பார்ப்பனிய கைக்கூலி பிஜே
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)
பத்திரிக்கை உலகின் பயங்கரவாதி எனப் புகழ்பெற்ற 'சோ' வை மிஞ்சும் ஒருவர் உண்டென்றால் அது சாட்சாத் பிஜே தான் என்பதனை மீண்டும் அவர் நிரூபித்துள்ளார்.
போயஸ் தோட்டத்து பொன்மகளிடம் விலை போனதன் விளைவாக, வெளியிடப்படாத ஒரு வரைவு ஆணையத்தை (டிராஃப்ட்) வானளாவ உயர்த்திப் பிடித்து, ஓட்டுப் பொறுக்கிய போதே, தானொரு பார்ப்பனிய கைக்கூலி என பகிரங்கப்படுத்தினார்.
அப்பொழுதே பல முஸ்லிம்கள், அவரது முந்தய கால பிரச்சாரத்தில் மயங்கி அவரை குருவாக ஏற்று வந்தவர்கள் முகம் சுழிக்கத் தொடங்கினர். பிஜேயின் முகத்தில் காறி உமிழாத குறையாக, தப்பித்தோம் பிழைத்தோம் என ததஜவிலிருந்து கழன்று கொண்டவர்கள் ஏராளமானோர்.
இதைப் புரிந்து கொள்ளக் கூட இயலாமலிருந்த இன்னும் சில அப்பாவிகள் தற்சமயம் திருவாளர் பிஜே நடத்தும் பத்திரிக்கையில் வெளியான வரலாற்று பரட்டை கண்டு புழுங்க ஆரம்பித்துள்ளனர்.
பொதுவாக முஸ்லிம்களின் வரலாற்றை புரட்டி எழுதுவது பார்ப்பனர்களின் தொழில். பத்திரிக்கைகளில் எழுதுவதை தனது தொழிலாக பதிவு செய்து வைத்துள்ள இந்த தவ்ஹீத் வியாபாரி பிஜே, தான் கூலி பெற்ற பார்ப்பனர்களுக்கு விசுவாசமாக முஸ்லிம்களின் நிகழிகால சரித்திரத்தை திருத்தி எழுத முற்பட்டுள்ளார்.
யூத, பார்ப்பனியர்களின் விருப்பத்திற்கேற்ப முஸ்லிம் அமைப்புகளை உடைத்து, முஸ்லிம்களின் ஒற்றுமையை குலைத்த பிஜே, தான் கையகப்படுத்திய உணர்வு பத்திரிக்கையில் பத்தாண்டு கால பழைய நினைவுகளை பட்டியலிட்டுள்ளார். (சோ-வகையறாக்கள், குருமூர்த்தி வகையறாக்கள் மூலமாக வெளியிடுவதைப் போல) பட்டியலிட்டுள்ள கட்டுரை ஆசிரியர் 'மர்யம் செல்வன்' தான் அப்பத்திரிக்கையின் ஆரம்ப கால ஆசிரியரான 'மர்யம் செல்வன்' இல்லை என வாக்குமூலம் அளிக்கிறார். இதன் மூலம் யாரோ சொல்லியவற்றை தொகுத்து கட்டுரையாக்கி உள்ளதை ஒப்புக் கொள்கிறார்.
கிடைக்கும் தகவல்கள் அடிப்படையில் கட்டுரை எழுதுவது தவறாகாது. ஆனால் கிடைக்கும் தகவல்களை ஊர்ஜிதப்படுத்திக் கொள்ளாமல் எழுதுவது தான் தவறாகும். இதுவே யூத பார்ப்பனர்களின் வழிமுறையாகும்.
பத்தாண்டு கால பழைய நினைவுகளில் பல உண்மைகளை மறைத்தும் திரித்தும் வெளியிட்டுள்ளார்.
உணர்வின் ஆரம்ப காலகட்டத்தை எழுதப் புகுந்தவர் என்ன காரணத்தாலோ, 2004 க்குப்பின் உருவான கருத்தாக்கத்தை கலந்து உண்மை உணர்வை சிதைத்து விட்டார்.
