Sunday, July 30, 2006

பொதக்குடி: உணர்வுக்கு மக்கள் உரிமை கண்டனம்

பொதக்குடி: நாங்கள் எவ்வளவோ சொல்லியும் கேட்கவில்லை!

கூலக்கமால் குடும்பத்தினர் குறித்து பொதுமக்கள் சிலரிடம் விசாரித்தோம்... நம்மிடம் பேசிய சிலர் தங்கள் பெயரை வெளியிட வேண்டாம் என தெரிவித்து விட்டு, ''அந்தக் குடும்பத்தினர் ஊர் மக்களிடம் அனுசரித்துப் போக மாட்டார்கள். தாங்கள்தான் எல்லாவற்றிலும் உயர்ந்தவர்கள் என்று திமிருடன் நடந்து கொள்வார்கள். மற்றவர்களை மதிக்க மாட்டார்கள். கடந்த ரமலான் நோன்பின் போது, நோன்புக் கஞ்சி சட்டியிலேயே மண்ணை அள்ளி வீசினார்கள். மொத்தத்தில் அந்தக் குடும்பம்னாலே யாருக்கும் அவ்வளவாக நல்ல அபிப்ராயம் இல்லை. (உணர்வு 14:20, 2006)

மேற்கண்ட செய்தியை வெளியிட்டு விட்டு, இத்தகைய தவறான மக்கள் விரோதிகளுக்காக வரிந்து கட்டிக் கொண்டு, தமுமுகவிடமிருந்து களவாடிய பத்திரிகையில் ஆதரவு தெரிவித்திருக்கிறது ததஜ தலைமை.

தேர்தலில் படுதோல்வியை சந்தித்த பிறகு கொஞ்ச நாள் மவுனமாகக் கிடந்தவர்கள், தேவையில்லாமல் பொதக்குடி விவகாரத்தில் மூக்கை நுழைத்து அநியாயத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்து தங்கள் கோணல் புத்தியைக் காட்டியிருக்கிறார்கள்.

''பொதக்குடியில் தமுமுகவினரை தாக்கிய குண்டர்கள்'' என்ற தலைப்பில் 'மக்கள் உரிமை'யில் செய்தி வெளியிட்டிருந்தோம். அதை மறுத்தும் திரித்தும் தேவையில்லாமல் தமுமுகவினரை சீண்டியுள்ளனர் களவாடிய பத்திரிகையில்!

இதைப் படித்த பொதக்குடி மக்கள் ததஜ தலைமை இவ்வளவு தரங்கெட்டதா? எனக் கொதித்தெழுந்துள்ளனர்.

இதனிடையே நேரிடையாக நமது செய்தியாளரை அனுப்பி பொதக்குடி மக்களை சந்தித்தோம்.

இவர்களா யோக்கியமானவர்கள்?

தமுமுகவினர் கொடியேற்றும் போது 'நாரே தக்பீர், அல்லாஹு அக்பர்' என முழங்கியுள்ளனர். அப்போது கமாலுதீன் குடும்பத்தினர் கைலியை தூக்கிக் காண்பித்துள்ளனர். அங்கு நின்றிருந்த சப்இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி இதனால் அதிர்ச்சி அடைந்துள்ளார். மாவட்ட தமுமுக தலைவர் தாஜுதீன் உரையாற்றிக் கொண்டிருக்கும்போது, கெட்ட வார்த்தைகளால் கமாலுதீன் குடும்பத்தினர் திட்டியுள்ளனர். அப்போதும் காவல்துறையின் வேண்டுகோளை ஏற்று தமுமுகவினர் அமைதியாக இருந்துள்ளனர். ஏதாவது செய்ய வேண்டும் என்றே திரிந்தவர்கள், தமுமுகவினரின் ஆட்டோவைத் தாக்கியுள்ளனர். அதில் காயம் அடைந்த பசீர் என்பவரை உளவுத்துறையைச் சேர்ந்த பாஸ்கர் என்பவர்தான் ஆட்டோவில் ஏற்றி மருத்துவ மனைக்கு அனுப்பி உள்ளார்.

