பெட்டி வாங்கினாரா பிஜே?
சமீபத்தில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பிஜெ, தான் பெட்டி வாங்கவில்லை என்பதற்கு ஆதாரமாக 12 (?) பிரமுகர்கள் சேர்ந்து முதல்வரை சந்தித்த சம்பவத்தைப் பற்றி குறிப்பிடுகிறார். அவருடைய வாக்குப் படி திருமாவளவனும் வைக்கோவும் தனியாக சந்தித்ததால் பெட்டி வாங்கியதாக குற்றம் சாட்டுகிறார். ஏன்றாலும் தான் மட்டுமே யோக்கியன் என்று இது வரை மார்க்க விசயங்களில் பிற ஆலிம்களை எப்படி விமர்சனம் செய்தாரோ, அதேவகையில் இப்பொழுதும் வைக்கோவையும் திருமாவையும் விமர்சித்துள்ளார். உண்மையில் தனியாகச் சென்ற அந்த இருவரும் தங்களது தனியான சந்திப்பின் போது பெட்டி வாங்க வில்லை. பேரம் படிந்து அதிமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீட்டை அங்கீகரிப்பதற்கான கையொப்பம் இடத்தான் அவர்கள் முதல்வரை தனியாக சந்தித்தார்கள். அதற்கு முன்பே பேரம்படிந்து பணப்பட்டுவாடா முடிந்து விட்டது என்பது தான் உண்மை. அதே போலத்தான் பிஜெவும் தனது சமுதாய மக்களை முதல்வரிடம் விலைபேசி உடன்பாடு ஏற்பட்டது.
அவருடைய வாதத்திறமையால் 12 பேர் இணைந்து எப்படி பெட்டி வாங்கி இருக்க முடியும் என்பது போல் வினவுகிறார். பெட்டி கொடுப்பவர்கள் 12 பேரை ஒன்றாக அழைத்து வைத்து ஒருவருக்கு மட்டும் பெட்டி தரமாட்டார்கள். அதே சமயம் தனி இடத்தில் பெட்டி பேரம் முடிவாகி அது கைமாறியதன் பலனாக தனக்குள்ள செல்வாக்கை முதல்வர் முன் காட்டுவதற்காக வருத்தி வருத்தி அழைத்து 12 பலி ஆடுகளை முதல்வர் முன் காட்சிப் பொருளாக்கி இருக்கலாம்.
அதுதான் எதார்த்தமான உண்மையும் கூட அதில் தெரியாத்தனமாக உண்மையை பேசக்கூடிய ஒரு கறுப்பு ஆடு நுழைந்த காரணத்தினால் எல்லா ஆடுகளின் வேசம் கலைந்து விட்டது அதனை மக்கள் முன் சமாளிப்பதற்காக தனது வாதத்திறமையை வீணாக்கிக் கொண்டிருக்கிறார்.
பாவம் பிஜெ தேர்தல் முடிந்ததும் அவருடைய சுயரூபம் அனைவருக்கும் விளங்கத்தான் போகிறது.
இறையடியான் 08.05.2006
5 Comments:
3.இதற்கிடையில் தினகரனில் ஒரு செய்தி 25.04.2004 அன்று வெளியாகி இருந்தது. அந்த செய்தியில்,
அனைத்து முஸ்லிம்களின் முழு ஆதரவைப் பெற்ற தமுமுகவை சிதைப்பதற்காக அம்மா கட்சியினர் திட்டமிட்டனர் என்றும், அதற்காக முன்னால் அமைப்பாளர் ஒருவரை தேடிப்பிடித்தார்களாம் என்று எழுதப்பட்டுள்ளது.
கா.அ.முஹம்மது பழுலுல் இலாஹி, துபையிலிருந்து சொல்கிறார்.
