Friday, August 11, 2006

அறியாமையில் ததஜவினர்

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

ததஜவினர் தமுமுகவின் மீது சுமத்தும் குற்றச்சாட்டுகளில் ஒன்று தான், ததஜவின் டான் டிவி நேரத்தை தமுமுகவினர் அதிக விலை கொடுத்து எடுத்துக் கொண்டார்கள் என்பது.

'ஒரு குறிப்பிட்ட நேரத்தை டிவி நிகழ்ச்சிக்காக ஒப்பந்தம் செய்து விட்டால் ஒப்பந்தம் முடியும் வரை எவரும் வாங்க முடியாது' என்ற அறிவு இல்லாமல் ததஜ தலைவருக்கு பின்பாட்டுப்பாட ஏராளமான ஆமாம்ஞ்சாமிகள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

தமுமுக நிகழ்ச்சி நடத்துவதற்காக டான் டிவிக்காரர்களை அணுகிய போது அந்தக் குறிப்பிட்ட நேரம் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அந்த நேரத்தை அப்படியே தமுமுக ஒப்பந்தம் செய்து கொண்டது. ஏன் அந்த நேரம் காலியாக இருந்தது? என்பது ததஜவினருக்கும் டான் டிவிக்காரர்களுக்குமே தெரிந்த ரகசியம். அதில் நாம் நுழைய விரும்ப வில்லை.

ததஜவின் நேரத்தை தமுமுக அதிக விலை கொடுத்து வாங்கிக் கொண்டார்கள் என்று லப்போ லப்போ என்று அடித்துக் கொள்பவர்கள் தமுமுகவினரிடம் கேட்ட அதே கேள்வியை டிவிக்காரர்களிடமே கேட்க வேண்டியது தானே!

தமுமுகவினர் அந்த நேரத்தை அதிக விலை கொடுத்து வாங்க வில்லை என்பதை உறுதியாக சொன்னார்கள். மேலும் உங்களுக்கு தேவைப்பட்டால் நாங்கள் டான் டிவியினர் கொடுத்த ரசீதை காட்டத் தயார் என்றார்கள். அனாவசியமாக அவதூறு பரப்ப வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டதோடு, ததஜவினர் டான் டிவிக்கு வழங்கிய தொகையின் ரசீதை காட்டுங்கள் என்றும் கேட்டுக் கொண்டார்கள். இது வரை அந்த ரசீது வந்தபாடில்லை. அப்படி இருக்கும் போது ததஜவினர் இது சம்பந்தமாக பேசுவதற்கும் எழுதுவதற்கும் எந்தவித அருகதையும் இல்லை.

இருந்தாலும் தமுமுகவினர் டான் டிவியின் நிர்வாகத்தை நேரடியாக கேட்டார்கள். இந்த விஷயத்திற்கு முற்றுப் புள்ளி வைத்தார்கள். இருவருக்கும் கொடுக்கப்பட்ட விலையில் வித்தியாசம் இருப்பதை டான் டிவியினர் ஒத்துக் கொண்டார்கள். அதற்கான காரணத்தையும் சொல்லியிருக்கிறார்கள்.

ஒரு டிவிக்காரர்கள் மற்றொரு டிவியில் நிகழ்ச்சிக்காக ஒப்பந்தம் செய்தால் ரேட் வேறு. மற்றவர்களுக்கு ரேட் வேறு. இதில் ராத்திரி ரௌஸ் புகழ் விண் டிவியின் முன்னால் சிஈஓ மற்றும் பிஜேயின் விண் டிவி பினாமி பாக்கர் மூலமாக ஒப்பந்தம் செய்யப்பட்டதால் அந்த கண்செசன் ரேட் கிடைத்திருக்கிறது.

விண்டிவி கைமாறிய பிறகு மீண்டும் ஒப்பந்தம் செய்யப்பட்டால் தமுமுக கொடுக்கும் அதே தொகையைத் தான் ததஜவும் கொடுக்க வேண்டியது வரும், அதாவது அதிகமாக கொடுக்க வேண்டியது வரும், அல்லது தமுமுக கொடுக்கும் ரேட் குறைக்கப்படும். இந்த இரண்டில் ஏதாவது ஒன்று நடக்கும். தமுமுகவினருக்கு இவ்விஷயத்தில் பித்னாவின் மூலம் பெரும் உதவி புரிந்த ததஜவினருக்கு மிக்க நன்றி.

'ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு' என்பது பழமொழி. இதற்கு ததஜவினர் எந்த அளவுக்கு பொருந்திப் போகிறார்கள் என்பதற்கு கீழ் காணும் செய்தி நல்ல உதாரணமாகும்.

ததஜவினரின் திருட்டுத் தொழிலில் அவர்களிடம் அகப்பட்டுக் கொண்டது தான் 'உணர்வு' வார இதழ். அதன் 10:48 ல் ஒரு கிறுக்குத்தனமான செய்தி வெளியாகி இருக்கிறது.

சிறுபான்மை கமிஷனுக்கும் பிற்படுத்தப்பட்டோர் கமிஷனுக்கும் வித்தியாசம் தெரியாத அறிவிலிகள் தான் பத்திரிக்கை நடத்துகிறார்களாம்.

இடஒதுக்கீடு விஷயத்தில் ஜெயலலிதா பாராமுகமாக இருந்தாராம், ததஜவின் நெருக்கடி காரணமாக, இடஒதுக்கீடு வழங்குவதற்காக, முதல்கட்ட நடவடிக்கையாக ஒரு கமிஷனை அமைத்தாராம்.

கேப்பையில் நெய் வழிகிறது என்று பிஜே சொல்கிறார், நம்மையெல்லாம கேணயன்களாக நினைத்துக் கொண்டு. இவருக்கு எவ்வளவு துணிச்சல் இருக்க வேண்டும்? இவ்வளவு பெரிய பொய்யைச் சொல்கிறோமே! தன்னைப் பற்றி முஸ்லிம்கள் என்ன நினைப்பார்கள் என்பதெல்லாம் அவரைப் பொறுத்தவரை பெரிய விஷயமே அல்ல.

இந்த பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை ஜெயலலிதா முதன்முதலாக அமைக்கிறார் என்றால் பிஜே சொல்வதை நம்ப முடியும், இருந்தாலும் 5 சதவிகிதம் நம்பிக்கை மட்டுமே வைக்கலாம். ஆனால் இந்த ஆணையம் 1993ல் இருந்து செயல்பட்டு வருகிறது என்பது பிஜேக்கு தெரியாதா? அல்லது தெரியாதது போல் நடிக்கிறாரா? அந்த ஆணையத்தை தான் ஜெயலலிதா புதுப்பிக்கிறார்.

இந்த பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் ஜெயலலிதாவின் ஐந்தாண்டு கால ஆட்சியில் உயிரோடு தானே இருந்தது, அந்த காலங்களில் இட ஒதுக்கீட்டிற்காக துரும்பைக்கூட நகர்த்தாத ஜெயலலிதாவை ஆதரிப்பதற்கு வெட்கமாக இல்லை? அதுவும் பொய்யான வாக்குறுதியை வாழ்வுரிமை மாநாட்டில் முஸ்லிம்களுக்கு தந்து விட்டு, அவர் ஆட்சிக்கு வந்த பிறகு தானே, இது நடந்தது. இந்த முஸ்லிம் மூதறிஞருக்கு பைத்தியம் பிடித்து விட்டதா? என்ன?

அந்த காலகட்டத்தில் தானே ஆந்திராவில் முஸ்லிம்களுக்கு இடஒடுக்கீடு தந்தது தொடர்பாக கடுமையான கண்டன அறிக்கையை வெளியிட்டார் ஜெயலலிதா. தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை புதுப்பித்ததை வாய்கூசாமல் இடஒதுக்கீட்டிற்கான முதற்கட்ட நடவடிக்கை என்று இன்னும் எவ்வாறு எழுத மனம் வருகிறதோ அல்லாஹ்வுக்கே வெளிச்சம்.

தேர்தல் நிலைபாடு தேர்தலோடு போச்சு என்று ததஜ அறிவித்த பிறகும் அது தொடர்பாக எதுவும் எழுதாமல் இருப்பது ததஜவில் ஒட்டிக் கொண்டிருக்கும் ததஜ அண்டு கம்பெனினருக்கு நன்மை பயக்கும், இல்லையேல் கம்பெனியை இழுத்து மூட வேண்டியது வரும் என்பதை எச்சரிக்கிறோம்.

ஆணையம் தொடர்பான மேலும் விபரங்கள் தமுமுகவின் அதிகாரபூர்வ இணையத்தளத்தில் பார்த்துக் கொள்ளுங்கள்:

http://www.tmmkonline.org/tml/others/109739.htm

இப்னு ஃபாத்திமா 11.08.2006

0 Comments:

Post a Comment

<< Home