மீண்டும் சுனாமியா?
பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்
உளறுவாய் உமரின் கூட்டாளி கோயபல்ஸ் அஹமது அலிக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்.. ..)
சுனாமி எனும் சொல்லைக்கூட உச்சரிக்க தகுதியில்லாத தமிழ்நாடு தறுதலை ஜமாஅத் அடிவருடியான அஹமது அலி அவர்களின் காமாலைக் கண்களுக்கு தமுமுக எழுப்பி வரும் பேரிடர் மையம் கல்யாண மண்டபமாகத் தெரிகிறது போலும்.
தறுதலை ஜமாத் தலைவன் கிரிமினல் பிஜேவைப் போல தமுமுக சுனாமி கணக்கு விபரத்தை ஒரு அறையில் வைத்து வெளியிட்டு, கேள்வி கேட்க அனுமதியும் மறுத்து மீறி கேள்வி கேட்டவர்களின் கையை காலைப் பிடித்து கணக்கு நேர் செய்யப்பட்டதாக அறிவிக்கவில்லை.
மாறாக,
பலரும் வந்துபோக வசதியுள்ள பரந்த இடப்பரப்புள்ள திருமண மண்டபத்தில், அரசு அதிகாரிகள், தணிக்கையாளர்கள், சரிபார்த்த கணக்கு விபரங்களை, பத்திரிக்கையாளர்கள், பிற இயக்க தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள், தமுமுக தொண்டர்கள், ஆதரவாளர்கள், அனுதாபிகள் ஏன் எதிரிகளும் கூட கலந்து கொண்ட மிகப்பெரும் அரங்கிலே ஆதியோடந்தமாக வெளியிட்டது.
அதன் இறுதியிலே அவையோரின் ஒப்புதலுடனும், அரசு அதிகாரிகளின் ஆலோசனையின் பேரிலும் சுனாமி நிவாரண நிதியில் பங்கீடு செய்தது போக எஞ்சியிருந்த தொகையில் நாகூரில் பேரிடர் மையம் அமைக்க ஒதுக்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ். அல்லாஹ்வின் பெருங்கிருபையால் பேரிடர் மையம் வெகு விரைவில் வெகு விமரிசையாக திறக்கப்பட இருக்கிறது.
ஆனால் சுனாமி நிதியில் வரலாறு காணாத வகையில் சுருட்டிக் கொண்டது ததஜ.
சுனாமிக்கென்று தனியாக எந்தக் கணக்குமில்லாமல் தனது தறுதலை ஜமாஅத்தின் பொதுக்கணக்கிலேயே வசூலித்து, சுனாமி எது? பினாமி எது? நன்கொடை எது? என வகை பிரிக்க இயலாமல் குத்து மதிப்பாக சுருட்டியது போக மீத தொகைக்கு கள்ள கணக்கு எழுதிய கொள்ளை கும்பல் ததஜ.
வெளியிட்ட கணக்கிலும் தவறு 1,2 என வரிசைப்படுத்தி வசதி போல கூட்டிக் குறைத்து எழுதிக் கொண்டு அதன் காரணமாக தணிக்கை செய்ய வழியின்றி தடுமாறி தகிடுதத்தம் செய்தது ததஜ.
வரலாறு காணாத வகையில் பத்திரிக்கை வெளியீட்டிற்கு சுமார் 2 இலட்சத்தை சுருட்டிக் கொண்டது ததஜ, (பத்திரிக்கையை திருடிக் கொண்டது பத்தாது என்று பத்திரிக்கை நடத்துவதற்கு சுனாமி சொத்தில் கொள்ளை - வெட்கம். வெட்கம்.)
தனது (குண்டர்) தொண்டர் அணியின் உடைகளுக்கு சுனாமி நிதியை உபயோகப்படுத்திக் கொண்ட கொள்ளைக் கும்பல் ததஜ.
கடற்கரையே இல்லாத, சுனாமியின் சுவடு பதியாத மாவட்டத்திற்கும் நிதி ஒதுக்கி சுனாமி சுரண்டலில் சரித்திர சாதனை புரிந்த தரித்திர இயக்கம் ததஜ.
தமிழக முஸ்லிம்களின் தனிப்பெரும் இயக்கமான தமுமுகவைப் போல் வெளிப்படையாக பொதுமக்கள் முன்னிலையில், அரசு அங்கீகாரத்தோடு, தணிக்கை சான்றிதழ்களோடு, பத்திரிக்கையாளர்கள், அரசியல் பிரமுகர்கள் முன்பு சுனாமி கணக்கை வெளியிட வக்கில்லாமல், தனது அடிவருடிகளை அழைத்து ஒவ்வொருத்தராக சரிகட்டி ஒரு அறையில் வைத்து நாடகமாடி கணக்கு வெளியிட்டது ததஜ.
அதுவும் தமுமுக சுனாமி கணக்கு வெளியிட்டு சுமார் 3 மாதங்களுக்குப் பின் செட்டப் சுனாமி கணக்கை வெளியிட்ட ததஜவோ அல்லது அதன் சார்பாக எந்த கைக்கூலியுமோ தமுமுகவை விமரிசிக்க அணுவளவேனும் தகுதியுடையவர்கள் அல்லர்.
சுனாமி பணத்தில் வரலாறு காணாத வகையில் சுரண்டிக் கொழுத்த ததஜவினர் தான் இஸ்லாமிய சமூகத்தவரிடமும் சகோதர சமூகத்தவர்களிடமும் பகிரங்க மன்னிப்பு கேட்பதோடு, தமுமுகவிலிருந்து திருடிச் சென்ற அனைத்தையும் தமுமுகவிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும். இல்லையேல் இம்மையில் இழிவையும், மறுமையில் நரக வேதனையையும் சுவைக்க நேரிடும் என எச்சரிக்கிறோம்.
ராவுத்தர் 15.11.2006
0 Comments:
Post a Comment
<< Home