Thursday, June 29, 2006

பிஜேயின் இருபக்க வாதம்

தமுமுக என்ற மக்கள் இயக்கத்திடமிருந்து களவாடப்பட்டதும், ஏழைகளுக்காக வசூலிக்கப்பட்ட சுனாமி நிதியிலிருந்து பிராணவாயு செலுத்தப்பட்டு உயிர்பிக்கப்பட்டதுமான உணர்வு வார இதழ் 10:41 ல் 'காயிதே மில்லத்தை மறந்த கருணாநிதி' என்ற தலைப்பில் கீழ்கண்ட செய்தி வெளியிட்ப்பட்டுள்ளது.

'...ஆனால் தமிழக முதலமைச்சராக 5வது முறையாக பொறுப்பேற்றுள்ள நிலையில் இந்த முறை காயிதே மில்லத் சமாதிக்குச் செல்லவில்லை. (பெரியார், அண்ணா சமாதிகளுக்குச் சென்று மரியாதை செலுத்தினார்.)

காயிதே மில்லத் பிறந்த நாளான ஜுன் 5ம் தேதி, காயிதே மில்லத் சமாதிக்குச் செல்வதை தவிர்க்கும் வகையில் திட்டமிட்டே ஜுன் 4-ம் தேதி டெல்லி பயணம் சென்றுள்ளார். இதற்கு என்ன காரணம் எனில், இந்த முறை அவர் போட்டியிட்ட சேப்பாக்கம் தொகுதி முஸ்லிம்கள் தேர்தலின் போது அவருக்கு அதிகளவில் வாக்களிக்க வில்லை என்ற கோபமே! என கூறப்படுகிறது. இதன் மூலம் கருணாநிதி தனது சுயரூபத்தை நிரூபித்துள்ளார் என்று அவரது அணியில் இடம் பெற்ற சிறுபான்மைப் பிரிவினர் புலம்புவதாகத் தெரிகிறது.'

முன்னுக்குப் பின் முரணான செய்தியை அருகருகே போட்டு மக்களை மடையர்களாக்குவதில் பிஜேக்கு நிகர் பிஜே தான்.

காயிதே மில்லத் சமாதியல் பகுத்தறிவுவாதிகள் மலர்வளையம் வைக்கக்கூடாதாம். அரசியல்வாதிகள் மலர் வளையம் வைக்க வேண்டுமாம்.

காயிதே மில்லத் பெயரை மாவட்டத்திற்கும் தெருக்களுக்கும் வைத்து விடுவதாலும் காயிதே மில்லத் சமாதிக்கு வந்து மலர் வளையம் வைத்து விடுவதாலும் காயிதே மில்லத்திற்கு மணிமண்டபம் கட்டுவதாலும் மட்டும் முஸ்லிம்களை கவர முடியாது, முறையாக அவர்களுக்குரிய உரிமைகளை கொடுப்பதற்கு எந்த கட்சி முன்வருகிறதோ அந்த கட்சிக்கே முஸ்லிம்களின் ஆதரவு கிடைக்கும் என்று சொன்ன அந்த பிஜேயின் நாக்கு, இப்பொழுது வேறு விதமாக பேச ஆரம்பித்துள்ளது.

காயிதே மில்லத் பெயரை மாவட்டத்திற்கும் தெருக்களுக்கும் வைக்காமல் இருப்பதும் காயிதே மில்லத் சமாதிக்கு வந்து மலர் வளையம் வைக்காமல் இருப்பதும், காயிதே மில்லத்திற்கு மணிமண்டபம் கட்டாமல் இருப்பதும் நல்ல செயல்கள் தானே, இதனைச் செய்வதால் முஸ்லிம்களுக்கு ஏதேனும் நன்மையுண்டா?

இப்படிப்பட்ட செயல்களை கருணாநிதி செய்யாமல் நழுவி விட்டார் என்று சொல்வது எந்த அளவுக்கு மடத்தனம் என்பதை முஸ்லிம்கள் சிந்திக்க வேண்டும்.

'என கூறப்படுகிறது' - 'புலம்புவதாகத் தெரிகிறது' என்று எழுதுவதெல்லாம் ஆதாரமற்ற செய்தியை எழுதுவதற்கும் ஆதாரம் கேட்டால் எழுதியவர் எளிதாக தப்பித்துக் கொள்வதற்குமே இந்த வாசகங்கள் பயன்படுத்தப்படும்.

