Saturday, August 12, 2006

பிஜேயின் சுயரூபம்

இறைவனின் திருப்பெயரால்...

பச்சை சாயம் வெளுத்துப் போச்சு...!
அண்ணன் வேசம் கலைஞ்சு போச்சு...!!

சுனாமி நிதி மோசடி! உணர்வு மூலம் ஒப்புதல்!

ஏகத்துவத்திற்காக இன்னுயிரையும் தியாகம் செய்ய தயாராக இருக்கும் கொள்கைச் சகோதரர்களே அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

சுனாமி பேரழிவு ஏற்பட்ட நேரத்தில் மீட்பு மற்றும் துயர் துடைப்பு பணிகளில் முழுவீச்சில் முஸ்லிம்கள் ஈடுபட்டார்கள். முஸ்லிம் சமுதாயத்தின் பல்வேறு அமைப்புகளும் வீரியமாக சேவையாற்றினர். ஜாக், ஜமாத்தே இஸ்லாமி, மனித நீதிப்பாசறை, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், ஜம்இய்யத்து உலமா, தமுமுக, பரங்கிப் பேட்டை ஜமாத் மஜ்லீஸ் மற்றும் ஏராளமான உள்ளூர் ஜமாத்துக்களும் சிறப்பாக பணியாற்றினர். மேற்கண்ட எல்லா அமைப்புகளும் அவரவர் சக்திக்கேற்ப நிதிகளை சேகரித்தார்கள்.

அந்த நேரத்தில் விண் டிவியின் மூலம் அனைத்தையும் தாங்களே செய்வது போன்ற கருத்தை அண்ணன் பி.ஜே உருவாக்கினார். அவரளவுக்கு யாரும் வசூலில் ஈடுபட வில்லை. அகில இந்திய அமைப்புகளான ஜம்இய்யத்து உலமாவும், ஜமாத்தே இஸ்லாமியும் தலா 1 கோடிக்கு மேல் வசூல் செய்தனர்.

1 கோடி ரூபாய் மதிப்புள்ள உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை பொதுமக்களிடம் பெற்று விநியோகம் செய்த தமுமுக 68 லட்ச ரூபாய் நிதியையும் சேகரித்தது.

இந்த சூழ்நிலையில் 78 லட்ச ரூபாய்க்கு மேல் நிதி வசூல் செய்ததாக அண்ணன் பி.ஜே கூறிக் கொண்டார். உணர்விலும் அப்படி சில கணக்குகளை வெளியிட்டார். தமுமுகவை விட நாங்கள் தான் அதிகமாக நிதி சேரித்தோம் என்று பெருமை பேசிக் கொண்டார். இதன் மூலம் தாங்கள்தான் தமிழ்நாட்டிலேயே பெரிய அமைப்பு என்று சொல்லிக் கொள்ளவும் தவறவில்லை.

இதைப் பலரும நம்பினர். அதிகமானோர் குழம்பினர். சிறிய அமைப்பு எப்படி இவ்வளவு நிதியை திரட்டியது என்று ஆச்சரியப்பட்டனர்.

விண் டிவி மூலம் விளம்பரம் செய்ததால் ஒருவேளை அதிகமாக நிதி சேர்ந்ததில் ஆச்சரியமில்லை என்று பலரும் பேசிக் கொண்டனர். ஒவ்வொரு வாரமும் மக்கள் உரிமை மற்றும் உணர்வு பத்திரிக்கைகளை படித்தவர்கள் வசூலில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் முந்துவதாக நம்பினர்.

இப்போது பூனைக்குட்டி வெளிவந்து விட்டது.

உணர்வு (10:8) அக்டோபர் 28 - நவம்பர் 3, 2005 இதழில் பக்கம் 13-ல் கேள்வி பதில் பகுதியைப் படியுங்கள்.

கேள்வி: இரண்டு மாதங்களுக்கு முன்பு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சுனாமி நிவாரணத் தொகையாக ரூபாய் 2 ஆயிரம் தருவதாக கூறி ரேஷன் கார்டு நகல் மற்றும் கையொப்பம் பெற்றுச் சென்றனர். இதுவரை எந்தப் பணமும் வழங்கப்படவில்லை. ஆனால், நாகப்பட்டிணம் உள்ளூர் தொலைக்காட்சியில் பணம் கொடுத்ததாகக் கூறி செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. இதனை தெளிவுபடுத்தவும். (ஏ.பகுருதீன், நாகப்பட்டிணம்)

பதில்: (முக்கியப் பகுதிகள் மட்டும்)
'...அப்படி எந்த நபரின் பெயரையாவது நாம் குறிப்பிட்டிருந்தால் எங்களுக்கு உரிமையுடன் சுட்டிக்காட்டினால் அதை விசாரித்து
தக்க நடவடிக்கை மேற்கொள்வோம்.

