பீஜே வடிக்கும் முதலைக் கண்ணீர்
சிறைவாசிகள் சம்பந்தமாக எந்தவித அக்கறையும் இதுவரை காட்டாத பிஜேயும் அவரது சொந்தச் சொத்தான ததஜவும் தங்களுக்கு ஞானம் பிறந்து விட்டதைப் போன்றும் சிறைவாசிகள் விஷயத்தில் தமக்கு அக்கறை இருந்ததைப் போன்றும் ஆனால் சிறைவாசிகள் விரும்பாததால் எந்த நடவடிக்கையிலும் இறங்க வில்லை என்பதைப் போன்றும் நாடகமாடி மக்களை நம்ப வைக்க முயற்சித்து வருகிறார்கள்.
சிறைவாசிகள் விஷயத்தில் போலீஸ் தரப்பு அப்ரூவராக சிறைவாசிகளுக்கு எதிராக சாட்சி சொன்னார் பீஜெ என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் என்றிருக்கும் போது, சிறைவாசிகள் எப்படி நம்பி இவர்களின் உதவியைப் பெறுவார்கள். எதையாவது போட்டுக் கொடுத்து வெளியே வரக்கூடியவர்களை வெளியே வரமுடியாத அளவிற்கு செய்து விட்டால் என்ன செய்வது என்ற பயம் தான் இதற்குக் காரணமாகும். பிஜேயின் துரோகம் எப்படிப்பட்டது என்பதற்கு இது நல்ல சான்றாகும்.
பிஜேயும் ததஜவும் சிறைவாசிகள் விஷயத்தில் சம்பந்தப்பட வேண்டாம் என்று சிறைவாசிகள் சொல்லி விட்டார்களாம், அதனால் இனி இவ்விஷயத்தில் சம்பந்தப்பட மாட்டார்களாம்.
இப்படிச் சொல்லக்கூடியவர்கள் சிறைவாசிகள் விஷயத்தில் ஒரு கேள்வியையும் போட்டு அதற்கு பதில் சொல்கிறேன் பார் என்ற விதத்தில் பதில் சொல்ல வேண்டிய அவசியம் என்ன வந்தது. முன்பு சொன்ன அதே முடிவிலேயே இருந்து விட வேண்டியது தானே. ஏன் முன்னுக்கு பின் முரணாக நடந்து கொள்ள வேண்டும்.
சிறைவாசிகள் விடுதலை என்பது விளையாட்டுக் காரியம் அல்ல, அவர்களின் வாழ்க்கைப் பிரச்சனை, தயவு செய்து கெடுத்து விட வேண்டாம்.
இந்த லட்சணத்தில் இப்படியும் எழுத எப்படித்தான் துணிச்சல் வருகிறதோ, அல்லாஹ்வுக்கே வெளிச்சம்.
தமுமுகவிடமிருந்து களவாடப்பட்ட உணர்வு இதழ் 10:43 ல் 'பதில்கள்' பகுதியில் கீழ்காணும் செய்தி இடம் பெற்றுள்ளது.
? சிறைவாசிகள் விடுதலை தொடர்பாக அது நீதிமன்ற விவகாரம் என்று தமிழக முதல்வர் கூறி தனது வாக்குறுதியை மீறிவிட்டார். இடஒதுக்கீடு வழங்குவதாக அவர் அளித்த வாக்குறுதியையும் அவர் மீறுவதற்கு முன்னோடியாக இதை எடுத்துக் கொள்ளலாமா? அபூஅனஸ், திருவண்ணாமலை.
! நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சிறைவாசிகளை விடுதலை செய்வோம் என்றோ, ஜாமீனில் விடுவோம் என்றோ திமுக தனது தேர்தல் அறிக்கையில் கூறவில்லை. தேர்தல் பிரச்சாரத்தின் போதும் திமுக தலைவர் இப்படி எந்த வாக்குறுதியும் அளிக்க வில்லை.
திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த நமது சமுதாயத்தைச் சேர்ந்த சிலர் தான் சிறைவாசிகள் விடுதலை பற்றி எங்களிடம் திமுக உறுதிமொழி தந்துள்ளது என்று வாய்கிழிய பிரச்சாரம் செய்தனர்.
கருணாநிதி தன்னால் எதுவும் செய்ய முடியாது என்று அறிவித்த பின்பும், திமுகவுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்த நம்
சமுதாயத்தினர்கள் மௌனம் சாதிக்கிறார்கள். கருணாநிதியிடம் உறுதிமொழி பெற்றிருந்தால் கருணாநிதி வாக்குறுதி மீறிவிட்டார் என்று அவர்கள் கொதித்துப் போயல்லவா அம்பலப்படுத்தியிருக்க வேண்டும்.
