டான் டிவியில் ததஜவின் பொய்யான அறிவிப்பு
பொய்யின் மீது தளம் அமைக்கப்பட்ட ததஜ எனும் அரசியல் கட்சி டான் தொலைக்காட்சியில் ஒரு மணி நேர நிகழ்ச்சி ஒன்றை நடத்தி வருகிறது. வளைகுடா ஐரோப்பாவில் வசிக்கும் மக்களை மட்டுமே குறிவைத்து நடத்தப்படும் இந்த நிகழ்ச்சியின் நடுவே ததஜவின் நிர்வாகிகளுள் ஒருவரான நாகூர் ஏ.எஸ்.அலாவுதீன் தோன்றி இராப்பிச்சை எடுத்து வருகிறார்.
இதுதான்இஸ்லாம்.காம் என்ற இணைய தளத்திலிருந்து அப்பட்டமாக திருடப்பட்ட டைட்டில் தான் 'இதுதான்இஸ்லாம்' என்பதாகும். திருட்டையே தொழிலாக கொண்டுள்ளவர்களுக்கு இதைத் திருடுவது அவர்களுக்கு அர்ப்ப விஷயமாகும்.
இதுதான்இஸ்லாம் என்ற நிகழ்ச்சி மிகவும் கஷ்டத்தில் நடத்தப்படுவதாகவும், நன்கொடைகள் வெகுவாக குறைந்து விட்டதாகவும், அதனால் மக்கள் நன்கொடைகள் மூலமாக, வாழ்த்தும் நெஞ்சங்கள், நிறுவன விளம்பரங்கள் தருவதன் மூலமாக இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்த ஆதரவு கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறார். அதோடு சவூதிஅரேபியாவில் தொடர்பு கொள்ள வேண்டிய மூன்று நபர்களின் பெயர்களை வேறு அவர் அறிவிக்கிறார்.
நமது கேள்வி என்னவென்றால்,
விவாதம் செய்வது கூடுமா? கூடாதா? எப்படிப்பட்ட விவாதத்திற்கு அனுமதியுண்டு, எதற்கு அனுமதியில்லை என்பதெல்லாம் இருக்கட்டும்.
சுன்னத்வல் ஜமாத்தினர் என்று அழைக்கப்படுவோர் முதலில் உண்மையான மத்ஹபு கிதாபுகளை அடையாளம் கண்டு கொள்வது அவசியமாகும். மாணவர்களுக்கு கற்றுக் கொடுப்பதற்காக மத்ரஸாக்களில் பாடத்திட்டத்தில் வைத்திருப்பதெல்லாம் சரியானவை என்ற எண்ணத்தை கைவிட முன்வர வேண்டும். இமாம்களோடு தொடர்புடைய உண்மையான கிதாபுகளை அடையாளம் காண வேண்டும். இது நடந்தால் பிஜேயின் மத்ஹபுக்களுக்கு எதிரான ஆட்டம் அடங்கிப் போய்விடும்.
குர்ஆன் ஹதீஸ் போர்வையில் தனது சொந்தச் சரக்கை விலை கூவி விற்றுக் கொண்டிருக்கும் பிஜேயும் அவரது நிலைபாட்டிலிருந்து மாற வேண்டும். பிஜேயும் அவரது ஜமாத்தை தவறான வழிக்கே வழி நடத்துகிறார் என்பது தான் உண்மை.
இப்படிப்பட்டவர்கள் தான் களியக்காவிளையில் விவாதம் நடத்துகிறார்களாம். அதை டான் டிவியில் ஒளிபரப்பு செய்கிறார்களாம். இதற்காகத்தான் மக்கள் தங்கள் பொருளாதாரத்தை செலவு செய்து மறுமை வெற்றியைப் (?) பெற வேண்டுமாம்.
இரு முஸ்லிம் குழுக்களுக்கு இடையே உண்மையாகவே உண்மையை விளங்கிக் கொள்வதற்காக விவாதம் நடப்பதாக இருந்தால், மக்களிடம் யார் நன்றாக விவாதம் செய்தார்கள் என்று அங்கீகாரம் பெறுவதற்காக அதை டிவியில் ஒளிபரப்ப வேண்டுமா? அல்லது அதை ஒளிபரப்பியதன் பொருள் என்ன?
ஸஹாபாக்கள் கிரிமினல்கள், பதவி ஆசை பிடித்தவர்கள், கொலை வெறி பிடித்தவர்கள், ஸஹாபாக்களுக்கு உள்ளே சண்டையிட்டுக் கொண்டார்கள் என்று 'அந்த 72 கூட்டத்தினர்' என்ற தலைப்பிட்டு பேசுவதற்கும் அதை டான் டிவியில் ஒளிபரப்பு செய்வதற்கும் மக்களே நீங்கள் உங்கள் நன்கொடைகளை வாரி வழங்கி நரகத்திற்கு செல்லுங்கள் என்று ஏ.எஸ். அலாவுதீன் அழைப்பு விடுக்கிறார்.
