Sunday, August 20, 2006

பிஜே அடித்த அந்தர் பல்டி

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை புதுப்பிப்பது என்பது ஒவ்வொரு அரசாங்கமும் செய்து வருகின்ற ரொட்டீன் வேலை. அதனால் இதுவரை எந்த பயனையும் முஸ்லிம் சமுதாயம் கண்டதில்லை.

தமுமுகவின் கோரிக்கைகளுக்கு செவிமடுத்த திமுகவிற்கு ஆதரவு அளிக்க தமுமுக முகம் நோக்கி இருக்கும் நேரத்தில், தமுமுகவிற்கு எதிராகவே நடக்க வேண்டும் என்று ஏற்கனவே தீர்மானித்துக் கொண்ட பிஜே, சங்பரிவாரக்கும்பலின் முடிசூடா ராணி ஜெயலலிதாவிற்கு ஆணையத்தை காரணம் காட்டி ஆதரவு வழங்க முடிவு செய்தார்.

தேர்தல் நிலைபாடு என்பது அப்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டது என்று அவரது தவறான நிலைபாட்டுக்கு சப்பைக்கட்டு கட்டினார்.

தனிமெஜாரிட்டி சீட்டுக்களைப் பெற்று ஆட்சிப் பொறுப்பில் வீற்றிருந்த ஜெயலலிதாவை எதிர்கட்சி ஸ்தானத்திற்கு இறக்கிய பெருமை பிஜேக்கு உண்டு. இதை மறைப்பதற்காகவும், தான் பெற்றுக் கொண்ட கூலிக்கு வேலை செய்து விட்டதை பறைசாட்டுவதற்காகவும் 'பலமான எதிர்கட்சி, பலவீனமான ஆளும் கட்சி' என்று பிஜே துதி பாடிக்கொண்டு திரிகிறார்.

தான் பெற்றுக் கொண்ட கூலிக்காக மற்றொரு அபாண்டமான அவதூறையும் போட்டு வைத்துள்ளார். திமுக ஆட்சியைப் பிடித்தது முஸ்லிம்களால் இல்லை என்பது தான் அவரது சமுதாயத்திற்கு செய்த சாதனை(?)களில் ஒன்றாகும்.

ஏதோ ஒரு காரணத்திற்காக ஏற்கனவே முடிவு எடுத்துக் கொண்டு சப்பைக்கட்டு கட்டுவதற்காக அடுக்கடுக்கான ஆதாரங்களை துணைக்கு அழைத்துக் கொண்டு தனது ஆதரவாளர்களிடம் நியாயப்படுத்தி பேசுவார். அவரது பேச்சில் மயங்கிய எம்மைப் போன்றவர்கள் அவரின் முன்னுக்குப் பின் முரணானவைகளைக்கூட சரி கண்டு விடுகிறார்கள்.

கோபாலபுரத்தில் கருணாநிதியின் இல்லத்தில் அவரைச் சந்திக்க சென்ற பிஜே, உயிரினும் மேலான தவ்ஹீதை பின்னுக்குத் தள்ளி வைத்து விட்டு, கருணாநிதியைக் கண்டவுடன் எழுந்து நின்று, இருகரம் கூப்பி, வணக்கம் என்று பிஜே சொன்னார் என்று நாம் ஏற்கனவே எழுதியிருந்தோம்.

இப்போது நீங்கள் ஒரு விஷயத்தை நன்றாக விளங்கிக் கொள்ளலாம். அதாவது, எல்லாவிதமான கோல்மால் வேலைகளையும் பிஜே செய்வார். தனக்கு ஆபத்து என்று வந்து விடுமானால், அருகில் யார் கிடைத்தாலும் பிடித்துக் கொடுத்து விட்டு தப்பித்துக் கொள்வார். அது உயிர் நண்பனாக இருந்தாலும் சரிதான்.

அதே போன்று விவாதம் விவாதம் என்று அழைப்பார், விவாதத்தில் தான் தோற்பது போன்று தெரிந்தால் பொய்யைக்கூட அல்லாஹ்வின் மீது சத்தியமாக உண்மை என்று பொய்ச் சத்தியம் செய்து விட்டு பார்வையாளர்களை நம்ப வைத்து விட்டு ஓடி விடுவார். இது கடைசி கட்டத்தில் நடக்கும்.

அதே போன்று சமீபத்தில் ஒரு அந்தர் பல்டி அடித்துள்ளார்.

