Wednesday, July 26, 2006

ததஜவினரின் தவ்ஹீது பூச்சாண்டி

தமுமுகவினரைப் பற்றி விமர்சனம் செய்யாமல் தமுமுகவிலிருந்து களவாடப்பட்ட 'உணர்வு' வார இதழ் வெளிவராது என்பது ததஜவினரின் ஒற்றைக் கொள்கையாகும்.

'தமுமுக தவ்ஹீதுக்கு எதிரானது' என்ற பொய்யை கூறிவிட்டு தமுமுகவிலிருந்து தாமே கழன்று கொண்டார், ஒட்டு மொத்தமாக தமுமுகவை விழுங்குவதற்கு அவர் தீட்டிய சதித்திட்டம் அம்பலமானவுடன், 'சதித்திட்டம் தீட்டி தமுமுகவிலிருந்து வெளியேற்றி விட்டார்கள்' என்ற மற்றொரு பொய்யையும் சொல்லி வைத்தார் பிஜே.

'தமுமுக தவ்ஹீதுக்கு எதிரானது' என்ற பொய், தவ்ஹீதை உயிர் மூச்சாக கொண்டவர்களின் மத்தியில் நன்றாகவே வேலை செய்தது. இவரின் இரட்டை வேடத்தை புரிந்து கொள்ளாத பலர் ஏமாந்து போனார்கள்.

தவ்ஹீதை வைத்து லாபகரமாக வியாபாரம் செய்ய முடியும் என்பதை நன்றாக புரிந்து கொண்ட பிஜே, மூன் பப்ளிகேஷன், மூன் மீடியா என்று அந்த வியாபாரத்தை தனதாக்கிக் கொண்டார்.

சத்தியப் பிரச்சாரம் அல்லாஹ்வுக்காக செய்யப்பட வேண்டிய ஓர் இபாதத் என்பதை மக்களுக்கு சொல்லி விட்டு, பிரச்சாரத்திற்காக அன்டர்கிரவுண்டில் பணம் பெற்றுக் கொண்ட பார்ட்டி தான் இந்த பிஜே.

ஸஹர் நேர சிறப்பு டிவி நிகழ்ச்சியில் பிரச்சாரம் செய்வதற்காக அந்த இயக்கத்தின் பொருளாளரை மடக்கி அந்த நிகழ்ச்சிக்குரிய சம்பளத்தை பெற்றுக் கொண்டார். இதை கணக்கு அளவில் மட்டுமே வைத்துக் கொண்டார்களே தவிர, மற்றவர்களுக்கு தெரிவிக்கப்பட வில்லை.

அதற்கு அடுத்த வருடம் ஸஹர் நேர சிறப்பு டிவி நிகழ்ச்சி நடத்துவதற்காக பிஜேயை அணுகிய போது நிகழ்ச்சியில் பிரச்சாரம் செய்வதற்கு மறுத்து விட்டார். விபரம் கேட்ட போது தான் இந்த சம்பள விஷயம் வெளிச்சத்திற்கு வந்தது. பார்த்தீர்களா? இந்த தவ்ஹீது வியாபாரிகளின் லட்சணத்தை.

இவர்கள் தான் 'தமுமுக தவ்ஹீதுக்கு எதிரானது' என்று கூறிக் கொண்டு அதை விட்டு வெளியே வந்தவர்கள், தெரிந்து கொள்ளுங்கள் இவர்களை.

தவ்ஹீதில் ஸலபுகளின் கூற்று ஓர் அங்கம் என்பதை இவர்கள் புறக்கணித்து விட்டு தனது சொந்தக் கருத்தை புகுத்துபவர்கள் தான் தவ்ஹீதை முழுமையாக பின்பற்றக் கூடியவர்களாம். கேட்டால் தேவையற்ற ஒரு கேள்வியையும் கேட்டு விட்டு தேவையற்ற ஒரு பதிலையும் தந்து விட்டு ஓடி விடுவார்கள்.