'எந்த இயக்கத்தின் சார்பாகவும் உணர்வு வெளியிடப்படவில்லை' என்ற 2004 க்கு பின் உருவான, சில ஓடுகாலிகளால் உருவாக்கப்பட்ட கருத்தினை நிலை நிறுத்த, ஆரம்ப கால சேர்மன் எஸ்.எம்.பாஷாவின் நியமனத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழகத்தின் மிக வலுவான மக்கள் பேரியக்கமான தமுமுக, எவ்வாறு கலிமா சொன்ன ஒவ்வொரு முஸ்லீமின் முன்னேற்றத்திற்காக பாடுபடுவதற்கு சங்கல்பம் எடுத்துக் கொண்டதோ, அதேபோல் மறைக்கப்படும் சமுதாய செய்திகளை வெளிக்கொணர வேண்டும் என்ற தாகத்தில் தான் ஊடகத்துறையில் தடம் பதித்தது.
தமுமுக அனைத்து தமிழ் முஸ்லிம்களுக்கும் பொதுவானதாக இருப்பது போல், தமுமுக சார்பாக துவங்கப்படும் ஊடகமும் அனைத்து தரப்பு முக்களையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் உருவானது தான் முஸ்லிம் மீடியா டிரஸ்ட்.
2004இல் முஸ்லிம் மீடியா டிரஸ்ட்டையும் அதன் வெளியீடுகளையும், முஸ்லிம் டிரஸ்டையும் அதன் சொத்துக்களையும் களவாடிச் சென்றவர்கள் வைக்கும் சொத்தை வாதம் தான், இந்த டிரஸ்ட்களுக்கும், தமுமுகவிற்கும் சம்பந்தமில்லை - என்று கூறுவது.
2004 ஏப்ரலுக்கு முன் எதுவும் சொல்லாமல், 2004 ஏப்ரலில் களவாடிச் சென்றதன் பின் இவ்வாறு சொல்வதெல்லாம் வரலாறு தெரியாத விசிலடிச்சான் குஞ்சுகளை தக்க வைப்பதற்காக தான். அவர்களது வாதத்திற்கு, அவர்களால் முன்னிறுத்தப்படும் சாட்சிகள் இருவர். (1) ஜாக் மாநிலச் செயலாளர் ரஃபீக் அவர்கள். (2) எஸ்.எம். பாஷா அவர்கள்.
ஆனால் இந்த இருவருமே, பார்ப்பனிய கைக்கூலி பிஜேவிற்கும் அவரது சொத்தை வாதங்களுக்கும் முரணாக செயல்பட்டுள்ளனர்.
தவ்ஹீத் வியாபாரி பிஜே தான் டிரஸ்ட்டை களவாடிச் சென்றதை நியாயப்படுத்த ரஃபீக் அவர்களின் பங்களிப்பை எடுத்துக் கூறிய உடனேயே, ரஃபீக் அவர்கள் பிஜேயின் வாதத்தை மறுத்து டிரஸ்ட் தமுமுகவால், தமுமுகவிற்காகவே உருவாக்கப்பட்டது என விளக்கமளித்து பிஜேவை பொய்ப்படுத்தினார்.
அதேபோல் டிரஸ்ட்டின் ஆரம்பகால சேர்மனாக பொறுப்பேற்றிருந்த எஸ்.எம்.பாஷா அவர்கள், தனது சொந்த காரணங்களுக்காக (பின்னாளில் பிஜேபிஇல் இணைவதற்காக) டிரஸ்ட் பொறுப்பிலிருந்து ஒதுங்கிய போது, முறையாக பொறுப்புக்களை திருப்பி ஒப்படைத்து சென்றார் (தவ்ஹீத் வியாபாரி பிஜே போல் எடுத்துச் செல்லவில்லை)
ஆக, கிரிமினல் கூட்டம் ததஜ சுட்டிக்காட்டும் இருவரின் செயல்களுமே, இந்த டிரஸ்ட்கள் தமுமுகவிற்கு சொந்தமானவை என்று தான் சாட்சியமளிக்கின்றன. ஆனால் தான் களவாடிச் சென்ற மீடியாவை உபயோகப் படுத்தியே இவ்வுண்மைகளை மறைக்க பத்திரிக்கை பயங்கரவாதி பிஜே மீண்டும் முயற்சித்துள்ளார்.
