ததஜ உமரின் உளறல்கள்
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்....)
உண்மைக்கும் உ.உ.கூ உமருக்கும் ஊசி முனை அளவு கூட சம்பந்தம் இருப்பதில்லை என்பது உலகறிந்த உண்மையாகிக் கொண்டுள்ளது.
உ.உ.கூவின் சமீபத்திய மெயல் இவ்வகையில் மற்றுமொரு ஆதாரமாக திகழ்கிறது.
http://tmpolitics.googlepages.com/bakarreply.doc
உளறுவாய் உமரின் (உபயம்: கான் சாயபு) தடுமாற்றம் தலைப்பிலிருந்தே துவங்குகிறது.
'களியக்காவிளையிலிருந்து காத்தான்குடி வரை' - இது முகவைத்தமிழனின் இணையத்தில் வெளியான கட்டுரையின் தலைப்பு.
ஆனால் உ.உ.கூ உளறுவாய் உமர் இதனை 'இலங்கை டூ காத்தான்குடி' என தலைப்பிட்டிருப்பதாக கதைக்கிறார். கொட்டை எழுத்துக்களில் உள்ள தலைப்பையே மாற்றிச் சொல்வதாக இருந்தால், எவ்வளவு பெரிய பித்தலாட்டக்காரராக இருப்பார் என விளங்கிக் கொள்ளலாம். இந்த இலட்சணத்தில் இவர் மற்றவர்களை கோமாளி என்றும், பைத்தியக்காரன் என்றும் பட்டப்பெயர் சூட்டி எழுதும் கேவலம்.
உளறுவாய் உமரின் அடுத்த உளறல்.
'ஒரு நாட்டிலிருந்து வெளியாகக்கூடிய ஒரு ஊடகத்தில், அடுத்த நாட்டின் செய்தியைத் தரும்போது சம்பந்தப்பட்ட நாட்டின் தலைநகரை இணைத்தே செய்தி தருவார்கள். அதனடிப்படையில் இலங்கையில் உள்ள காத்தான்குடி முஸ்லிம் ஜமாஅத்தை 'இலங்கை ஜமாஅத்' என்று குறிப்பிட்டது.
உளறுவாய் உமர் தன்னுடைய இஷ்டம் போல் எழுதுவதில் அவரது தலைவன் கிரிமினல் பிஜேவை பின்னுக்கு தள்ளக்கூடியவர்.
முதலில் இந்த பில்ட்அப் செய்தி வெளியானது ஆன்லைன்பிஜே டாட் காமில். அதற்கு பொழிப்புரை எழுதப் புறப்பட்டவர் தான் இந்த பொய்யாமொழி உளறுவாய் உமர். முன்பே இத்தளத்தில் முத்துப்பேட்டை டாட் பிளாக்ஸ்பாட் டாட் காமில் ஒரு கேள்வி வெளியாகி இருந்ததை மீண்டும் நினைவுபடுத்தியது உமரின் இந்த செயல்.
அந்த கேள்வி என்னவென்றால், பிஜேவின் சார்பாக, களவாடிய உணர்வின் சார்பாக பதில் எழுதிக் கொண்டிருக்கும் இந்த உமர் பிஜேயின் பினாமியா அல்லது தீன் முஹம்மது போன்ற ததஜவின் கள்ள விசுவாசியா? -இதற்கு இன்று வரை பதில் இல்லை.
சரி விஷயத்திற்கு மீளுவோம். உளறுவாய் உமரின் கொள்கைப்படி காத்தான்குடி முஸ்லிம் ஜமாஅத்தை சம்பந்தப்பட்ட நாட்டின் தலைநகரோடு இணைத்து செய்தி தருவதாக இருந்தால், கொழும்பு முஸ்லிம் ஜமாஅத் என்றல்லவா வெளியாகி இருக்க வேண்டும். நாம் மட்டுமல்ல உலகிலுள்ள அனைவருமே இலங்கையின் தலைநகர் கொழும்பு என்று தான் விளங்கி வைத்துள்ளனர். ஒருவேளை ததஜவின் ஆய்வாளர் கிரிமினல் பிஜே சவுதியில் மேற்கு கரையிலுள்ள யான்புவை கிழக்கு கரைக்கு மாற்றியதைப் போல், இலங்கையின் தலைநகர் இலங்கை எனும் புதிய சிந்தாந்தமோ?
ஒருவேளை எந்த ஊர் தவ்ஹீத் ஜமாஅத் சொத்தாக இருந்தாலும் அதனை தமிழ்நாடு தவ்ஹீத் சொத்து என சொந்தம் கொண்டாடி அபகரித்து வருகிறார்களே அந்த அடிப்படையில் இதனை குறிப்பிட்டிருப்பாரோ என்னவோ?
அடுத்த உளறல், ஆனால் உண்மை.
'களியக்காவிளை விவாத சிடி............உலக மக்களை தட்டி உசுப்பியது..........'
