குற்றவாளியின் வாக்குமூலம் தீர்ப்பாகுமா?
அன்பு வாசகர்களே, அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)
தீன் முஹம்மதுவின் கள்ளத்தனம் தோலுரிக்கப்பட்டதால், அவர் பின் வாங்கப்பட்டு, உமர் மீண்டும் களமிறக்கப்பட்டுள்ளார் என நாம் குறிப்பிட்டதும் துள்ளிக்குதித்து மீண்டும் தனது வழக்கமான பொய்களுடன் தீன் முஹம்மது வரத் துவங்கியுள்ளார்.
இதன் மூலம், இவர் எங்களுடைய ஆள் அல்ல, இப்படி ஒருவரே எங்களுக்குத் தெரியாது என ததஜ மீண்டும் மறுக்க வேண்டிய நிர்பந்தத்தை ஏற்படுத்தி உள்ளார்.
உமர், தனது தலைவரின் பாணியை தவறாமல் பின்பற்றுபவர். அதாவது அவரது அடிவருடி. எனவே தான், நாம் எழுதிய விஷயத்திற்கு பதில் தரும் முன் நமது பெயரைப் பிடித்துத் தொங்குகிறார்.
நாம் குதிரை மேய்ப்பவருமல்லர், இஸ்லாம் தடை செய்த ஜோதிடக்காரருமல்லர். தவிர உமர் குறிப்பிட்டுள்ளது போல் இக்கடிதம் முத்துப்பேட்டை டாட் காம் இலும் இல்லை.
கோயபல்ஸ்கே இவர்கள் குரு என்பதால், தத்துவத்தின் விளக்கத்தை இவர்களிடமிருந்து பெறலாம். ஆனால் உதாரணத்தை ஏற்றுக் கொள்ள முடியாது.
தமுமுகவிற்காக ஆரம்பிக்கப்பட்ட உணர்வு தமுமுகவை தாக்கி எழுதுவதும், தமுமுகவிற்காக துவக்கப்பட்ட டிரஸ்ட்டின் வருமானம் வேறு வகையில் விரயமாக்கப்படுவதையும் காணும், மனசாட்சியுள்ள உண்மை தவ்ஹீதுவாதிகள் எவரும் எளிதில் புரிந்து கொள்ள கூடிய சத்தியமான ஒரு விஷயம், அவை களவாடப்பட்டுள்ளது என்பதாகும்.
பறி கொடுத்துள்ள எங்களுக்குத்தான் அதன் வலி புரியும். திருடிச் சென்றவர்களுக்கோ திருட்டுக்கு தோள் கொடுப்பவர்களுக்கோ அந்த துயரம் புரியாது. பட்டால் தான் புரியும்.
பேராசிரியர் சொல்வதை எதிரொலிக்க வேண்டிய அவசியம் எமக்கில்லை. உண்மையாக மக்கள் மன்றத்தில் தெளிவாக்கவே நாங்கள் விரும்புகிறோம். ஆனால் அங்கு என்ன நிலை? தனது சொந்த புத்தியை உபயோகித்து பதிலளிக்க எவருமில்லை. ஜகாத் ஆக இருந்தாலும் சரி, டவுசராக இருந்தாலும் சரி, சுனாமியாக இருந்தாலும் சரி, டிரஸ்ட் ஆக இருந்தாலும் சரி, தேர்தலில் அதிமுக ஆதரவு என்றாலும் சரி எதுவும் 'அண்ணன் சொன்னால் சரி', 'அண்ணன் செய்தால் சரி', 'அவரிடமே பேசுங்கள்', 'கேட்டுச் சொல்கிறோம்' என்பது தான் பதில்கள்.
இந்த இலட்சணத்தில் நம்மைப்பார்த்து வாந்தி முதல் பல அநாகரீகமான வார்த்தைகளை எழுதியுள்ளார். இவ்வார்த்தைகள் அனைத்தும் அவர்களுக்கே பரிபூரணமாக பொருந்தும்.
திருச்சி ரோஷன் மஹாலில் கூடிய கூட்டத்தை ததஜ கூட்டவில்லை என்பதை ஒப்புக் கொள்ளும் உமர், அதனை ததஜவின் முதல் மாநில பொதுக்குழு என தனது மெயிலில் குறிப்பிட்டது ஏன்? இதுதான் கோயபல்ஸ்தனத்திற்கு சிறந்த எடுத்துக் காட்டு. ததஜ என அப்பொழுது பெயரிடப்படவில்லை என இன்று ஒப்புக்கொள்ளும் உமர், தான் பொய்யுரைத்ததற்கு தானே சாட்சியாக பல்லிளிக்கிறார். பரிதாபம்.
