Tuesday, June 27, 2006

ஆடு நனைகிறதென்று ஓநாய்க்கு கவலையாம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி..

தமுமுகவிடமிருந்து களவாடப்பட்ட உணர்வு (10:41) வார இதழில் 'மதானி விவகாரம்: கேரள முதல்வரின் கோரிக்கையும் - தமிழக முதல்வரின் நழுவலும்' என்ற தலைப்பில் கீழ்காணும் விபரங்கள் உள்ளன.

அதற்கு பதிலளித்த கருணாநிதி, 'சிறைக் கைதிகள் வழக்குகள் நீதி மன்றத்தில் உள்ளன. நீதிமன்ற பிரச்சனையில் தன்னால் தலையிட முடியாது. அவர்களை ஜாமீனில் விடுவது தொடர்பாக
நீதி மன்றத்தை அணுகுமாறு' கேரள முதல்வரிடம் தெரிவித்துள்ளார்.

திமுகவின் சிறுபான்மைப் பிரிவாகச் செயல்படும் அமைப்புகள் இப்போது என்ன சொல்லப் போகின்றன? தங்களது முகத்தை எங்கே வைத்துக் கொள்ள போகின்றன என்பதை சமுதாய மக்கள் உன்னிப்பாக கவனிக்கின்றனர். கருணாநிதி ஆட்சிக்கு வந்ததுமே கோவை சிறையில் அடைக்கப்பட்ட அனைவரும்
விடுதலை செய்யப்பட்டு விடுவார்கள் என பேசியவர்களின் முகத்தில் கருணாநிதி நன்றாக கரியைப் பூசி உள்ளார்.

தேர்தலுக்கு முன்னர் கோவை சிறைவாசிகள் பற்றி
கருணாநிதியிடம் உறுதி மொழி பெற்றுள்ளதாக பேசியது என்ன ஆனது? ஆளுநர் உரையிலும் இது பற்றி ஏதும் கூறப்படவில்லை. இது நீதிமன்றப் பிரச்சனை என்று இப்போது தெளிவாக
அறிவித்துள்ளார். இப்போது சிறைவாசிகளுக்காக போராட்டம் நடத்துவார்களா?

கோவை சிறைவாசிகளின் விடுதலை பற்றி பேச (அ) எழுத பீஜேக்கோ அல்லது திருடப்பட்ட உணர்வு இதழுக்கோ எந்த அருகதையும் இல்லை.

ஆடு நனைகிறதென்று ஓநாய் கவலைப்பட்டதாம் - அந்த ஓநாய்க்கும் இந்த பீஜேக்கும் ஏதேனும் வித்தியாசம் உள்ளதா?

கோவை சிறைவாசிகள் விஷயத்தில் அவர்களுக்கு எதிராக பீஜே, போலீஸ் தரப்பு அப்ரூவர் என்பது பச்சிளம் பாலகனுக்கும் தெரியுமே. இவர் எப்படி அவர்களின் விடுதலைக்காக கவலைப்படுவார்?

பீஜே, போலீஸ் தரப்பு அப்ரூவர் என்பதை சொன்ன கோவை சிறைவாசிகள், 'தனக்கு மன்னிப்பு கடிதம் எழுதாவிட்டால் அவர்களின் விடுதலைக்காக முயற்சி செய்ய மாட்டேன்' என்று சொன்னவர் எவ்வாறு அவர்கள் விடுதலைக்காக கவலைப்படுவார்? மாறாக அவர்கள் வெளியே வரக்கூடாது என்பதிலேயே குறியாக இருக்கிறார்.

ஜெயலலிதாவை சந்திக்கச் சென்ற போது கூட பீஜே, 'ஒரு சிலர் தான் இதில் நிரபராதி, மற்றவர்கள் குற்றவாளி' என்று வாக்குமூலம் அளித்துள்ளார். கோவை சிறைவாசிகளுக்காக அன்றைய முதல்வரிடம் கோரிக்கைகள் வைத்த சம்சுதீன் காஸிமியின் காலை மிதித்து இது பற்றி பேச விடாமல் தடுத்தார் இந்த பீஜே. இவரா கோவை சிறைவாசிகளுக்காக பரிந்து பேசுவார்.

'நீதிமன்ற பிரச்சனையில் தன்னால் தலையிட முடியாது' என்று கருணாநிதி சொன்னது நலுவலாம். 'நீதிமன்ற பிரச்சனையில் தன்னால் தலையிட முடியாது' என்று ஜெயலலிதா பீஜேக்கு எதிரே சொன்னாரே அது தான் சரியான கூற்றோ?

தான் எந்த கட்டத்திலும் கைது செய்யப்பட்டு விடக்கூடாது என்பதற்காக அரசியல் பலம் தேடி ஜெயலலிதாவின் பின் புலத்தில் ஒழிந்து கொண்டிருக்கும் பீஜேக்கு, கருணாநிதி எது சொன்னாலும் பிடிக்காது.

'நீதிமன்ற பிரச்சனையில் அரசு கூட தலையிட முடியாது' என்பது தான் உண்மை, 'நீதிமன்ற பிரச்சனையில் அரசு தலையிட முடியும்' என்று பீஜே சொல்ல வருகிறாரோ? அப்படிச் சொன்னால் அவர் நாலாம் கிளாஸ் படித்தவர் என்பதை தனக்குத் தானே நிரூபித்துக் கொண்வராவார். அவருக்கு எப்படி சட்டம் தெரியும்? இதை ஆளுநர் எப்படி பேசுவார்? மூதறிஞருக்கு என்னவாயிற்று?

இன்ஷா அல்லாஹ் கோவை சிறைவாசிகள் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள். பீஜேயின் முகத்திலும் அவரின் அடிவருடிகளின் முகத்திலும் கரி பூசப்படும், அப்போது அவர்களின் முகத்தை எங்கு வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளட்டும்.

இப்னு பாத்திமா 28.06.2006

0 Comments:

Post a Comment

<< Home