Wednesday, August 02, 2006

ததஜ எனும் ஒட்டுண்ணி

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

பாரசைட்ஸ் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். அது தனக்குத் தேவையான இரத்தம் எனும் உணவை பிற உயிரினங்களின் உடலில் ஒட்டிக் கொண்டு உறிஞ்சி உயிர் வசிக்கும் ஒரு வகையாகும். அந்த வகையைச் சேர்ந்தது தான் ததஜ எனும் அரசியல் கட்சியாகும்.

பாரசைட்ஸ் போன்ற கேவலமான வேலையைத்தான் ததஜவின் தலைவர் பிஜே செய்து கொண்டு வருகிறார்.

'உணர்வு' என்ற பத்திரிக்கை தமுமுக எனும் சமுதாய பேரியக்கத்திற்காக ஆரம்பிக்கப்பட்டதாகும். தனக்கென்று ஒரு பத்திரிக்கையை ஆரம்பித்துக் கொள்ள வக்கில்லாத ததஜ, உணர்வு பத்திரிக்கையை தமுமுகவிடமிருந்து திருடிக் கொண்டு தமுமுகவிற்கு எதிரான பொய்யான கருத்துக்களை அதில் எழுதி வருகிறது. அதனால் தான் சொல்கிறோம். தமுமுகவிடமிருந்து 'உணர்வு' பத்திரிக்கையை எடுத்துக் கொண்டார், அதிலேயே தமுமுகவைப் பற்றி விமர்சனம் செய்து தொல்லை கொடுத்துக் கொண்டிருக்கிறார் பாரசைட் போல.

'முஸ்லிம் மீடியா டிரஸ்ட்' தமுமுக என்னும் பேரியக்கத்திற்காக உருவாக்கப்பட்டது என்பது எந்த தன்மானமுள்ள தவ்ஹீதுவாதிக்கும் நன்றாகவே தெரியும். இதற்காக வேண்டி வீடியோ கேமராக்கள், ரிக்கார்டிங் வசதிகள் போன்றவைகள், டிவி நிகழ்ச்சிகள், பத்திரிக்கைகள் வெளியிடுதல் 'உணர்வு', 'ஒற்றுமை' போன்றவைகளுக்கான முதலீடுகள் செய்யப்பட்டன. அவை அத்தனையையும் ததஜ எனும் பாரசைட் எடுத்துக் கொண்டிருக்கிறது. தமுமுகவிலிருந்து பிஜே பிரிந்த போது ஒரு சிறு டிவி நிகழ்ச்சியைக்கூட தயாரிக்க முடியாமல் அதற்கான உபகரணங்கள் இல்லாமல் தர்ம சங்கட நிலைக்கு தமுமுக தள்ளப்பட்டதை எவரும் மறந்திருக்க மாட்டார்கள். ததஜ எனும் பாரசைட் தமுமுகவிடமிருந்து 'முஸ்லிம் மீடியா டிரஸ்ட்'டை' உறிஞ்சிக் கொண்டு, கொளுத்திருக்கிறது.

'முஸ்லிம் டிரஸ்ட்' என்பதும் தமுமுகவின் நிரந்தர வருமானத்திற்கென்றே ஏற்படுத்தப்பட்டதாகும். தமுமுகவிலிருந்து பிரிந்து சென்ற பிஜே, அதற்குச் சொந்தமான 'முஸ்லிம் டிரஸ்ட்'ல் தான் வகிக்கும் பொறுப்பை முறையாக தமுமுகவிடம் ஒப்படைத்து விட்டுச் செல்வது தான் ஒரு உண்மையான முஃமினின் பண்பாகும். தமுமுகவிலிருந்து விலகுவாராம், ஆனால் 'முஸ்லிம் டிரஸ்ட்' பொறுப்பை மட்டும் விட மாட்டாராம், எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்?

இந்த முஸ்லிம் டிரஸ்டின் கீழ் இருப்து தான் சென்னை ராயப்பேட்டையில் அமைந்திருக்கும் கமர்ஷியல் காம்ப்ளக்ஸின் இரண்டு பிளாட்டுகளாகும். இதற்காக கட்டிட காண்ட்ராக்டர் தந்த தண்டத்தொகை, அரண்மனைக்காரன் தெருவிலிருக்கும் ததஜவின் அலுவலக வாடகைக்காக செலுத்தப்பட்டது. இப்பொழுது அதன் கட்டிட பணிகள் முடிவடைந்து விட்டதால் அதில் கிடைக்கும் வாடகைத் தொகை முழுக்க முழுக்க ததஜவிற்காக பயன்படுத்தப்படுகிறது. தமுமுக மக்கள் இயக்கத்திற்காக வாங்கப்பட்ட அந்த பிளாட்டுகளும் அதன் வாடகையும் அதற்கு பயன்படாத வகையில் பாரசைட் வேலையை பார்த்துக் கொண்டிருப்பவர் தான் உலக மகா அயோக்கியர் பிஜே என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

இதே போன்றே மதுரையில் இதற்கு சொந்தமான சொத்தையும் அதன் வருமானத்தையும் ததஜ எனும் பாரசைட் உறிஞ்சிக் குடித்துக் கொண்டிருக்கிறது.

