Friday, June 02, 2006

தொடரும் ததஜவின் கோயபல்ஸ்தனம்

சில நாட்களுக்கு முன் ஒரு வலைப்பூவில் (தமிழக முஸ்லிம் அரசியல் மேடை) ததஜவின் தீன் முஹம்மது என்பவரின் சர்ச்சைக்குரிய மெயில்கள் பரிசீலிக்கப்பட்டு அதில் கலக்கப்பட்டிருந்த பொய்கள் பட்டியலிடப்பட்;டது.

அதனை தொடருந்து தீன் முஹம்மது ஓரம்கட்டப்பட்டு உமர் மீண்டும் களமிறக்கப்பட்டுள்ளார். இவர் அவருக்கு சளைத்தவரல்ல, இவர் எந்த அளவிற்கு மிகைப்படுததுவார் அதாவது பொய்யுரைப்பார் எனப்பார்த்தால், ஆரம்பத்திலேயே தனக்கு பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் இருப்பதாக பறைiசாற்றிக்கொள்வார்.

ஈமெயிலில் இவர் அனுப்பும் கடிதத்தை பல்லாயிரக்கணக்கானவர்கள பார்வையிடுவதாக இருந்தால் அனைவருக்கும் இவர் மெயில் அனுப்ப வேண்டும். ஆனால் இவர் யாருக்கெல்லாம் அனுப்புகிறாரோ அவை அனைத்தும் வெளிப்படுத்தப்படுவதில்லை. எனவே ஒருவருக்கு அனுப்புவதையே ஓராயிரம் பேருக்கு அனுப்பியதாக கருதிக்கொண்டு, ஒரு சிலருக்கு அனுப்புவதை பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு அனுப்பப்பட்டதாக கற்பனையில் மிதக்கிறார் போலும்.

மிகைப்படுத்துதல் என்பதே அளவுக்கு மீறி மிகைத்து, நியாய உணர்வு மறத்துப்போய், உண்மையை மறைத்தே கூறும் இவர், தனக்குத்தானே இட்டுக்கொண்ட அடைமொழி (உண்மையை உரத்துக்கூறும் உமர்) இவரின் கோயபல்ஸ் தனத்திற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு.

தனது கோயபல்ஸ்தனத்தின் அடுத்த கட்டமாக புதிய ஒரு கருத்தை பரப்ப முயற்சிக்கிறார். முளையிலேயே கிள்ளி இதனை ததஜ சகோதர்கள் தடுத்து நிறுத்தாவிட்டால், பின்னாளில் தமது சொத்துக்களை பறிகொடுக்க நேரிடலாம்.

சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின்போது, பி.ஜே பெட்டி வாங்கிக்கொண்டார் என பரவலாக சமுதாய மக்கள் பேசிக்கொள்வதன் தாக்கம், ததஜவின் தீவிர ரசிகனையும் தொற்றிக் கொள்ளக் கூடாது என்பதற்காக, தமுமுகவினர் சுனாமி திருடர்கள் என பி.ஜே தான் கையகப்படுத்திய பத்திக்கையில் மீண்டும் வெளியிட்டு திசை திருப்ப முயற்சித்தார்.

சுனாமியை தங்களது இயகத்தவர்களுக்கு சீருடை வாங்கவும், தனது பத்திரிக்கையின் நஷ்டத்தை ஈடு செய்வதற்கும் உபயோகப்படுத்திக்கொண்ட ததஜவினர்தான் உண்மையான சுனாமி திருடர்கள் என்று தமுமுகவினர் விளக்கப்பத்தியதோடு, ததஜ தலைமை பொதுச்சொத்துக்களை அபகரிப்பதில் எந்த அளவு முனைப்பானவர்கள் என்பதை பட்டியலிட்டார்கள்.

அதன்படி தமுமுகவிடமிருந்து டிரஸ்ட் மற்றும் பத்திரிக்கையை அபகரித்துக்கொண்டவர், தமுமுக அலுவலகத்தின் ஒரு பகுதியை ஆக்கிரமித்துக்கொண்டவர் என பிஜே மீது அடுக்கடுக்கான புகார்கள் பொதுமக்களிடம் பரவ ஆரம்பித்ததும், அவற்றிற்கு தனது கோயபல்ஸ் புத்தியில் கடைந்தெடுத்த பதிலாக, உண்மையை மறைத்துக்கூறும் உமர் ஒரு மெயில் அனுப்பியுள்ளார்.

அந்த மெயிலில் தமுமுகவிலிருந்து பி.ஜே ஓடியபோது (அல்லது விரட்டப்பட்டபோது) ஒரு ஒப்பந்தம் செய்யப்பட்டாக குறிப்பிட்டுள்ளார். அதன்படி கட்சியும் பேனரும் தமுமுகவிற்கு என்றும், டிரஸ்ட் பத்திரிக்கையும் ததஜவுக்கு என்றும் ஒப்பந்தம் செய்தார்களாம்.

வரலாற்று புரட்டு பற்றி கேள்விப்பட்டுள்ளோம் அவையெல்லாம் கடந்தகால வரலாற்றை இஸ்லாத்திற்கு(அ)முஸ்லிமிற்கு எதிராக திரித்து நிகழ்கால(அ)வருங்கால சந்ததியினருக்கு போதிக்கும் முயற்சி ஆகும்.

