முஸ்லிம் நிலத்தில் அத்துமீறும் எஸ்.வி.சேகர்
சென்னை மயிலாப்பூர் அப்பு முதலி தெருவில் சென்ற 28-08-2006 அன்று சார்சமன் பள்ளிவாசலுக்கு சொந்தமான நிலம் உள்ளது. அதை ஆக்கிரமித்து குடிசை போட்டிருந்தவர்களை அகற்ற நீதிமன்ற உத்தரவுடன் காவல்துறையின் உரிய பாதுகாப்புடன் சென்று ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொண்டிருந்தனர். அப்போது மயிலை சட்டமன்ற உறுப்பினரும், நாடக நடிகருமான எஸ்.வி. சேகர் பகுதி அதிமுக பிரமுகர்கள் புடைசூழ வந்து, ஆக்கிரமிப்புகளை அகற்றவிடாமல் பேச்சுவார்த்தை என்ற பெயரில் காலதாமதம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டார். இந்த வேலையில் சமூக விரோதிகள் குடிசைகளுக்கு தீயிட்டு, தீ விபத்தை ஜமாஅத்தினர் மீது திசை திருப்பும் முயற்சியில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்தில் இருந்த பெண் எஸ்.ஐ. தர்மா மற்றும் பெண் காவலர்கள் சமூக விரோதிகளை பிடிக்க முயற்சித்தனர். ஆயினும் அவர்கள் தப்பிச் சென்றனர். முஸ்லிம்களுக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்பாளர்களுடன் சேர்ந்து கொண்டு பிரச்சனையை திசைதிருப்பும் முயற்சியில் ஈடுபட்ட எஸ்.வி. சேகரை கண்டித்து ஜமாஅத்தினர் வன்மையாக கண்டன கோசங்களை எழுப்பிய பின்னரே எஸ்.வி. சேகர் சம்பவ இடத்தை விட்டு வெளியேறினார், அதைத்தொடர்ந்து ஆக்கிரமிப்பை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்றது.
தமுமுகவின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலிருந்து 06.09.2006
http://www.tmmkonline.org/tml/others/109708.htm
0 Comments:
Post a Comment
<< Home