Tuesday, May 09, 2006

மருங்காபுரி ருகையா மாலிக் என்ற சல்மா

பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம். 08-05-2006

மருங்காபுரி ருகையா மாலிக் என்ற சல்மா

அன்புள்ள ரைசுத்தீன் அவர்கட்கு கா.அ. முஹம்மது பஸ்லுல் இலாஹியின் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. ஒரு விபச்சாரியும் (சல்மா) த.மு.மு.க.வும் என்ற தலைப்பில் நீங்கள் அனுப்பிய மெயில் கண்டேன். நீங்கள் அனுப்பிய அந்த மெயிலை பலரும் எனக்கு பார்வேடு செய்திருந்தனர். இஸ்லாமிய உணர்வுடன் நீங்கள் செய்திருக்கும் விமர்சனத்திற்கு உரிய மகத்தான நற்கூலிகளை அல்லாஹ் தங்களுக்குத் தந்தருள்வானாக ஆமீன். தேர்தல் நேரமாக இருப்பதால் எனக்குத் தெரிந்த உண்மைகளை உடனடியாக நேற்றே தரவில்லை. உடனடியாக பதில் தந்தால் ஓட்டுக்காக தந்த மாதிரியும் ஆகி விடும். எனவே வாக்குப் பதிவு முடிந்த பின் எழுதுகிறேன்.

உண்மைக்குப் புறம்பான பொய்ச் செய்தி.

மருங்காபுரி சல்மாவின் கடந்த கால ஆபாச எழுத்துக்களை துகிலுரிந்து காட்டியுள்ளீர்கள். இதில் கற்பனை கலவையின்றி உண்மைகளைத்தான் எழுதியுள்ளீர்கள். இருந்தாலும் உரிய ஆதாரங்களை காட்டி இருந்தீர்கள். ஆனால் இவளுக்காக ஜவாஹிருல்லாவும் ஹைதர் அலியும் ஓடி ஓடி பிரச்சாரம் செய்தார்கள் என்று எழுதியுள்ளதுதான் ஆதாரமற்ற குற்றச்சாட்டு. உண்மைக்குப் புறம்பான பொய்ச் செய்தி என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

இஸ்லாமிய அரசியல்வாதிகள் அங்கீகரிக்க மாட்டார்கள்.

ஒரு குடம் பாலில் ஒரு துளி விஷம் கலந்து விட்டால் பால் அதன் தன்மையை இழந்து விடும். ஒரு குடம் விஷத்தில் ஒரு துளி பால் கலந்து விட்டால் விஷம் அதன் தன்மையை இழந்து விடாது. உண்மைகளை வெளிக் கொண்டு வரும்பொழுது பொய்மை கலந்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பொய்மை கலந்து விட்டால் உண்மை எடுபடாது. சல்மாவின் கடந்த கால எழுத்துக்களை இன்றைய அரசியல்வாதிகள் அங்கீகரிப்பார்கள். இஸ்லாமிய அரசியல்வாதிகள் அங்கீகரிக்க மாட்டார்கள்.

நாங்கள் ஆதரிக்க மாட்டோம் என்று ஜவாஹிருல்லாஹ் கூறினார்.

மருங்காபுரி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ருகையா மாலிக் என்ற சல்மா 31-03-2006 அன்று ஜும்ஆவுக்குப் பிறகு த.மு.மு.க. அலுவலகம் வந்தார். அவருடன் அவரது கணவரும் வந்திருந்தார். தலைவர் ஜவாஹிருல்லாஹ் அவர்களை சந்தித்தார். தலைவருடன் மாநில செயலாளர் மவுலவி ஜே.எஸ். ரிபாஈ பாஸி, ரஷhதி அவர்களும் இருந்தார்கள். அப்பொழுது நானும் த.மு.மு.க. அலுவலகத்தில் இருந்தேன். ருகையா மாலிக்கின் எழுத்துக்கள் இஸ்லாத்திற்கு விரோதமானது. அதை நாங்கள் ஆதரிக்க மாட்டோம் என்று ஜவாஹிருல்லாஹ் கூறினார்.

இனி நான் முழுமையாக அரசியல் பணிகளையே செய்வேன்.

ஷஷநான் திருந்தி விட்டேன். நான் முஸ்லிம் என்பதால்தான் எனக்கு சீட் கிடைத்துள்ளது. நமது சமுதாயத்தின் சார்பில்தான் எனக்கு சீட் கிடைத்துள்ளது. எனவே சமுதாயத்திற்காக பாடுபடுவேன். எங்கள் தலைவரும் (கருணாநிதி) சொன்னார். உன் சமுதாயத்தவரிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்று. எனவே இனி நான் முழுமையாக அரசியல் பணிகளையே செய்வேன் என்றார் ருகையா மாலிக் என்ற சல்மா.

ஏற்க வேண்டுமா மறுக்க வேண்டுமா? இஸ்லாத்தின் நிலை என்ன?

