Monday, October 09, 2006

உணர்வில் வெளியிட இயலாத நாடும் நடப்பும் -5

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும்

வஅலைக்கு முஸ்ஸலாம். வாங்க உமர் பாய். இப்பத்தான் ஒங்கல நெனச்சேன். புதுசா ஒரு மெயில் அனுப்புச்சிருந்தீங்க போல...

ஆமா அஹமது பாய். என்ன செய்யுறது. நாம மாட்டிக்கிறா மாதிரி இருந்தா உடனே இஸ்லாமிய போர்வைய போத்துனாதானே தப்பிக்க முடியும். அதுனால தான் 'நான் நோன்பாளி நான் நோன்பாளி' ன்னு மெயில் அனுப்புச்சுட்டேன்.

அதுசரி. அப்பத்தானே நாம அடிபடாம தப்பிச்சுக்க முடியும். ஆனா உமர் பாய், இப்போ ரமளான் மாசத்த காரணம் காட்ற நாம, இதுக்கு முன்னால இதே ரமளான்ல என்ன செஞ்சோம்னு நெனச்சா மனசுக்கு கஸ்ட்டமா இருக்கு.

வீடியோவ தூக்கிக்கிட்டு ஊர் ஊராக ஓடிப்போயி ஜாக் மவ்லவிகளப் பத்தி அசிங்கமா பேசி பதிவு பண்ணுனமே அத நெனச்சீங்களா. என்ன செய்யுறது. அல்லாஹ்வோட கட்டளய விட அண்ணனோட கட்டள தானே நமக்குப் பெரிசு. அதுனால தான் ரமளான்ல ஓதி தொழுது துஆக் கேக்குறத விட்டுட்டு அவதூறு பிரச்சாரம் பண்ணுனோம்.

ஆமா, மதுரை இடைத்தேர்தல் அப்புறம் உள்ளாட்சி தேர்தல்களப்பத்தி ஓண்ணுமே மூச்சுவுடாம இருக்குற மாதிரி இருக்கு...

என்ன செய்யுறது. திமுகவ ஆதரிக்கனும்னு வாய் வழிச் செய்தியாத்தானே நமக்கு தகவல் வந்துச்சு அப்ப எப்டி பிரச்சாரத்துல எறங்க முடியும். தவிரவும் இது என்ன நாம அம்மாவோட போட்டுக்கிட்ட ஹுதைபியா உடன்படிக்கை மாதிரியா. இப்ப வேற வழியில்ல. இப்பவும் அம்மா பின்னால போனா நம்ம ஆளுங்களே மூஞ்சில காறி துப்பிடுவானுக. அதனால திமுக ஆதரவுன்னு தகவல் அனுப்சிருக்கோம். எலக்ஷன் முடிஞ்சு நம்ம மேல சுனாமி அது இதுன்னுட்டு கைய வச்சா உடனே மறுபடியும் அம்மாவோட சேர்ந்து அரச எதித்து போராடுவோம்.

ஆமா. இது நமக்கு பளக்கமான ஒண்ணு தானே. நமக்கு எதிரா யாராவது இருந்தா உடனே அவுங்கள இஸ்லாத்துக்கு (அ) தவ்ஹீதுக்கு எதிரானவுங்கன்னு பட்டம் கட்டி கிளிச்சு தொங்க வுட்டுட மாட்டமா.

மேலப்பாளயம் பள்ளிக்கு வக்ஃப் நோட்டீஸ ஒட்ட வந்தவங்களயே ஆர்எஸ்எஸ் காரன்னு கூசாம கத கட்டி வுடலயா. நமக்கு இதெல்லாம் சகஜம் தானே.

அதுசரி, கடையநல்லூர் பள்ளி இப்போ ஜாக் கட்டுப்பாட்டுக்குப் போயிருச்சாமே.

ஆமா அஹமது. என்ன பண்றதுன்னு தெரியாமத் தான் நம்மாளு முளிச்சிக்கிட்டு இருக்காரு. ஏதோ அம்மாவோட ஆசி இருந்ததுனால அமைச்சர வச்சு மெரட்டி பூட்டுனோம். இந்த தமுமுககாரன் பள்ளிய மறுபடியும் தெறக்க வச்சதோட இல்லாம அத ஜாக்குக்கு கிடைக்கவும் ஏற்பாடு செஞ்சுட்டான்.

