Sunday, November 05, 2006

உணர்வில் வெளியிட இயலாத நாடும் நடப்பும் - 8

வாங்க வாங்க உமர் பாய். அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ். எங்கே வராம போயிடுவீங்களோன்னு நெனச்சேன்.

வஅலைக்கு முஸ்ஸலாம். ஒங்கள்ட்ட வராம, நா எங்க போயி நம்மளோட ஆத்தாமைய கொட்டிக்கப் போறேன்.

ஏன் உமர் சலிச்சுக்கிறீங்க.

வேற என்ன செய்யச் சொல்றீங்க. வர வர போலி டோண்டு மாதிரி இப்ப நம்மளயும் காப்பி பண்ண ஆரம்புச்சுட்டாங்களே.

அடடே அதச் சொல்றீங்களா. பரவாயில்ல விடுங்க. ஆனா ஒரு விஷயத்த கவனிச்சீங்களா. நாம பேசிக்கிறத நம்ம தலம கவனிச்சு அப்பப்ப ஆக்ஷன் எடுக்குறாங்களே.

ஆமாமா.... நாம முதல்ல உணர்வு பத்திரிக்கை 10 வருச நினைவுகள எழுதுறப்போ சீரணி அரங்கத்துல நடந்த வாழ்வுரிமை மாநாட்ட கவனமா விட்டாங்களே, அத நாம பேசுனதுக்குப் பெறகு தானே ஞாபகம் வந்து அடுத்த இஸ்யூல வாசகர் கடிதம்கிற பேர்ல போட்டாங்க. அத மாதிரி நாம போன வாரம் பேசிக்கிட்டதுக்கப்புறமா உணர்வு பத்திரிக்கய இப்போ ஸைட்ல அப்டேட் பண்ண ஆரம்புச்சுட்டாங்க.

அப்படியா உமர். பரவாயில்லையே நாம பேசிக்கிறதுனால இவ்வளவு நடக்குதா...

ஆமா, நாம எத்தனையோ விஷயத்தப் பத்தி பேசியிருக்கோம், ஆனா பத்திரிக்க விஷயத்துல மட்டும் தான் நம்ம ஆலோசனைய எடுத்துக்கிட்டிருக்காங்க.

சரி விடுங்க உமர். இந்த பெருநாளப்போ மதுரயில என்னதான் நடந்துச்சு.

ஏன் நீங்க இந்த வார பத்திரிக்கய பாக்கலியா.

பாத்தனே. அதுனால தான் சந்தேகமே வருது. போட்டிருந்த பந்தல தமுமுக காரங்க தான் எரிச்சாங்கன்னு போட்டிருந்துச்சு. எனக்கு ஒண்ணு ஞாபகம் வருது. நம்ம கச்சி ஆரம்புச்ச வேகத்துல பாளயங்கோட்ட தமுமுக ஆபீஸ அடிச்சு நொறுக்கிட்டு அங்க இருந்தவங்கள தமுமுக காரனா அல்லது முஸ்லிம் அல்லாதவனான்னு கூட கவலப்படாம சும்மா பூந்து வெட்டிட்டு வந்து, இதே பத்திரிக்கயில சும்மா புடிச்சு இழுத்ததுல அந்த கூறை சரிஞ்சுடுச்சுன்னு தானே எழுதினோம். அதுனால தான் சந்தேகமா இருக்கு.

பழச எல்லாம் ஞாபகம் வச்சிருக்கீங்களே அஹமது. அப்ப நம்மளோட நெல்லை மாவட்ட தலைவர் யாருன்னு ஞாபகம் இருக்குல்ல.

ஆமாமா அந்த கோட்டூர் ரபீக்கப் பத்தி இப்ப ஒண்ணும் தகவலே இல்லையே.

அவர வச்சு என்னவெல்லாம் செய்யணும்னு அண்ணன் நெனச்சாரோ அதுல ஒண்ணு கூட ஒளுங்கா நடக்கல அப்பறம் எதுக்கு அந்த ஆள். அதான் சத்தமில்லாம ஒதுக்கிட்டாங்க.