உண்மையான தவ்ஹீதுக்கு உதாரண புருஷர் தான் இந்த பிஜே என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். அந்த நினைவில் மண்ணை அள்ளி தூவி விட்டவரும் இந்த பிஜே தான். அன்று கோபாலபுரத்தில் கலைஞர் வீட்டில் நடந்த ஒரு சந்திப்பின் போது வரவேற்பறையில் காத்திருந்த பிஜே கலைஞரைக் கண்டதும் இருகரம் கூப்பி எழுந்து நின்று வணக்கம் சொன்னார். கலைஞரை சந்திக்கச் சென்றவர்கள் சாட்சியாக இருக்கிறார்கள்.

அவ்வளவு ஏன்? கடந்த 21.04.2006 அன்று ஜெயா டிவியில் ஒளிபரப்பான நேருக்கு நேர் நிகழ்ச்சியின் முடிவில் இருகரம் கூப்பி தெளிவாக வணக்கம் என்று கூறி நிகழ்ச்சியை முடித்தவர் வேறு யாரும் அல்ல வடிகட்டிய தவ்ஹீதுவாதி என தமக்குத் தாமே புகழாரம் சூட்டிக் கொண்ட சாத்சாத் பிஜே தான். பின்னர் தான் அந்தக் கண்டராவி எடிட் செய்யப்பட்டது.

இவர் தான் தமுமுக தவ்ஹீதுக்கு எதிரானது என்று புலம்புகிறார்.

'ஏகத்துவம்' ஏப்ரல் 2004 ல் 'களப்பணியாற்றச் செல்வோர் அத்தனை பேருமே ஏகத்துவத்தை இழந்து விடுவார்கள்' என்று எழுதினார்கள். இந்த ஏகத்துவத்தை இழக்கும் நிலைக்கு ஆளாவோம் என்று ததஜவினர் அப்போது நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார்கள்.

நாங்கள் கொடி தூக்கும் கூட்டம் அல்ல என்று தமுமுகவுக்கு எதிராக கோஷம் போடுவதாக நினைத்துக் கொண்டு காட்டுக் கத்து கத்தியவர்கள், பரிணாம வளர்ச்சி பெற்று ததஜவுக்கு என்று திருட்டுக் கொடியை (வேறு ஒரு இஸ்லாமிய இயக்கத்தின் கொடி) நிர்ணயித்துக் கொண்டார்கள்.

அந்த கொடியை கையில் பிடித்துக் கொண்டே ததஜ என்ற தவ்ஹீது ஜமாத், உச்சி முதல் உள்ளங்கால் வரை சங்பரிவார விஷ இரத்தம் ஓடிக் கொண்டிருக்கும் ஜெயலலிதாவிற்காக களப்பணியாற்றினார்கள். இப்பொழுது தெரிகிறதா? தமுமுக தவ்ஹீதுக்கு எதிரானது அல்ல என்று, ததஜ என்று வெறுமனே பெயர் வைத்துக் கொண்டு சங்பரிவாரங்களின் கொள்கையை உள்வாங்கிக் கொண்ட ததஜ என்ற அரசியல் கட்சி தவ்ஹீதுக்கு எதிராக சென்று கொண்டிருக்கிறது. தவ்ஹீதை குழி தோண்டிப் புதைத்துக் கொண்டிருக்கிறது.

தவ்ஹீது பற்றிய முழு அறிவும் இல்லாத அரை வேக்காட்டு பிஜே பல விஷயங்களை நாளுக்கு நாள் கற்றுக் கொண்டு வருகிறாரே தவிர, அது பற்றிய முழுமையான அறிவு இல்லை அவருக்கு. அதனால் தான் அவரது மார்க்கத் தீர்ப்புகளிலே ஏராளமான முரண்பாடுகளை நம்மால் காண முடிகிறது. தயவு செய்து அவர் இன்னும் அவரது இஸ்லாமிய அறிவு ஞானத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பது நமது பரிந்துரையாகும்.