அல்லது தவ்ஹீது என்ற பெயருக்கும், ஏகத்துவம் என்ற பெயருக்கும் சொந்தக்காரரான பிஜேக்கு தனிப்பட்ட முறையில் வந்த வஹியாகக்கூட கீழ்காணும் வாசகங்கள் இருக்கலாம். அதாவது,

'இதற்கு என்ன காரணம் எனில், இந்த முறை அவர் போட்டியிட்ட சேப்பாக்கம் தொகுதி முஸ்லிம்கள் தேர்தலின் போது அவருக்கு அதிகளவில் வாக்களிக்க வில்லை என்ற கோபமே! என கூறப்படுகிறது. இதன் மூலம் கருணாநிதி தனது சுயரூபத்தை நிரூபித்துள்ளார் என்று அவரது அணியில் இடம் பெற்ற சிறுபான்மைப் பிரிவினர் புலம்புவதாகத் தெரிகிறது.'

அவர் சொல்லும் கருணாநிதியின் கோபத்தையும், அவர் சொல்லும் சிறுபான்மைப் பிரிவினரின் புலம்பலையும் எவ்வாறு தெரிந்து கொண்டார்? இவர் நெருங்கவே முடியாத இவ்விருவரின் மனதில் உள்ளதை அறிந்து கொள்ள இவருக்கு வஹீயா வந்தது?

இன்னும் என்னென்ன வஹீ அவருக்கு இதுபோன்று வரப்போகிறதோ பொறுத்திருந்து பார்ப்போம்.

அதே உணர்வு (வார) வாத இதழில் இப்படிச் சொல்லப்படுகிறது.

காயிதே மில்லத் நினைவிடத்திற்கு வந்து போனல் மட்டுமே
முஸ்லிம்கள் இவர்களை ஆதரித்து விட மாட்டார்கள். முஸ்லிம்களின் கல்வி, வேலை வாய்ப்பு, பொருளாதார வளர்ச்சி, அரசியல் அதிகாரம் போன்றவற்றில் முஸ்லிம்களுக்கு உரிய
பிரதிநிதித்துவம் கிடைக்க வேண்டும். இதை கொடுக்கும் கட்சியைத் தான் முஸ்லிம்கள் ஆதரிப்பார்கள்.

'...எனவே காயிதே மில்லத்தின் நினைவிடத்துக்கு மலர்ப் போர்வை
போர்த்தி, முஸ்லிம்களின் காதில் பூச்சுற்றும் நாடகத்தை மறந்து விட்டு, முஸ்லிம்களின் தேவைகளை அறிந்து அதை நிறைவேற்றி முஸ்லிம் வாக்குகளைப் பெறுவதற்கு அரசியல் கட்சிகள் முனைய வேண்டும்....'

காயிதே மில்லத் சமாதிக்கு கருணாநிதி வந்திருந்தால், சிறுபான்மையினரை கருணாநிதி ஏமாற்றிவிட்டார் என்று உணர்வில் செய்தி வந்திருக்கும்.

காயிதே மில்லத் சமாதிக்கு கருணாநிதி வராமல் போனதால், சிறுபான்மையினரை கருணாநிதி மறந்து விட்டார் என்று செய்தி ஆக்கப்பட்டுள்ளது.

இதைப் படிக்கும் போது பிஜேக்கு மறை கழன்று போய் விட்டதோ என்று எண்ணத் தோன்றுகின்றது.

இஸ்லாமிய மார்க்கத்தில் மிகப்பெரிய குற்றமாக கருதப்படும் சமாதி வழிபாட்டை ஒருவர் (எவராக இருந்தாலும் சரி) செய்தால் எப்படி அதை தடுக்க முடியுமோ அப்படி தடுக்க வேண்டியதை விட்டு விட்டு, கருணாநிதி சமாதி வழிபாட்டுக்கு வரவில்லை அதனால் அவர் முஸ்லிம்களுக்கு எதிராக நடக்கிறார் என்று எழுதுவதற்கு என்ன துணிச்சல் இருக்க வேண்டும்.