சுனாமி நிதியை பொருத்தவரை அதை சுனாமியால் பாதிக்கப் பட்டவர்களுக்கு உதவும் வகையில் தவிர நாம் செலவு செய்யவில்லை. செலவு கணக்குகளை நாம் உணர்வில் வெளியிடாததால் இதுபோன்ற கேள்விகள் எழுகின்றன.

சுனாமிக்காக நிதி திரட்டிய சில அன்பர்கள் அறிவித்த சில தொகைகள் இன்னும் வந்த சேரவில்லை. அவர்கள் வாக்களித்தன் அடிப்படையில் உணர்வில் பட்டியலை வெளியிட்டோம். உணர்வில் வெளியான பட்டியலில் சிலரது பெயர்களும் தொகைகளும் விடுபட்டுள்ளன.

இதனால் உணர்வில் வெளியான பட்டியல், நமக்கு வந்து சேர்ந்த
தொகை ஆகியவற்றை பரிசீலித்து ஆடிட் செய்து கொண்டிருக்கிறோம். விரைவில் முழுமையான கணக்கை வெளியிடுவோம். தவ்ஹீத் ஜமாத்தைப் பொறுத்தவரை சுனாமி உள்ளிட்ட அனைத்து
கணக்குகளிலும் தனது நம்பகத்தன்மையை சந்தேகமற நிரூபிக்கும் என்பதை சொல்லிக் கொள்கிறோம்'.

கொள்கைச் சகோதரர்களே... இந்த பதில் மூலம் அண்ணன் கொடுக்கும் வாக்குமூலத்தில் இருந்து நீங்கள் இயல்பாகவே ஏராளமான அர்த்தங்களை புரிந்து கொள்ளலாம்.

1. வாசகரின் கேள்வியின் மூலம் நிவாரண நிதி கொடுக்காத நபர்களுக்கு நிதி கொடுத்ததாக உள்ளூர் டிவியில் தவ்ஹீத் ஜமாத் செய்தி வெளியிட்டுள்ளது.

2. நாகூரில் நிதி வழங்கும் விஷயத்தில் மோசடி நடந்துள்ளது.

3. சுனாமி கணக்கை நேர்மையாக, உண்மையின் அடிப்படையில் வெளியிடும் நிலையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் இல்லை.

உணர்வில் '...சுனாமிக்காக நிதி திரட்டிய சில அன்பர்கள் அறிவித்த சில தொகைகள் இன்னும் வந்த சேரவில்லை. அவர்கள் வாக்களித்தன் அடிப்படையில் உணர்வில் பட்டியலை வெளியிட்டோம்' என்று கூறியிருப்பதன் மூலம்

4. உணர்வில் வெளியான பெயர் மற்றும் நிதி பட்டியல் போலியானது. பல பெயர்கள் கற்பனையானவை. தொகையும் அப்படியே.

5. நிதி தருவதாக பலர் சொன்னதை நம்பி அவசரப்பட்டு இஷ்டத்திற்கு பல பெயர்களையும் அதற்கேற்ப தொகைகளையும் எழுதி உணர்வில் கணக்கு காட்டியுள்ளார்கள்.

6. அப்படி சொன்ன தொகை வசூலாகவில்லை. இனி வரப்போவதுமில்லை.

7. 'பரிசீலித்து ஆடிட் செய்து கொண்டிருக்கிறோம்' என்ற வார்த்தையை பயன்படுத்தி இருப்பதை பார்க்கும் பொழுது மக்களுக்கும் - அரசுக்கும் கணக்குக் காட்ட வேண்டும் என்பதற்காக போலியான கணக்குகளை தயார் செய்து கொண்டிருக்கிறார்கள்.

அண்ணன் கேட்டால் அள்ளிக் கொடுக்கும் கொள்கைச் சகோதரர்களே...

உணர்வில் அண்ணனே அவரை அறியாமல் உண்மைகளை கக்கி உள்ளதைக் கண்டு பதறுகிறீர்களா?

இப்பொழுது ஒரு கேள்வி எழலாம். ஏன் இப்படி அண்ணன் பி.ஜே செய்ய வேண்டும்?

காரணங்கள் இருக்கின்றன.