இவை போக 'அல்முபீன்' எனும் மாத இதழை அபகரித்துக் கொள்ள நினைத்த பிஜே, அந்த இதழை தன் வசப்படுத்துக் கொண்டு பின்னர் சிறிது சிறிதாக தனக்கு சொந்தமாக்கிக் கொண்டார். 'ஏகத்துவம்' என்ற பெயர் அல்முபீனுக்கு இடப்பட்டது, ஐஏசி என்பது, இல்லாத ஜமாத்துத் தவ்ஹீத் ஆக மாற்றப்பட்டது. பப்ளிஷர் அண்ட் ஓனர் பிஜேயின் மகன் முஹம்மத் என்ற பெயர் முதலில் இடப்பட்டடு வெளிவந்தது. பின்னர் தான் அலாவுதீன் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அதன் பிறகு ஏகத்துவம் பிஜேயின் தனிச்சொத்தாக மாறிவிட்டது. பிஜேயும் ததஜவும் ஒட்டுண்ணி எனும் பாரசைட் என்பதற்கு இன்னும் சான்று வேண்டுமா?

தனது கொடியை தேர்ந்தெடுக்கும் போது கூட, தேர்ந்தெடுக்கப்பட்ட கொடி பிற இயக்கங்களின் கொடியாக இருந்து விடக்கூடாது என்பதில் கவனம் செலுத்தியிருக்க வேண்டும். என்ன நடந்தது? ஏற்கனவே ஒரு முஸ்லிம் இயக்கம் வைத்திருக்கும் கொடியை தேர்ந்தெடுத்து, அவமானப்பட்டது தான் மிச்சம். இதில் கூட தமுமுகவின் கறுப்பு வெள்ளை நிறத்தை ஒத்திருந்ததை மறுக்க முடியாது. அதாவது திருட்டுக் கொடி. அதே போன்றே டீசர்ட்டும் திருட்டு. தமுமுகவின் டீசர்ட்டை ஒத்திருக்கிறது.

சுனாமியால் பாதிக்கப்பட்ட, ஏழைகளுக்காக வசூலிக்கப்பட்ட பணத்தை 'உணர்வு' பத்திரிக்கையின் சர்க்குலேசன் குறைந்ததால் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்டுவதற்காகவும் ததஜவினருக்காக டீசர்ட் வாங்குவதற்காகவும் செலவிடப்பட்டது, அதோடு கடற்கரையே இல்லாத இடங்களுக்கும் சுனாமி நிதி வினியோகிக்கப்பட்டதாக கள்ளக்கணக்கு எழுதியது போன்றவையும் பணம் எனும் இரத்தம் எப்படியெல்லாம் தனது கட்சிக்காக உறிஞ்சி எடுக்கப்படுகிறது என்பதற்கு சான்றுகளாகும்.

அவர்களின் ஒட்டுண்ணி வேலை, கடைசியில் டான் டிவி நிகழ்ச்சியில் நன்கொடை வேட்டையில் வந்து முடிந்திருக்கிறது. இவர்களுக்கு கொள்கை என்பது இரண்டாம் பட்சம் தான் பணம் என்பது தான் பிரதானம் என்பதை மேற்கண்ட விஷயங்கள் நிரூபிக்கின்றன.

மொத்தத்தில் ததஜ எனும் அரசியல் கட்சி பிறரின் இரத்தத்தை உறிஞ்சி உயிர் வாழும் அர்ப்ப பாரஸைட் இயக்கமாகும். தவ்ஹீது நிலைத்திருக்கும், கியாம நாள் வரை தவ்ஹீதுக்காக பாடுபடும் ஒரு கூட்டம் இருக்கும் ஆனால் தமிழ்நாடு தவ்ஹீது ஜமாத் என்ற கட்சியின் வாழ்நாள் மிகவும் குறைவு என்பதற்கு மேற்கண்ட விஷயங்கள் சான்றாகும்.

ததஜவிற்கும் பிஜேக்கும் அஸ்தமனம் என்பது வெகுதொலைவில் இல்லை.