தட்டி உசுப்பியது உண்மைதான். ஆனால், எந்த வகையில் என்பதில் தான் அவரது அறியாமை அடங்கியுள்ளது.
சிடியைக் கண்டவர் கிரிமினல் பிஜேவை காரி உமிழ்ந்ததையும் மனைவி, மக்களோடு கண்டு வந்த தமிழன் டிவியில் பிஜே நிகழ்ச்சிகளை பெரும்பான்மையானோர் கை விட்டதையும், சின்னத் திரை ஹீரோ இமேஜ் இதனால் சிதைவுறுவதையும் கண்ட பயன் தான் காத்தான்குடி ஜமாஅத் - இலங்கை ஜமாஅத்தாக பதவி உயர்வு பெற்றது என்பதனை அறிவுள்ளவர்கள் புரிந்து கொண்டார்கள்.
அடுத்த உளறல்:
முன் கட்டுரை எழுதியவர் 'இலங்கையைச் சேர்ந்த ஒரு சகோதரர்' என குறிப்பிட்டிருந்ததை சுட்டிக்காட்டி, ஏதோ ஒரு ஊரைச் சேர்ந்தவரை இலங்கைவாசி எனும் பொழுது காத்தான்குடி ஜமாஅத்தை இலங்கை ஜமாஅத் என ஏன் குறிப்பிடக் கூடாது என அறிவுப்பூர்வமாக (?) வாதிடுகிறார்.
பாவம். தொண்டிவாசியை தமிழ்நாட்டுக்காரர் எனக் குறிப்பிடுவதில் தவறில்லை. ஆனால் தொண்டி ஜமாஅத்தை, தமிழ்நாட்டு ஜமாஅத் எனக் குறிப்பிடுவது தவறு என்னும் அடிப்படை அறிவு கூட இல்லாதவராக இருக்கிறாரே என பரிதாப்படலாம். அல்லது நேர்வழி கிடைக்க துஆச் செய்யலாம்.
உமரின் உளறல்கள் முடிவதில்லை. தொடராக குறிப்பிடுகிறார், 'சத்தியமார்க்கத்தை ஓரிடத்தில் எத்தி வைத்து விட்டால், அது செல்ல வேண்டிய இடங்களுக்கு தானாக சென்றுவிடும்' -
- இதுவும் கற்பனையாகும். தானாக எதுவும் செல்லாது. அதிலும் குறிப்பாக சத்திய மார்க்கம் தானாக பரவாது. நபி (ஸல்) அவர்களது போதனைகளையும், அல்குர்ஆனையும் சுமந்த ஸஹாபிகள் உலகில் பரவிச் சென்றதால் தான் இஸ்லாம் உலகமெங்கும் பரவியது. நபி (ஸல்) அவர்களின் வாக்குகளையும், இறைவேதத்தையும் எத்தி வைப்பதற்கே இந்த நிலை எனில்...........
ஆனால் இன்றைக்கும், வரையறுக்கப்பட்ட சிலருக்கு அனுப்பப்படக்கூடிய மெயில்கள் மூலம் பல்லாயிரக்கணக்கானோர் படிப்பதாக பாசாங்கு செய்யும் சிலர் இருக்கிறார்கள். அத்தகையோர் அல்லது உண்மை எழுந்து நிற்கும் முன் பொய் உலகை வலம்வந்து விடும் எனும் முதுமொழிக்கேற்ப செயல்படும் ஷைத்தானின் தோழர்கள், இத்தகையோர் மூலம் பொய்கள் வேகவேகமாக பரப்பப்பட்டு பின்னர் அவை குறித்த விசாரணைகள், கேள்விக் கணைகள் எழுப்பப்படும் போது அலட்சியமாக, அல்லது திசை திருப்பும் விதமாக உளறிக் கொட்டுவதையும் நாம் கண்டு வருகிறோம்.
அந்த வகையிலான ஓர் உளறலே உமரின் இந்த வாதமும்.
உமரின் திரிபு வாதத்திற்கு மற்றொரு சான்று:
கிசுபுள்ளா பாக்கர் என்றால் கிசுகிசுக்கப்படும் புள்ளையாண்டான் பாக்கர் என்பது பொருள், ஆனால் உமரோ அதற்கு ஹிஸ்புல்லாஹ் என்று திரித்து பொருள் கூறுகிறார். இதிலும் அவர் திருகுதாளம் செய்ய முயன்றுள்ளார்.
உமரின் உளறல்களுக்கு அளவேயில்லை. என்றாலும் அறிவுடையோர் விளங்கிக் கொள்ள இதுவே போதுமானதாகும்.
வல்ல அல்லாஹ் உமரின் உளறல்களிலிருந்து நம்மை பாதுகாக்க வேண்டி பிரார்த்திக்கிறேன்.
வஸ்ஸலாம்
ராவுத்தர் 21.09.2006
0 Comments:
Post a Comment
<< Home