Sunday, May 21, 2006

தேர்தல் ஒரு பெட்டிக்கடை விஷயமா?

அன்பான வாசகர்களே!

ஒரு வழியாக தமிழகத் தேர்தல் முடிவடைந்து, பெரும்பாலானோரின் விருப்பத்திற்கு ஏற்ப ஆட்சி மாற்றமும் நடந்து விட்டது.

புதிய ஆட்சி தனது தேர்தல் கால வாக்குறுதிகளை சூட்டோடு சூடாக ஆணைகளாக அறிவித்து அனைவரது ஆதரவையும் தக்க வைக்க முயற்சிக்கிறது. வாழ்த்துக்கள்.

இத்தேர்தல் மூலம் முஸ்லிம் சமுதாயம் பெற்றிருக்கும் பலன் மகத்தானதாகும். சமுதாய முன்னேற்றத்திற்காக உண்மையாகவே உழைப்பது யார்? முஸ்லிம்களின் பெயரையும் கொள்கைகளையும் சொல்லிக் கொண்டு, முஸ்லிம் சமுதாயத்திற்கு கேடு விளைவிப்பவர் யார் என்பதனை அறிந்து கொள்ள, இத்தேர்தல் முஸ்லிம்களுக்கு பேருதவியாக இருந்தது.

காலாவதியான ஒன்றை, உரிய நேரத்தில் புதுப்பிக்காமல், காலம் தாழ்த்தி தேர்தல் கால அறுவடைக்காக, தேர்தல் அறிவிப்பு வெளியான பின், வரைவு அறிக்கை போல சும்மா இதுபோல அமைக்க உள்ளோம் என்று ஒரு 'மாதிரி' படிவத்தை காட்டிய மாத்திரத்திலேயே, அம்மா முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அறிவித்து விட்டார் - அல்ஹம்துலில்லாஹ் என கூத்தாடியவர்கள் குறித்து சிலர் (குறிப்பாக நாம்) விமர்சித்த போது பலரால் அதனை ஏற்றுக் கொள்ள முடியாமல் நம்மை சாடினார்கள்.

அந்தோ! பரிதாபம்!! இன்று அத்தகையோர் தாங்கள் உண்மையென நம்பிய ததஜவினரின் தகுதியையும், தரத்தையும் அறிந்து தலை குனிந்து நிற்கின்றனர்.

தேர்தல் முடிவுகளுக்கு பின்னுள்ள நிலை பற்றி ததஜவின் வலைத்தளம், ரசிகர்களை தக்க வைக்கும் வழமையான முயற்சியில் வீடியோ கிளிப்பிங்களை வெளியிட்டது. அதே வீடியோவை டான் டிவி மூலம் ஒளிபரப்பவும் செய்தது. வழக்கமாக வலைத்தளத்தில் வருவதை, பிஜே பேசுகிறார் அல்லது எழுதியுள்ளார் என்ற ஒரே காரணத்திற்காக அதிலுள்ள நியாய, அநியாயங்களைப் பற்றி ஆராயாமல் அப்படியே பரப்பக்கூடிய ததஜவினர் தற்சமயம் வெளியாகியுள்ள இந்த வீடியோவை வினியோகிக்க முடியாமல் விழிபிதுங்கி நிற்கின்றனர்.

காரணம், திருவாளர் பிஜே அந்த வீடியோவில் எடுத்து வைக்கும் வாதங்கள் அனைத்தும் நகைப்புக்குரியது, உண்மைக்கு மாற்றமானவைகளாகும். ஏதோ பிஜே இப்பொழுது தான் உண்மைக்கு மாறாக பேசுகிறார் என நாம் குறிப்பிடுவதாக எண்ண வேண்டாம். அவர் மக்கள் பேரியக்கமான தமுமுகவிலிருந்து விலகியதிலிருந்தே உண்மைக்கு மாற்றமாகத்தான் பேசி வருகிறார்.

