Sunday, October 29, 2006

சந்தி சிரிக்கும் ததஜவின் ஷரீஅத் தீர்ப்பாயம்

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

முஸ்லிம்கள் தங்களுக்குள் ஏற்படும் பிரச்சனைகள், அல்லது தங்களுக்குத் தோன்றும் சந்தேகங்கள் ஆகியவற்றை முறையிட்டு, மார்க்க அடிப்படையில் வழிகாட்டுதல்களைப் பெற ஷரீஅத் மன்றங்களை நாடுவர்.

அத்தகைய பல ஷரீஅத் மன்றங்கள் இந்தியாவில் உள்ளன.

அவற்றில் சில சமயங்களில் வழங்கப்படும் ஃபத்வாக்களினால் பல சர்ச்சைகள் உருவாகி உள்ளன. ஏனெனில் மார்க்கம் என்ற பெயரில் தனது மனோ இச்சைக் கேற்ப எவராவது தீர்ப்பு வழங்கி இஸ்லாமிய மார்க்கத்தை திசை திருப்பி விட்டு விட அனுமதிக்க முடியாது. இவ்வாறான எதிர்ப்புகளினால் தான் இஸ்லாம் களங்கப்படுத்தப்பட முடியாமல் பாதுகாக்கப்பட்டு வருகின்றது.

பொதுவாக மற்றவர்களின் கருத்துக்களை எல்லாம், காது மூக்கு வைத்து களங்கம் கற்பிக்கும் தமிழ்நாடு தறுதலை ஜமாஅத் தலைவர் கிரிமினல் பிஜே அவர்கள், தனது அமைப்பு சார்பாக நடத்தி வரும் ஷரீஅத் தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பு (ஃபத்வா) ததஜவினரை மட்டுமல்லாமல் அனைத்து முஸ்லிம்களையும் தலைகுனிய வைத்து விட்டது.

தாங்கள் தான் வடிகட்டிய தவ்ஹீத்வாதிகள் என பொருந்தா அடைமொழி இட்டுக் கொண்டு, வடிகட்டிய முட்டாள்களை சீடர்களாகக் கொண்டு செயல்படுவதால், கிரிமினல் பிஜே தானும் வழிகெட்டு, தன்னை நம்பிய அப்பாவிகளையும் வழிகெடுத்துக் கொண்டுள்ளார் என்பதற்கு அவரே கையொப்பமிட்ட ஷரீஅத் தீர்ப்பாய ஃபத்வா மிகச் சிறந்த உதாரணமாகும்.

ஈமெயில் மூலம் நமக்கு கிடைத்த சரித்திர முக்கியத்துவம்? வாய்ந்த அந்த ஃபத்வா, இதோ!

http://muthupettai.googlepages.com/theerppayam.jpg


'தலைமையின் மீதும் நமது தாயிகள் மீதும் தொடர்ந்து பரப்பப்பட்டு வரும் அவதூறுகளுக்கும், வதந்திகளுக்கும் தக்க பதிலடி கொடுப்பது குறித்தும் அதற்காக புதிய வெப்சைட் ஆரம்பித்து நமது எதிரி அமைப்பினரின் குற்றங்களையும் குறைகளையும்
அம்பலப்படுத்துவது குறித்து தலைமையின் ஆலோசனையை கேட்டு ரியாத் மற்றும் தம்மாம் மண்டலத்தின் நிர்வாகிகள் தொடர்பு கொண்டிருந்தார்கள்.

இது குறித்து தலைமைக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ரியாத் மண்டல நிர்வாகிகள் வெப்சைட் விஷயத்தில் அனுபவம்
உள்ளவர்களாக உள்ளதால் அந்த சகோதரர்களுடன் மற்றவர்கள் இணைந்து செயல்படுங்கள். உதவிகள் தேவைப்படின் தலைமையை தொடர்பு கொள்ளவும். மற்ற அமைப்பினரின் குற்றங்களையும்,
குறைகளையும் அம்பலப்படுத்தும் போது தலைமையின் பெயரையோ அல்லது நிர்வாகத்தினரது பெயரையோ உபயோகப்படுத்த வேண்டாம். அதுபோல் எழுதக்கூடிய சகோதரர்கள் யாரும் தமது சொந்த பெயர்களில் எழுத வேண்டாம். பிட் நோட்டீஸ்கள் வெளியிட்டு அவற்றை அனைவருக்கும்
கிடைக்கும் படி செய்யவும்'. - PJ


அன்பிற்கினிய இஸ்லாமிய சொந்தங்களே!