1. தான் கேட்டால் நிதி தருவதற்கு பெரும் கூட்டம் இன்னும் தன்னிடம் இருக்கிறது என்பதை நிரூபிப்பதற்காகவும்,

2. தன்னை நம்புபவர்களுக்கு மத்தியில் சுனாமி நிதியை பிரம்மாண்டமாக காட்டி தன் மீதான அவர்களின் நம்பிக்கையை அதிகரிப்பதற்காகவும்,

3. தமுமுகவை விட நாம் தான் பலமாக இருக்கிறோம் என்ற மாயையை காட்டுவதற்காகவும்,

4. சக தவ்ஹீத் அமைப்புகளை மன ரீதியாக பலவீனமடையச் செய்ய வேண்டும் என்பதற்காகவும்,

அண்ணன் பி.ஜே அவர்கள் இஸ்லாம் கூறும் நேர்மையான வழிமுறைகளுக்கு மாறாக பொய் கணக்குகளைக் காட்டியிருக்கிறார்.

அவசரப்பட்டு சிக்கிக் கொண்ட அண்ணன் பி.ஜே அவர்கள் தான் மாட்டிக் கொள்ளப் போகிறோம் என்பதை முன்கூட்டியே உணர்ந்து கொண்டார்.

அதனால் தனக்கே உரிய நரித்தந்திரங்களை அவிழ்த்து விட்டிருக்கிறார். கடந்த ஆறு மாத காலமாக உணர்விலும், மொட்டை மெயில்கள் வாயிலாகவும் பிற அமைப்புகள் வசூல் செய்த சுனாமி நிதியைப் பற்றி சந்தேகங்களை கிளப்பி விட்டார்.

இதன் மூலம் தான் நேர்மையாக இருப்பதைப் போலவும் பிறர் சுனாமி நிதியை அபகரித்து விட்டதைப் போலவும் (போன்ற) தோற்றத்தை தொடர்ந்து ஏற்படுத்தி வந்தார். தனது சிஷ்யர் பரக்கத் அலி மற்றும் நாகர்கோவில் நடிகர் மூலமும் ஆதம் மற்றும் தீன் முகம்மது என்ற பெயரில் மற்ற சமுதாய அமைப்புகள் சுனாமி நிதியை மோசடி செய்து விட்டதாக ஈ மெயில் மூலம் வதந்திகளைப் பரப்பினார்.

தொடர்ந்து பிற அமைப்புகள் மீது சுனாமி அவதூறு பரப்பினால் தான்.... தான் மாட்டிக் கொள்ளும் பொழுது மக்கள் மத்தியில் பெரிதாக எடுபடாது என்பதே அவருடைய திட்டம்.

அப்படியே மாட்டிக் கொண்டாலும் மற்ற அமைப்புகள் மீது பழி விழுந்ததால் எங்கள் மீதும் அவதூறு பரப்புகிறார்கள் என்று தன் வாதத்திறமையின் மூலம் திருட்டை திசை திருப்பி விடலாம் என திட்டமிட்டிருக்கிறார்.

தெருவில் பிக் பாக்கெட் திருட்டில் ஈடுபட்ட திருடன் தப்பி ஓடும்போது யாரையோ பார்த்து திருடன் ஓடுகிறான் திருடன் ஓடுகிறான் என்று கத்திக் கொண்டே அவன் தப்பி ஓடி விடுவான். இதனடிப்படையில் தான் அண்ணன் பி.ஜே அவர்கள் ஆறு மாதமாக செயல்பட்டு வந்திருக்கிறார். இதிலிருந்து அண்ணன் பி.ஜே அவர்களின் அபாயகரமான 'மூளையை' புரிந்து கொள்ள முடிகிறது.

ஏற்கனவே சுனாமி விநியோகம் மற்றும் செலவுகளில் நாகூர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்திற்குள் சண்டை நடந்து நாகை மற்றும் நாகூர் வட்டாரமே நாறியது. பலருக்கும் நிதி கொடுத்ததாக சொல்லி அது கொடுக்கப்பட வில்லை. அதன் விளைவாகவே நாகபட்டிணத்திலிருந்து ஏ.பகுருதீன் என்பவர் உணர்வில் எழுப்பிய கேள்விக்கு பதில் சொல்கிறேன் என்ற பெயரில் அண்ணன் பி.ஜே அவரையும் அறியாமல் உண்மையைக் கக்கிவிட்டார். இல்லை! இல்லை!! அந்த ரப்புல் ஆலமீனாம் வல்ல அல்லாஹ் அவரை அம்பலப்படுத்தியுள்ளான். எல்லா சமுதாய அமைப்புகளும் சுனாமி நிதி சேகரிக்க தனி கணக்கை வங்கிகளில் தொடங்கினார்கள். தமுமுக சார்பில் 'சுனாமி ரிலீஃப் ஃபண்ட்' என்றும், ஜமாத்தே இஸ்லாமி சார்பில் 'ரிலீஃப் ஃபண்ட்' என்றும் பகிரங்கமாக வசூலித்தார்கள்.

