உணர்வில் வெளியிட இயலாத நாடும் நடப்பும் -2
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
அஸ்ஸலாமு அலைக்கும், வாங்க உமர் பாய் சௌக்கியமா. நாம போனவாரம் பேசிக்கிட்ட விஷயத்தை அண்ணன்ட சொல்லிட்டீங்க போல....
வஅலைக்கு முஸ்ஸலாம். ஆமாமா. முனீர் ஹுதா விஷயத்தத்தான கேக்குறீங்க. ஆனாலும் அஹமது பாய், இந்த வாரம் உணர்வலைகள்ல எழுதியிருக்குற தொனி உப்பு சப்பில்லாமத்தான் இருக்கு.
இதுக்கு மேல என்னத்த எதிர்பாக்குறீங்க உமர். இந்த அளவுக்கு எறங்கி வந்து பணிவா, மயிலெறகுல தடவி குடுத்து கண்டிச்சதே பெரிய விஷயம் தான். ஆனா, என்னான்னா, வெத்துப் பேப்பர வச்சுக்கிட்டு இட ஒதுக்கீடே கிடச்சுட்ட மாதிரி குதிச்சது போல இந்த விசயத்துல அண்ணன் கண்டன அறிக்க குடுத்துட்டார்னு குதிக்க முடியாது.
இன்னமொன்னையும் கேளுங்க! உணர்வு பத்திரிக்கைக்கு 10 வருசம் முடிஞ்சுட்டுன்னு ஞாபகம் வருதே - ஞாபகம் வருதேன்னு பட்டியல் போட்டாங்களே அதுல 1999 வாழ்வுரிமை மாநாட்டு சேதிய மறச்சுப்புட்டாங்க. இதப்பாத்த தமுமுக காரன் சும்மா இருப்பானா? மெயில் அடுச்சுட்டான். ஆனா அதுக்கு நடுவுல வழக்கம் போல ஷார்ஜாவுலருந்து வந்தது மாதிரி ஒரு லட்டர வாசகர் கடிதத்துல போட்டுட்டாங்க. அதச் சொல்லிக்கிட்டு இந்த வார வாசகர் கடிதத்துலயும் ஒரு லட்டர போட்டிருக்காங்க.
ஏங்க உமரு, ததஜவ தலமேல வச்சுக்கிட்டு ஆடுற நாமலே வெள்ளிக்கிழம தான் உணர்வ படிக்கிறோம். அப்ப தமுமுக காரன் எப்படி அதுக்கு முன்னால படிப்பான். தமுமுக காரனோட மெயில நான் வியாழக்கிழமையே (செப்டம்பர் 07) பார்த்தேன். எனக்கென்னமோ நம்மாளுங்க, 'ஆமா! தப்பு நடந்துருச்சு, விடுபட்டுப் போச்சு இனிமே நடக்காம பாத்துக்குறோம்' னு நாலுவரி கட்டம் கட்டி போட்டுட்டு போயிரலாம்னு தோணுது.
என்ன அஹமது பாய்! நம்ம வழக்கத்தையே மாத்தச் சொல்றீங்கலே, மறந்துட்டீங்களா நம்மோட அதிகாரப்பூர்வ செய்தியாளர் தீன் முஹம்மதுவோட ஜித்தா வர்ணனைய பொய்யின்னு தெரிஞ்சே போட்டப்புறம், இந்த தமுமுககாரனுங்க நம்மள சரியா கார்ணர் பண்ணுனப்புறம் என்ன செஞ்சோம். ஜித்தா ததஜ சார்பா ஒரு கடிதத்தை போட்டுட்டு, உணர்வு வருத்தம் தெரிவிச்சதா சொல்லிக்கலயா, அது மாதிரி தான் இப்பவும் யாரோ ஒருத்தர் பேர்ல வாசகர் கடிதம் போட்டாச்சுல. அப்புறமும் அதிகாரபூர்வமா வருத்தம் தெரிவிக்க நாம என்ன முறையான செயல்கள்ல்லயா ஈடுபட்டிருக்கோம். நாம நடத்துறதே திருடிக்கிட்டு வந்த பத்திரிக்க, அதுக்கு இது போதும்.
அது சரி! ஆனா ஜனங்க முன்ன மாதிரி, நாம சொல்றத கேட்டுட்டு தலையாட்டிட்டு போவ மாட்டேங்குறாங்களே. மடக்கி மடக்கி கேள்வி கேக்குறாங்களே.
அஹமது பாய்! இப்புடி பொத்தாம் பொதுவா சொல்லாம குறிப்பா சொல்லுங்களேன்.
அதாவது உமரு! நம்மள முக்கியமா சப்போர்ட் பண்ற சவுதி அரேபியாவுல உள்ள நம்ம பொறுப்புதாரி ஒருத்தரு சமீபத்துல வரதட்சணை வாங்கி கல்யாணம் கட்டிக்கிட்டாராம். இததான் இப்போ நாம எங்க போனாலும் கேக்குறாங்க.
அட என்னங்க நீங்க இப்பவும் புரியாம பேசுறீங்க! தமுமுக காரனோ, ஜாக் காரனோ வரதட்சணை பரிமாற்றம் உள்ள கல்யாணத்துல கலந்துக்கிட்டாலே அவங்கல முஷ்ரிக் அல்லது முனாஃபிக் ரேஞ்சுல பேசுற நம்ம அண்ணன், இதப்பத்தி என்ன சொன்னார்னு தெரியாதா ஒங்களுக்கு!
