Sunday, September 10, 2006

உணர்வில் வெளியிட இயலாத நாடும்-நடப்பும்

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும் - என்ன உமர்பாய் சுபுஹு தொழுகைல ஒங்கலக் காணோமே.

வஅலைக்கும் அஸ்ஸலாம் - என்ன அஹமது அலி கிண்டல் பண்றீங்களா. நம்ம தலைவர் அச்சு மாறாம பின்பத்துற என்கிட்ட இப்டியெல்லாம் நீங்க கேக்கக் கூடாது ஆமா.

சரி சரி கோவிச்சுக்காதீங்க. அத விடுங்க. நாட்டுல என்ன புது விஷயம் அதச் சொல்லுங்கள்.

அப்டி கேளுங்க. ஆனா அதுலயும் சிக்கலாத்தான் இருக்கு.

விஷயத்தை சொல்லாம வருத்தப்படுறீங்களே அப்புடி என்ன சமாச்சாரம்.

எல்லாம் இந்த அம்மா, ஆண்டிப்பட்டி கூட்டத்துல பேசுன பேச்சப்பத்தித் தான்.

ஆண்டிபட்டியில போயி அரசி பேசுன பேச்சுல என்ன பொல்லாப்பு வந்துச்சு. அதுக்கு ஏன் நீங்க இவ்வளவு தயங்குறீங்க. ஏன் உமர் பாய்?

அடப் போங்க அஹமது அலி, நம்ம தலைவரு பிஜே, தமுமுக காரன் சொல்லி ஒரு நல்லது நடந்தா, நாம சொல்லித்தான் நடந்துச்சுங்கிறாரு, நாம செய்றது ஒண்ணும் நல்லதா முடியுறதில்லை. அதுக்கு மத்தவன பலியாக்குறாரு. ஆனா இப்போ ஜெயலலிதா ஆண்டிப்பட்டியில பேசுன பேச்ச பாக்கும் போது, அந்தம்மா நமக்கு சிக்கல கொண்டு வரும் போல இருக்குங்க.

ப்ரதர் உமர், உங்க அடைமொழி மாதிரியே குழப்பமா இல்லாம தெளிவாச் சொல்லுங்களேன்.

என்னத்தங்க சொல்றது. இந்தம்மா ஆண்டிபட்டியில நின்னுக்கிட்டு கருணாநிதி, தயாநிதின்னு யாரயாவது திட்டிட்டு வராம, நம்ம சமுதாய அதிகாரி ஒருத்தறப்பத்தி சொல்லி நம்மள சங்கடப்படுத்தி வச்சுட்டாங்களே.

யாரப்பத்திச் சொன்னாங்க? முனீர் ஹுதாவப்பத்தியா?

ஆமாங்க! தேர்தல் சமயத்துலயே இந்த தமுமுக காரங்க இந்தம்மா முனீர் ஹுதாவ பழிவாங்குன விஷயத்தைப் பத்தி கூட்டத்துக்கு கூட்டம் பேசுனானுங்க. அப்பவே நமக்கு மூச்சு முட்டிப்போச்சு. நம்ம தலைவரும் சாமர்த்தியமா ஜெவை மீண்டும் அரசமைக்க உதவுவது மார்க்க கடமைன்னும், நாம போயஸ் தோட்டத்துல போட்டுக்கிட்ட அக்ரீமெண்ட் ஹுதைபியா உடன்படிக்கை மாதிரின்னும் சம்பந்தா சம்பந்தமில்லாம பேசி, வாங்குன காசுக்கு வஞ்சனையில்லாம பாடுபட்டாரு. இப்போ மறுபடியும் இந்தம்மா முனீர் ஹுதாவ தொட்டு வச்சிருக்கு. நம்ம தலைவரு என்ன பண்ணப் போறாரோ பாவம்.

ஆமாங்க உமர் பாய். வாஸ்தவம் தான். களியக்காவிளை விவாதத்துக்குப் பிறகு சுன்னத் வல் ஜமாஅத் காரங்க கூட நம்மள மதிக்க மாட்டங்குறாங்க. சும்மாவே நம்ம ஆளு கோவை சம்பந்தமா எதுவுமே அறிக்க விடமாட்டாரு. கோவைன்னாலே அம்புட்டு பயம் நம்மாளுக்கு. இந்த லட்சணத்துல கோயம்புத்தூர் கேசுல சம்பந்தப்பட்ட அதிகாரின்னாலே எதுக்கு வம்புன்னு பேசாம இருந்துருவாரு. ஏதோ நம்ம அம்மாவுக்கு வேண்டப்பட்ட ரத்தின சபாபதி அல்லது சிவனாண்டி மாதிரி அதிகாரிகள்னாலும் எதாவது சொல்லலாம், செய்யலாம். அம்மாவுக்கு வேண்டாத முனீர் விசயத்துல நம்மளால என்னதான் சொல்ல முடியும்.