இஸ்லாத்தின் ஐந்து தூண்களில் மிக முக்கியமான ஒன்றாகிய ஜகாத் எனும் இஸ்லாமிய பொருளாதாரக் கொள்கையில் கைவைத்து, ஒரு பொருளுக்கு ஒருமுறை ஜகாத் கொடுத்தால் போதும், ஒவ்வொரு ஆண்டும் கொடுக்கத் தேவையில்லை என்ற கொள்கையை உலகில் முதன்முதலில் அறிமுகம் செய்து வைத்த பிஜேயின் ஜகாத் சம்பந்தப்பட்ட பேச்சுக்கள் டான் டிவியில் ஒளிபரப்பு செய்வதற்காக மக்களே நீங்கள் உங்கள் பொருளாதாரத்தை நன்கொடைகளை அள்ளி அள்ளி கொடுங்கள் அதன் மூலம் நீங்கள் நரகத்திற்கு செல்லலாம் என்று ஏ.எஸ்.அலாவுதீன் கேட்கிறார்.
தனக்கென்று ஒரு மன்ஹஜ் இல்லாதவர்தான் இந்த பிஜே, புத்திக்கு ஒத்துவராத ஹதீஸ்களை எல்லாம் ஏற்றுக் கொள்ளத் தேவையில்லை, அவைகளை நிராகரிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட பிஜேயின் அது தொடர்பான சொற்பொழிவுகளை டான் டிவியில் ஒளிபரப்பு செய்வதற்காக நன்கொடைகளை அள்ளித் தந்து நீங்கள் உங்களை நரகத்திற்கு செல்வதற்கு தயார் செய்து கொள்ளுங்கள் என்று ஏ.எஸ்.அலாவுதீன் டான் டிவியில் கூறுகிறார்.
எல்லாவற்றுக்கும் மேலாக, அதிகமான விளம்பரங்கள் இடம் பெறக்கூடிய ஒரே நிகழ்ச்சி இந்த இதுதான்இஸ்லாம் நிகழ்ச்சி ஒன்று தான். இருந்தாலும் அதிகமான விளம்பரங்களை ஒளிபரப்பு செய்து கொண்டே விளம்பரங்கள் வெகுவாக குறைந்து விட்டன என்று ஏ.எஸ்.அலாவுதீன் பொய் சொல்கிறார் என்பது உங்களுக்கு விளங்குகிறதா?
அதற்கும் முன்பாக வரக்கூடிய அரை மணிநேர நிகழ்ச்சி தமுமுக நடத்தும் 'பிளாக் அன்ட் ஒயிட் கம்யூனிகேஷன்' நிகழ்ச்சியில் நான்கே விளம்பரங்கள் மட்டும் தான். அவர்களால் அந்த நிகழ்ச்சியை நடத்த முடிகிறது. ஏராளமான விளம்பரங்கள் குவிந்துள்ள இந்த நிகழ்ச்சியை நடத்துவதற்கு மிகவும் சிரமமாக இருக்கிறது என்ற கூப்பாடு வேறு.
தமுமுக நடத்தும் நிகழ்ச்சியில் பாவம்! எந்த விதமான நன்கொடை கேட்டு விளம்பரம் ஏதும் இடம் பெறுவதில்லை. ஆனால் எமது ஆலோசனை என்ன வென்றால், பிச்சை கேட்காத தமுமுகவிற்கு தான் உங்கள் நன்கொடைகள் சென்று சேர வேண்டும்.
பொருளாதாரத்தை திரட்டுவதையே முழுமுதற் குறிக்கோளாக கொண்டு இயங்குகின்ற ததஜ என்ற அரசியல் கட்சிக்கு நன்கொடைகளை அனுப்புவதை முதலில் நிறுத்துங்கள். வரும் ஆண்டில் ஃபித்ரா தொகையை அந்தக் கட்சிக்கு அனுப்புவதையும் நிறுத்துங்கள். அவர்கள் இந்த கடமையை ஒழுங்காக உங்களுக்காக நிறைவேற்றுவார்கள் என்ற உத்திரவாதம் இப்போது இல்லை.
தமுமுகவிற்கு அனுப்பும் உங்களது நன்கொடைகளை, கீழ்காணும் முகவரிக்கு அனுப்புங்கள்:
பிளாக் அன்ட ஒயிட் கம்யூனிகேஷன்ஸ்
7,வடமரைக்காயர் தெரு,
மண்ணடி,
சென்னை 600 001
தங்களன்புள்ள,
இப்னு ஃபாத்திமா 22.07.2006
2 Comments:
நீங்கள் இரு சாராருமே நன்கொடையில் தானே குறியாக இருக்கிறீர்கள்.
தமிழ்முஸ்லிம் மன்றத்தில் 'சகோதர வலைப்பதிவரின் சிந்தனைக்காக' என்ற தலைப்பின் கீழ் எமது பதிவான 'டான் டிவியில் ததஜவின் பொய்யான அறிவிப்பு' க்கு விமர்சனம் எழுதியுள்ளார் அபூஉமர் அவர்கள். ஆரோக்கியமான விமர்சனங்களை நாம் எப்போதும் வரவேற்கிறோம்.
அந்த விமர்சனத்தை நமது வாசகர்களுக்காக கமெண்ட்ஸ் பகுதியில் லிங்க் தருகிறோம்.
http://tamilmuslim.blogspot.com/2006/07/blog-post_23.html
வாசகர்கள் படித்து விட்டு அதிலிருக்கும் விஷயங்களை விளங்கிக் கொள்ளட்டும்.
இப்னு ஃபாத்திமா 25.07.2006
Post a Comment
<< Home