Sunday, October 29, 2006

உணர்வில் வெளியிட இயலாத நாடும் நடப்பும் -7

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

வ அலைக்கு முஸ்ஸலாம். அடடே உமர் பாயா.. .. .. வாங்க வாங்க. ஈத் முபாரக். எங்கே பெருநாளைக்கி ஊருக்குப் போயிட்டீங்களோ.

ஆமா அஹமது. உங்களுக்கும் பெருநாள் வாழ்த்துக்கள்.

அதுசரி.. .. நீங்களும் உங்க ஸைட்டை மூடிட்டு போனமாதிரி ஓடிப்போயிட்டீங்களோன்னு நெனச்சேன்.

எது.. .. வெளிச்சம் ப்ளாக்ஸ்பாட்ட சொல்றீங்களோ.

ஆமா .. .. அதத்தான். இருட்டுக்குப் பெயர் வெளிச்சம்னு தமுமுக காரன் கிண்டல் பண்றான்.

அவன் அப்படித்தான் செய்வான் அஹமது. அதுக்காக நாம பேர் வைக்கும் போது கோட்டை வுட்டுடக் கூடாதில்ல. தவ்ஹீதுன்னு பேரு வைச்சோம். அப்புறம் நாம அடிக்கிற ஜால்ராவப் பாத்து தமுமுக காரன் அது தவ்ஹீத் இல்ல தக்லீதுன்னான். அதுக்காக நாம வெக்கப்பட்டமா. அது மாதிரி தான் இதுவும். வெளிச்சம்னு பேரு தான். ஆனா மூடியே இருக்குறதுனாலயும் அதுல சொல்லப்படற விஷயத்துனாலேயும் அது இருட்டு தான். இதுக்கெல்லாம் நாம அசரக் கூடாது ஆமா.. ..

அதுவுஞ்சரிதான்.. .. ஏங்க உமரு.. .. நம்ம பத்திரிக்கய ஏன் நெட்டுல அப்டேட்டே பண்ணலன்னு போன தடவ கேட்டேனே.

ஆமா. விசாரிச்சேன். கிட்டத்தட்ட நாம பேசிக்கிட்டது மாதிரி தானாம். உணர்வு விற்பனை ரொம்பவே கொறஞ்சுட்டதுனால சந்தாவுல சலுகைலாம் குடுத்துப் பார்த்தும் ஒண்ணும் பலிக்கல. அதுதான் ஸைட்ட அப்டேட் பண்ணாம வுட்டாலாச்சும் எதாவது சேல்ஸ் கூடுமான்னு பாக்குறாங்க.

எப்டிங்க கூடும். வரவர உணர்வுல சமுதாய செய்தின்னு அதிகமான செய்தியே வர்றதில்ல. சும்ம அங்க கூட்டம், இங்க விழான்னு படம் போட்டு பிலிம் தான காட்றோம்.

அதுசரி நம்ம படத்த நாம போடாம வேற தினமலரா போடுவான்.

கரெக்ட். ஆனா, சமுதாயத்த பாதிச்ச கமல் ரசிகர்கள் ஒட்டின போஸ்ட்டரப்பத்தின செய்தியும் இல்ல. ஈராக் மாதிரியான சமகால செய்திகளும் இல்ல. எதாவது ஒரு ஊர்ல தமுமுக காரன் என்ன செஞ்சான்னு தானே எழுதுறாங்க. பத்தாததுக்கு வாசகர் பட்டறைன்னு 2 பக்கத்துக்கு அரச்ச மாவயே அரக்கிறாங்க. அப்புறம் எப்புடி பத்திரிக்கை விக்கும்.

சரிசரி கவலப்படாதீங்க. அலாவுதீன் தாக்கப்பட்டார்னு சும்மா பொளந்து கட்டி களத்தொகுப்பு எழுதுனா மாதிரி எதாவது கெடைக்காமயா போயிறும். அப்ப பாத்துக்கலாம்.

இனிமே என்னத்த எளுதப் போறீங்க. அதான் கோபார் ரயீசுதீன் புடிச்சு வாங்கு வாங்குனு வாங்குறாரே.

ஆமாங்க அஹமது. அதுதான் எனக்கு கவலயா இருக்கு. இந்த ஆளு நம்ம துபாய் பார்ட்டி மாதிரி கூட இல்ல. அவர விட டேஞ்சரா இருக்காரு. ஏதோ பாக்கரப் பத்தி, கோவை ஜாபரைப் பத்தி தானே எழுதுறாருன்னு பாத்தா இப்போ அடி மடியிலேயே கைய வைக்கிறா மாதிரி அண்ணனை புடிச்சுட்டாரு.

அப்ப அவரு எளுதியிருக்குறதெல்லாம் நெசம் தானா. அண்ணன் தான் இப்புடி பொய்யான பேர்ல கள்ளத்தனமா எளுதி கள்ள வெப்சைட் நடத்தச் சொன்னாரா.

என்ன அஹமது தெரியாத மாதிரி கேக்குறீங்க. ஒவ்வொரு பெயர்லயும் எழுதி மாட்டிக்கிட்டதுனால தானே புதுப்புது பேர்ல எழுதினோம். ஆனா இப்போ அண்ணன் கடிதத்தையே போட்ட பின்னால் எவன் எளுத முன்னுக்கு வருவான், சொல்லுங்க.

அப்டீன்னா ஆட்டம் க்ளோஸா. அதான் வெளிச்சம் ஒரு மாசமா இருட்டாயிருச்சு. டிஎன்டிஜே டாட் நெட் ம் ஆடிக்கும் அம்மாவாசக்குமா அப்டேட் ஆகுது.

என்னத்த செய்யுறது. பார்ப்போம். எப்படியாவது முயற்சி பண்ணி வேற எதுலயாவது தமுமுக காரன இளுத்து விட்டு ரகள பண்ணுனாத்தான் முடியும்.

சரி சரி அப்ப நான் கௌம்புறேன். அடுத்த முறை சந்திக்கும் போதாவது ஏதாவது உருப்படியா செய்ய முடியுமான்னு யோசிப்போம்.

முல்லா 29.10.2006

0 Comments:

Post a Comment

<< Home