ததஜவின் அடுத்தகட்ட வசூல் வேட்டை
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
அன்புச் சகோதரர்களே! அன்பின் இஸ்லாமிய சகோதரர்களே!! விழிப்புணர்வுடன் சிந்திக்க வேண்டிய நேரம் இது. ஏனெனில், ஆரம்பித்து விட்டது அடுத்த கட்ட ததஜ வசூல் வேட்டை.
ஆம் முன்பு ஒருமுறை, அண்ணனின் முன்னால் சகா, அபூஅப்துல்லாஹ் அவர்கள் குறிப்பிட்டது போல், தவ்ஹீத் வியாபாரி பிஜே மீண்டும் ஒரு வசூல் வேட்டையில் குதித்துள்ளார்.
இதற்கு முன் வசூலிக்கப்பட்ட எந்த ஒரு பொது நிதியிலும் முறையான கணக்கை சமர்ப்பிக்காதவர், மேலப்பாளையம் மஸ்ஜித் ரஹ்மான் பள்ளியில் கள்ள கணக்கு எழுத வைத்தவர், ஒவ்வொரு ரமளானிலும் தமுமுக சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட ரமளான் நிகழ்ச்சிகளில் உரையாற்ற பெருந்தொகை பெற்றுக் கொண்டு, தான் இலவசமாகவே உரை நிகழ்த்துவதாக பொய்யுரைத்தவர், இப்பொழுது கூட சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக என்று சொல்லி வசூலித்தபின், தான் ஆசிரியராக இருக்கும் களவாடப்பட்ட உணர்வு பத்திரிக்கைகாக ரூபாய் 2 இலட்சத்தை சுருட்டிக் கொண்டவர்,
இத்தனை சிறப்புகளை பெற்ற சீமான் மீண்டும் ரமளான் நிகழ்ச்சி என்ற பெயரில் வசூல் வேட்டையாட வருகிறார். உஷார்.
இதுவரை வசூல் செய்து தன்னை வளப்படுத்திக் கொண்டது ஒரு புறம் இருக்க, இவர் வசூலித்து நடத்திய நிகழ்ச்சிகளினால் சமுதாயத்திற்கு எத்தனை இழுக்குகள், எத்தனை இழப்புகள்.
இஸ்லாமிய சமுதாய சகோதரர்களே தங்களின் மேலான கவனத்திற்காக சில தகவல்களை பட்டியலிடுகிறேன். தவ்ஹீத் வேடதாரிகள் கூட சிந்திக்க கடமைப்பட்டுள்ள சில தகவல்கள்.
தவ்ஹீதின் பெயரால் உண்மை முஸ்லிம்களின் பொருளாதாரத்தை உறிஞ்சி கொழுத்த தவ்ஹீத் வியாபாரி பிஜே, தமுமுகவிலிருந்து விலகி ஓடியதன் பின் தொடராக தொலைகாட்சி நிகழ்ச்சிகளை வழங்கி வருகிறார்.
இந்நிகழ்ச்சிகளில் தரமாக உள்ளதாக கருதும் அளவிற்கு உள்ளவை, அவர் தமுமுகவில் இருந்த பொழுது முஸ்லிம் டிரஸ்ட் சென்னை என்ற முகவரியோடு ஒளிபரப்பக்கூடிய தமுமுக தலைமையகத்தில் நடைபெற்றவை மட்டும் தான்.
இவற்றை தவிர்த்து வெளியாகும் நிகழ்ச்சிகளின் தரம், சக முஸ்லிம்களை தரக்குறைவாக விமரிசிப்பதாகவும், பிற முஸ்லிம் அமைப்புகளை சாடுவதாகவுமே இருந்து வருகிறது.
தான் துவங்கி, ஆரம்பத்திலிருந்த பொம்மை தலைவரை, தலைகுப்புற தள்ளி விட்டுவிட்டு தானே தலைவராகிக் கொண்ட ததஜவைத் தவிர, மற்ற அமைப்புகள் அனைத்தையும் வழி தவறிய அமைப்பினர் என தொலைக்காட்சிகளில் முழங்கியது.
தன்னோடு இருந்த மவ்லவி ஹாமித் பக்ரி, மவ்லவி சம்சுதீன் காஸிமி போன்றவர்களை தரக்குறைவாக விமரிசித்தது.
இஸ்லாமிய கடமைகளில் ஒன்றான ஜக்காத் விஷயத்தில் தனது முரண்பட்ட கருத்தை உலகெங்கும் உலவ விட்டது.
இஸ்லாமிய வரலாற்றில் நீங்கா இடம் பெற்ற, சுவனத்தைக் கொண்டு நன்மாராயம் சொல்லப்பட்ட உத்தம ஸஹாபாக்களை கிரிமினல் என்றும், ரவுடி என்றும் மனம் போன போக்கில் விமர்சித்தது.
செயல்பாட்டுக்கு வராமல், ஒப்புக்காக அமைக்கப்பட்ட ஆணையத்தை, முஸ்லிம்களின் துயர்துடைக்க வந்த அரசு ஆணை போல் பில்ட்அப் செய்து முஸ்லிம்களிடையே பொய்யுரைத்தது.
தேர்தலில் அம்மா அரசு தோல்வி அடைந்ததும், அரசியலில் முஸ்லிம்கள் தாக்கத்தை ஏற்படுத்தும் அளவிற்கு வலுவானவர்களில்லை என பேட்டியளித்து சமுதாய அந்தஸ்தை தரைமட்டமாக்கியது.
கம்ப ரசத்திற்கு நிகராக இஸ்லாமிய மார்க்கத்தை, விவாதத்தில் வெல்ல வேண்டுமென்பதற்காக ஆபாசமாக விமர்சித்தது.
அன்பான சகோதரர்களே! தவ்ஹீத் வியாபாரி பிஜே சமீபகாலமாக இஸ்லாத்திற்கு எதிராக, இஸ்லாம் வலியுறுத்தும் ஒற்றுமைக்கு எதிராக இறங்கியுள்ள செயல்பாடுகளில் ஒரு சிலவற்றைத்தான் குறிப்பிட்டுள்ளோம். நீண்ட பட்டியலின் சுருக்கமே நமக்கு கவலையளிக்கக் கூடியதாக உள்ளது.
நமது பொருளாதாரம் தீய வழிகளில் செலவழிக்கப்படக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக உள்ள தவ்ஹீத் சகோதரர்களே! நமது நிதியுதவி இப்படிப்பட்ட இழிவான செயல்களுக்கு பயன்படுத்தப்பட காரணமாகி விடக்கூடாது. எனவே இனியும் தவ்ஹீதின் பெயரால் ஏமாந்து விடாதீர்கள். கவனம். கவனம்...
ராவுத்தர் 14.08.2006
0 Comments:
Post a Comment
<< Home