Sunday, October 01, 2006

ததஜ திமுகவை ஆதரிப்பதன் மர்மம்

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. .

மீண்டும் ஒரு தேர்தல் களத்தை தமிழ்நாடு சந்திக்கிறது.

என்றாலும் இம்முறை மீண்டும் சில அணி மாற்றங்களோடு.

குறிப்பாக, தவ்ஹீத் வியாபாரி தனது நிலையை இத்தேர்தலில் மாற்றிக் கொண்டுள்ளார்.

அவரது தாரக மந்திரம் : ஒரு பொருளுக்கு ஒரு விலை.

ஆக பெற்ற தொகைக்காக, சட்டமன்ற தேர்தலில் அம்மாவை ஆதரித்தார்.

இப்பொழுது .. .. ..என்ன பெற்றுக்கொண்டு இந்நிலை எடுத்தார்.. ?

ஏனெனில் காசு பார்க்காமல், ஆதாயமில்லாமல், சமுதாயப்பணி கூட செய்வதில்லை என்பது அவரது வாக்குமூலம்.

சுனாமியின் பெயரைச் சொல்லி, பினாமியாக வசூலித்து, சுருட்டியது போக கள்ளக்கணக்கு எழுதி கணக்கு காட்டிய போதே, தான் நடத்தும் பத்திரிக்கையின் நஷ்டத்திற்கு, தனது தொண்டர்களின் (குண்டர்களின்) சீருடைக்கு என ஒரு தொகை (சுமார் 3 லட்சம் ரூபாய்) அபேஸ் பண்ணியதை ஒப்புக் கொண்டவர்.

அப்படிப்பட்ட பெருமைக்குரிய புண்ணியவான் (?) இப்பொழுது இடம் மாறி திமுகவை ஆதரிப்பதன் மர்மம் என்ன?

திருமாவளவன் அணி மாறியதைக் குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி விட்டது. ஆனால் இன்று வரை அண்ணன் அணி மாறியதற்கான அறிவிப்பு வெளியாகவில்லையே ஏன்?

பெட்டி கொடுத்தவர்கள் ஆட்டோ அனுப்புவார்களோ என்ற பயமாக கூட இருக்கலாம்.

அதனால், வாய்வழிச் செய்தியாக தனது அடிவருடிகளுக்கு திமுகவை ஆதரிக்க ஆணையிட்டுள்ளார் என அறிகிறோம்.

இதன் பின்னணியை ஆராய்ந்த போது தான் நமக்கு இந்த தவ்ஹீத் வியாபாரியின் இரட்டை வேடம் புலப்படுகிறது.

அதாவது, கடந்த 2004இல் சுனாமி பேரழிவை காரணம் காட்டி வசூலித்த 86 இயக்கங்களைப் பற்றிய விபரங்களை மத்திய அரசு சேகரித்து அவற்றின் கணக்கு வழக்குகளை ஆராய கமிட்டி அமைத்துள்ளது.

சுனாமிக்கென்று தனி வங்கி கணக்கு இல்லாமல், தனது இயக்கத்திற்கான ஒரே கணக்கில் வந்து கொட்டிய சுனாமி நிதியைக் கூட இயக்கத்திற்கான நன்கொடை என ஒதுக்கும் வசதி கொண்ட ஒரே வங்கி கணக்கில் பெற்றுக் கொண்டது குறித்து விசாரித்தால் நாறிப் போகுமே என்ற அச்சத்தில் தான் சப்தமில்லாமல் தனது ஆதரவை திமுக பக்கம் திருப்பச் சொல்லி உள்ளார்.

பின்னர் நாங்கள் ஆதரித்ததால் தான் திமுக வேட்பாளர் ஜெயித்தார் என அறிக்கை விட்டு அதை வைத்து விசாரணை வழக்குகளிலிருந்து தப்பிக்க திட்டமிட்டுள்ளார்.

சமுதாய சொந்தங்களே! சுனாமியில் கொள்ளையடித்த இந்த தவ்ஹீத் வியாபாரியின் முகமூடி கிழியும் நாளை எதிர்பாருங்கள்.

வஸ்ஸலாம்

ராவுத்தர் 01.10.2006

0 Comments:

Post a Comment

<< Home