அதுதாங்க அஹமது எனக்கும் கவலையாயிருக்கு, அம்மாவுக்கு பயந்து முனீர் விசயத்த கண்டுக்காம விட்டா, சமுதாய மக்கள் முன்னாடி பதில் சொல்ல முடியாதே. இந்த அம்மா போயஸ் தோட்டத்துக்கு உள்ள இருந்து சொல்லியிருந்தாவாச்சும், நம்ம தலைவர் இஷ்டத்துக்கு தஃப்ஸீர் செஞ்சுடலாம். விண் டிவி கைல இருந்தாலாச்சும் என்னவாவது பேட்டி எடுத்துப் போட்டு சமாளிச்சிரலாம். ஆனா இப்புடி பொதுக்கூட்டத்துல எல்லா மீடியாக்காரங்களும் இருக்குறப்பவே அடாவடியா பேசி முஸ்லிம் சமுதாய எதிர்ப்பு தன்னோட ரத்தத்துலேயே கலந்திருக்குங்கிறதை காட்டிட்டாங்களே.

இது என்ன புதுசா! அவுங்க சட்டசபையிலேயே தான் ஒரு பாப்பாத்தின்னு சொன்ன பிறகு தானே நம்மாளு அவுங்கள ஆதரிக்கணும்னு சொன்னாரு. ஆனா இப்பத்தான் கொஞ்ச கொஞ்சமா கருணாநிதிய ஆதரிக்கிறா மாதிரி பேசிக்கிட்டும் எழுதிக்கிட்டும் தானே வர்றாரு. அதுனால, தேர்தல் உறவு தேர்தலோடு போச்சுன்னு டயலாக் விட்டுட்டு அம்மாவோட ஆண்டிப்பட்டி பேச்சுக்கு கண்டன அறிக்கை வுட்டுற வேண்டியது தான்.

என்ன நீங்க புரியாம ஈசியா சொல்லிட்டீங்க. தேர்தல் உறவு தேர்தலோடு போச்சுன்னு சொல்லி நாம என்னதான் கருணாநிதி ஆதரவு அறிக்கை குடுத்தாலும், அந்தாளு கண்டுக்கவே மாட்டேங்குறாரு. தவிர, இது கருணாநிதியோட நடவடிக்கைக்கு ஆதரவா இருக்குறது மாதிரியான விசயம் மட்டுமில்லையே. அத்தோட அம்மா குறிப்பிட்ட விஷயங்களை மறுத்தும், கண்டிச்சும் சூடா அறிக்கை வெளியிடனுமே. அது எப்படி நம்மளால முடியும்.

அது தவிர, தப்பி தவறி அப்படி ஒரு அறிக்கய வெளியில விட்டா, 'ஏன்யா தேர்தல் நேரத்துல இப்புடிப்பட்ட ஆளுக்கு சப்போர்ட் பண்ணுணீங்க' ன்னு நம்ம ஆளுங்களே கைல கிடக்கிறத எடுத்துக் கிட்டு அடிக்க வருவானே என்ன செய்றது. அதுனால தான தலவரு கம்முனு இருக்காரு. நானும் கவலயோட இருக்கேன்.

கவலப்படாதீங்க உமர் பாய், நாம சுனாமில சுருட்டுனத எவனோ ஒருத்தன் கேள்வி கேட்ட உடனேயே நம்மாளு தமுமுகவ பழிசுமத்தி வேகவேகமாக பிளேட்ட மாத்தின மாதிரி இப்பவும் என்னவாவது புது பிரச்சனைய கிளப்பி இத மூடி மறச்சுடலாம். என்ன புது பித்னா கிளப்புறதுன்னு, நீங்களும் யோசன பண்ணுங்க, நானும் பண்றேன். அப்புறமா தலைவர்ட்ட சொல்லி வேற ஒண்ண ஆரம்புச்சுடுவோம்.

அதுவரைக்கும் போய் ரெஸ்ட் எடுங்க. வஸ்ஸலாம்.

முல்லா 10.09.2006

1 Comments:

At 2:09 PM, Anonymous Anonymous said...

என்ன உமருக்கும் அஹமது அலிக்கும் இவ்வளவு தூரம் சிந்திக்கிறதுக்கு மூலையும் நேரமும் இருக்கா ? ஆச்சர்யமால இருக்குதுல!!

முகவைத்தமிழன் இவர்களை தூங்கவிடாம அவரு பேர தஸ்பிஹ் செய்யிர அளவுக்குல்ல கழட்டி உட்டுருக்காரு...முகவைத்தமிழன்...முத்துப்பேட்டையின்னுல ததஜ முகாம்ல தஸ்பிஹ் உருட்டுராங்கலாம்ல...இப்பையிலாம் பி.ஜே தர்பியாவுல இளையவன வுட்டுட்டாறாம்ல ...ஒரே முகவைத்தமிழன் ...முத்துப்பேட்டையின்னு தேன் புலம்பலாம்ல...

ஆதக்கு இடையிலயும் இந்த அளவுக்கு பேசுரானுவல்னா ...இந்த உமரையும் அஹமது அலியையும் பாராட்டனும்ல ...என்னமோ நடக்குதுல ...நடக்கட்டும் ..நடக்கட்டும்..நாட்டுல நல்லது நடந்தா சரிதாம்ல.

 

Post a Comment

<< Home