Wednesday, August 16, 2006

உமரின் திரிபுவாதம்

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

அன்பின் இஸ்லாமிய சகோதரர்களே!

உண்மையை திரித்துக் கூறும் உமர் போன்ற ததஜ அடிமைகளுக்கு தமிழ் மொழி கூட தெரியவில்லை என்பதைப் பார்க்கும் பொழுது பரிதாபம் தான் பிறக்கிறது.

என்ன செய்வது! அவர்களின் தானைத்தலைவர் தமுமுகவிலிருந்து விலகி ஓடியபொழுது விளையாடிய அவரது வார்த்தை சுழலில் சிக்கியதால், இன்று படிப்படியாக தமிழே புரியாமல் போய்விட்டது போலும்.

அன்று, தவ்ஹீத் வியாபாரி பி.ஜேவின் கட்டுப்பாட்டில் இருந்த அனைத்து தவ்ஹீத் ஜமாஅத் கூட்டமைப்பின் முரண்பாடான செயல்களை விமரிசித்த தமுமுகவை, தவ்ஹீதிற்கு எதிரான இயக்கம் என திரித்துக் கூறியதை ஏற்று அவரின் பின் சென்றதால் ஏற்பட்ட பின் விளைவு - இன்று மார்க்கமும் தெரியாமல், தமிழும் புரியாமல் அலை போதுகிறார்கள்.

யாரோ ஒருவரின் ஈமெயிலில் ஜே ஏ க்யூ ஹெச் என தமிழில் எழுதியிருந்ததை எம் ஹெச் ஜே என சம்பந்தமே இல்லாமல் வாசித்துக் கொண்டு கண்ணில் பட்டவர்களிடத்தில் எல்லாம் கதையளந்து கொண்டிருந்தபோதே, தமிழ் வாசிப்பில் அவர்களுக்கிருந்த தடுமாற்றம் விளங்கியது.

சில தமுமுக சகோதரர்கள் அக்கறையாக தமிழ் கற்றுக் கொடுத்த பின், மன்னிப்புக் கேட்டுக் கொண்டு ஓடிப் போய் மறைந்தது ஒரு வருடத்திற்கு முன்புள்ள செய்தி.

அதே பாணியில், உண்மையை திரித்துக் கூறும் உமர், தமிழ் தெரியாமல், புரியாமல் ஒரு பத்திரிக்கை செய்தியை ஒட்டி மெயில் அனுப்பியுள்ளார்.

தினமலர் பத்திரிக்கையில் வெளியான தமுமுகவின் மாநில செயலாளர் தமிமுன் அன்சாரியின் பேட்டி குறித்து விமர்சித்துள்ளார்.

கெட்டிக்காரனின் பொய்யும் புரட்டும் எட்டு நாளைக்கு என்ற பழமொழிக்கேற்ப மகா, மகா கெட்டிக்காரனான தவ்ஹீத் வியாபாரி பிஜெவின் பொய்யும், புரட்டும் சந்தி சிரித்துக் கொண்டிருப்பதால் அவரது சுன்னத்தின் (நடைமுறையின்) அடிப்படையில் ததஜவை கலைக்க திட்டம் வைத்துள்ளார்களோ, என்னவோ தெரியவில்லை. இதற்கு அச்சாரமாக தமீமுன் அன்சாரி பேட்டியை திசை திருப்பிப் பார்க்கிறார்.

'ததஜ தலைவர், தமுமுகவில் இணைய முன்வந்தால் ஆதரிக்கத் தயார்' - அன்சாரி பேட்டி

அவரது பேச்சு சாராம்சத்தின் சுருக்கம் 'அண்ணன் அவர்களை தமுமுகவின் பொறுப்பை ஏற்றுக் கொள்ளுங்கள் என்பதுடன் ததஜவிலும் நீடிக்க மாட்டீர்கள்' என்பதுவுமாகும். இது உண்மையை திரிக்கும் உமரின் மெயில்.



உண்மையை திரிக்கும் உமர், அன்சாரியின் பேட்டியை திரித்துள்ளதைப் பாருங்கள்.