ஒரே ஒரு வித்தியாசம், அன்று அவர் மறைத்தவை ஒரு சிலருக்கு மட்டுமே அறிந்த உண்மைகள். ஆனால் இன்று அவர் மறைக்க முயல்வதோ பலரும் அறிந்த பட்டவர்த்தமான ததஜ மற்றும் சாமானிய பொது ஜனத்தினால், இன்று பிஜே கூறும் முழுப்பூசணிக்காயை தேனீர் கோப்பையில் மறைக்கும் விஷயத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

பிஜேயின் சமீபத்திய உரையிலுள்ள அபத்தங்களை பட்டியலிட்டால் வார்த்தைக்கு வார்த்தை வரிசைப்படுத்த வேண்டியதிருக்கும்.

ஏற்கனவே ஒன்றிரண்டு விஷயங்களை சில சகோதரர்கள் குறிப்பிட்டு விட்டார்கள். எனவே அதல்லாத சில அபத்தங்களை முதல் தவணையாக நாமும் இங்கே குறிப்பிட விரும்புகிறோம். இன்னும் கூட சில அப்பாவிகள் பிஜேயின் கபட நாடகத்தை அறியாமல் உள்ளதால் அவர்களுக்காக இதனை வழங்குகிறோம். இதனை மறுப்பவர்கள் தாராளமாக விளக்கமளிக்கலாம்.

ஆரம்பமாக, தேர்தல் தோல்வியால் துவண்டு விடக்கூடாது என்பதற்காக ஒரு உதாரணம் சொல்கிறார். அதாவது 'இலட்சக்கணக்கில் முதலீடு செய்து வியாபாரம் செய்பவர், பெட்டிக்கடையில் ஏற்பட்ட நஷ்டத்திற்காக வருந்தமாட்டார்' எனக் குறிப்பிடுகிறார்.

இன்று இலட்சக் கணக்கில் அல்ல, கோடிகளில் புரளும் அவர் முந்தய சங்கரன்பந்தல் பெட்டிக்கடை ஞாபகத்தில் சொன்னாரோ அல்லது இன்று பெற்ற 'பெட்டி' குறித்து சொன்னாரோ தெரியாது, ஆனால், இந்த தேர்தலை முஸ்லிம்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கப் போகும் ஒன்றாக தேர்தல் பிரச்சாரத்தில் கூறிவிட்டு இன்று பெட்டிக்கடையாக (சிறு விஷயமாக) தள்ளிவிடச் சொல்வதன் மர்மம் என்ன?

அடுத்ததாக, ஐந்து வருடத்தில் அதிக போராட்டங்களை நடத்தியது நாங்கள் தான் என்கிறார். வெறும் இரண்டு வருடங்களே ஆன ததஜ எப்படி 5 ஆண்டுகளாக போராடி இருக்க முடியும்? ஒரு வாதத்திற்காக கடந்த இரு வருடங்களை எடுத்துப் பார்த்தால் கூட ததஜ குறிப்பிட்டு சொல்லும் படியான எந்த போராட்டத்தையும் பெரிய அளவில் நடத்த வில்லை. மாறாக 2004 டிசம்பர் 6ல் தமுமுக டெல்லியில் நடத்திய மிகப்பெரிய போராட்டத்தையும், 2004ல் அன்றைய முதல்வர் ஜெயலலிதா வீட்டு முற்றுகைப் போராட்டத்தையும் கொச்சைப்படுத்தி தான் கையகப்படுத்திய பத்திரிக்கையில் (உணர்வில்) செய்தி வெளியிட்டார்.

இதனை ஒட்டிய நமது சந்தேகம், தேர்தல் அறிவித்ததும் முதல்வர் ஜெ ஜெவைச் சந்தித்த ததஜ நிர்வாகிகள் கடந்த ஐந்து வருடத்தில் தான் நிம்மதியாக சுவாசித்தோம் என்று புளகாங்கிதம் அடைந்து கூறினார்களே, நிம்மதியாக இருந்த போது அதிக அளவில் எவ்வாறு போராட்டம் நடத்தினார்கள் என யாராவது விளக்க முடியுமா?