சரி உமர் பாய் எனக்கு போன ரமளான்ல இருந்து ஒரு சந்தேகம்.

என்ன பெரிய சந்தேகம் பிறய பத்தியா?

அதான் சர்வதேச பிரச்சனயாச்சே. எனக்குள்ள சந்தேகமெல்லாம்..., நாம நம்மளோட எந்த செயலப்பத்தி சொன்னாலும், 25 வருசமா சொல்றோம் செய்றோம்னு சொல்றோம். ஆனா இந்த ஃபித்ராவ எடுத்துக்கிட்டா கிட்டதட்ட 15 வருசமாவே குடுத்துட்டு வர்றோம்ல.

ஆமா அதுல என்ன சந்தேகம் ஒங்களுக்கு....

இல்ல 15 வருஷமா பித்ரா குடுத்துக்கிட்டு வர்ற நாம, கடந்த 2 வருஷமா அண்ணனுக்குன்னு சொந்தமா கச்சி ஆரம்பிச்ச பெறகு தான கணக்கேல்லாம் வெளியிட்டுக்கிட்டு வர்றோம். அப்ப ஏன் நம்ம முன்னாள் சகாக்கள கணக்கு வெளியிடலன்னு குத்தம் சொல்றோம்.

ஆஹா.... அஹமது நீங்க வரவர தமுமுக காரன் மாதிரியே பேச ஆரம்புச்சுட்டீங்க. நம்ம எல்லாருக்கும் நல்லா தெரியும் அண்ணன் தமுமுகல இருந்த போது, குறிப்பா இப்ப எடுத்துக்கிட்டு வந்த உணர்வு பத்திரிக்கைக்கு ஆசிரியரா இருந்தப்ப பித்ராவ எத்தன பேருக்கு எங்கங்கே வினியோகம் பண்ணினோம்னு தான் போட்டோம். ஆனா தனியா கச்சி ஆரம்பிச்சப்பறம் அடுத்தவங்கள எப்டியாச்சும் குத்தம் சொல்லணுமே அதுனால தான் கடந்த 2 வருசமா இப்புடி சொல்லிக்கிட்டிருக்கோம்.

நல்ல பாலிஸி தான். இப்ப நாம பித்ராவுக்கு வரவு செலவ வெளியிடுறமே அப்ப ஏன் குலுங்குன கும்பகோண கணக்க வெளியிடுறதில்ல.

என்னங்க நீங்க. அடிமடியில கைய வக்கிறீங்களே, தெருவுக்குத் தெரு சந்துக்கு சந்து டிஜிட்டல் போர்டு எல்லாம் வச்சும் கும்பகோணத்துல ஒரு இலட்சம் பேரு கூட கூடல அப்பறம் என்னத்த கணக்கு எழுதுறது.

சரி சரி விடுங்க. அது தான் ஜனவரி 29 ஐ ஒரு நினைவு நாளா அறிவிச்சுட்டாங்கலே.

ஆமா. நம்முடைய ஏமாத்தத்த நினைவுபடுத்திக்கிறதுக்கு ஒரு நினைவு நாள் தேவையா?

கணக்கு சம்பந்தமா வேற ஒரு சந்தேகம். ரொம்ப நாள் முன்னால சலாமத்துனு ஒருத்தர் அண்ணன் பிஜே இதுவரக்கும் வசூலித்த எல்லாத்துக்கும் வெள்ள அறிக்க வெளியிடனும்னு கேட்டாரே. அதயும் வெளியிட்டுற வேண்டியது தான.

நடக்குறதப்பத்தி பேசுங்க அஹமது. வர வர அண்ணனுக்கு கோபம் வர்ற மாதிரி நீங்க பேசுறீங்க.

சரி சரி நாம நிதானமா அப்பறமா பேசலாம். வர்றேன் வஸ்ஸலாம்.

-முல்லா- 04.11.2006


0 Comments:

Post a Comment

<< Home