சரி சரி. நம்ம ஸைட்டு ஏன் பத்து நாளக்கி ஒரு வாட்டி அப்டேட் பண்றாங்க.

உடனே, உடனே அப்டேட் பண்றதுக்கு இப்போ என்னா குலுங்கும் கும்பகோண மேளாவா நடக்குது. ஏன் அஹமது? இப்போ தமுமுக காரனும் மத்த முஸ்லீம்களும் எக்கு தப்பா கேள்வி கேக்குறத சமாளிக்க முடியாம நோம்ப காரணமா வச்சு முன்னாலயும், பின்னாலயும் மூடிக்கிட்டு இருக்குறத வுட்டுட்டு என்னத்தயாவது சொல்லி (அ) எழுதி வம்புல மாட்டிக்கணும்னு நெனக்கிறீங்களா.

அது தான் நோம்ப காரணமாகச் சொல்லி ஆஃப் பண்ணிட்டோம்ல. ஆனா இந்த ரய்சுதீன் மாத்திரம் நம்ம மவுலவிகளயும் நிர்வாகிகளையும் குறி வச்சு எழுதிக்கிட்டே இருக்காரே.

அது தான் அஹமது பாய் எனக்கு ரொம்ப கவலயா இருக்கு. ஏதோ பாக்கர் பேசுற பெச்ச வச்சுக்குட்டு கொற கண்டுபுடுச்சாருன்னு பாத்தா போகப் போக பேச்ச கொற சொல்றத வுட்டுட்டு ஆளயே கொற கண்டுபுடிக்க ஆரம்புச்சுட்டாரே.

ஆமாங்க. போற போக்கப்பார்த்தா இந்த ரயீசுத்தின், துபாய்காரர மிஞ்சிருவார் போல இருக்கு. இவரு எழுதுற வேகத்தப் பாத்து, நம்ம முன்னால் தலைவரு, இன்னாள் தலைவரு எல்லாம் பேயறஞ்ச மாதிரி இருக்காங்க.

அவங்களப்பத்தி எழுதப் போறதா எதுவும் சொல்லலையே. அப்துர்ரஹ்மான் ஃபிர்தவ்ஸிக்குப் பெறகு, கோவை ஜாபர்ரப்பத்தி தானே எழுதப் போறதா சொல்லியிருக்காரு. நீங்க ஏன் அஹமது வீணா பயப்படுறீங்க.

சரி உமர் பாய். பாக்கர் விஷயத்துக்கு விவாதத்த சென்னையில வச்சுக்கிருவோமா முகவைல வச்சுக்கிருவோமான்னு வீரமா கேட்டீங்களே. இப்போ மட்டும் ஏன் அமைதியாகிட்டீங்க.

அதுக்கே அந்த ரய்சுதீன் ஓடி வந்துட்ட மாதிரி தெரிஞ்சுது. ஏன் வம்புன்னு தான் அமைதியாகிட்டேன், என்ன பண்றது அஹமது. பாக்கர் உம்மஹாத்துல் முஃமீன்களை கண்ணியகுறவா பேசியது உண்மைதான் ஆனா அத ஒப்புக் கொள்ள முடியாதே. அதே மாதிரித்தான் அப்துர்ரஹ்மான் ஃபிர்தவ்ஸி விவகாரமும். எல்லாம் உண்மைதான். ஆனா இத ஒத்துக்கிட்டா நம்மள எவனாவது தவ்ஹீத்வாதின்னு ஒத்துக்குவானா. அதனால தான் விஷயத்தை வுட்டுட்டு அதச் சொல்றவுங்கள பைத்தியகாரன் கோமாளின்னு பட்டம் கட்டிக்கிட்டு இருக்கோம்.

பாத்துங்க உமர். இப்புடியே போனா எல்லோரும் நம்மளத்தான் பைத்தியக்காரன் கோமாளின்னு துரத்த ஆரம்புச்சிருவாங்க. சரி. சரி நோம்பு தொறக்குற நேரமாச்சு நான் வர்றேன்.

வஸ்ஸலாம்

முல்லா 08.10.2006

0 Comments:

Post a Comment

<< Home