Thursday, May 04, 2006

தனக்கத் தானே எழுதிக் கொண்ட கடிதமா?

தவ்ஹீதின் பெயரால் தனிக்கட்சி கண்டவர் தவ்ஹீதிற்குள் அரசியல் நடத்தியவர், தற்சமயம் தவ்ஹீதுவாதிகள் என பட்டம் சூட்டிக் கொண்ட தக்லீதுவாதிகளின் துணையோடு தனியொரு அரசியல்வாதியாக பரிணமித்து விட்டார்.

கோவை சிறைவாசிகள் விஷயத்தில் அரங்கத்தில் ஒன்றும் அந்தரங்கத்தில் ஒன்றுமாக அறிக்கைகள் விட்டு அசத்திக் கொண்டுள்ளார்.

அறையில் (காவல் துறையையும் உளவுத்துறையையும் கையில் வைத்துள்ள முதல்வரின் முன்) கோவை சிறைவாசிகள் குற்றவாளிகள் என்றும், வெளியில் அவர்களின் விடுதலைக்காக முதல்வரிடம் மன்றாடியதாகவும் கதையளக்கிறார்.

நீதி மன்றத்தில் கோவை சிறைவாசிகளுக்கு எதிராக சாட்சியம் அளித்து விட்டு மக்கள் மன்றத்தில் அவர்களின் விடுதலைக்காக பாடுபடுவதாக சொல்லிக் கொள்கிறார்.

இத்தகைய இரட்டை நிலைபாட்டை பரம்பரை அரசியல்வாதிகள் ஆச்சரியத்தோடு பார்க்கின்றனர். அதே நேரத்தில் மாநில அரசுக்கும் மத்திய அரசுக்கும் வித்தியாசம் தெரியாமல் இவர் உளறுவதைக் கண்டு நகைக்கவும் செய்கின்றனர்.

இடஒதுக்கீடு தொடர்பாக கருணாநிதி, பிரதமருக்கு எழுதிய கடிதத்தை அக்கடிதம் கருணாநிதி தனக்ககுத்தானே எழுதிக் கொண்டதாக பி.ஜே விமர்சனம் செய்கிறார்.

பாண்டிச்சேரி முதல்வர் அமைச்சரவையில் இயற்றிய தீர்மானத்தை தேர்தல் கால அரசியல் கட்சியான ததஜ ஏற்றுக் கொண்டுள்ளது. ஒரு காங்கிரஸ் முதல்வர் தனது சக காங்கிரஸ் அமைச்சர்களுடன் கலந்து உருவாக்கி காங்கிரஸ் பிரதமருக்கு அனுப்பியதை தனக்குத்தானே எழுதிக்க கொண்ட தீர்மானம் என விமர்சிக்க வில்லை.

மாறாக ஒரு மாநில எதிர்கட்சித் தலைவர் இந்தியப் பிரதமருக்கு எழுதிய கடிதத்தை தனக்குத்தானே எழுதிக் கொண்டதாக விமர்சிக்கிறார்.

உண்மையில் திமுக ஒரு மாநிலக்கட்சி, அதே சமயம் தேசியக்கட்சியான காங்கிரஸுடன் இணைந்து மத்திய அரசில் அங்கம் வகிக்கிறது. கூட்டணிக்கட்சித் தலைவர் ஒருவர் தனது ஆலோசனையை இந்தியப் பிரதமருக்கு அனுப்பி வைத்ததை பி.ஜெ விமர்சிக்கிறார் எனில் இவருக்கு அரவே அரசியல் தெரியவில்லை என்றுதான் பொருள்.

இதைப் போலவே கோவை சிறைவாசிகள் விஷயத்தில் புதுக்கதை ஒன்றையும் பரப்பி வருகிறார்.