அண்ணன் பி.ஜே அவர்கள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் நிதிப்பிரிவான 'தமிழ்நாடு ஜகாத்' என்ற தனது அமைப்பின் பெயரில் மட்டுமே நிதியை சேகரித்தார்கள். சுனாமிக்கு தனி கணக்கை தொடங்கவில்லை. எனவே, நிதியளித்தவர்களின் சந்தேகம் வலுக்கிறது.

இதில் எவ்வளவு பணம் தனி நபருக்கு சென்றதோ? எவ்வளவு பணம் நடிகர்களின் பேட்டியை ஒளிபரப்பும் விண் டிவிக்கு செலவிடப்பட்டதோ? யாருக்கு தெரியும்?

'உணர்வில் வெளியான பட்டியலில் சிலரது பெயர்களும் தொகைகளும் விடுபட்டுள்ளன' என்ற வரியும் 'சுட்டிக்காட்டினால் தக்க நடவடிக்கை எடுப்போம்' என்ற தற்காப்பான சமாதான வரிகளும் இதையெல்லாம் உறுதிப்படுத்துகின்றன.

தவ்ஹீது சொந்தங்களே! அடுத்தவர்களை அவமானப்படுத்துவது, தவ்ஹீதுவாதிகளைப் பிரிப்பது, சக தவ்ஹீத் பேச்சாளர்களை அழிப்பது, தன் மோசடிகளை கண்டு கொண்டவர்களை தவ்ஹீது வட்டாரத்திலிருந்து தனிமைப்படுத்த துடிப்பது என அண்ணன் பி.ஜே இரண்டு முகங்களோடு அயராது உழைத்துக் கொண்டிருக்கிறார். நீங்கள் அனுப்பும் நிதியை தவ்ஹீதை வளர்க்க பயன்படுத்தாமல் சக தவ்ஹீது அமைப்புகளை அழிக்கவே பெரிதும் பயன்படுத்துகிறார்.

அவர் தைரியமிருந்தால் 1984-முதல் தவ்ஹீது சொந்தங்களிடம் வசூல் செய்த நிதியையும் அது செலவு செய்த விதத்தையும் தவ்ஹீது அமைப்புகளுக்கு மத்தியில் 'வெள்ளை அறிக்கையாக' வெளியிடட்டும். அவர் வெளியிட மாட்டார். தன்னிடமிருந்து பிரிந்த தவ்ஹீது பிரமுகர்கள் அதையெல்லாம் தின்று விட்டார்கள் என்று வாய் கூசாமல் பழி போடுவார்.

அவர் மறுமைக்காக இறையச்சத்தோடு பணியாற்றிய காலம் மாறிப் போய் விட்டது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் என்ற அரசியல் கட்சியின் தலைவர் ஆனது முதல் தன் பலத்தைக் காட்டுவதற்காக அரசியல்வாதியைவிட மோசமாக அவர் செயல்படுவது உண்மை தவ்ஹீதுவாதிகளை வேதனையில் ஆழ்த்துகிறது. அவரது பொறாமைத்தனமான செயல்பாடுகளின் அடுத்த அசிங்கமாக இப்பொழுது வெளிவந்திருப்பது தான் சுனாமி நிதி மோசடி.

நமக்கு தலைவர்களோ, அமைப்புகளோ முக்கியமில்லை. வழிகாட்டும் குர்ஆனும், நெறிகாட்டும் ஹதீஸ்களும் இருக்கின்றன. இனி அண்ணன் பி.ஜேயின் கருத்துகளை ஆய்வு செய்த பிறகே ஏற்றுக் கொள்ளும் மனநிலைக்கு தயாராகுங்கள்.

'அழைப்புப் பணி'யை மட்டுமே செய்யும் தவ்ஹீது அமைப்புகளுக்கு மட்டுமே நிதி உதவி செய்வோம். யாருக்கு நிதி கொடுத்தாலும் பகிரங்கமாக கணக்குக் கேட்போம்.

இவண்: நபிவழி தவ்ஹீத், தமிழ்நாடு - புதுவை, வெளியீடு - 1
வெளியீட்டகம்: மதுரை,
மின்னஞ்சல்:
nabivazhi_tawheed@hotmail.com

(குறிப்பு: பி.ஜேயின் நிம்மதியான தூக்கத்தை கலைத்த நோட்டீஸ் இது தான், தொடர்ந்து அவருக்கு தூக்கம் பிடிக்காமல் போனதும் இந்த நோட்டீஸ் வெளியான பிறகு தான். அதை முத்துப்பேட்டை பிளாக்கில் பிரசுரித்து பொய்யர்களின் முகத்திரையை கிழிக்கிறோம். ஆ-ர்)

0 Comments:

Post a Comment

<< Home