சல்மாவைப் போன்றே அனைத்து முஸ்லிம்களையும் முன்னேற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் த.மு.மு.க. இவரை ஆதரித்து பிரச்சாரம் செய்கின்றதோ என்னவோ என எழுதியுள்ளீர்கள். நான் திருந்தி விட்டேன் என்று ஒருவர் சொல்லும்பொழுது அதை ஏற்க வேண்டுமா மறுக்க வேண்டுமா? இஸ்லாத்தின் நிலை என்ன? 6 மாதங்களுக்கு முன்பு த.மு.மு.க.வின் மக்கள் உரிமையில் சமுதாய விரோதியாக, காபிராக சித்தரித்து விட்டோம். எனவே நீங்கள் திருந்தி விட்டதாகக் கூறுவதை ஏற்க மாட்டோம் என்று கூற வேண்டுமா?

எப்படி எழுதினீர்களோ ஏன் எழுதினீர்களோ தெரியவில்லை.

முஸ்லிம்கள் குறைவாக உள்ள அந்த தொகுதியில் த.மு.மு.க.வின் மாநில பொறுப்பாளர்கள் யாரும் பிரச்சாரத்திற்கு செல்லவே இல்லை. அப்படி இருக்க ஜவாஹிருல்லாவும் ஹைதர் அலியும்; ஓடி ஓடி பிரச்சாரம் செய்தார்கள் என்ற உண்மைக்குப் புறம்பான பொய்ச் செய்தியை எப்படி எழுதினீர்களோ ஏன் எழுதினீர்களோ தெரியவில்லை. இதை மீண்டும் பதிவு செய்து கொள்கிறேன்.

அவர்களைப் பற்றிய செய்தி வெளியே வரவில்லை அவ்வளவுதான்.

இன்னொன்றையும் தங்கள் கவனத்திற்கு தர விரும்புகிறேன். ருகையா மாலிக் என்ற சல்மாவை விட மோசமானவர்களும் இன்றைய அரசியலில் இருக்கிறார்கள். அதுவும் முஸ்லிம் சமுதாய அமைப்பில் இருக்கிறார்கள். அதன் சார்பில் எம்.எல்.ஏ.வாகவும் ஆகி இருக்கிறார்கள். சல்மா பற்றிய செய்தி வெளி வந்து விட்டது. அவர்களைப் பற்றிய செய்தி வெளியே வரவில்லை அவ்வளவுதான்.

அந்த கட்சியினர் மூலமே வெளிப்பட்டு விட்டது.

கருணாநிதி அவர்களாவது ஷஷஉன் சமுதாயத்தவரிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்று அறிவுரை சொல்லி உள்ளார். ஷஷதேர்தலில் போட்டியிட சமுதாயத்தவரிடம் நல்ல பெயர் இருக்க வேண்டும் என்பதெல்லாம் தேவையில்லை பிரதர் என்று சொல்லக் கூடிய இப்லீஸ்தான் தேர்தலில் போட்டியிடும் முஸ்லிம் சமுதாய அமைப்பின் தலைவனாக உள்ளான். இது இந்த தேர்தலில் அந்த கட்சியினர் மூலமே வெளிப்பட்டு விட்டது.

மேலப்பாளையம் முழுவதும் ஒரே பரபரப்பு.

04-05-2006 வியாழன் அன்று காலையில் மேலப்பாளையத்திற்கு முஸ்லிம் லீக் தலைவர் காதர் மைதீன் வந்துள்ளார். மேலப்பாளையம் முழுவதும் ஒரே பரபரப்பு. என்ன பரபரப்பு. 03-05-2006 புதன் அன்று காயல்பட்டிணம் சென்றேன். ஐக்கிய சமாதான பேரவை நடத்திய தேர்தல் பிரச்சார கூட்டத்திற்கு தலைமை வகித்தேன். ஹாமித் பக்ரி மன்பஈ, அப்துர்றஹ்மான் ஷpப்லி மிஸ்பாஹி ஆகியவர்கள் சிறப்புரையாற்றினார்கள். இதில் கலந்து கொண்டுவிட்டு வந்ததால் சுபுஹுக்குப் பிறகே உறங்கினேன். எனவே பரபரப்புக்குரிய காரணத்தை மாலையில்தான் அறிந்தேன்.

மணியாச்சி காஜா வேட்டியை உருவி அம்மணமாக்கி விட்டார்கள்.

மேலப்பாளையத்தில் முஸ்லிம் லீக் என்ற பெயரில் இரண்டு கோஷ;டி உள்ளது. ஒன்று முன்னாள் எம்.எல்.ஏ. கோதர் மைதீன் அமைத்துள்ள புதிய அணி. இன்னொன்று முன்னாள் எம்.எல்.ஏ. ஷம்சுல் ஆலம் தலைமையிலானது. இதில்தான் ஷஷஎங்க முஸ்லிம் லீக் தலைமையை நாய் கூட மதிக்காது என்று பேசிய மணியாச்சி காஜா என்பவர் உள்ளார். முஸ்லிம் லீக் தலைவர் காதர் மைதீன் வந்த காரில் மணியாச்சி காஜா என்பவர் தொங்கிய வண்ணம் வந்துள்ளார். முஸ்லிம் லீக் தலைமையை நாய் கூட மதிக்காது என்று பேசிய நீ எதற்கு வந்தாய் என்று எதிர் கோஷ;டியினர் மணியாச்சி காஜா வேட்டியை உருவி அம்மணமாக்கி விட்டார்கள்.

