Saturday, October 28, 2006

கவுஸ் பாஷா காலில் விழுந்தது சரியா?

எஸ். சலீம்கான், அதிரை

கேள்வி: மதுரை மத்திய தொகுதியில் இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற திமுக வேட்பாளர் கவுஸ்பாஷா திமுக தலைவரை சந்திக்கும்போது காலில் விழுந்து ஆசி வாங்கியுள்ளாரே..?

பதில்: மார்க்க உணர்வுள்ள ஒரு முஸ்லிம் இதுபோன்ற செயல்களை செய்ய மாட்டார். திமுகவிலேயே இருக்கும் நாகூர் அனீபா போன்றவர்கள் இப்படி யெல்லாம் நடந்து கொண்டதில்லை. அதுபோல் திமுகவில் இருக்கும் வேறுசிலரும் கூட நாம் அறிந்தவரை இப்படி நடந்து கொண்டதில்லை. ஆனால் கவுஸ்பாஷா கருணாநிதி காலில் விழுந்து சமுதாயத்திற்கு இழுக்கு தேடித்தந்துள்ளார். ஜெயலலிதா அனுமதிக்கும் இதுபோன்ற விஷயங்களை திமுக தலைமை அனுமதிக்கக் கூடாது. காரணம், கருணாநிதி போற்றும் பெரியாரின் சுயமரியாதைக்கு இது எதிரானதாகும்.

http://www.tmmkonline.org/tml/others/109594.htm

நன்றி: தமுமுகவின் அதிகாரப்பூர்வ இணையதளம்

0 Comments:

Post a Comment

<< Home