Tuesday, June 20, 2006

உண்மையை மறைத்துக் கூறும் உமருக்கு,

பிஸ்மில்லாஹ்
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

உண்மையை மறைத்துக் கூறும் உமருக்கு...

தனக்குத்தானே புகழ் அடைமொழி இட்டுக்கொள்ளும் உமருக்கு வேண்டுமானால் பெயருக்கும், சாதிப்பிரிவுகளுக்கும் வித்தியாசம் தெரியாமல் இருக்கலாம். பெயரை பண்பாக கருதுவதனால்தான் தனக்குத்தானே புகழாரம் சூட்டிக்கொண்டார்போலும், அடியார்களில் அழகானவர் (ஜெயினுலாபிதீன்) எனப்பெயர் வைத்துக்கொண்டு, அடியார்களின் சொத்துக்களை அபகரிக்கும் கொள்ளையராக வலம் வருவதை கண்டும் உமர் புரிந்து கொள்ளவில்லை.

என்ன செய்வது, உண்மையை திரித்துக்கூறும் நிலையில் அவரே உண்மையை உரத்துக்கூறுவதாக கற்பனையில் மிதப்பவரிடம் வேறு என்ன எதிர்ப்பார்க்கமுடியும்?

அவர் எழுதியிருந்த விஷயம் முத்துப்பேட்டை டாட் காமில் இருப்பதாக முன்பு குறிப்பிட்டிருந்ததை அவ்வாறு வெளியிடப்படவில்லை என நாம் மறுத்திருந்தோம். பெயர் விஷயத்தில் வரிந்துகட்டி எழுதியவர் இதனை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார்.

கற்பனையில் பொய்யை திரும்ப திரும்ப சொல்லி உண்மையாக்கப் பார்க்கும் கோயபல்ஸின் குரு உமர்தான், எனவே அவர் கோயபல்ஸ் தத்துவத்தை கூறும்போது ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் உதாரண்ததை ஏற்கமுடியாது என குறிப்பிட்டிருந்தோம்.

ஏனெனில் எமக்கு எடுத்துக்கூறப்படுபவைகளில் உண்மை எது, உண்மையின் பெயரால் இட்டுக்கட்டபடுவை எவை என்ற தெளிவு எமக்குண்டு. உமரது கோயபல்ஸ் கூச்சலுக்கு நாம் செவி சாய்க்கவில்லை. ஏமாறத்தயாராகவில்லை என்பதால் எம்மீது அவருக்கு வருத்தம் ஏற்படுவது நியாயம் தான்.

ஏன்ன செய்வது பிரதர்! தவ்ஹீதிற்கும் தக்லீதிற்கும் உள்ள வேறுபாட்டை தெளிவாக நான் மட்டுமல்லாமல், அல்லாஹ்வின் பெரும் கிருபையால் தமுமுகவிலுள்ள ஒவ்வொரு தவ்ஹீத்வாதியும் தெளிவாக புரிந்து வைத்திருக்கிறார்களே.

பாவம் உதாரணம் சொல்லவந்து அது அவருக்கே புரியாமல் போனதால் பாதியிலே விட்டுவிட்டு விழி பிதுங்கி நிற்கிறார்.

அடுத்தவன் தோட்டத்தில் உள்ள பம்ப் செட் நீர் பாய்ச்சிக்கொண்டு அது நந்தவன சோலையாக இருக்கிறதாம் . . . என்னுடைய, என்னைப்போன்ற ஒவ்வொரு தமுமுககாரனின் வியர்வையில், ரத்தத்தில் செழித்திருந்த நந்தவனத்தை காவல்காக்க வளர்த்த நாய், வெறிகொண்டு, வளர்த்த எஜமானர்களையே குதறிக்கொண்டுள்ளது. வெறிநாய்குரிய வைத்தியம் நிறைவேற்றப்பட்டால், அந்நாய் பின்னால் சுற்றும் பைத்தியங்கள் தெளிந்துவிடும். (இது ஓர் உதாரணம்)

பறிகொடுத்துள்ள எங்களுக்குத்தான் அதன் வலி தெரியும் - திருடிச்சென்றவர்களுக்கு அது தெரியாது என எழுதியிருந்தோம். இக்கருத்தை கேலிப்பொருளாக்கியதிலிருந்து அந்த வலி தனக்கு தெரியாது, ஏனெனில் நாங்கள் திருடியவர்கள் என உமர் ஒப்புக்கொண்டுள்ளார். நன்றி!