இப்படியாக நடந்த சம்பவங்கள் அனைத்தும் காவல்துறை, உளவுத்துறையினர் முன்பே நடந்திருக்க, இப்படியான சம்பவங்களே நடக்கவில்லை என பொய்ச் செய்தியை களவாடிய பத்திரிகையில் பிரசுரித்திருப்பது அவ்வூர் மக்களை அதிர்ச்சியடைச் செய்துள்ளது.

ஜமாஅத் என்ன சொல்கிறது?

இச்சம்பவம் பற்றி பொதக்குடி ஊர் உறவின்முறை ஜமாஅத் சங்கத்தின் தலைவர் ஏ.கே. அன்வர்தீன், செயலாளர் பி.எம். கமாலுதீன், பி.எம். அமானுல்லா ஆகியோரிடம் கேட்டோம்.

உணர்வில் வந்த செய்தியைக் கண்டு அதிர்ந்து போனோம். கமாலுதீன் பள்ளிவாசலுக்குச் சொந்தமான கடையை ஆக்கிரமிப்பு செய்து கொண்டு பல வருடங்களாக வாடகை பாக்கி வைத்திருக்கிறார். அடுத்து ஜமாஅத்திற்கு எதிராக நடந்து கொண்டு பலமுறை அபராதம் கட்டியுள்ளார்.

பல வழக்குகள் இவர்கள் மீது பதிவு செய்யப்பட்டிருக்கிறது. மாணவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் அரசு மேல்நிலைப் பள்ளியை இழுத்து மூடி பூட்டு போட்டவர் என்ற பெருமைக்கு உரியவர்.

இலவச சட்ட முகாம் நடத்த வந்த பொதுநல வழக்கறிஞர்களை அவமானப்படுத்தி அதன் அமைப்பாளரைத் தாக்கியவர்.

சுதந்திர தின நிகழ்ச்சியில் பெரிய பள்ளி செயலாளர் ஏ.எச். நூர்முகம்மது என்பவரைத் தாக்கி 5,000 ரூபாயை அபராதம் கட்டியவர்.

கூத்தாநல்லூர் அலி சுல்தான் என்ற டாக்டரை அடித்துத் துன்புறுத்திய வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.

பொதக்குடி ஊராட்சிக்கு சொந்தமான குடிநீர் குழாயை (இரண்டு) தான் முன்னாள் தலைவர் என்ற அதிகாரத்தைப் பயன்படுத்தி இன்னமும் மற்றவர்கள் பயன்படுத்த முடியாமல் ஆக்கிரமிப்பு செய்து வருகின்றார். இதுபற்றி பல உயர் அதிகாரிகளுக்கு மனுச் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பணத்தால் துஷ்பிரயோகம் செய்கிறார்.

மற்றபடி செல்வாக்கு மிக்கவர் என்றும், அந்தஸ்து உடையவர் என்றும் குறிப்பிட் டுள்ளார்கள். அப்படி எதுவும் இங்கு இல்லை. மேற்படி காரியத்தை செய்பவர்கள் இவர்களுடைய அமைப்புக்கு வேண்டுமானால் நல்லவராகவும் வல்லவராகவும் தெரியலாம்.

கமாலுதீன் சொத்து?

எஸ்.டி. நஜ்முதீன், ஊராட்சி மன்ற உறுப்பினர் கூறுகையில், தமுமுகவினர் வைத்தி ருக்கும் கொடிமரம் இருக்கும் இடம் பொதுச் சொத்தாகும். கமாலுதீனுக்கு சொந்த மானது அல்ல. இருந்தும் நேரில் ஆய்வு என்று சொல்லி மக்களை திசை திருப்புவது தமுமுகவை அழிப்பதற்கான செயல்பாடு போன்று தெரிகின்றது.

பொதக்குடி தவ்ஹீத் ஜமாஅத் பொருளாளர் எஸ்.ஏ. ஹாஜா மைதீன் கூறுகையில், இங்குள்ள கொடிமரம் பி.ஜே. முன்பு தமுமுக அமைப்பாளராக இருந்தபோது பாக்கரால் ஏற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

கமாலுதீன் மகன் ஆட்டோவை மறைத்து படுத்துக் கொண்டும் கமால் என்பவர் ஆட்டோவில் உள்ளவரைத் தாக்கினார். இதில் காயம் அடைந்த பசீர் என்பவரை சி.ஐ.டி. பாஸ்கர் என்பவர்தான் உடனடியாக ஆட்டோவில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இதுதான் நடந்தது. இதுதான் உண்மை என்றார்.