இதே போலத்தான் மேலக்காவேரி பதிலும், மேலக்காவேரியில் கேள்வி கேட்டவர், 'நீங்கள் டிரஸ்டை தூக்கிக் கொண்டு ஓடியதாக குற்றம் சாட்டப்படுகிறதே?' எனக் கேட்கிறார். அதற்கு பிஜே பதில் சொல்லி விட்டாராம். அதுவே தீர்ப்பாம். குற்றம் சாட்டப்பட்டவரின் வாக்குமூலம் எப்படி தீர்ப்பாகும் என்பதுவே நமது கேள்வி. நாம் மட்டுமல்ல அந்த டிரஸ்ட்டை உருவாக்கியதற்காக நிதி வசூலித்த, நன்கொடைகளை வாரி வழங்கிய பலநூறு, பல்லாயிரக்கணக்கான தமுமுககாரர்கள் மற்றும் சமுதாய ஆர்வலர்களின் கேள்வியும் இதுதான்.
இதனை தீர்ப்பாக எடுத்துக் கொள்ள நியாயவான்கள் யாரும் உடன்பட மாட்டார்;கள். ஏனெனில் உமர் அளவிற்கு உண்மையை மறைக்க வேண்டிய அவசியம் வேறு எவருக்குமில்லை. தமுமுகவிற்கான நிரந்தர வருவாயை உருவாக்க என்ற கொள்கை வகுத்து வசூல் செய்யப்பட்டதை அறியாத, அந்த நிதியில் பங்களிக்காத யாரோ ஒரு அனாமதேயம் கேட்ட கேள்விக்கு, குற்றச்சாட்டுக்கு ஆளானவர் கூறியதே தீர்ப்பு என அல்லாஹ்வையும், மறுமை நாளையும் மறந்தவர்கள் வேண்டுமானால் ஏற்றுக் கொள்ளலாம்.
தீர்ப்பளிப்பதில் தவறிழைக்காதவனான அல்லாஹ்வின் சன்னிதானத்தில் இவர்களின் நிலை என்னவாகும். திருடியதை திரும்ப ஒப்படைப்பதுடன் மரணத்திற்கு முன்பாக சம்பந்தப்பட்ட எம் அனைவரிடமும் மன்னிப்பு பெறவில்லையானால் அதோகதிதான் என எச்சரிக்கிறோம்.
டிரஸட் விஷயத்தில் தமுமுகவின் சொத்துக்களை அபகரித்துக் கொண்டார் என குற்றம் சாட்டிய பொமுது, அதனை நம்ப இயலாதவர்களாக, பொதுவாக நல்லெண்ணம் வைக்க வேண்டும் என நம்பியவர்களாக, ததஜவிற்கு வால் பிடித்தவர்கள் சாரி - கொடி பிடித்தவர்கள் கூட சுனாமி நிதியை சுருட்டி சீருடை வாங்கியதாக (கள்ள) கணக்கு எழுதியதில் கோதித்துப் போய் விட்டனர்.
ஆனாலும், தான் நம்பி வந்த மண்குதிரை கரைவது கண்டு, கண்ணீருடன் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர். திட்டச்சேரி சித்தீக் முதல் டி ஆர் பட்டிணம் அப்துர்ரஹ்மான் கான் வரை இதுதான் நிலை.
தமுமுகவின் சொத்துக்களை அபகரித்துக் கொண்டது, சில பகுதிகளை ஆக்கிரமித்துக் கொண்டது, சுனாமியில் சருட்டியது, சமுதாயத்தை தோட்டத்தில் குழி தோண்டிப் புதைத்து கையூட்டுப் பெற்றது, சமுதாய இளைஞர்களை சீரழிவிற்கு உள்ளாக்கியது என ஒவ்வொன்றாக வல்ல அல்லாஹ் வெளிக் கொண்டு வருவான்.
அந்த நம்பிக்கையில் தான் பாதிக்கப்பட்ட தமுமுககாரனும், கோவை சிறைவாசிகளும் அல்லாஹ்விடம் பிரார்த்தனை புரிந்து வருகிறார்கள். அந்த பிரார்த்தனை வீண்போகாது.
இறுதியாக கூட தனது கோயபல்ஸ் தனத்தை விட்டுவிட உமருக்கு மனமில்லை போலும். பேராசிரியர் டிக்ளேர் செய்தார் என தனது வழக்கமான பாணியில் மொட்டையாக குறிப்பிட்டுள்ளார். அதை விபரமாக வெளியிட வேண்டும். முன்பு ஒருமுறை முற்றம் பத்திரிக்கையில் 'பேராசிரியர், தான் தவ்ஹீதுவாதியல்ல' என பேட்டி அளித்துள்ளதாக முடிந்தவரை பரப்பினார்கள். அப்படி ஒரு பேட்டியே வெளிவரவில்லை என நிரூபித்த பின் துள்ளிக் குதித்தவர்கள் (உமரின் பாஷையில் - வாந்தி எடுத்தவர்கள்) அடங்கிப்போனார்கள். இதுவும் அந்தவகை தானோ?
அன்புடன், ராவுத்தர் 08.06.2006
0 Comments:
Post a Comment
<< Home