ஆனால் திருவாளர் உண்மையை மறைக்கும் உமர் அவர்கள் வரலாற்று புரட்டில் புரட்சி செய்யும் யூத, சங்பரிவார கூட்டத்தினரையே மிஞ்சி விட்டார். கோயபல்ஸ்கே குருவாகும் தகுதி வந்துவிட்டால் தானோ என்னவோ தமுமுகவிற்கு சொந்தமான டிரஸ்ட் குறித்து நடுத்தெருவில் வைத்து ஒப்பந்தம் செய்து கொண்டதாக உளறியுள்ளார்.

திருச்சியில் நடந்த ததஜவின் முதல் பொதுகுழுவில் . . .
என்று தனது மெயிலில் குறிப்பிட்டுள்ளது கூட பச்சைப்பொய்தான்.

ஏனெனில் தமுமுகவிலிருந்து ஓடிப்போய் திருச்சியில் நின்று கொண்டு அழைத்தபோது ததஜ என்ற பெயருள்ள எந்த அமைப்பும் பூமியில் இருக்கவில்லை.
இல்லாத அமைப்புக்கு ஏது பொதுகுழு, அப்புறமென்ன முதல் பொதுக்குழு?
இப்படி, உண்மைக்கு சம்பந்தமே இல்லாதவற்றை கூறுபவர்தான் தனக்குத்தானே உண்மையை உரத்துக்கூறும் என புகழாரம் சூட்டிக்கொண்டு எழுதியுள்ளார்.

அடுத்ததாக மேலக்காவேரியில் யாரோ ஒருவர் கேள்வி கேட்டாராம் அதற்கு பொய்வாளர் பி.ஜே கூறிய பதிலே தீர்ப்பாக அமைந்துவிட்டதாம்.

குற்றம்சாட்டப்பட்டவர், தன் மீது கூறப்படும் குற்றச்சாட்டுக்கு தன்னிலை விளக்கம் அளிக்கலாம் ஆனால் அதுவே எப்படி தீர்ப்பாக ஆகும்.

இப்படி நியாயமான கேள்விகளை கேட்பவர்கள் உண்மையை மறைத்துக்கூறும் உமரின் பார்வையில் புரியாத ஜென்மங்கள்.

நமது கேள்வியெல்லாம் . . .
1. இந்த உமர் பி.ஜேபின் பினாமியா?
2. குற்றம் சாட்டப்பட்டவரின் வாக்குமூலமே தீர்ப்பாகும் என்பது அபாயகரமான அடிப்படையை கடைந்தெடுத்த தவ்ஹீத்வாதிகள் நாங்கள் தான் எனக்கூறும் ததஜ சகோதரர்கள் ஏற்று ஏற்றுக்கொள்கிறார்களா?
3. உமரின் மெயிலில் குறிப்பிடப்பட்டவை உண்மையா அல்லது கற்பனையா என ததஜ தெளிவாக்க வேண்டும் (ஏனெனில் இது ததஜவினர் ஒத்துக்கொண்ட தீர்ப்பு என எழுதியுள்ளார்)
4. உண்மைதான் என ஏற்றுக்கொள்வார்களேயேனால், கடந்த இருவருடங்களுக்கு மேலாக இதுகுறித்து ததஜ தலைமை ஒன்றுமே சொல்லாதது ஏன்?
5. உண்மைதான் என ஏற்றுக்கொள்வார்களேயேனால் இப்போது ததஜ இயக்கத்தின் பெயரால் சேகரித்து வைத்துள்ளதையெல்லாம் நாளை இழக்க தயாராகட்டும்.
6. அல்லது தீன் முஹம்மது விஷயத்தில் நடந்தது போல், உமரும் ஒரு கள்ள ததஜ விசுவாசி என்றும், உமரது கருத்துக்கள் எல்லாம் கற்பனையே என்றும் புறந்தள்ளப்போகிறார்களா? இல்லை எப்படியானாலும் உமர் பிஜேயின் பினாமிதான் பிஜேயின் ஒப்புதலுடன் தான் இக்கருத்துக்களை எழுதியுள்ளார் என ஒப்புக்கொள்ளப்போகிறன்றனரா?

ஒருவேளை பொருளாதார மோசடி எவ்வளவு நடந்தாலும் எங்களால் எதிர்த்து பேச முடியாது என எப்போதும்போல் புழுங்கப்போகிறார்களா?

ஏனெனில், இதுவரை பொருளாதார விஷயத்தில் எதிர்கேள்வி கேட்ட பனைக்குளம் ஷாஹுல் ஹமீது இன்று ஓரம்கட்டபட்டுவிட்டார்.

அதேபோல் அல்கோபாரிலுள்ள திட்டச்சேரி சித்தீக், பொருளாதார விஷயத்தில் ததஜ தலைமையின் முரண்பாடுகளை பட்டியலிட்டபோது ஸ்பீக்கர்போனில் போட்டுக்கொடுக்கப்பட்டு உடனே பதவியிலிருந்து துரத்தப்பட்டார்.

இத்தகைய முன் உதாரணங்களைக் கண்டு வாய்மூடிய மௌனிகளாகப்போகிறார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்.

கனி ராவுத்தர். 03.06.2006

1 Comments:

At 12:12 AM, Anonymous Anonymous said...

please add link this site http://www.tamilmuslim.bravehost.com/

 

Post a Comment

<< Home