தமிழ்நாடு தவ்ஹீது ஜமாத் என்ற அரசியல் கட்சி
தமிழ்நாடு தவ்ஹீத ஜமாத் என்பது நீங்கள் நினைத்துக் கொண்டிருப்பது போன்று தவ்ஹீதை நிலைநாட்டுவதற்காக ஏற்படுத்தப்பட்ட ஜமாத் இல்லை. சமூக அரசியல் பேரியக்கம் என்று அதற்கு தஃப்ஸீர் எழுதியிருப்பதை அதிகமானோர் கவனிப்பதில்லை. தவ்ஹீதுவாதிகள் எல்லோரும் அதில் தான் ஐக்கியம் ஆக வேண்டும், இல்லையேல் அவர்கள் தவ்ஹீதை விட்டு வெளியேறி விட்டவர்கள் என்பது போன்ற மாயையை ஏற்படுத்தி வருகிறார்கள் அந்த கூட்டத்தைச் சேர்ந்தவர்கள்.
சமீபத்தில் வெளியான ததஜவின் ஊதுகுழல் 'ஏகத்துவம் ஜுலை 2006' ல் தலையங்கத்தில் ஒழுங்காக எழுதிக் கொண்டு வந்த ஆசிரியர் இடையில் ஒரு வாசகத்தை இடைச் செருகல் செய்கிறார். 'ஏகத்துவ வேடம் போட்ட நடிகர்களைத் தவிர்த்து, வேறு யாரும் இந்தக் கொள்கையை விட்டு வெளியேறவில்லை' என்பது தான் அந்த வாசகம்.
இந்த இடத்தில் நாம் ஒரு விஷயத்தை சொல்லியே ஆக வேண்டும், இந்த 'ஏகத்துவம்' என்ற மாத இதழ் கூட தமுமுக என்ற பேரியக்கத்தின் உணர்வு வார இதழை ததஜவினர் களவான்டது போன்று களவாடப்பட்ட ஒன்றாகும். 'அல்முபீன்' என்று ஒரு மாத இதழ் வந்து கொண்டிருந்தது இல்லையா? அது எங்கே சென்றது?
நயவஞ்சகத்தனமாக நாடகமாடி தன்வசப்படுத்திக் கொண்ட பிஜே, அதன் பெயரையும் மாற்றி, இல்லாத 'ஜமாஅத்துத் தவ்ஹீது' என்னும் பெயரால் தனதாக்கிக் கொண்டு அதன் பப்ளிஷர் தனது மகன் முஹம்மதின் பெயரைப் போட்டுக் கொண்டார் என்பது 'அல்முபீன்' திருடப்பட்ட வரலாறு.
தமிழகத்திலேயே குறிப்பாக முஸ்லிம்களிலேயே மீடியாவின் பலம், சக்தி என்னவென்பதை எல்லோரையும் விட மிகத் தெளிவாக விளங்கிக் கொண்டவர்தான் பிஜே என்பதை மறந்து விடாதீர்கள். அதை கையகப்படுத்திக் கொள்வதற்கு என்ன வேண்டுமானாலும் செய்யத் துணிவார் என்பதும் உண்மை.
இப்போது விஷயத்துக்கு வருவோம்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தில் சேராத எல்லோரையும் தவ்ஹீதுவாதிகள் இல்லை என்கிறார்கள். யாரையோ விமர்சனம் செய்வதாக நினைத்துக் கொண்டு ஒட்டு மொத்த முஸ்லிம்களையும் ஏகத்துவவாதிகள் அல்ல என்று சொல்வதற்கு என்ன துணிச்சல் இவர்களுக்கு?
சரி ததஜ எனும் தமிழ்நாடு தவ்ஹீது ஜமாத் (அரசியல் கட்சி)யில் இருப்பவர்களாவது தவ்ஹீதுவாதிகளா? அவர்களது கூற்றுப்படி, இல்லை என்பது தான் உண்மை.
திருடப்பட்ட 'ஏகத்துவம்' ஏப்ரல் 2004 ல் 'களப்பணியாற்றச் செல்வோர் அத்தனை பேருமே ஏகத்துவத்தை இழந்து விடுவார்கள்' எழுதினார்கள்.