ஓருவரைப் பற்றி அவதூறாக எழுதுவதற்கு, அதுவும் மொட்டை கடிதமாக எழுதி பெட்டைத் தனமாக பலருக்கு அனுப்பி, ஃபித்னா செய்வதற்கு அனுமதி அளித்துள்ள ஒரே தலைவர் கிரிமினல் பிஜே என்பதனை விளங்கிக் கொண்டீர்களா.

அவதூறுக்கு வழங்கப்படும் அனுமதி அவர்களது பார்வையில் ஷரீஅத் தீர்ப்பு.. .. ..???

தனது மனோ இச்சைப்படி உளறுவது, பிதற்றுவது அனைத்துமே ஷரீஅத் சட்டத்திற்கு உட்பட்டது தான் என்ற மாயையை ஏற்படுத்தத்தான், இத்தீர்ப்பை தனது லெட்டர் பேடு இயக்கத்தின் லெட்டர் பேடில் வெளியிடாமல், ஷரீஅத் தீர்ப்பாயம் என்ற லெட்டர் பேடில் வெளியிட்டாரோ? சிந்திக்கும் திறன் படைத்த ஒரு சில தவ்ஹீத் தக்லீத்வாதிகளே! சற்று நிதானமாக சிந்தித்துப் பாருங்கள்.

அவதூறு பரப்பும் அனுமதியை தனது சொந்த கருத்தாக வெளியிடவில்லை. முற்றாக ததஜவின் அதிகாரபூர்வ அமைப்பின் ஷரீஅத் தீர்ப்பாய, கருத்தாக (ஃபத்வாவாக) வெளியிட்டுள்ளார்.


இத்தகைய ஷரீஅத் தீர்ப்பாயம் அவசியமா என சிந்தியுங்கள்.

மார்க்கம் தடைசெய்த ஒரு செயலைச் செய்வதற்கு அதிகாரப்பூர்வ அனுமதியை வழங்க எத்தனிக்கிறார் எனில், இந்த கிரிமினல் பிஜே எந்தளவுக்கு எத்தர் என்பதனை புரிந்து கொள்ளுங்கள்.

ஷரீஅத்துக்கு மாற்றமான செயலை செய்யும்படி தூண்டி தீர்ப்பளித்தால் - அது எப்படி ஷரீஅத் தீர்ப்பாயமாக இருக்க முடியும்?

ஷரீஅத்தை தீர்த்துக்கட்டும் யூத கிருத்துவ பாசிச இந்து வெறியர்களைப் போல இஸ்லாமிய ஷரீஅத்துக்கு மாற்றமான தீர்ப்பு வழங்கும் கிரிமினல் பிஜேவை எப்படி இஸ்லாமிய மார்க்க அறிஞராக ஏற்றுக் கொள்ள முடியும்.. .. .. சிந்திப்பீர்களா???

இதற்கு மேலும் இவரை மார்க்க அறிஞராக ஒப்புக் கொண்டு, இவருடைய கருத்துக்களை ஷரீஅத் தீர்ப்பாக எடுத்துக் கொள்ள தாங்கள் முன்வந்தால்,.. .. .. ..

இந்த எச்சரிக்கையை புறக்கணித்து, இஸ்லாமிய வட்டத்திலிருந்து வெளியேறிக் கொண்டிருக்கும் தங்களை வல்ல இறைவன் மறுமையில் வெறுமனே விட்டுவிடுவான் என எண்ணாதீர்கள்.

மாறாக, இதுவரை, இமாம்களை இழிவுபடுத்தி, உத்தம சத்திய சஹாபாக்களை மரியாதை இல்லாமல் விமர்சித்து, சத்திய சஹாபா பெண்மணிகளின் கண்ணியத்தை களங்கப்படுத்தி இறுதியில் இஸ்லாமிய ஷரீஅத்தையே சந்தி சிரிக்க வைத்த குற்றத்திற்காக, அதற்கு உறுதுணையாக இருந்த குற்றத்திற்காக, இதனை கண்டிக்காமல் மவுனம் காத்து சாட்சிகளாகிப் போன குற்றத்திற்காக - - வல்லோனின் வேதனையை சுவைக்க தயாராக இருங்கள்.

சத்திய இஸ்லாமிய ஷரீஅத்திற்கு களங்கம் ஏற்படாமல் பாதுகாக்க முன்வரும் எம் போன்ற அனைவருக்கும் வல்ல அல்லாஹ் ஈருலக பாக்கியங்களை தந்தருள்வானாக.

வஸ்ஸலாம்

ராவுத்தர் (28.10.2006)

0 Comments:

Post a Comment

<< Home