Tuesday, October 03, 2006

உணர்வில் வெளியிட இயலாத நாடும் நடப்பும் -4

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

வஅலைக்கு முஸ்ஸலாம். அடேடே வாங்க உமர் பாய். என்ன கோவமா இருக்குறாப்ல இருக்கு.

பின்ன என்னங்க அஹமது? போன தடவ சந்திச்சப்ப நான் பாட்டுக்கு பேசிக்கிட்டு இருக்கும் போதே நீங்க ஒடிட்டீங்களே. அப்ப எனக்கு கோவம் வராதா?

அது தானா விஷயம். நீங்க பாக்கர் விஷயமாக பேசுனீங்களா. அதுவும் குறிப்பா அவரு ஆட்ட கடிச்சு மாட்ட கடிச்சு மனுசன கடிச்ச கதயா, ஒரு தலைவர தே...ம....ன்னு திட்டி, ஒரு மவுலவிய பேட்டை ரவுடி ஸ்டைல எடுத்தெறிஞ்சு பேசி இப்போ உம்மஹாத்துல் முஃமினீன்கள கேவலமாக, கண்ணியக் கொறவா பேசயிருக்காருன்னதும் எனக்கு ரொம்ப சங்கடமாப் போச்சு. அதனால தான் ஓடிட்டேன்.

சரியாப் போச்சு போங்க! இப்புடியே எல்லோரும் ஓடிட்டீங்கன்னா, நான் மட்டும் என்ன செய்யுறது. ஆரம்பத்துல ஆதத்துல ஆரம்பிச்சு, ஆதம், அப்துர் ரஹ்மான், அப்துல்லா, அபூஆஃபியா, பத்ரு மைந்தன், ஜமீல், ஜுனியர் தம்பி, மூத்தவன்னு எத்தன பேர்ல எழுதிக்கிட்டிருந்தோம். கழுத தேஞ்சு கட்டெறும்பான மாதிரி கடைசில, நீங்க, நான், தீன் முஹம்மது மட்டும் களத்துல நின்னோம். அதுலயும், நம்ம பாக்கர் ஜெத்தாவுல கலந்துகிட்ட கூட்டத்த தீன் முஹம்மது உண்மையையும், தன்னோட கற்பனையையும் கலந்து அடிச்சு வுட்டத, தமுமுக காரன் புடிச்சு நாற அடிச்சதுனால தம்பி தீன் முஹம்மது ஓடிப் போயிட்டாரு. இந்த இலட்சணத்துல நீங்களும் தலமறவாகிப் போயிட்டீங்க. இப்போ நா மட்டும் தான் முழிச்சுக்கிட்டு நிக்கிறேன்.

ஓஹோ அதுனால தான் வெளிச்சம் ப்ளாக்ஸ்பாட்டும் 15 நாளா இருண்டு போயி கிடக்கோ.

ஆமா. என்ன பண்ணச் சொல்றீங்க. பாக்கர் பேசுனத சப்போர்ட் பண்ணி ஒரு போஸ்ட் போட்டதுக்கே ஆளாளுக்கு புடிச்சு உலுக்குறானுக. அம்மாவ (ஜெஜெவை) கௌவின்னு சொல்லு பாப்போம், அண்ணன் பிஜேவை கௌவன்னு சொல்லு பாப்போம்ன்னு போட்டு சதாய்கிறாங்க, இந்த லட்சணத்துல என்னத்த எழுதுறது.