தேர்தலும் வந்தது ஒட்டுமொத்த ததஜவினர் அத்தனை பேரும், குறிப்பாக கடையநல்லூர் இஸ்லாமிய கல்லூரி மாணவர்கள் கைகளிலும் ததஜவின் கொடியை கொடுத்து களப்பணி ஆற்ற அனுப்பினார்கள். ஈமான் பறிபோய் விட்டதா?
'நாங்கள் தனித்தன்மையோடு களப்பணியாற்றினோம்' என்று பொய்யான பேச்சு வேறு அந்த மனிதருக்கு.
பின்னர் எப்படி உங்களால், 'வேறு யாரும் இந்தக் கொள்கையை விட்டு வெளியேறவில்லை' என்று சொல்ல முடிந்தது.
இன்னும் சொல்லப் போனால், சங்பரிவார் கும்பலின் தலைவி செல்வி (?) ஜெயலலிதாவிற்கு ஆதரவு திரட்டுவதற்காக களப்பணியாற்றினார்கள். இப்போது சொல்லுங்கள் அவர்களது ஈமானின் நிலை எந்த அளவுக்கு இருந்திருக்கும். ஈமான் பறிபோய் விட்டதோடு அவர்களது நம்பிக்கை அதைவிடவும் தரம் தாழ்ந்து சென்று விட்டதை நம்மால் விளங்கிக் கொள்ள முடியும்.
தனது நிலை மிகவும் மோசமாகிப் போய்விட்டதை அறிந்து கொண்ட பிஜே, 'தேர்தல் நிலைபாடு தேர்தலோடு போய் விட்டது' என்று கூறி ததஜவை விட்டு விலகிக் கொண்டிருப்பவர்களை தக்க வைத்துக் கொள்வதற்காக நாடகமாடி வருகிறார்.
அந்த வரிசையில் இருக்கும் 'ஏகத்துவம்' என்னும் மாத இதழ் சொல்வதையும் யாரும் நம்ப வேண்டாம்.
அல்லாஹ் நம் அனைவருக்கும் உண்மையை விளங்கக் கூடிய ஆற்றலைத் தந்தருள்வானாக. ஆமீன்
இப்னு ஃபாத்திமா 20.07.2006
1 Comments:
உதாரணமாக, தங்களைத் தௌஹீத்வாதிகள் என்று குர்ஆனையும், நபி(ஸல்) அவர்களின் வழிமுறையையும் மட்டுமே பின்பற்றுவோம் என்று கூறிக் கொள்ளும் முஸ்லிம்களில் ஒரு சாரார், நபி(ஸல்) அவர்கள் தன்னையும், தன்னைப் பின்பற்றிய சஹாபாக்களையும் மற்றவர்களிலிருந்து பிரித்துக் காண்பிக்க உபயோகப்படுத்தாத வார்த்தையை தங்கள் அடையாளமாக ஆக்கி நபி வழியில் இல்லாத ஒன்றை புதிதாக உருவாக்கி, இவ்வுலகத்திற்கு ஒரே இறைவன் அல்லாஹ் தான், முஹம்மத்(ஸல்) அவர்கள் அவனின் திருத்தூதராவார்கள் என சான்று பகர்கின்ற, தௌஹீத் என்ற பதத்தின் அர்த்தத்தினை முழுமையாக மனதில் ஏற்ற மற்ற முஸ்லிம்கள் அனைவரையும், இச்சாட்சி கூறிய பின்னரும் தௌஹீத்வாதிகள் அல்ல என்பது போல் சமூகத்தில் ஒரு மாயையைத் தோற்றுவித்து சமூகம் பிரிந்திருக்க வழிகோலியிருப்பது. இது சமூகத்தில் பாரிய விளைவினை, மிகப் பெரிய பிளவினைத் தோற்றுவித்திருக்கிறது.
http://www.satyamargam.com/index.php?option=com_content&task=view&id=80&Itemid=52
- News Reporter
Post a Comment
<< Home