Thursday, November 02, 2006

உளறுவாய் ததஜ உமருக்கு..

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..)

ததஜ உமரின் உளறல்களுக்கு எல்லையே இல்லை என்பதனை மீண்டும் நிரூபித்துள்ளார்.

தனது மெயிலின் தலைப்பிலேயே தடுமாறுவது ததஜ உளறல் உமரின் வாடிக்கை.

தற்சமயம் அனுப்பியுள்ள மெயிலில் ஆரம்பமாக அவர் குறிப்பிட்டிருப்பது:

'குதிரைப் பாகனுடைய ப்ளாக்ஸ்பாட்டில் வெளிவர முடியாத.. .. ..'

ராவுத்தராகிய என்னைத் தான் குதிரைப் பாகன் என அவர் குறிப்பிடுகிறார் எனில், எனக்கென்று எந்த ப்ளாக்ஸ்பாட்டும் கிடையாது என்பதனை உளறல் புகழ் உமருக்கு தெரியப்படுத்திக் கொள்கிறேன்.

அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்று கிராமங்களில் சொல்லுவார்கள். அதனால் தானோ என்னவோ, வேறு ஒருவருடைய ப்ளாக்ஸ்பாட்டை என்னுடையதாக இருக்குமோ என்று மருளுகிறார். அதேபோல் அதே ப்ளாக்ஸ்பாட்டில் முல்லா எழுதுவதை ராவுத்தராகிய நான் எழுதுவதாக எண்ணி மிரளுகிறார்.

அந்த முல்லா அன்றய மொகலாயர் காலத்து முல்லாவோ, அல்லது இன்றய ஆப்கானின் முன்னாள் அதிபர் முல்லாவோ, அல்லது உளறல் உமரின் முகமூடியை கிழிக்கப்புறப்பட்ட நவீன முல்லாவோ யாராக இருந்தாலும் ததஜவின் உமர் இந்த ப்ளாக்ஸ்பாட் மூலம் தலை கிறுகிறுத்துப் போயுள்ளார் என்பதனை அவரது மெயில் வெட்ட வெளிச்சமாக்கி விட்டது.

'.. ... .. .. பிரிவினைக்கு முன்பே இது மாதிரியான (மார்க்க விஷயத்தில்) அரை வேக்காடுகளாகப் பார்த்து .. .. .. .. இப்பொழுது பளிச்சென்று மின்னுகிறது அந்த ட்யூப் லைட்டுகளுடைய தவ்ஹீது வெளிச்சம்.' என்று அவரது மெயில் மிக வேகமாகச் செல்கிறது.

இந்த உளறல் ததஜ உமரைப் பற்றி நாம் முன்பே ஒருமுறை குறிப்பிட்டிருந்ததை நினைவூட்டுகிறோம்.

அதாவது இந்த உளறல் உமர் சமயத்தில் எதிராளியை குறிப்பிடுகிறாரா அல்லது தன்னைச் சேர்ந்தவர்களையே குறிப்பிடுகிறாரா என புரியாமல் உளறுவார்.

அந்த இலக்கணப்படி, தற்சமயம் 'அந்த டியூப் லைட்டுகளுடைய தவ்ஹீத் (?) வெளிச்சம்' எனக் குறிப்பிட்டிருப்பது - இது உண்மையை (தவ்ஹீதை) வெளிப்படுத்தும் வெளிச்சம் - என்னும் முன்னுரையோடு அவருடைய சகாக்களால் வெளிச்சம் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டு இருண்டு போயிருக்கும் ப்ளாக்ஸ்பாட்டை குறிப்பிடுகிறரோ என்று தோன்றுகிறது.

சரி விஷயத்திற்கு வருவோம்.

தமுமுகவில் தொடர்ந்திருக்கும் உண்மை தவ்ஹீத்வாதிகளை அரைவேக்காடுகள் என குறிப்பிடுகிறார்.

பாவம். உண்மையை புரிந்து கொள்ள சக்தி பெறாத உளறல் உமர் பார்வையில் யாரையெல்லாம் அரைவேக்காடுகள் எனக் குறிப்பிடுகிறாரோ, அத்தகையோர் இந்த தவ்ஹீத் வியாபாரி பிஜே வின்

►தர்ஜுமாவில் மலிந்து கிடந்த தவறுகளை சுட்டிக் காட்டியவர்கள்.

சுட்டிக்காட்டியவர்களை, தன்னை நெறிப்படுத்திய நல்லவர்களாக எண்ணி கட்டி அணைப்பதை விட்டு விட்டு, தன்னிடமே குறை காண்கிறார்களா என கொதித்தெழுந்து அத்தகையோரிடமிருந்து ஓடிப் போனவர் தான் இந்த பிஜே.

தக்லீது செய்து கொண்டிருக்கும் உளறல் உமர் இதைப் புரிந்து கொள்ள முடியாமல் தான் வடிகட்டிய முட்டாளாக உள்ளார். அதனால் தான்,


►தர்ஜுமாவில் தாவூத் (அலை) அவர்களைப் பற்றி தரக்குறைவாக எழுதியிருந்ததை எதிர்த்து கேள்வி கேட்டவர்களோடு உளறல் உமர் இல்லை. மாறாக அதனை ஏற்றுக் கொண்டு தக்லீத் செய்யும் வடிகட்டிய முட்டாள்களில் ஒருவராக இருக்கிறார் போலும்.

►அதேபோல், தர்ஜுமாவில் கூறப்பட்டிருப்பது போல் ஸஹீஹான ஹதீஸ்களை தூக்கி எறிந்து இஸ்லாத்தில் அடிப்படைகளை தகர்க்கும், இஸ்லாமிய எதிரிகள் கூட்டத்தில் உளறுவாய் உமரும் அதனை எதிர்க்கும் உண்மை தவ்ஹீத்வாதிகள் கூட்டத்தில் நாமும் இருக்கிறோம்.