பிறரது சொத்துக்கள் மூலம் நடத்தப்படும் ததஜவில் இருப்பது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் ஹராமாகும். பிஜேயை வணங்கும் குராஃபிகள் வேண்டுமானால் அதில் இருந்து கொள்ளட்டும். உண்மை தவ்ஹீதுவாதி ததஜவை விட்டு விலகுவது தான் நல்லது. இல்லையேல் மறுமையில் பிஜேயுடன் நீங்களும் டிரஸ்ட் விஷயமாக விசாரணைக்காக கொண்டு வந்து நிறுத்தப்படுவீர்கள் என்பதை கூறிக்கொள்கிறோம்.

இப்னு ஃபாத்திமா 02.08.2006

3 Comments:

At 1:18 AM, Blogger முத்துப்பேட்டை said...

கடற்கரையே இல்லாத வேலூர் மாவட்டத்திற்கு ததஜ சுனாமி நிவாரணமாக கணக்கு காட்டியுள்ளது ரூபாய் 60 ஆயிரம், கடற்கரையே இல்லாமல் எப்படி சுனாமி தாக்கியது என்பது ததஜ தலைமையே அறிந்த ரகசியம்.

 
At 11:28 PM, Blogger முத்துப்பேட்டை said...

சுனாமியால் பாதிக்கப்பட்டவர்கள், கடற்கரையே இல்லாத வேலூர் மாவட்டத்தை தேடிச் சென்று அடைக்கலம் புகுந்தார்கள் என்ற புது பொய்யை தலைமை சொல்லி அதை அப்படியே வாந்தி எடுத்துக் கொண்டிருக்கும் அபூஜஸ்ரா, நீங்கள் உங்கள் தலைமையிடம் எதுவுமே கேள்வி கேட்காமல் அவர்கள் சொல்லுவதை சிந்தித்தும் பார்க்காமல் அதற்கு சப்பைகட்டு கட்டுவதனால்தான் சுனாமியின் பேராலும் கும்பகோணம் குலுங்கியது என்று கப்ஸா விட்டதன் பேரிலும் பல லட்சக்கணக்கான பொருளாதாரத்தை ததஜ தலைமை தங்களுக்குள் பங்குவைத்துக் கொள்கிறது.

சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசாங்கமும் தமுமுக போன்ற தன்னார்வ இயக்கங்களும் நிதி வசூல் செய்து பங்கீடு செய்தார்கள். ஆனால் கடற்கரையே இல்லாத மாவட்ட மக்களுக்கு சுனாமியின் பெயரால் யாரும் எந்தப் பங்கீடும் செய்ய வில்லை. இப்படி இருக்க நடை முறை சாத்தியமில்லாத ஏதோ ஒன்றை தலைமை சொல்லியது என்பதற்காக கண்ணை மூடிக் கொண்டு ஆதரவு தெரிவிப்பதும் அதனைக் குறித்து சந்தேகம் எழுப்பக் கூடிய பொது மக்களை தரக்குறைவாக விமர்சிப்பதும் சம்பந்தமே இல்லாமல் வேறு இயக்கங்களோடு தொடர்பு படுத்தி அவதூறு பரப்புவதையும் விட்டு விட்டு ஒழுங்காக சுயமாக சிந்திக்கப்பழகுங்கள். அப்பொழுது தான் ததஜ தலைமை செய்யும் தில்லுமுல்லுகள் உங்களுக்கு விளங்கும்.

முஸ்லிம் மீடியா டிரஸ்ட்டை திருடியவர்கள் ஒற்றுமையை நிறுத்தினார்கள், இப்பொழுது அப்பத்திரிக்கைக்கும் ததஜவிற்கும் தொடர்பு இல்லை என்று சொல்லுவது அபாண்டமாகும்.

முஸ்லிம் மீடியா டிரஸ்டை களவாடிய ததஜ தலைமை அதன் மூலம் வெளிவந்த 'ஒற்றுமை'யை தடை செய்தது. காரணம் 1) முஸ்லிம் மக்களிடையே ஒற்றுமை நிலைக்க ததஜ தலைமை விரும்ப வில்லை. 2) ஒற்றுமை ஒரு தரமான பத்திரிக்கையாக மாற்றுமதத்தை சேர்ந்த பல அறிவு ஜீவிகளின் பாராட்டைப் பெற்று வந்தது. அதே தரத்தில் ஒற்றுமையை வெளிக் கொண்டு வர ததஜ தலைமையிடம் தரமான பத்திரிக்கையாளர்கள் இல்லாத காரணத்தால் பத்திரிக்கை நிறுத்தப்பட்டது.

 
At 5:34 AM, Blogger முத்துப்பேட்டை said...

சகோதரரே! உங்கள் கேள்வியை இன்னும் கொஞ்சம் தெளிவாக எழுதுங்களேன்.

 

Post a Comment

<< Home