இவர்கள் தான் தவ்ஹீதைச் சொல்பவர்களாம், இவர்கள் தான் மார்க்கத்தை நிலை நிறுத்தப்போகிறவர்களாம்.

யாரையோ விமர்சனம் செய்ய வேண்டும் என்பதற்காக மார்க்கத்திற்கு விரோதமான செயலைக்கூட செய்ய வேண்டும் என்று சொல்லத் துணிந்தவர்கள் இந்தப் பிஜேயும் அவரின் அடிவருடிகளும் என்பதை முஸ்லிம்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.

அல்லாஹ் அவர்களுக்கு நேர்வழி காட்டப் போதுமானவன்.

இப்னு பாத்திமா 29.06.2006

5 Comments:

At 9:40 PM, Blogger ஆத்தூர்வாசி said...

I guess you are missing a point here by trying to criticize somebody. The point here is that Karaunadidhi changed his attitudes towards muslims (he used to say that he always visited Qaed-e-Millath in his election compaigns, ofcourse this is cheap).

This post just reminds me one tamil proverb "Maamiyaar udaithaal mankudam, Marumagal udaithaal ponkudam".

If you are gonna mask me as a TNTJ because of this, i dont care, you know why?, because you are so cheap to me if you do so.

 
At 10:46 PM, Blogger முத்துப்பேட்டை said...

அன்புச் சகோதரரர் ஆத்தூர்வாசிக்கு,

கருணாநிதி வேண்டுமென்றே இதைச் செய்தாரா என்பது நமக்கு தெரியாது, ஆனால் இதைச் செய்யாத வரை முஸ்லிம்களின் விடுதலைக்கான மற்றும் இடஒதுக்கீட்டிற்கான முஸ்லிம்களுக்கு பயனுள்ள முயற்சிகளை செய்யும் வரை கருணாநிதியை இதற்காக குற்றம் சொல்ல முடியாது.

இனி சென்டிமென்டலாக முஸ்லிம்களை ஏமாற்ற முடியாது என்று நினைத்திருக்கலாம், அல்லது முஸ்லிம்களில் ஒருபிரிவினர் இதனை ஏற்க வில்லை என்பதற்காகக் கூட தவிர்த்திருக்கலாம்.

என்ன தான் இருந்தாலும் சமாதி வழிபாட்டை எதிர்ப்பதில் கவனம் செலுத்தியிருக்க வேண்டும். அவர் தவிர்த்துக் கொண்டதை, அந்த ஒரு சந்தர்ப்பத்தையேனும் பாராட்டியிருக்க வேண்டும்.

முத்துப்பேட்டையில் சமாதி வழிபாட்டை எதிர்த்து குரல் கொடுத்தைப் போன்று குரல் கொடுத்திருந்தால் இன்னும் தெளிவாக இருந்திருக்கும்.

கருணாநிதி விஷயத்தில் எதிர்மாறான கருத்தை எடுத்துக் கொண்டதினால் முத்துப்பேட்டை சமாதிவழிபாட்டிற்கான (சமாதிவழிபாட்டிற்கு எதிரான) முயற்சிகள் மிக அர்ப்பமாக தோன்றுகின்றது.

முத்துப்பேட்டையான் 03.07.2006

 
At 2:23 PM, Blogger ஆத்தூர்வாசி said...

இனி சென்டிமென்டலாக முஸ்லிம்களை ஏமாற்ற முடியாது என்று நினைத்திருக்கலாம். If so, i'm so happy to see the change in his attitudes.

I agree with you, no matter what one should oppsose Worship of Graves/Domes.

But i just would like to remind regarding the attitudes of our hon'ble CM

இஸ்லாமியர்களைக் கொன்றவர்கள் விடுதலை...

கேரள முதல்வரே கேட்டும் மனிதாபிமான சிகிக்சையின்மை... (கண்துடைப்புக்காக... ஏதோ...)

கண்துடைப்பு இட ஒதுக்கீடு... (மத்திய அரசு இந்தக் கல்வியாண்டில் இட ஒதுக்கீடு செய்துவிட்டது...
ஆனால் தமிழக அரசோ... எல்லாம் பேச்சில்...)

தொண்டர் அணி செயலாளரையே காப்பாற்ற முடியாத தமுமுக...