உணர்வு செய்தி தவறு

பஷீர் என்பவர் விசா மோசடி செய்தவர் என்றும், அவர் மீது வழக்குகள் உள்ளதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுத்ததாகவும் சொல்லப்படும் நிலையில், தற்போது ததஜவுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் கே.எம்.சாதிக் என்பவரை இதுவிஷயமாக சந்தித்தோம். (இவர் 2003லில் தமுமுகவிலிருந்து விலக்கப்பட்டவர்.) அவர் கூறுகையில்,

பஷீர் மீது எந்த நடவடிக்கையும் நாங்கள் எடுக்கவில்லை. அதுமட்டுமல்ல, அப்பத்திரிகைக்கு நான் பேட்டி அளித்தால் முன்னுக்குப் பின்னாக ஏதும் போட்டு விடுவார்கள் என்று எண்ணி, என்னுடைய கருத்தை எழுத்து வடிவில் கொடுத்தேன். இருப்பினும் தமுமுக கிளைச் செயலாளர் பஷீர் என்பவர் மீது நடவடிக்கை எடுத்தேன் என்று குறிப்பிட்டுள்ளதாக வந்த செய்தியைப் படித்து அதிர்ச்சி அடைந்தேன். இச்செய்தி உண்மைக்குப் புறம்பானதாகும் என்றார் சாதிக்.

உண்மைக்குப் புறம்பானது

இதுபற்றி ததஜ மாவட்ட செயற்குழு உறுப்பினர் மற்றும் உள்ளூர் வாசியுமான ஏ. முகம்மது சலீம் என்பவரை சந்தித்து கேட்டதற்கு ஒரு கேவலமான குடும்பத்திற்கு ஆதரவாக, நீதிக்கு எதிராக உணர்விலிருந்து வந்து செய்திகள் சேகரிப்பதைக் கேள்விப்பட்டு உடனடியாக தடுத்து நிறுத்த முயன்றேன். ஆனால் ததஜவில் சிலர் அவர்களுக்கு உறுதுணையாக இருந்துள்ளனர். இதுபற்றி உடனடியாக மாவட்டச் செயலாளர் பகுருதீனை தொடர்பு கொண்டு பேசினேன். அதற்கு அவர், 'தலைமை யிலிருந்து வந்து செய்தி சேகரிப்பதாகவும், நான் எவ்வளவு சொல்லியும் கேட்க வில்லை' என்றும் சொன்னார். அந்த செய்தியில் உள்ள விஷயங்கள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பான செய்திகளாகும் என்றார்.

எஸ்.ஐ. நடராஜனை சந்தித்தோம்... அவர்,

''தமுமுகவினர் பொய்ப் புகார் அளித்திருக்கின்றார்கள் என்றும், அவர்கள் கூறுவது உண்மையாக இருந்தால் அல்லாஹ்விடம் சத்தியம் செய்யட்டும் என்றும் நான் கூறியதாகவும் குறிப்பிட்டுள்ளது சுத்தப் பொய். இதன்மூலம் என் மேல் தமுமுக வின் கோபத்தை உண்டாக்குவது போல் தெரிகிறது. இதுகுறித்து தமுமுகவினர் புகார் கொடுத்திருக்கின்றார்கள். இதை ஆராய்ந்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார். மேலும், ''தமுமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டபோது கூட 'நடவடிக்கை எடுக்கின்றேன்' என்று சொன்னதும் தாஜுதீன் அவர்கள் அவரது தரப்பை உடனடியாக அழைத்துச் சென்றார்கள்'' என்றார்.

ஓ.எஸ். இப்ராஹிம், திருவாரூரிலிருந்து

http://www.tmmkonline.org/tml/others/109757.htm

0 Comments:

Post a Comment

<< Home