுத்த முயற்சி செய்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அந்த வகையில் உளறுவாய் உமர் பிஜேவைத் தான் கோயபல்ஸ் என கூறுகிறார் போலும்.

இந்த உளறுவாய் உமர், பைத்தியகார வேடமிடும் ஒரு வேடதாரி. என்றாலும் சில சமயங்களில் அவரது தொழிலுக்கு மாற்றமாக உண்மையை கவனக்குறைவாக உளறி விடுவார்.

அதாவது,

தமிழக முஸ்லிம்களின் தனிப்பெரும் இயக்கமாம் தமுமுகவின் தலைவர் பேராசிரியரைப் பற்றி குறிப்பிடும் சமயம்,

'உண்மையை ஒத்துக் கொள்ளாத வரை, பிறரை மடையர்களாக நினைக்காத வரை தொடர்ந்து கோயபல்ஸ் ஸார் என்று தான் எழுதி வருவோம்' - எனக் குறிப்பிடுகிறார்.

உண்மையில் பிறரை மடையர்களாக நினைக்காதவராகத்தான் பேராசிரியர் அவர்கள் தறிகெட்டுப் போன ததஜவினரைக் கூட சகோதரர்களாக, சக முஸ்லிம்களாக எண்ணுகிறார். அதனால் தான் ஒரு முஸ்லிம் சக முஸ்லிமிற்கு ஆற்ற வேண்டிய பணிகளை உணர்ந்து, இழப்புகளிலெல்லாம் பேரிழப்பான ஒரு அன்னையின் மறைவுக்கு ஆறுதல் சொல்லப் போனார்.

சக முஸ்லிமின் ஆறுதல் வார்த்தைகளைக் கூட உதாசீனம் செய்து, புடவைக்குப் பின் பதுங்கிக் கொண்ட பிரச்சார புயலை தலைவராக ஏற்றுக் கொண்டிருப்பதால், இந்த உளறல் உமரும் பைத்தியகார வேடமிட்டு அலைகிறார் போலும்.

உளறல் உமரின் கோயபல்ஸ்தனமாக அடுத்த கூப்பாடு இட ஒதுக்கீடு பற்றியதாக உள்ளது. யார் பெற்ற பிள்ளைக்கு இவர்கள் பெயர் வைக்கிறார்கள் எனக் கேட்டுள்ளார்.

நாம் பலமுறை சுட்டிக்காட்டி வருவது போல் இவர் வைக்கும் கேள்விகளும், வாதங்களும் இவர் குருட்டுத்தனமாக பின்பற்றும் தறுதலை ஜமாத்திற்கே பல சமயங்களில் மீளும். அப்படித்தான் இதுவும்.

இடஒதுக்கீடு என்ற கொள்கையை கருவாக்கி, அது கருகி விடாமல் பேணிப் பாதுகாத்து போஷாக்குடன் உருவாக்கி, இறைவன் நாடினால் இன்றோ அல்லது நாளையோ சாதிக்க முடியும் என்ற பேறுகாலத்தை எதிர்நோக்கி தமுமுக காத்திருக்கிறது.

இது காலதாமதமாவதற்கு, சமுதாயத்தைப் பிளந்து, கையூட்டுப் பெற்ற தொகையில் கலர் கலராக படம் காட்டிய தறுதலை ஜமாஅத் தான் காரணம் என்று எவரும் சொல்லிவிடக் கூடாதென்ற அச்ச உணர்வில், தமுமுக பெற்ற பிள்ளைக்கு பெயரிட அவசரப்படுகின்றனர்.