எல்லாம் வல்ல அல்லாஹ், இந்த பார்ப்பனிய கைக்கூலி பிஜேயின் சூழ்ச்சியிலிருந்து சமுதாயத்தை பாதுகாப்பானாக.
கட்டுரையாசிரியர், 'உணர்வோடும், அதன் செய்திகளோடும் தொடர்புடைய சில முக்கிய தினங்கள்' என ஒரு பட்டியலிட்டுள்ளார்.
இப்பட்டியலை தொகுத்துள்ள விதத்திலிருந்தே இவருக்கு ஆரம்பகால வரலாறு தெரியாது, யாருடைய வேண்டுகோளுக்காகவோ, அவர்கள் தந்த விபரங்களை தொகுத்துள்ளார் - என எளிதாக புரிந்து கொள்ள முடிகிறது.
ஏனெனில், இப்பட்டியல் 1995 சென்னை இம்ப்பீரியல் வளாகத்தில் நடைபெற்ற கோரிக்கை மாநாடு குறித்தோ, 1999 இல் சீரணி அரங்கில் நடைபெற்ற திருப்புமுனை மாநாடான முஸ்லிம்களின் வாழ்வுரிமை மாநாடு குறித்தோ குறிப்புகள் இல்லை.
இக்குறிப்புகள் திட்டமிட்டே மறைக்கப்பட்டதோ எனும் சந்தேகம் பலருக்கு வலுவாகவே உள்ளது.
ஏனெனில், அன்று அரசியல் அநாதையாக இருந்த ஜெயலலிதாவிற்கு ஒரு திருப்புமுனை ஏற்படுத்தி தந்தது. 1999 - ஜுலை மாநாடு. அந்த மாநாட்டில் லட்சக்கணக்கானோர் முன்னிலையில் தான் ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு தருவேன் என உறுதியளித்தார். ஆனால் 2001 இல் ஆட்சிக்கு வந்ததும் மதமாற்ற தடை சட்டத்தை அமுல்படுத்தினார். காலகாலமாய் பின்பற்றப்பட்டு வந்த நடைமுறையான அமைச்சரவையில் முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை உடைத்தெரிந்தார் (ஒருவேளை இதுதான் அவர் கூறிய தனி இட ஒதுக்கீடோ என்னவோ) ஆட்சியிலிருந்த 5 வருட காலமும் வாளாயிருந்து விட்டு தேர்தல் அறிவிக்கைக்குப் பின் காலாவதியான பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மை நல ஆணையத்தை முஸ்லிம் நல ஆணையமாக மாற்றி உத்தரவு பிறப்பித்தார். (தேர்தல் கமிஷன் அங்கீகரிக்காததால் அவ்வாணையம் செல்லாக்காசாகியது.)
வாழ்வுரிமை மாநாடு பற்றி குறிப்பிட்டால், வாசகர்களுக்கு இவை அனைத்தும் நினைவுக்கு வந்துவிடுமோ என அஞ்சியிருக்கலாம். இத்தனை சிறப்பு பெற்ற போயஸ் தோட்டத்தின் பொன்மகளிடம் பெற்ற பெட்டிகளுக்காக கடந்த தேர்தலில் மாய்ந்து மாய்ந்து ஓட்டுப் பொறுக்கியதால் பொங்கி எழுந்த முஸ்லிம்கள் தோல்வியை பரிசாக தந்தது குறித்த அச்சமாக இருக்கலாம்.
அல்லது, வாழ்வுரிமை மாநாட்டின் நிறைவுரையாக, தவ்ஹீத் வியாபாரி பிஜே அதற்கு முன் பேசிய ஜெஜெவை விமர்சித்ததையும், தூக்கிப் போட்டு காலில் மிதிப்போம் என கர்ஜித்ததையும் எவரும் நினைவு படுத்தி விடுவார்கள் என்ற அச்சமாகக் கூட இருக்கலாம்.