தேவைப்பட்டால் மீண்டும் தொடருவோம்.

இறையடியான் 21.05.2006

3 Comments:

At 11:33 AM, Blogger Egathuvam said...

மாஷா அல்லாஹ் மிகவும் அற்புதமாக இருக்கின்றது உங்களது கட்டுரை. தங்களது கூட்டத்தை தக்கவைத்துக்கொள்வதற்காகவும் அவர்களைத் திருப்திப்படுத்துவதற்காகவும் பீஜேயின் அளலரால் வந்ததே அந்த உளரல்கள்.

எல்லா சந்தேகங்களையும் கேள்விக்கேட்டு தெரிந்துக்கொண்டிருந்த ததஜ சகோதரர்கள் இவர் தற்போது உளறிக்கொட்டுவற்கு மட்டும் தங்கள் அறிவிற்கு கொஞ்சம் கூட வேலை அளிக்காமல் அப்படியே ஏற்றுக் கொண்டு அவர் எடுத்து வாந்தியை அப்படியே மற்றவர்களிடம் எடுத்துக்கொண்டிருக்கின்றார்கள். அதனால் பல இடங்களில அவர்கள் கேவலப்படுத்தப்பட்டு அவர்களது முகத்திரைக் கிழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இருந்தாலும் இவர்களால் தான் அதிமுக கூட கனிசமான தொகுதியில வெண்றது (?) இனி கருனாநிதியே இடஒதுக்கீடு கொடுத்தால் கூட இவர்களுக்கு பயந்து தான் கொடுப்பார் (?) என்ற அவர்களுடைய 'அல்ப' சந்தோஷத்தை கெடுக்க வேண்டாம் என்று நினைக்கின்றேன். பாவம் பீஜேயும் அவர் பக்தர்களும்.

 
At 1:53 AM, Blogger முத்துப்பேட்டை said...

நன்றி! 1.அவர் வைத்திருந்தது பெட்டிக்கடை என்று நினைத்திருந்தோம். அது பெட்டிக்கடை அளவிளான மளிகைக்கடை என்பதை இப்பொழுது தெரிந்து கொண்டோம். சுட்டிக் காட்டியமைக்கு நன்றி. 2.அவர்கள் நடத்திய போராட்டங்களில் தேடிக்கண்டு பிடித்து கார்ட்டூன் விஷயத்தை சுட்டிக் காட்டிய சகோதரருக்கு மீண்டும் நன்றி. கார்டூன் விஷயத்துக்காக தமுமுக மிகப்பெரிய ஆர்ப்பாட்டங்களை மாவட்ட தலைநகரங்களில் நடத்தியது.

நாங்கள் தான் அதிகமான போராட்டங்களை நடத்தினோம் என கூறுபவர்கள் மற்றவர்களை விட வித்தியாசமாக என்ன செய்தார்கள் என்பதை குறிப்பிட வேண்டும். அதை விடுத்து பொத்தாம் பொதுவாக நாங்கள் தான் அதிக போராட்டங்களை நடத்தினோம் என்று கூறுவதோ தமுமுக நடத்திய பல போராட்டங்களை நாங்கள் தான் செய்தோம் என்று மார்தட்டிக் கொள்வதோ முறையான செயலாக இருக்க முடியாது.

முஸ்லிம்களின் ஒற்றுமையை குலைத்து, இன்று சமுதாயத்தையே காட்டிக் கொடுக்கத் துணிந்த இவர்களிடம் நியாயமான செயலை எப்படி எதிர்பார்க்க முடியும்? இறையடியான்.

 
At 8:22 PM, Anonymous Anonymous said...

nice comments

 

Post a Comment

<< Home