ஷம்சுல் ஆலம் மேலப்பாளையம் போலீஸில் கம்ளைண்ட் செய்துள்ளார்.

உள்ளாடை எதுவும் அணியாத அவர் எதிர் அணியை தாக்க முயன்றுள்ளார். தான் நிர்வாண நிலையில் இருந்த போதிலும் எதிர் அணியை தாக்க வேண்டும் என்பதற்காக கல்லை தேடியுள்ளார். போலீஸார்தான் அவருக்கு வேஷ;டியை எடுத்துக் கொடுத்து உடுத்தி விட்டுள்ளனர். போலீஸ் கேஸ் ஆகி எப்.ஐ.ஆர். போட்ட பின்னர் சமாதானம் ஆகி உள்ளனர். முஸ்லிம் லீக் கொடிக் கம்பத்தில் பெயிண்ட் அடித்து புதுப்பித்து விட்டார்கள். புதுப்பித்தவர்கள் யார் என்று தெரியவில்லை என்று முன்னாள் எம்.எல்.ஏ. ஷம்சுல் ஆலம் மேலப்பாளையம் போலீஸில் கம்ளைண்ட் செய்துள்ளார்.

இதையெல்லாம் எண்ணிப் பாருங்கள். சமுதாய துரோகிகளால் சாக்கடையாக ஆக்கப்பட்டு விட்ட இன்றைய அரசியலை விட்டு ஒதுங்கி விட வேண்டுமா? சமுதாயத்தின் பெயரால் சாக்கடையில் உழன்று கொண்டிருக்கும் பன்றிகளை அகற்றி விட்டு அரசியலை சுத்தம் செய்து, இஸ்லாம் கூறும் அரசியலை செய்து காட்ட வேண்டுமா? எது இஸ்லாம் சிந்தியுங்கள். வஸ்ஸலாம்.

அன்புடன்: கா.அ. முஹம்மது பஸ்லுல் இலாஹி

2 Comments:

At 3:16 AM, Blogger அப்துல் குத்தூஸ் said...

ஏங்க உளரலுக்கு ஒரு அளவே இல்லையா உங்களுக்கு?

//* ஷஷநான் திருந்தி விட்டேன். நான் முஸ்லிம் என்பதால்தான் எனக்கு சீட் கிடைத்துள்ளது. நமது சமுதாயத்தின் சார்பில்தான் எனக்கு சீட் கிடைத்துள்ளது. எனவே சமுதாயத்திற்காக பாடுபடுவேன். எங்கள் தலைவரும் (கருணாநிதி) சொன்னார். உன் சமுதாயத்தவரிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்று. எனவே இனி நான் முழுமையாக அரசியல் பணிகளையே செய்வேன் என்றார் ருகையா மாலிக் என்ற சல்மா. *//


அவங்க எதுக்காக திருந்தி விட்டதாக கூறுவதுக் கூட உங்களுக்கு விளங்கவில்லையா? அல்லாஹ்வோ அல்லது நபி(ஸல்) அவர்களோ கூறியதை நான் நன்கு விளங்கி திருந்திவிட்டேன் எனக் கூறினாலும் நம்புவதற்கு வாய்ப்பு இருக்கின்றது. ஆனால் இவங்களுக்கு தனக்கு பதவி வேண்டும் என்பதற்காக கருணாநிதி கூறினார் என்பதற்காக தான் திருந்தியதாக கூறுபவரைக்(நடிப்பவரைக்) கூடவா உங்களால் புரிந்துக் கொள்ள முடியவில்லை? கருணாநிதிக்கும் இஸ்லாத்திற்கும் என்னையா சம்பந்தம். தன்னுடைய கேவலமான நடவடிக்கைக்கு என்றைக்காவது பகிரங்கமாக மன்னிப்பு கேட்டிருப்பாரா? ஜவாஹிருல்லாஹ்வை சந்தித்து ஏதாவது உளரினால் எல்லாம் சரியாகிவிடுமா?

ஈமானில் உறுதி இல்லாதவர்களெல்லாம் இதைப் போன்ற உளரல்களை நமபத்தான் செய்வார்கள் என்பதற்கு இதெல்லாம் ஒரு நல்ல உதாரணம். வேறு என்ன நான் சொல்ல.

 
At 5:56 PM, Blogger ஆத்தூர்வாசி said...

Assalamu Alaikum (warah....),

Check it out the following links about Salma buddy, i'm positive you guys might have done that b4.

http://tamilmuslim.blogspot.com/2006/05/blog-post_15.html

 

Post a Comment

<< Home