அமானிதம் உரியவர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட வேண்டும் என்பது தவ்ஹீதின் ஒரு அங்கம். பிறருக்காக வழங்கப்பட்ட அமானிதம் தன்னிடம் இருந்தால் அதை ஒப்படைக்க வேண்டும் என்ற அறிவு கூட இல்லாமல் வாதம் செய்து கொண்டிருப்பது நல்லதா? இதுதான் தவ்ஹீதா? இந்த லட்சணத்தில் தமுமுக தவ்ஹீதுக்கு எதிரானது என்ற கூப்பாடு வேறு?

இந்த வரிசையில் கடைசியாக வந்த விமர்சனம் தான் பிஜேயிடம் அமானிதமாக ஒப்படைக்ப்பட்ட தமுமுகவுக்கு சொந்தமான 'உணர்வு' வார இதழ் 10:46ல் 'பதில்கள்' பகுதியில் இடம் பெற்ற ஒரு கேள்வி:

'? சுன்னத்வல் ஜமாஅத் ஐக்கியப் பேரவை என்ற பெயரில் ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி 'தவ்ஹீது'க்கு எதிரான - 'ஷிர்க்'கிற்கு ஆதரவான பிரச்சாரத்தை செய்து வருகிறார். இந்நிலையில், 'இஸ்லாமிய பிரச்சாரப் பேரவை' என்ற பெயரில் தவ்ஹீத் பிரச்சாரம் செய்து வருகிறோம் என்று கூறும் தமுமுகவினர், லெப்பைக்குடிகாட்டில் ஷேக் அப்துல்லாஹ் ஜமாலியின் கூட்டத்திற்கான ஏற்பாடுகளை செய்ததோடு, தங்களின் தொண்டர் அணி சீருடையுடன் அவரது கூட்டத்திற்கான வேலைகளை செய்ததை ஒரு 'தமிழ்' தொலைக்காட்சியில் காண முடிந்தது.
இது பற்றி உங்களின் கருத்து என்ன? எம்.ஏ.சித்திக், மேலப்பாளையம்.
!இது ஒன்றும் ஆச்சர்யமான விஷயம் அல்ல. இதற்கு பெயர் தான் அவர்கள் கூறும் 'பன்முகம்'.
நாம் ஏற்கனவே கூறியிருக்கிறோம்! கேள்வியை தாமே எழுதிக் கொண்டு, அதற்கு பதிலையும் தயாரித்து விற்பனை செய்பவர் தான் இந்த பத்திரிக்கை வியாபாரி.

இதில் ஒரு குள்ளநரித் தந்திரத்தை இந்த பிஜே கையாண்டுள்ளார் என்பதை நம்மால் விளங்கிக் கொள்ள முடிகிறது. அதாவது பதிலை பொய்யாக எழுதினால் அதற்கு மறுப்பு எழுதப்படும். தனது இமேஜ் இன்னும் பாதிக்கப்படும், உண்மை அம்பலத்திற்கு வந்து விடும் என்று நினைத்த பிஜே பொய்யான கேள்வியை பிறர் மீது திணித்து விட்டு தப்பித்துக் கொள்ளும் தந்திரத்தை கையாண்டுள்ளார்.

1) 'இஸ்லாமிய பிரச்சாரப் பேரவை' அந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ய வில்லை என்பதை ஃபித்னா செய்வதையே நோக்கமாக கொண்டுள்ள பிஜேக்கு சொல்லிக் கொள்கிறோம்.

2) தமுமுகவினரும் அந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ய இல்லை.