So at this point of time i would assume this Qaed-e-millath is added to the previous list as a mere reflection of his attitude thought i strongly deny and disapprove of Grave Worship. May one may look at this in the light of his attitude.

 
At 11:36 PM, Blogger முத்துப்பேட்டை said...

சகோதரரர் ஆத்தூர்வாசியின் விமர்சனங்களுக்கு நன்றி!

நீங்கள் சொன்ன தகவல்களை வைத்து கருணாநிதியை எடை போட முடியாது. தமிழக அரசின் நிர்வாகத்தில் இருக்கும் பலரது செயல்பாடுகளும் இதற்கு காரணமாக இருக்கலாம் அல்லவா?

உங்களின் முதல் விஷயத்துக்கு வருவோம். இஸ்லாமியர்களைக் கொன்றவர்கள் விடுதலை...

இதில் கருணாநிதியின் கை எந்த அளவுக்கு இருக்கிறது என்பது நமக்குத் தெரியவில்லை. ஆனால் நீதி மன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியிருக்கிறது என்று ஏன் எடுத்துக் கொள்ளக் கூடாது. இவ்வாறு முடிவு செய்வதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. 'நீதிமன்ற விஷயங்களில் தான் தலையிட முடியாது என்று கருணாநிதியும் ஜெயலலிதாவும் தெளிவாகவே கூறியிருகிறார்கள்.

உங்களின் இரண்டாவது விஷயத்துக்கு வருவோம். கேரள முதல்வரே கேட்டும் மனிதாபிமான சிகிக்சையின்மை... (கண்துடைப்புக்காக... ஏதோ...)

இங்கேயும் நீதிமன்ற விஷயமே வருகிறது. கேரள முதல்வர் கேட்டுக் கொண்டதற்கிணங்க தமிழக அரசு சில காரியங்களை செய்ய முடியும். அவசரப்படாமல் பொறுத்திருந்து பார்ப்போம். இன்ஷா அல்லாஹ் சிறைவாசிகள் வெளிவருவார்கள் என்று நம்புவோம்.

உங்களின் மூன்றாவது விஷயத்துக்கு வருவோம். கண்துடைப்பு இட ஒதுக்கீடு... (மத்திய அரசு இந்தக் கல்வியாண்டில் இட ஒதுக்கீடு செய்துவிட்டது...
ஆனால் தமிழக அரசோ... எல்லாம் பேச்சில்...)

இதற்கும் அவகாசம் தேவை என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. மத்திய அரசுக்கு போதிய அவகாசம் இருந்தது, தமிழக அரசுக்கும் அவகாசம் தேவை.

உங்களின் மூன்றாவது விஷயத்துக்கு வருவோம். தொண்டர் அணி செயலாளரையே காப்பாற்ற முடியாத தமுமுக...

காவல் துறையில் இருக்கும் சில கறுப்பு ஆடுகளால் இது நடந்துள்ளது. இதை எப்படி முறையாக உயர் அதிகாரிகளிடம் கொண்டு செல்ல வேண்டுமோ அப்படி கொண்டு சென்று தமுமுக நடவடிக்கை எடுக்கும். இன்ஷா அல்லாஹ்.

இருந்தாலும் கருணாநிதியின் நடவடிக்கைகளை உன்னிப்பாக முஸ்லிம்கள் கவனிக்க வேண்டும். கருணாநிதி முஸ்லிம்களுக்கு இணக்கமாக இருப்பது சரித்திரத்தில் இதுவே முதல் முறையாகும். அவர் மதில்மேல் பூனை. நம்ப முடியாது. அதற்காக இப்போதே நம்பிக்கையின்மையை ஏற்படுத்துவது முறையில்லை.

முத்துப்பேட்டையான் 04.07.2006

 
At 3:59 AM, Blogger ஆத்தூர்வாசி said...

Dear Muthuppettayaar,

It was nice to see your reply, though it's a typical and expected. Well, to cut the story shot, what i'm trying to say here is, just to criticize someone we should not discard the possiblity and deceive the ordinary man. I'm still skeptic about him. As you said, lets wait and see (lets hope and pray that it wont be too long waiting untill the next election)

May Allah make it easy on our society and reward you all with multiple hasanath who are sincerely trying to bring our society up.

 

Post a Comment

<< Home