உளறல் உமரின் கோயபல்ஸ் தனத்திற்கான சரியான எடுத்துக்காட்டு அவரின் கும்பகோண நியூஸ். தறுதலை ஜமாஅத் நடத்திய கும்பகோண மேளாவில் 1 இலட்சத்திற்கும் குறைவாகவே மக்கள் கூடிய (அதுவும் பல இடங்களிலிருந்து கூலி, உணவு, பேட்டா கொடுத்து கூட்டப்பட்ட)து பலரும் அறிந்த பரம ரகசியம். அதனால் தான் அன்றய முதல்வர், ததஜவிற்கு படியளந்த பத்தினி, செல்வி ஜெயலலிதா முன் கையது கொண்டு மெய்யது பொத்தி, கூனி குறுகி கும்பமேளாவில் சுமார் இலட்சம் பேர்தான் கூடினார்கள் என ஒப்புக் கொண்டு விட்டு, வெளியில் 10 இலட்சம் என பகட்டு காட்டித் திரிகின்றனர்.

10 இலட்சம், 10 இலட்சம் என 10 இலட்சம் முறை கூவிக் கொண்டிருந்தாலும், தறுதலை ஜமாஅத் தலைவன் கிரிமினல் பிஜே, போயஸ் தோட்டத்து பொன் மகளிடம் 1 இலட்சம் என ஒப்புக் கொண்ட பின் உளறுவாய் உமரை யார் நம்புவார்???

உளறுவாய் உமரின் உளறல்களுக்கு அளவே கிடையாது.

போர்ஜரி சம்பந்தமாக அவர் உளறல்களுக்கு மறுமொழியாக நமது பொய்முகம் காட்டும் ஃபோர்ஜரி யார்? என்ற விரிவான மடல் காண்க.

இந்த உளறுவாய் உமர் அறிவின்மையால் அவசரப்படுவார். அடிக்கடி ஆத்திரப்படவும் செய்வார். அவரது ஆத்திரத்தின் வெளிப்பாடாய் முதலில்,

'குதிரைப் பாகனுடைய ப்ளாக்ஸ்பாட்டில் வெளிவர இயலாத' என்று எழுதினார். நாம் எந்த ப்ளாக்ஸ்பாட்டும் நடத்தவில்லை என விளக்கியதன் பின், அதனை வேறு வார்த்தைகளில் 'குதிரையில் வரமுடியாத உமரும் அஹமதலியும்' என தலைப்பிட்டுள்ளார்.

எனக்கென்னவோ, இவர்கள், சகோ. பள்ழுல் இலாஹி குறிப்பிடுவது போல் எது நடந்தாலும் அசைந்து கொடுக்காத, மழை பெய்தாலும் நகராத எருமையின் குணத்தை ஒத்திருப்பதால் அதன் மீது ஏறி பவனி வருவதே சிறந்தது.

இறுதியாக, வேதாளம் மிண்டும் முருங்கையில் ஏறிய கதையாக, முபாஹலா கதைக்கு உளறுவாய் உமர் திரும்பியுள்ளார். இவர்களது முபாஹலா கிடக்கட்டும். இலாஹியின் முபாஹலாவிற்கு ஓடி ஒளிந்த தறுதலை ஜமாஅத் தலைவரை இந்த உளறுவாய் உமர் இழுத்து வருவாரா.

சிலரது இயல்பை மாற்றவே இயலாது என்ற அடிப்படையில் உமரின் மெயில்களிலிருந்து உளறல்களை புறக்கணிக்கவே முடியாது.

(அவரே அறியாமல் வெளிப்படுத்தும் உண்மையைப் பாருங்கள்)

'இதற்கு மேல் நமது நிர்வாகிகளை தொடர்பு கொண்டு சத்தியத்தை எழுதுவதாக இருந்தால்.. ..' என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆக, இதுவரை அவர்களது தறுதலை ஜமாஅத் நிர்வாகிகளான பிஜே, பாக்கர், பிர்தவ்ஸி, கோவை ஜாஃபர் போன்றோரை தொடர்புபடுத்தி வெளிவந்ததெல்லாம் சத்தியம் தான் என ஒப்புக் கொண்ட உளறுவாய் உமருக்கு எமது நன்றிகளை உரித்தாக்குகின்றோம்.

வஸ்ஸலாம்

ராவுத்தர் (15.11.2006)

0 Comments:

Post a Comment

<< Home