இஸ்லாமிய சட்டம் ஜகாதாக இருந்தாலும், நபித்தோழர்கள் பற்றிய விமரிசனமாக இருந்தாலும், குர்ஆன் தர்ஜமாவிலுள்ள குளறுபடிகளாக இருந்தாலும், ஏன் குலுங்கிய கும்பகோண கணக்காக இருந்தாலும்,
கடற்கரையே இல்லாத வேலூருக்கு சுனாமி நிதி பங்கிட்டதாக இருந்தாலும், சுனாமி நிதியில் களவாடிய உணர்வு வார இதழின் நஷ்டம் ஈடுசெய்யப்பட்டதாக இருந்தாலும், சுனாமி நிதியில் ததஜ இயக்கத்தவருக்கு சீருடை வாங்கியதாக இருந்தாலும் இவைபோன்ற எண்ணற்ற விஷயங்களில் குர்ஆன் சுன்னாபடி தனிப்பட்ட கருத்து என ததஜவினர் (உமர் உட்பட) கருத்துக்கள் கேட்கப்பட்டால் அதற்குரிய பதில்கள் தான் நாம் முன்னர் எழுதியிருந்தோம்.

அப்படி இல்லையாம் சுடச்சுட பதில் எழுதுகிறாராம்.

என்ன பதில் நாம் குறிப்பிட்டிருந்த கேள்வியையும் அதற்கு அவர் அளித்துள்ள பதிலையும் பார்வையிடுங்கள்.

நமது கேள்வி:
குற்றம் சாட்டப்பட்டவருடைய வாக்கு மூலம் எப்படி தீர்ப்பாக அமையும் ?

அவரது பதில் : தொடர்பில்லாமல் சம்பந்தமில்லாமல் குற்றம் சாட்டுபவன் பைத்தியக்காரன் சித்த பிரமைக்காரன்.

எது தொடர்பும் சம்பந்தமும் இல்லாதது. தமுமுகவின் வருமானத்திற்கு வழிவகைகாணும் விதமாக டிரஸ்ட் உருவாக்கப்பட்டு அதற்கென நிதி உதவிகள் பெறப்பட்டு சொத்துக்கள் வாங்கும் சமயம் அல்லாஹ்வை சாட்சியாக்கி அமானிதமாக பொறுப்பு ஒப்படைக்கப்பட்டதே. அந்த அமானிதத்தை களவாடிக்கொண்டதற்காக அல்லாஹ்விடம் பதில் சொல்லியாக வேண்டுமென்ற அச்சம் இல்லாதவர்களுக்கு இஸ்லாத்துடன் தொடர்பும் சம்பந்தமும் இருக்க வாய்ப்பில்லை தான்.

ஆனால் பலநூறு, பல்லாயிரக்கணக்கான சமுதாய ஆர்வலர்கள் வாரி வழங்கியது தமுமுக எனும் விருட்சம் பட்டுப்போய்விடக்கூடாது என்ற எண்ணத்தில் தான். அவர்கள் இஸ்லாத்தோடும் சமுதாயத்தோடும் தொடர்பும் சம்பந்தமும் உள்ளவர்கள். எனவே இவ்வுலகில் இல்லாவிட்டாலும் மறுமையில் பறிகொடுத்தவற்றிற்கு பகரமாக நன்மைகளையும், பொறுமை காத்ததற்காக பாவமன்னிப்பையும் அல்லாஹ்விடத்தில் பெற்றுக்கொள்ள முடியும் என்ற அசைக்கமுடியாத நம்பிக்கையில் உள்ள நன்மக்கள். அவர்களுக்கு என்றென்றும் அல்லாஹ்வின் அருள் கிட்டும்.

கலிமா சொன்னால் முஸ்லிம்தான் என பேராசிரியர் கூறினாராம் கலிமா சொல்லாமலேயே முஸ்லிம் ஆகலாம் என உமர் கூறுவாரோ.

இஸ்லாத்தில் துவக்கமே ஷஹாதத் கலிமாவில் தானே உள்ளது. அதை கூறுவது எப்படி தவறாகும்.

இறுதியாக அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (ஷிர்க்கைத்தவிர) தான் நாடியவைகளை மன்னிக்கிறான். ஆனால் ஒரு அடியான் மற்றொரு அடியானுக்கு அநீதி இழைத்துவிட்டால் சம்பந்தப்பட்டவர் மன்னிக்காத வரை அல்லாஹ் அவரை மன்னிப்பதில்லை - என்ற எச்சரிக்கையை நினைவூட்டி, பலநூறு பல்லாயிரக்கணக்கானவர்களின் பங்களிப்பான ட்ரஸ்டையும், பத்திரிக்கையையும் திரும்ப ஒப்படைத்து அவர்கள் அனைவர்களிடமும் மன்னிப்பை பெறாதவரை மீட்சி இல்லை எனக்கூறி நிறைவு செய்கிறேன்.

ராவுத்தர் 20.06.2006

0 Comments:

Post a Comment

<< Home