இல்லையே! தெரியாதே! என்ன சொன்னாரு...... தேர்தல் பிரச்சார கூட்டத்துல கூத்தும் கும்மாளமுமா ஜகஜ்ஜோரா நடந்த கூட்டத்துல, ததஜ கொடிகளோட நம்மாளுங்க கலந்துகிட்டத மறச்சு, நம்ம கொடிகளை யூஸ் பண்ணி தமுமுககாரன் செஞ்ச பித்தலாட்டம்னு அவனுக மேல பழிபோட்ட மாதிரி, இவரு எங்க ஆளே இல்லேன்னுட்டாரா.
சே.சே அப்படியெல்லாம் சொல்லல. இவரு நம்ம ஆளுதான் ஆனா இத கண்டுக்காதீங்கன்னு மத்த நிர்வாகிகள்ட்ட சொல்லிட்டாராம்.
அப்படிப்போடு அருவாள! நம்ம பாக்கரு கைய்யும் மெய்யுமா லாட்ஜில வச்சு மாட்டுனப்புறம் கூட அத மறுத்து டிவி பேட்டியெல்லாம் தந்தவரு தான் நம்ம தலைவரு. என்ன செய்யுறது. இப்புடி பல பேரோட குடுமி கைல இருக்குறதுனால தான அவுங்களும் அடங்கி கெடக்காங்க! இவரும் இஷ்டப்பட்ட படியெல்லாம் ஆடுறாரு. பாவம் இந்த ஜுனைஃபர், இப்ப இவரோட குடுமி அண்ணன்கிட்டயா....சரி சரி.
அது கிடக்கட்டும். 2 வருசத்துக்கு முன்னால இந்த தமுமுககாரங்களை மிரட்டுறதுக்காக பேட்ட ரவுடி கோட்டூர் ரபீக்க கூட்டிட்டு வந்து பதவி குடுத்து, தமுமுக ஆபீஸ்ல அடிதடிக்கு ஏற்பாடு செஞ்சு வைச்சுருந்தாரே அண்ணன், அந்த கோட்டூர் ரஃபீக் எங்க இப்போ ஆளய காணோம்.
ஆமாமா. பக்காவா திட்டம் போட்டுத்தான் ரஃபீக்கையும் மத்த அடியாள்களையும் கூப்ட்டு வச்சுருந்தாரு, ஆனா அண்ணைக்கு எப்டியோ மோப்பம் புடிச்சு தமுமுக காரன் உஷாராகி போலீஸ கூப்ட்டு நிக்க வச்சுட்டான். அதனால தான் அண்ணன் நெனச்ச மாதிரி ஒண்ணும் செய்ய முடியல. ஆனாலும் நம்மாளு விடலயே. கோத்ரா சம்பவத்த நரேந்திர மோடி யூஸ் பண்ணிக்கிட்டா மாதிரி, ஒடனே பரபரப்பா ஈமெயில், நம்ம கிட்ட இருந்த வின்டிவில ஸ்குரோல் நியூஸ், அப்புறம் நியூஸ் கவரேஜ், அவரோட பேட்டின்னு கலக்கிட்டார்ல.
எல்லாம் சரிதான். ஆனா, அப்பவும் நம்மாளு முண்ணுக்குப் பின் முரணா பேசி நம்மளோடது செட்டப்புன்னு பொதுமக்களுக்கு புரிய வச்சுட்டாரு. ஆனாலும் ஆர்.எஸ்.எஸ் பாணியில ஆரம்பமா வுட்ட ஈமெயில், டிவி பேட்டி எல்லாம் ஒர்க்அவுட் ஆகத்தான் செஞ்சுச்சு. ஆனா இஸ்லாமிய எதிரிகள எதிர்க்குறதுக்கு இப்படியெல்லாம் திட்டம் போட மாட்டேங்குறாரே.
அதெப்புடிங்க முடியும். இஸ்லாமிய சமூகத்த பிளவுபடுத்துறதுக்காகவும், பலவீனப்படுத்துறதுக்காவும் தானே அவரு பாடுபட்டுக்கிட்டு வர்றாரு. அந்த அடிப்படையில தானே, மெட்ராஸ் ட்ராமாவ முடிச்சுட்டு பாளயங்கோட்டை தமுமுக ஆபீஸ அடிச்சு நொறுக்கி, அங்க இருந்த பொறுப்பாளர்கள வெட்ட ஆளனுப்புனாரு.
அதத்தான் நான் கேக்க வந்தேன். இம்புட்டு வேலயயும் அந்த கோட்டூர் ரபீக்க வச்சுத்தானே செஞ்சாரு. அவருக்கு நெல்லை மாவட்ட ததஜ தலைவர் போஸ்ட் கூட குடுத்தாரே. இப்போ என்ன ஆச்சு அந்த ரஃபீக் பத்துன பேச்சு மூச்சய காணோம். கடையநல்லூர், மேலப்பாளையம் பள்ளி விஷயமாக சைபுல்லாவும், லுஹாவும் தான் பேட்டி குடுக்குறாங்க. ஆக மொத்தத்தில் ரஃபீக் என்ன ஆனார்னே தெரியலயே.
பொறுங்க அஹமது பாய். முடிஞ்சா அடுத்தவாரத்துக்குள்ள எதாவது தெரிஞ்சா சொல்றேன். அப்ப வரட்டுமா.
வஸ்ஸலாம்
முல்லா 17.09.2006
0 Comments:
Post a Comment
<< Home