3) அந்தக் கூட்டத்தில் ஒரு சிலர் தமுமுக உடையில் காணப்பட்டார்கள் என்பது உண்மையே. (அது அறியாமையின் காரணமாக இருந்தாலும் சரி, அல்லது சாதாரண ஆடையாகவே (கேசுவலாகவே) அந்த உடையை அணியக் கூடியவர்களாக அவர்கள் இருந்தாலும் சரி,) அதற்காக அந்த நிகழ்ச்சியை தமுமுக தான் ஏற்பாடு செய்தார்கள் என்று சொல்வது மடத்தனம். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கோபித்துக் கொள்வார்கள்.

ஒரு பழமொழி சொல்வார்கள் கிராமங்களிலே 'நொண்டிக் கழுதைக்கு சறுக்கியது தான் சாக்கு' என்று. இதற்கு என்ன பொருள் என்பதை நீங்களே புரிந்து கொள்ளுங்கள்.

தமுமுக உடையில் அங்கே சிலர் சென்றது கண்டிக்கத்தக்கது. நாமும் கண்டிக்கிறோம். தலைமையும் அதை கண்டித்ததாக அறிகிறோம்.

அசத்தியத்தில் இருக்கும் ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி போன்றோர்கள் பாய்ண்ட் டூ பாய்ண்ட் விவாதம் செய்யக் கூடிய அளவுக்கு துணிச்சல் பெற்றதும், ததஜவை விட மிகச் சிறப்பாக விவாத முறையை அமைத்துக் கொண்டதும் பிஜேயின் போலித்தனமான, பொய்யான நடவடிக்கைகள் தான் காரணமாகும் என்பதை நம்மால் மறுக்க முடியவில்லை.

தமுமுக இயக்கத்தவர்கள் பிஜேயின் முகத்தில் கரியைப் பூசிய விஷயங்களுள் ஒன்று தான் 'பன்முகம்'. இதற்கு விளக்கம் சொல்ல வருகிறாராம் அந்த பேரறிஞர்.

'பன்முகம் என்பது தவ்ஹீதுக்கு எதிரானது, ஒருமுகம் தான் தவ்ஹீதுக்கு ஆதரவானது' என்று பொருள் சொல்ல வருகிறார்.

'தக்லீது கூடாது' - (தனிமனித வழிபாடு) என்று மேடைகளிலே முழங்கிய பிஜே, தன்னை ஒரு கூட்டம் வணங்க வேண்டும் என்பதிலே அதிக கவனம் எடுத்துக் கொண்டார்.

நடிப்பில் சிவாஜி கணேசனையே மிஞ்சிய பிஜேக்கு சிலை வைக்க அனுமதி அளிக்கப்பட்டால் பிஜேயின் ரசிகர் கூட்டம் சிலை வைக்கக்கூட தயங்க மாட்டார்கள் அந்த அளவுக்கு ரசனையில் ஊறித் திளைத்து வருகிறார்கள்.

இந்த ஒருமுகம் மட்டும் இல்லையென்றால் ததஜ எனும் பிஜே ரசிகர் மன்றம் அத்தனையும் கலைக்கப்பட்டாலும் கலைக்கப்படலாம், அல்லது வேறு ஒரு ரசிகர் மன்றத்தில் இணைக்கப்படலாம்.

ஆனால் தமுமுக என்னும் மக்கள் பேரியக்கத்தில் இப்படிப்பட்ட முஸீபத்துக்கள் ஏதும் இல்லை. பிஜேயின் வார்த்தைகளிலேயே சொன்னால்,

மறுமையை முன்னிறுத்தி சமுதாயச் சீர்திருத்தத்துக்காக நானும் சேர்ந்து உருவாக்கிய தவ்ஹீது இயக்கத்தில் கூட, சுயநலனையும், பதவி மோகத்தையும், பணம் திரட்டும் குறிக்கோளையும் நான் காண்கிறேன். சம்பளம் இல்லாவிட்டால் அவர்கள் இப்பணியைச் செய்ய மாட்டார்கள் என்பதையும் உணர்கிறேன்.