நான் தாயகத்தில்; இருந்தபோது ஒரு அதிகாரி 2005 ஆம் ஆண்டே சொன்னார். வருகின்ற தேர்தலில் த.த.ஜ. ஆதரவு அ.தி.மு.க.வுக்குத்தான். எல்லாம் முடிந்து விட்டது. பார்லிமெண்ட் தேர்தலில் த.மு.மு.க.வை உடைக்க பி.ஜெ.க்கு நாங்கள்தான் பணம் வாங்கிக் கொடுத்தோம் என்றார். அதிகாரி சொல்லாமல் பொய்யாக நான் இதைச் சொல்லி இருந்தால் அல்லாஹ் என்னை நாசமாக்கட்டும். அதிகாரி சொல்லாமல் பழுலுல் இலாஹி பொய் சொல்கிறார் என்று யார் மறுத்தாலும். அவர்கள் மறுப்பது பொய்யாக இருந்தால் அல்லாஹ் அவர்களை நாசமாகட்டும் என்று கூறி மறுக்கச் சொல்லுங்கள். பி.ஜெ. பின்னால் இருப்பவர்களில் அப்பாவிகள் இருந்தால் அவர்களது ஹிதாயத்துக்குத் துஆச் செய்வோம். பொய் என்று தெரிந்து கொண்டே பி.ஜெ. மாதிரி பித்தலாட்டம் பண்ணி சமுதாயத்திற்கு துரோகம் செய்தால். யா அல்லாஹ் நீ அவர்களை எப்படி பிடிக்க வேண்டுமோ அப்படி பிடி என பிரார்த்திப்போம்.
முஸ்லிம்களிடம் அதிக செல்வாக்கைப் பெற்ற தமுமுக எனும் தன்னலமற்ற இயக்கத்திலிருந்து விலகுவதற்கு பீஜேக்கு எப்படி மனது வந்தது என்று யோசித்துக் கொண்டு இருக்கும் போது பீஜே சொன்ன அத்தனை காரணங்களும் பச்சைப் பொய், அதிமுகவினர் சந்தித்தது தான் காரணம் என்று இப்போது விளங்கிக் கொண்டேன்.
அபூஅன்சாரி 15.03.2006
மேலே சொல்லப்பட்டவை இதற்கான ஆதாரங்களாகும். மேலும் அவரது இயல்பாகவே ஒரு விஷயத்தைச் சொல்லலாம். அதாவது, எந்தப் புகாரை அவர் மீது வைக்கப்படுகிறதோ அதை மிக லாவகமாக முட்டாள்களை சிந்திக்க விடாமல் முன்னரே அணை போட்டு விட்டு, வாழைப்பழத்தில் ஊசியை ஏற்றுவதைப் போல் அழகாக ஏற்றி விடுவார். அதில் இதுவும் ஒன்று. இந்த அணுகுமுறை வழக்கத்திற்கு மாற்றமான ஒன்றாகும். இதுவே அவர் பெட்டி வாங்கி இருக்கலாம் என்பதற்குரிய சான்று இல்லையா?
மேலும் இது தொடர்பான விபரங்களை கீழ்காணும் தொடுப்பில் காணலாம்.
http://muthupettai.blogspot.com/2006/03/blog-post_14.html
முத்துப்பேட்டையான் 08.05.2006
'முதலில் பேரம் முடிந்து விட்டது என எழுதிவிட்டு பின்னர் பெட்டி வாங்கி இருக்கலாம் என எழுதி முரண்படுகிறீர்கள்.' - இது அபூஜஸ்ரா அவர்களின் கூற்று.
முதல்வரை சந்திக்க நாம் மட்டும் தனியாக சென்றிருந்தால் பெட்டி வாங்கி விட்டார்கள் என்று சொல்வார்கள் என்று தான் மற்ற முக்கியப் பிரமுகர்களையும் அழைத்துக் கொண்டு சென்றதாக ஒரு சொத்தை வாதத்தை வைக்கிறார் பிஜே. இதை மாத்திரம் கருத்தில் கொண்டு 'பெட்டி வாங்கி இருக்கலாம்' என்று நாம் எழுதினோம். ஆனால் தினகரனின் செய்தி அடிப்படையிலும், சகோ.பலுலுல் இலாஹி அவர்களின் செய்தி அடிப்படையிலும் 'முதலில் பேரம் முடிந்து விட்டது' என எழுதினோம்.