எனவே திமுக தலைமையிடம் சிறைவாசிகள் விடுதலை
பற்றி உறுதிமொழி வாங்கியதாக பொய்ப்பிரச்சாரம் செய்திருக்க வேண்டும் அல்லது கருணாநிதி அளித்த உறுதிமொழியை மீறியதற்காக அவரைக் கண்டிக்க முடியாத அளவுக்கு வேறு
ஏதோ கைமாறியிருக்க வேண்டும். அது என்ன என்பது விரைவில் தெரியவரும்.
இது அந்த பதிலின் நமக்குத் தேவையான முக்கியப் பகுதியாகும்.
தமுமுகவைப் பற்றி விமர்சனம் செய்யாமல் இனி உணர்வு வெளிவராது என்கிற நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளார்கள். வழக்கம் போல இதிலும் தமுமுக பற்றிய விமர்சனம் இடம் பெற்றுள்ளது.
இப்படி எழுதுவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன.
தமுமுகவிடமிருந்து தகவல்களை இலவசமாக பெற்றுக் கொண்டு சிறைவாசிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் பீஜே இறங்க நினைக்கிறார்.
சிறைவாசிகள் விஷயத்தில் தான் செய்த அயோக்கியத்தனத்தை மறைப்பதற்காக இப்படிப்பட்ட கேள்விபதில் நாடகத்தை நடத்தியிருக்கிறார்.
உண்மையில் கேள்விகள் தமக்கு வராவிட்டாலும் தாம் சொல்ல வரும் விஷயத்தை துணிந்து ஒரு கேள்வியை தயார் செய்து அதற்கு பொய்யான முகவரியும் கொடுத்து செட்டப் செய்வது பீஜேயின் கைவந்த கலைகளில் ஒன்று என்பதை நாம் இங்கே சொல்லி வைக்கிறோம். சிலவேளைகளில், தமக்கு நெருக்கமானவர்களைப் பார்த்து, 'தம்பி உன் பேரில் ஒரு கேள்வி வரும்பா' என்று சொல்வதும் அவரது பழக்கமாகும்.
பீஜேக்கு விளங்கும் விதமாக ஒரு உதாரணத்தை சொல்லி வைப்போம்.
மிட்டாய் கடையில் சென்று ஒரு கிலோ மிட்டாய் கொடுங்கள் என்று கேட்டால் மிட்டாய் கிடைக்கும். துணிக்கடையில் சென்று ஒரு கிலோ மிட்டாய் கேட்டால் எப்படிக் கிடைக்கும்.
நீதி மன்ற விவகாரங்களை நீதி மன்றத்தில் தான் பார்த்துக் கொள்ள வேண்டும். அதை விடுத்து முதலமைச்சர் வாக்குறுதி தரவில்லை, கவர்னர் அதற்கு வாக்குறுதி தரவில்லை, தேர்தல் அறிக்கையில் சொல்ல வில்லை என்று கதறுவதால் ஒரு பயனும் இல்லை.
ஆனாலும் முதலமைச்சர் சிறைவாசிகள் விஷயத்தில் தனது அதிகாரத்திற்கு உட்பட்டு சில செயல்களை செய்ய முடியும். அதுவும் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு செய்ய முடியும். அதைத்தான் நாம் அவரிடமிருந்து எதிர்பார்கிறோம்.
நாலாம் கிளாஸ் படித்த மேதைக்கு எப்படி இந்த விஷயங்கள் விளங்கப் போகிறது, நீதி மன்றத்தில் சரணடைவதற்கு பதிலாக ஜெயலலிதாவிடம் சரணடைந்த பிஜேக்கு ஜெ சொல்வது தான் வேதம். அவரைப் பின்பற்றுவது தான் ஒரே வழி.
முன்பெல்லாம் சவால் விடும் போது, இதற்கு ஆதாரம் கொண்டு வந்தால் ஒரு லட்சம் அல்லது இரண்டு லட்சம் என்று பிஜே பெட் கட்டுவார், ஆனால் இப்போதோ நிலைமை வேறு இப்போதைய சவால்களில் கோடிக்கணக்கில் இணாம் அறிவிக்கிறார். இந்தப் பணம் எங்கிருந்து வந்தது. ஜெ கொடுத்தாரா?
ரகசியம் அதிக நாட்கள் ரகசியமாகவே இருக்காது. பொறுத்திருப்போம்.
இப்னு பாத்திமா 04.07.2006
0 Comments:
Post a Comment
<< Home