►உத்தம சத்திய ஸஹாபாக்களை கிரிமினல் என்றும் ரவுடி என்றும் இழித்தும் பழித்தும் குறிப்பிடும் தக்லீத்வாதிகள் கூட்டத்தில் உளறுவாய் உமரும், அதனை எதிர்க்கும், ஸஹாபாக்களை நேசிக்கும் கூட்டத்தில் நாமும் இருக்கிறோம்.

►இஸ்லாம் தடை செய்திருக்கும் அவதூறு பரப்பும் செயலை, தனது இயக்கத்தின் பெயரில், அத்தோடு சேர்ந்திருக்கும் ஷரீஅத் தீர்ப்பாயம் என்ற கிளை அமைப்பின் பெயரில் ஊக்குவித்து, அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதை ஷரீஅத்துக்கு எதிரான போராட்டமாகவே நாம் எண்ணுகிறோம். அதனால் எதிர்க்கிறோம். ஆனால் இதனை ஷரீஅத் சட்ட ரீதியிலான தீர்ப்பாக (ஃபத்வாவாக) எண்ணி அதன்படி செயல்படும் உளறல் உமர் எப்படி தவ்ஹீத்வாதியாக இருக்க முடியும்.

இந்த இலட்சணத்தில் உளறல் உமர், எம்மை அரைவேக்காடுகள் என விளிப்பது அவரது அறிவின்மையையே வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

ததஜ உமரின் உளறல்களுக்கு முடிவே இல்லை.

மேலும் அவரது மெயிலில்,

'.. .. .. ஒரு குழுவை ஏற்படுத்தி பதில் கொடுக்க வைப்பது என்ற கோரிக்கையை தீர்மானமாக நிறைவேற்றப்பட்டு தலைமைக்கு அனுப்பப்பட்டது. ஆனால் தலைமை அதனை நிராகரித்து விட்டது. .. ..' என்று புளுகியுள்ளார்.

அப்படியானால், ததஜ தலைமை நிராகரித்த பதில் கடிதத்தை வெளியிட உளறுவாய் உமர் தயாராக உள்ளாரா?

ததஜ உமரின் உளறலுக்கு மற்றொரு சான்று.

ததஜ லெட்டர் பேடை திருடி போர்ஜரி செய்து விட்டதாக - ஒரு இடத்திலும், பிறகு பூட்டை உடைத்து தீர்மான நகலைத் திருடினாரா? - என்று பிறகும் உளறியுள்ளார்.

இவை இரண்டுமல்லாமல் முன்னாள் நிர்வாகிகள் சிலரால் கொண்டு செல்லப்பட்டதாகவும் எழுதியுள்ளார். ஆக மொத்தத்தில் தலை கிறுகிறுத்துப் போயுள்ளார் எனத் தெரிகிறது. அதனால் தான் உச்சகட்டமாக உளறியுள்ளார்.

ரய்சுத்தீனுடைய மெயிலில் 2 கடிதங்கள் ஸ்கேன் செய்யப்பட்டு இருந்தன.

உளறல் உமர் இவ்விரண்டில் எதனை ஃபோர்ஜரி என்கிறார். இந்த இரண்டு லெட்டர் பேடுகளுமே ததஜவிலுள்ள பலருக்கும் கூட தெரியாத விஷயங்கள். அப்படியிருக்க ரயிசுதீனுக்கு மட்டும் எப்படித் தெரிந்திருக்கும்.

உண்மையில் நடைபெற்ற சம்பவங்களையே ஃபோர்ஜரி (அ) கற்பனை எனக் கூறுவதன் மூலம் உளறுவாய் உமர் சங்பரிவார கூட்டத்தைச் சேர்ந்தவரோ என எண்ணத் தோன்றுகிறது.

அடாவடித்தனமாக ஏதாவது செய்வது, மாட்டிக் கொண்டால் அடுத்தவனை அவதூறு கூறி பிரச்சனையை திசை திருப்புவது எனும் தரம்கெட்ட ஜமாஅத் தலைமையின் அடியொற்றி ஏதோதோ உளறிக் கொட்டி கிளறி மூடியுள்ளார் திருவாளர் உளறுவாய் உமர்.

என்றாலும், இந்த உளறுவாய் உமர் ஏதோ ஒருவகையில் நமது பாராட்டுதல்களையும் பெறுகிறார். அந்த ரகசியம் என்னவெனில்,

இதுநாள் வரை, 'எமது மெயிலைப் பார்வையிடும் பல்லாயிரக்கணக்கான சகோதரர்களுக்கு' என கட்டியம் கூறி பில்ட்அப் செய்து வந்த உளறுவாய் உமர், நமது இடைவிடாத சுட்டிக் காட்டுதல்களின் பயனாக, எதார்த்த நிலைக்குத் திரும்பி, இன்றய மெயிலில் தனது மாயையிலிருந்து விடுபட்டு, 'எமது மெயிலைப் பார்வையிடும் சகோதரர்களுக்கு.. .. .. ' என இறங்கி வந்துள்ளார்.

இதற்காக அவரை பாராட்டுவதோடு, இதேபோல் நாம் குறிப்பிட்டிருந்த பல விஷயங்களை லேட்டாகவாவது புரிந்து கொண்டு தக்லீதிலிந்து விடுபடுவார் என நம்புகிறோம், அதற்காக பிரார்த்திக்கிறோம்.

வஸ்ஸலாம்

ராவுத்தர் 01.11.2006

0 Comments:

Post a Comment

<< Home