இதில் எங்கே முரண்பாடு இருக்கிறது?
முத்துப்பேட்டையான் 09.05.2006
PJ, BAKKER NADATTHI VANTHA WIN TV YAI THIDIRENA VITRARATHU AEN? VANGIYATHU YAR?, EVVALAVUKKU VITRANAR?, EVVALAVU LAABAM KIDAITTHATHATHU? ITHU PONTRA KAELVIKALUKKU VIDAI .......PJ+ADMK KOOTTANI! ATHU MATTUM ILLAI ADMK YIDAM PIRATCHAARA SELAVUKKU ENA 25 LATCHAM VANGI BIT NOTICE,WIN TV YIL SAMUTHAYA PARVAI NIKALCHI,THAMIZAKAM MULUVATHUM C.D VINIYAKAM, VIMANATHIL PARANTHU PIRACHAARAM ENA ORU MATHA KALATHIL...PJ,AS ALAVUSIN, KOVAI JAFER,MUNIR,SITTHIK PONTRA TNTJ KUMBAL ADAINTHA AATHAYAAM PALA LATCHAM.....PJ KUDUMBA NIRUVANAMAANA MOON PUBLICATION,MOON MEDIA WORLD LABAM PALA LATCHAM.....
//abujasra said...
how you know that p.j.got petty?do you have any proof? //
குடந்தை மாநாடு நடப்பதற்கு முன்னரே த.த.ஜ. கூட்டு வைக்கப் போவது அ.தி.மு.க வோடுதான் என்று பஜ்லுல் இலாஹியால் எப்படி சொல்ல முடிந்தது?. குடந்தை மாநாட்டின் போதும் வந்திருந்த சிலர் எல்லாம் பேசிவிட்டு அம்மாவுக்கு ஓட்டு கேட்பார்கள் என்று எவ்வாறு எதிர்பார்க்க முடிந்தது? த.த.ஜ. பற்றி பஜ்லுல் இலாஹி சொல்லக்கூடிய ஹேஸ்யங்கள் ஒவ்வொன்றாக பலிப்பதன் மர்மம் என்ன?
ஒரு விஷயத்தை தீர்மானிக்க தினகரன் மற்றும் இலாஹி தந்த செய்தி மட்டும் அளவுகோலாகுமா? பி.ஜே பெட்டி வாங்கியிராத பட்சத்தில் நீங்கள் இப்படி எழுதி இருந்தால் அது அவதூறு ஆகாதா? மேலும் யாராவது ஒரு செய்தி கொண்டு வந்தால் அதை தீர விசாரிக்காமல் அப்படியே பிறரிடம் கூறுவது அவன் பொய்யன் என்பதற்கு அடையாளம் எனும் ஹதீஸையும் நினைவூட்டுகிறேன். இது அபூஜஸ்ராவின் விமர்சனம்.
பீ.ஜே பெட்டி வாங்கினார் என்பதற்கு வெளிப்படையாக தெரிந்த ஆதாரங்கள் தான் இவை இரண்டும், இவை போக இன்னும் ஏராளமான ஆதாரங்கள் இருக்கின்றன. இவைகள் வெளியிட முடியாதவைகளாகும். சமுதாய துரோகியை அடையாளம் காட்டுவதே நமது குறைந்த ஆதாரங்களானாலும் அதை வெளியிடுவதன் முக்கிய நோக்கமாகும். ஆதாரங்களை உறுதி செய்த பிறகே நாம் அவற்றை வெளியிடுகிறோம்.
முத்துப்பேட்டையான் 14.05.2006
Post a Comment
<< Home