Thursday, September 28, 2006

முஃமின்களின் தாய்மார்கள்

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.....

النَّبِيُّ أَوْلَى بِالْمُؤْمِنِينَ مِنْ أَنفُسِهِمْ وَأَزْوَاجُهُ أُمَّهَاتُهُمْ


'இந்த நபி முஃமின்களுக்கு அவர்களுடைய உயிர்களை விட மேலானவராக இருக்கிறார், இன்னும் அவருடைய மனைவியர் அவர்களுடைய தாய்மார்களாக இருகின்றனர். (அல்குர்ஆன் 33:06)

சென்ற ரமளானில் (2005) 'அந்த 72 கூட்டத்தினர்' என்ற பெயரில் சிறந்த காலகட்டத்தில் வாழ்ந்த நபித்தோழர்களை 'ரவுடி', 'கிரிமினல்', 'பதவி ஆசை பிடித்தவர்' என்றெல்லாம் கொச்சைப்படுத்திய பின் இந்த வருடம் அவரது பினாமியான ததஜவின் பாக்கர் நபி (ஸல்) அவர்களின் மனைவியர்களை தரம் தாழ்த்தி விமர்சித்துள்ளார்.

'அன்றைய பெண்களும் இன்றைய பெண்களும்' என்ற தலைப்பில் பேச ஆரம்பித்த பாக்கர், நபி (ஸல்) அவர்கள் திருமணம் செய்த அத்தனை பெண்களும் கிழவிகள் ஆயிஷா (ரலி) அவர்களைத் தவிர, என்று கூறினார்.

இவரது இலக்கணப்படி கிழவிகள் என்ற நிலை எத்தனை வயதிலிருந்து ஆரம்பமாகிறது? 45ஆ? 50ஆ?

சரி! அதிகபட்சமாக ஐம்பது என்றே வைத்துக் கொள்வோம். பாக்கர் வேண்டுமானால் ஐம்பதை தாண்டாதவராக இருக்கலாம். அவரது அருமை அண்ணன் பிஜே ஐம்பதுக்கு மேல் என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது. அந்த பிஜேயை அவர் கிழவர் என்றோ கிழவன் என்றோ இந்த பாக்கர் மேடை போட்டு சொல்வாரா?

நபித்தோழர்களும் நபித்தோழியர்களும் நபி (ஸல்) அவர்களோடு வாழ்ந்தவர்கள் குர்ஆனுக்கும் ஹதீஸ்களுக்கும் விளக்கங்களை அவர்களிடமிருந்து தான் பெற வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம். அவர்களின் விளக்கங்களை விட தனது விளக்கங்கள் தான் சிறந்தது என்பதை விலைகூறி விற்பதற்காக புறப்பட்டு விட்ட பிஜே போன்றவர்கள் சஹாபாக்களை ஷியாக்களுக்கு நிகராக விமர்சிக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ளார்கள்.

முதலில் சஹாபாக்கள் விமர்சிக்கப்பட்டார்கள் இப்பொழுது இறைவனின் வாக்குக்கு எதிராக முஃமின்களின் தாய்மார்களை கிழவிகள் என்று சொல்ல இந்த முஸ்லிமு(?)க்கு எங்கிருந்து தான் துணிச்சல் வந்ததோ?

இந்த நிலை இன்னும் மோசமாவதிலிருந்து உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.

போயஸ் தோட்டத்து பொன்மகள், பிரபல சினிமா நடிகை, பலரோடு ஆடிப்பாடி நடனமிட்ட நடனதாரகை ஜெயலலிதா முன்பு கூனிக்குறுகி நின்று கொண்டு உங்கள் ஆட்சியில் தான் நாங்கள் நிம்மதியாக சுவாசித்தோம் அம்மா!(???????) என்று சொன்ன பாக்கரின் வாய் முஃமின்களின் தாய்மார்களை 'எங்களது தாய்மார்கள்' என்று சொல்ல வாய் கூசுகிறதோ?