எப்படியோ, முஸ்லிம்களின் இட ஒதுக்கீடு பற்றிய அரசியல் கட்சிகளின் கருத்தை மாற்றியமைக்க அச்சாரமாக இருந்த நிகழ்வு இவர்களின் பட்டியலில் இடம் பெறாததிலிருந்தே இவர்களின் அச்ச உணர்வை புரிந்து கொள்ளலாம்.
அதேபோல்,
10-04-2004 தமுமுகவிலிருந்து அதன் அமைப்பாளர் பிஜே விலகிய நாள் என பதிவு செய்துள்ளார்.
10-04-2004 இல் தான் துரத்தப்பட்டதாக, விலக்கப்பட்டதாக ஒப்பாரி வைத்தே அன்றைய இதழும் அடுத்தடுத்த குறுந்தகடுகளும் (சிடி) வெளி வந்தன. இரண்டரை வருடங்கள் கழிந்து விலகியதாக ஒப்புக் கொண்டுள்ளார். விலகிய சமயத்தில் களவாடிய சொத்துக்களை எப்பொழுது ஒப்புக் கொள்வார்களோ தெரியவில்லை.
மேலும், இப்பதிவில் வேறு ஒரு புரட்டும் அடங்கியுள்ளது. அதாவது விலகி ஓடிய அன்று அவர் அமைப்பாளராக இருந்தது போன்ற மாயத் தோற்றம் உருவாக்கப்பட்டுள்ளது. உண்மையில் அன்றைய தினத்தில் அவர் முன்னால் அமைப்பாளர் மட்டுமே. அமைப்பளார் பொறுப்பிலிருந்து அதற்கு முன்பே விலகி இருந்தார் என்பதே உண்மை.
இறுதியாக, '......மாறாமல் இருப்பது அதன் சமுதாய நோக்கமே' என சான்றிதழ் தந்துள்ளார். பாவம். புரியாமல் எழுதியுள்ளார். ......'இப்பொழுது எஞ்சியிருப்பது பத்திரிக்கை பயங்கரவாதி, பார்ப்பனர்களின் கைக்கூலி பிஜேயின் சுயநலன் மட்டுமே' என முடித்திருந்தால் பொருத்தமானதாக இருந்திருக்கும்.
போனால் போகிறதென்று ஓர் உண்மையை கட்டுரை முடிவில் ஒப்புக் கொண்டிருப்பதை பாராட்டியாக வேண்டும்.
'உணர்வின் ஆரம்பகால வெற்றிக்கு உறுதுணையாக நின்றவர்கள் இன்று மாற்று கருத்துடையவர்களாக இருந்தாலும்......' முஸ்லிம் டிரஸ்ட்டும் சொத்துக்களும், முஸ்லிம் மீடியா டிரஸ்ட்ம் அதன் வெளியீடுகளும் தமுமுகவிற்காக உருவாக்கப்பட்டன, தமுமுககாரர்களால் முன்னெடுத்து செல்லப்பட்டன என்பதனை விளங்கிக் கொள்ள இந்த வாக்குமூலம் ஒன்றே நடுநிலையாளர்களுக்கு போதுமானது.
எனவே, இதன் அடிப்படையில் கையகப்படுத்திய ஆக்கிரமித்த சொத்துக்களை திரும்ப ஒப்படைத்து சமுதாய சொந்தங்களிடம் மன்னிப்பை கேட்டுப் பெற்று மீட்சி பெற கிரிமினல் ததஜவினர் தயாராகட்டும்.
மூன்றாம் காரணி ஆசிரியர் மர்யம் செல்வன் அவர்களே! பாவத்தில் பங்காளிகளாக இல்லாமல், அபகரித்த ஆக்கிரமித்த சொத்துக்களை திரும்ப ஒப்படைக்க முதலாம் காரணியாக செயல்படுங்கள் என கேட்டுக் கொள்கிறேன்.
வல்ல அல்லாஹ் நம்மை நேர்வழிபடுத்துவானாக.
வஸ்ஸலாம்
அபூ அப்தல்லாஹ் - தம்மாம்
0 Comments:
Post a Comment
<< Home