நமது கேள்வி:

தினமலர் பேட்டியில் - அன்சாரி அவர்கள், திரும்பி வந்து பொறுப்பேற்றுக் கொள்ளுங்கள் என குறிப்பிடாத பொழுது, கற்பனையாக கதை எழுதி, அதற்கு விளக்கமும் அளித்துள்ளது ஏன்?

- கும்பகோண பொதுக் கூட்டத்தை ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு கணக்கு சொல்லி ஏமாற்ற நினைத்து உண்மை வெளிப்பட்டதில் அன்றைய முதல்வர் முன் உறைந்து போய், ஒரு இலட்சம் தான் என ஒப்புக் கொண்டதால், முஸ்லிம்கள் காரி உமிழ்ந்தார்களே அதனாலா?

- கும்பகோண பொதுக் கூட்டத்தை சொல்லி வசூலித்த பணத்திற்கு கணக்கு காட்டவில்லை என்றும், சாமானியர்களின் நன்கொடைகளை சந்துக்கு சந்து டிஜிட்டல் பேனர் வைத்து சுய தம்பட்டத்திற்காக வீண் விரயம் செய்தது ஏன் என்றும் ததஜவிலுள்ள தவ்ஹீத்வாதிகள் கேள்விக் கணைகளால் துளைத்தார்களே! இதிலிருந்து தப்பித்துக் கொள்ளவா?

- சுனாமியின் பெயரால் வசூல் செய்து, தனது இயக்கத்தவர்களுக்கு சீருடை வாங்கவும், தனது களவாடிய பத்திரிக்கையின் நஷ்டத்தை ஈடுகட்டவும், பாதிக்கப்பட்டவர்களின் உரிமையில் பங்கு போட்டுக் கொண்ட உலக மகா அயோக்கியத்தனத்தை முஸ்லிம்களும், முஸ்லிம் அல்லாதோரும் கண்டித்தார்களே! அதிலிருந்து தப்பிக்கவா?

- இறுதியாக, போயஸ் தோட்டத்தின் பொன்மகளிடம் அடிபணிந்து, இல்லாத ஆணையத்தை, வெளியான அரசு ஆணை போல் பிலட்அப் செய்ததனால், முஸ்லிம்களின் ஒட்டு மொத்த சாபத்திற்கு ஆளாகி நிற்கின்றீர்களே அதிலிருந்து மீட்சி பெறவா?

எதற்காக இந்த நாடகம்?

தமீமுன் அன்சாரி குறிப்பிட்டது, 'திரும்பினால் ஆதரிக்கத் தயார்' - அதாவது செல்வாக்கை இழந்து, ஆதரவு தேடி திரும்பி வந்தால் - கலிமா சொன்ன ஒவ்வொரு முஸ்லீமிற்கும் உதவுவதற்காக ஆரம்பிக்கப்பட்ட தமுமுக - உதவும், ஆதரவு அளிக்கவும் தயார்.

ஆதரவு தேவைப்படும் நிலையில் உள்ளவர்களை அநாதரவாக விட்டுவிடக் கூடாது என்ற நல்ல உள்ளத்தின் கருணையின் வெளிப்பாடு. இதனை பொறுப்புக்களை தாரைவார்க்க தயாராக இருப்பதாக கற்பனையில் மிதந்து கொண்டு ஏன் கதை எழுத வேண்டும்.

தமுமுகவின் அடிமட்ட தொண்டனாக இணைந்து, மக்கள் நலப்பணிகளில் தமுமுகவின் சீரிய வழிகாட்டுதலின் படி செயலாற்ற முன்வரும் ஒவ்வொரு முஸ்லீமையும் வரவேற்க தமுமுக என்றென்றும் தயாராக இருக்கிறது. அதனடிப்படையில் தான் ததஜ தலைவர் வந்தாலும் அவருக்கும் தமுமுக ஆதரவளிக்கும்.

இதற்கு மேலும் தனது திரிபு முயற்சிகளை கைவிடுமாறு உண்மையை திரிக்கும் உமருக்கு வேண்டுகோள் வைக்கிறோம்.

வல்ல அல்லாஹ் அனைவரையும் நேர்வழிப்படுத்துவானாக.

ராவுத்தர் 16.08.2006

0 Comments:

Post a Comment

<< Home