துணிச்சலிருந்தால் அரசியல் அதிகாரம் பிடுங்கப்பட்டு செத்த பாம்பாகிப்போன ஜெயலலிதாவை கிழவி என்று பொதுமேடையில் பாக்கர் சொல்லிப் பார்க்கட்டும், அது எமது ஊர் வழக்கு என்றும் சொல்லட்டும். அவர் என்ன நிலைக்கு ஆளாவார் என்பதை அடுத்த நிமிடமே கண்டு கொள்வார். ஆனால் முஃமின்களின் தாய்மார்களை கிழவிகள் என்று பலமுறை மேடைபோட்டு கூறிவிட்டு, உலகமெங்கும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பி விட்டு, எந்த கூச்சமோ பயமோ இன்றி தமிழகத்தில் உலாவர முடியும். ஏனெனில் தமிழக முஸ்லிம்கள் சொரணையின்றி இருக்கிறார்கள் என்பதை நன்றாக புரிந்து வைத்துள்ளார் பாக்கர்.

முஸ்லிமுக்கு உதராண புருஷராக திகழ வேண்டிய தவ்ஹீத்(?)வாதி பாக்கர் வாயிலிருந்து 'தே......மகனே' என்ற வார்த்தை வெளிவருகிறது, அதை ஒரு மேடையில் வைத்து 'ஆம் நான் அப்படித்தான் சொன்னேன்' என்று ஊர்ஜிதம் செய்கிறார். அவ்வாறான வார்த்தையை பயன்படுத்தியது 'தவறு' என்பதை மூதறிஞர்(?) பிஜே கண்டிக்க வில்லை, ஆனால் நியாயப்படுத்தினார் என்ற வரலாற்றை நாம் மறக்க வில்லை.

கூவப்பகுதியிலும் சேரிப்பகுதியிலும் வசிப்பவர்கள் இப்படிப்பட்ட வாசகங்களை தங்களுக்குள் சர்வசாதாரணமாக பயன்படுத்திக் கொள்வதை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் அவர்கள் கூட கண்ணியமானவர்கள் என்று பிறரை கருதினால் அவர்கள் முன்பு இப்படிப்பட்ட வார்த்தைகளை பயன்படுத்துவதை தவிர்த்துக் கொள்வார்கள். ஆனால் பாக்கர் அவர்களை விட மோசமானவர் என்பதற்கு மேற்கண்ட சம்பவங்கள் சிறந்த எடுத்துக்காட்டுகளாகும்.

உயிரினும் இனிய நபி (ஸல்) அவர்கள் பற்றியும், அவர்களது தோழர்களான சஹாபாக்கள், சஹாபியப் பெண்கள், மற்றும் நபி (ஸல்) அவர்களின் மனைமார்களான முஃமின்களின் தாய்மார்கள் பற்றி ஏதேனும் தரக்குறைவான விமர்சனங்கள் இனியும் ததஜவினரிடமிருந்து வந்தால் பொதுமக்கள் சும்மா இருக்க மாட்டார்கள் என்பதை எச்சரிக்கையாக சொல்லி வைக்கிறோம்.

பாவ மன்னிப்பு ஏற்றுக் கொள்ளப்படும் இந்த ரமளானிலாவது தான் முன் செய்த தவறுகளுக்கு பகிரங்கமாக அல்லாஹ்விடத்திலும் சமுதாய சொந்தகளிடத்திலும் மன்னிப்புக் கோர பாக்கர் தயாராகட்டும். இல்லையேல் இம்மையிலும் மறுமையிலும் இழிவை சந்திக்கட்டும்.

'யார் நிராகரிக்கிறார்களோ, இன்னும் (நிராகரிக்கும்) காஃபிர்களாகவே மரித்தும் விடுகிறார்களோ, நிச்சயமாக அவர்கள் மீது, அல்லாஹ்வுடையவும், மலக்குகளுடையவும், மனிதர்கள் அனைவருடையவும் சாபம் உண்டாகும்'. (அல்குர்ஆன் 2:161)

இப்னு ஃபாத்திமா 28.09.2006

0 Comments:

Post a Comment

<< Home