ஆனால் உலகில் அடைய வேண்டிய உரிமைகளுக்காகத் துவக்கப்பட்ட தமுமுகவின் தலைமை நிர்வாகிகளிடம் அல்லாஹ்வின் மீது ஆணையாக இந்த நிலையை நான் காணவில்லை.

மறுமைக்கான பணியைக் கூட சில பேர் இவ்வுலக ஆதாயத்துக்காக ஆக்கி விட்ட நிலையில் இவ்வுலகிற்காக மட்டுமே உரிய பணிகளை கூட இவர்கள் மறுமைக்காக ஆக்கிக் கொண்டதை நான் பார்க்கிறேன்.....

எந்த இயக்கமும் தனி மனிதனைச் சார்ந்து இருக்கக் கூடாது. தனி மனிதக் கவர்ச்சியில் இயங்கும் இயக்கங்கள் காலப் போக்கில் தடம் புரண்டு விடும் என்பதை நான் ஆரம்ப காலம் முதலே
வலியுறுத்தி வந்துள்ளேன். தமுமுக தனிமனிதரைச் சார்ந்த இயக்கமல்ல. அது ஒரு மகத்தான மக்கள் இயக்கம்.
இது பிஜே தமுமுகவுக்கு அளித்த நற்சான்று.

இப்போது சொல்லுங்கள் 'பன்முகம்' என்பதன் பொருள் என்னவென்பதை?

அன்புடன்,
இப்னு ஃபாத்திமா 26.07.2006

1 Comments:

At 2:58 AM, Blogger முத்துப்பேட்டை said...

நாம் எழுதிய கட்டுரை தொடர்பாக தமுமுக தனது அதிகாரபூர்வ இணையத்தளத்தில் செய்தி வெளியிட்டுள்ளது. வாசகர்களின் வசதிக்காக அந்த செய்தியையும் அதன் லிங்க்கை பதிவு செய்கிறோம்.
http://www.tmmkonline.org/tml/others/109754.htm
மேலை சம்சுல் ஆலம், மயிலாப்பூர்

? லெப்பைக்குடிக்காட்டில் நடைபெற்ற வேறு ஒரு அமைப்பின் நிகழ்ச்சியில் தமுமுக தொண்டரணியினர் நின்று கொண்டிருந்ததை ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பார்க்க நேர்ந்தது. இதுகுறித்த தமுமுகவின் நிலைப்பாடு என்ன?

! நாமும் அதை தொலைக்காட்சியில் தான் பார்த்தோம். இது தற்செயலாக நடந்த ஒன்று. இது தலைமைக்கு தெரியாமல் நடந்துள்ளது.

சமீபகாலமாக ஏராளமான புதிய இளைஞர்கள் த.மு.மு.க.வுக்கு தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளனர். அவர்களுக்கு த.மு.மு.க.வின் கொள்கைகள், நிலைப்பாடு கள் முழுவதுமாகத் தெரிவதில்லை. அவர்களுக்கெல்லாம் இன்னும் தர்பியா முகாம்கள் நடத்தப்படவும் இல்லை. எனினும் அவர்களில் பலர் த.மு.மு.க. டீலிஷர்ட்டுகளை அணிந்து கொள்வதில் தனி ஆர்வம் காட்டுகின்றனர். டீலிஷர்ட் அணிந்த நிலையி லேயே திருமணம் போன்ற நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கின்றனர்.

இப்படியான புதிதாக கழகத்திற்கு வந்திருக்கும் சகோதரர்கள்தான் விபரம் புரியா மல் வேறு இயக்கத்தினரின் நிகழ்ச்சியில் டீலிஷர்ட்டுகளோடு பங்கேற்றிருக்கிறார் கள். இத்தகவல் தெரிய வந்ததும் பெரம்பலூர் மாவட்ட நிர்வாகிகளை தொடர்பு கொண்டு கண்டித்து விட்டோம்.

 

Post a Comment

<< Home