கடந்த ஐந்து ஆண்டுகளாக அப்பாவி சிறைவாசிகளின் விடுதலையை எல்லா வகைகளிலும் தடுத்த அதிமுகவை ஆதரிக்கும் ததஜ, இச்சிறைவாசிகளின் விடுதலைக்காக மத்திய அரசில் திமுக சட்டம் ஏன் இயற்றவில்லை என்ற ஒரு வினோதமான கேள்வியை எழுப்பி தனது அதிமுக விசுவாசத்தை வெளிக்காட்டி உள்ளார்.

இச்சிறைவாசிகள் கைது செய்யப்பட்டு விசாரணை என்ற பெயரில் ஜாமீன் இன்றி அலைக்கழிக்கப்படுவது மாநில அரசின் வரம்புக்கு உட்பட்ட சட்ட பிரிவுகளில் தான்.

இதில் மத்திய அரசு தலையிட வேண்டும் எனவும், அதற்கு திமுக பாடுபடவில்லை என்றும் கூறுவது சட்ட விஷயங்களில் அவருக்குள்ள தெளிவின்மையையே காட்டுகிறது.

இதன் மூலம் பிஜெக்கு அரசியலும் தெரியவில்லை, சட்ட நுணுக்கங்களும் தெரியவில்லை என்று பொருளாகிறது, அல்லது தெரிந்து கொண்டே தமக்கு அல்லாஹ் வழங்கிய அருட்கொடையான பேச்சாற்றலைக் கொண்டு மக்களை வழிகெடுக்கிறார் என்று பொருள்.

இரண்டில் எது உண்மை என்பது தேர்தல் முடிந்தால் தெரிந்து விடும்.

இறையடியான் 04.05.2006

1 Comments:

At 6:27 AM, Blogger முத்துப்பேட்டை said...

சகோ.அபூஷைமா

தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள இத்தருணத்தில், கருணாநிதி தலைமையில் அரசு அமைந்துள்ள இந்த நேரத்தில், மத்திய அரசின் கடந்த இரண்டு வருடங்களின் செயல்பாடுகள் குறித்து தாங்கள் அறியாமல் இருந்தது ஆச்சரியமே!

வலைப்பூ வரை சென்று தகவல்களை சேகரிக்கும் நீங்கள் விபரம் அறியவில்லை என்று கூறுவது வேடிக்கையாக இருக்கிறது.

டாக்டர் மன்மோகன்சிங் தலைமையில் மத்திய அரசு அமைந்ததன் பின்னால் சிறுபான்மையினரின் (குறிப்பாக முஸ்லிம்களின்) சமூக பொருளாதார நிலையை இந்திய அளவில் கண்டறிவதற்காக நீதிபதி ராஜ்நாத் மிஸ்ரா தலைமையில் ஒரு குழுவும், நீதியரசர் ராஜேந்திர சச்சார் தலைமையில் ஒரு ஆணையமும் அமைக்கப்பட்டு முஸ்லிம்களின் தனி இடஒதுக்கீட்டுக்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் துவங்கியுள்ளன.

அதே போல் சட்டத்தின் பிடியில் இருந்து இதுவரை தப்பித்து வந்த பாபரி மஸ்ஜித் இடிப்பின் பிரதான குற்றவாளிகள் குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்பட்டு விசாரிக்கப்பட்டுள்ளனர்.

நரபலி முதலமைச்சர் நரேந்திர மோடியின் அரசு நடத்திய இனப்படுகொலைக்கு காரணமானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட்டுள்ளனர்.

இவை மாத்திரமல்லாமல் முஸ்லிம்களின் முன்னேற்றத்தை நோக்கியே டாக்டர் மன்மோகன் சிங்கின் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. அதைப் பொறுக்காமல் தான் பிஜேபி ஒவ்வொரு முறையும் பாராளுமன்றத்தை நடத்த விடாமல் ரகளையில் ஈடுபட்டு வருகிறது.

மேலதிக விபரங்களுக்கு மக்கள் உரிமையை தொடர்ந்து படியுங்கள்.

வஸ்ஸலாம்.

இறையடியான் 13.05.2006

 

Post a Comment

<< Home