ஏன் உமர் பாய் அலுத்துக்கிறீங்க. வழம போல அண்ணன்ட்ட கேட்டு எழுதி வாங்கிறது தானே. அடப்போங்க அஹமது பாய். அவருக்கு இதுக்கெல்லாம் இப்போ எங்க நேரம் இருக்கப் போவுது. சீசன் வந்துருச்சு, ஒரு தொகை பாக்க வேணாமா. ஜெயா டிவி, டான் டிவின்னு பயான் பண்ணி ஒரு தொகைய தேத்தணும், அதுக்கு வீடியோ பண்றதுக்கு மூன் மீடியா கிரியேஷனுக்கு ஒரு வருமானத்தை பாக்கணும். அப்புறம் இந்த பயான்களோட சிடி சேல்ஸ்ன்னு ஏகப்பட்ட பிஸி. மாத்திரம் அல்லாமல் சுனாமில சுருட்டுன மாதிரி இந்த வருஷ ஃபித்ராவுல எவ்வளவு ஒதுக்கலாம்னு யோசிக்க வேணாமா.

என்ன? உமர் பாய் நெசமாத்தான் சொல்றீங்களா. நம்ம டிஎன்டிஜே தலம சுனாமி பேர்ல சுருட்டுனது உண்மைதானுங்களா?

அட என்ன அஹமது நீங்களும் விவரம் புரியாமத்தான் இருக்கீங்களா? சுனாமி கணக்க வெளியிட்ட சமயத்துலேயே ஒங்களுக்கு புரியலயா. சுனாமிக்குன்னு நம்மள்ட்ட என்ன தனி கணக்கா இருந்துச்சு. என்னவோ கொஞ்சம் செட்டப் பண்ணி நெசம் மாதிரி காட்றதுக்காக செலவு கணக்க கூட எழுதி ஒரு வழியா நம்மாளுங்கள மாத்திரம் கூட்டு வச்சுத்தான் அந்த கணக்க ஒப்படச்சோம். இதுலயிருந்தே அந்த கணக்குல தில்லுமுல்லு இருக்குன்னு ஒங்களுக்கு தெரியாதாக்கும்.

அட, ஆமாங்க, நாம சாதாரணமா ஆட்டோவுல போனாலே ரவுண்டு பிகராத்தான் வாங்குவாங்க. நம்மாளுங்க என்னடான்னா ரொம்ப சுத்தம் மாதிரி உடான்ஸ் வுடுறதுக்காக ஆட்டோ செலவு 97 ரூபாய் போட்டிருந்ததப் பாத்து நானே சிரிச்சுக்கிட்டேன். சரிதான். அப்போ இந்த செட்அப் கணக்கு வெளிய தெரிஞ்சா நாறிப் போயிடுமே.

அதுதான் அஹமது எனக்கும் கவலயா இருக்கு. இந்த சென்ட்ரல் கவர்மெண்ட் வேற உள்துறை செயலாளர் மிஸ்ரா மூலமா ஒரு எச்சரிக்கை வுட்டுருக்கு. அதாவது வெளிநாட்டில் இருந்து சுனாமி நிவாரணத்துக்காக பெற்ற நன்கொடையை தவறாக பயன் படுத்திய தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்னு அறிவிச்சுருக்காங்க. இப்போ நம்ம தலவரு என்ன பண்ணப்போறாரோ பாவம்.

ஹ்ஹா....ஹா. அதுதானா சங்கதி. திடீர்னு அண்ணன் திமுக பக்கம் அதுனால தான் சாஞ்சுட்டாரோ. இனி எப்புடியாச்சும் கலஞரோட நெருங்கி இந்த விசயத்த ஆஃப் பண்ணச் சொல்லிடுவாரு. பயப்படத் தேவையில்ல.

அதெல்லாம் சரிதான். ஆனா இப்போ நாம எப்புடி மக்கள் மத்தியில தல காட்றது.

கவலப்படாதீங்க உமர். இன்னம் 10, 15 நாள்ள எலக்ஷனும் முடிஞ்சுரும், நோன்பும் முடுஞ்சுரும். அப்புறமா அண்ணனுக்கு வேற வேல இல்ல. அதுனால எதாவது புது பரபரப்ப உண்டாக்கி எழுதித் தள்ளிருவோம்.

ஆமா. அதுவுஞ்சரி தான். அப்ப நான் வர்றேன். வஸ்ஸலாம்.

முல்லா 02.10.2006

0 Comments:

Post a Comment

<< Home