உள்ளங்கை நெல்லிக்கனியாக தெரியக்கூடிய விஷயங்களைக்கூட தனது வாதத்திறமையால் பொய்யாக்கி விட்டு, பொய்யை உண்மையாக்கக் கூடியவர்தான் இந்த பிஜே. சங்பரிவார கும்பலோடு இறுக்கமான தொடர்பு கொண்ட ஜெயலலிதாவை பிஜே ஆதரித்ததை மக்கள் ஏற்றுக் கொள்ள வில்லை. தேர்தல் பிரச்சாரத்தின் போது கருணாநிதியை கடுமையாக சாடிப்பேசினார்.

வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்பது போல தவறு செய்தவர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்படுவார்கள். பிஜே செய்த தவறுக்கான பரிகாரமாக, உளவுத்துறையை சேர்ந்த ஐஜி சிவனான்டியையும், உளவுத்துறையை சேர்ந்த அதிகாரி ரத்தினசபாபதியையும் தனது நண்பர்களாக ஆக்கிக் கொண்டு பிஜே இன்ஃபார்மராக வேலை செய்து வந்தார். ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் உளவுத்துறை அதிகாரி சிவனான்டி சாதாரண வேறு துறைக்கு மாற்றம் செய்யப்பட்டார். இந்த சிவனான்டி தான் பிஜேக்கு கூலி வாங்கிக் கொடுத்தவராவார். இவர்களின் மூலமாகத் தான் கோவை சிறைவாசிகளை வெளிக்கொண்டு வர முடியாத அளவுக்கு சில வேலைகளையும் செய்து கொண்டிருந்தார் இந்த பிஜே.

தமுமுக தலையிட்டு அந்த அதிகாரியின் மாற்றலுக்காக கடுமையாக போராடி அந்த அதிகாரிக்கு மாற்றலும், சிபிஐ விசாரணையையும் பெற்றுத் தந்துள்ளது.

இதுபோன்ற செயல்பாடுகளால் தமுமுக தனது சமுதாயத்திற்காக பாடுபடக்கூடிய விஷயத்தில் பின்னடைவு ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது. எல்லாவற்றிற்கும் சமுதாய துரோகி பிஜே தான் காரணமாக இருக்கிறார்.

இப்பொழுது, உளவுத்துறை அதிகாரி (காவல்துறை நுண்ணறிவுப் பிரிவு உதவி ஆணையர்) ரத்தினசபாபதியும் சமீபத்தில் ஊட்டிக்கு கிரைம் பிராஞ்சுக்கு மாற்றம் செய்யப்பட்டார். தனது நிலை மிகவும் கவலைக்கிடமாக ஆகிவிட்டதை உணர்ந்து கொண்ட பிஜே திமுகவை ஆதரிக்க ஆரம்பித்து விட்டார்

முத்துப்பேட்டை அன்சாரி நோட்டீஸ் வினியோகம் செய்ததற்காக கைது செய்யப்பட்டார். அதற்காக பெண்களையும் சிறுவர்களையும் திரட்டிக் கொண்டு ஆர்ப்பாட்டம் செய்த பிஜே, அந்தக் கைதைக்கூட நியாயப்படுத்த ஆரம்பித்துள்ளார்.

எப்படித் தெரியுமா? இந்தத் திறமை அவருக்கு மட்டுமே உண்டு.

முத்துப்பேட்டை அன்சாரியை சாதாரண கேஸில் தான் கைது செய்தார்களாம். கொலைக் கேஸ் ஏதும் போடவில்லையாம். அதனால் இந்த ஆட்சி நல்ல ஆட்சியாம். பாவம்! முத்துப்பேட்டை தவ்ஹீதுவாதிகள்.

பிஜே கண்ணுக்கு இன்று சாதாரணமாக தெரியும் இந்த கைதை கண்டித்தா, தவ்ஹீதுவாதிகள் தனது பொருளையும் நேரத்தையும் சக்தியையும் செலவழித்தார்கள்.

அல்லாஹ்வையும் மறுமை நாளையும் ஏற்றுக் கொண்ட தவ்ஹீதுவாதிகளே இப்பொழுதாவது தவ்ஹீதின் பெயரால் வயிறு வளர்த்துக் கொண்டிருக்கும் தவ்ஹீது வியாபாரி பிஜேயை புரிந்து கொள்ளுங்கள். அவரது அந்தர் பல்டிகளை அறிந்து கொள்ளுங்கள்.

இப்னு ஃபாத்திமா 20.08.2006

0 Comments:

Post a Comment

<< Home