Sunday, November 12, 2006

அறிஞரைப் போல் நடிக்கும் பிஜே

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

ஹதீஸ்கலையை கரைத்துக் குடிக்கிறேன் என்ற பெயரில் ஹதீஸ்களின் தரத்தை பிரித்துக் கொடுக்கிறேன் என்று சொல்லிக் கொண்டு மக்களை ஏமாற்றிக் கொண்டு திரிந்த பிஜே இப்பொழுது வகையாக மாட்டிக் கொண்டார்.

எந்த ஹதீஸையாவது பலவீனப்படுத்த வேண்டுமானால் எதையாவது ஒரு காரணத்தைக் கூறி பலவீனப்படுத்துவார். பலவீனமான ஹதீஸ் தனக்கு சாதகமாக இருக்கிறது என்பதற்காக பலமானதாக ஆக்குவார் என்ற நிலை முன்பு நீடித்து வந்தது. இது சம்பந்தமாக மௌலவிகள் பிஜேயை விமர்சனம் செய்த போது அவர் மீது உள்ள முஹப்பத்தின் காரணமாக விமர்சனம் செய்தவர்கள் மீது நமக்கு கோபம் தான் வந்தது.

பீஜே எந்த அளவுக்கு ஒட்டு மொத்த தமிழக முஸ்லிம் மக்களையும் ஏமாற்றினார் என்பதற்கு ஒர் எடுத்துக் காட்டை உங்கள் முன் வைத்தால் அவரைப் பற்றி நீங்களும் புரிந்து கொள்வீர்கள்.

'ஸஹீஹான ஹதீஸ்களைக் கூட நிராகரிக்கலாம்' என்ற, யாரும் சொல்லாத புதிய சித்தாந்தத்தை தமிழகத்திலே முதல் முறையாக அறிமுகப்படுத்தியது இந்த பிஜே தான்.

தான் செய்வது தெள்ளத் தெளிவான குப்ர் என்னும் நிராகரிப்பு என்பதைக் கூட அறியாத மடையர்களாக, மொத்தத் தவ்ஹீதையும் குத்தகைக்கு எடுத்துக் கொண்ட பிஜேயும் ததஜவின் குஞ்சுகளும் இருக்கிறார்கள்.

அல்லாஹ் திருமறையில் சொல்கிறான்:

நீங்கள் வேதத்தில் சிலதை நம்பி சிலதைமறுக்கிறீர்கள? எனவே உங்களில் இவ்வகையில் செயல்படுகிறவர்களுக்கு இவ்வுலக வாழ்வில் இழிவைத் தவிர வேறு கூலி எதுவும் கிடைக்காது. மறுமை(கியாம) நாளிலோ அவர்கள் மிகக் கடுமையான வேதனையின்பால் மீட்டப்படுவார்கள்; இன்னும் நீங்கள் செய்து வருவதை அல்லாஹ் கவனிக்காமல் இல்லை. (திருக்குர்ஆன் 2:85)

வேதத்தில் சிலதை மறுப்பவர்களுக்கு இவ்வுலகிலும் இழிவு, மறுமையில் கடுமையான வேதனையும் உண்டு என்பதை தான் இந்த வசனங்கள் சொல்கின்றன. ஆனாலும் வேதம் எப்படி அல்லாஹ்விடமிருந்து வந்த வஹீயோ அது போலவே ஹதீஸும் அல்லாஹ்விடமிருந்து வந்த வஹீயாகும் என்பது ஒரு நபிமொழியின் கருத்தாகும். வேதத்தின் ஒரு சிலதை மறுப்பது எவ்வாறு குற்றமோ அதுபோன்றது தான் ஹதீஸ்களை மறுப்பதும் என்பதை புரிந்து கொண்டால் ஹதீஸ்கள் ஸஹீஹானதாக இருந்தாலும் அறிவுக்கு பொருந்த வில்லை என்று கூறி ஹதீஸ்களை நிராகரிப்பவர்களுக்கு இவ்வுலகத்திலும் இழிவு, மறுமையிலும் கடுமையான வேதனை உண்டு என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.

ஹதீஸ்களின் அறிவிப்பாளர்களை எடை போட்டு ஒரு ஹதீஸை ஏற்பதும் மறுப்பதும் தேவையான ஒன்றுதான். ஆனால் அறிவிப்பாளர்களை எடை போடும் போது தனக்கு சாதகமான ஹதீஸை ஸஹீஹாக ஆக்க வேண்டும் என்பதற்காக வரிந்து கட்டிக் கொண்டு விளக்கம் கொடுத்து ஸஹீஹாக ஆக்குவது கண்டிக்கத் தக்கது. உதாரணமாக இந்த பீஜே ஒரு ஹதீஸ் தனக்கு பிடித்தமானதாக இருந்தால் அதில் அறிவிப்பாளர்கள் பற்றி குறை இருப்பதாக தெரிந்தால் உடனே, அந்த ஹதீஸை ஸஹீஹாக ஆக்கிருவோம் என்று கூறிக் கொண்டு ஸஹீஹாக ஆக்குவார். அதற்கு அந்த அறிவிப்பாளர், 'நம்பகத்தன்மை அற்றவர்' என்று விமர்சனம் இருந்தால், 'எந்த வகையில் நம்பகத்தன்மை அற்றவர் என்ற விபரம் இல்லை' என்று கூறி அந்த விமர்சனத்தை தட்டி விட்டு ஸஹீஹாக ஆக்கி விடுவார். இந்த விஷயங்களை அவரோடு நெருங்கி இருந்த மார்க்க அறிஞர்கள் நன்கு அறிவார்கள்.

அதற்கு எதிர்ப்பு வந்தால், வரிந்து கட்டிக் கொண்டு தனது நிலைபாட்டை சரி காண விவாதத்திற்கு அழைப்பார்.

அவ்வாறே தனக்கு பிடிக்காத ஹதீஸை ஸஹீஹானதாக இருந்தால் துணிந்து ளயீபானதாக ஆக்கி விடுவார். ஆனால் மற்றவர்களை ஏமாற்ற முடியாத ஹதீஸ்கள் விஷயத்தில் படு ஜாக்கிரதையாக தனது மீது எந்த சந்தேகமும் விழுந்து விடாதவாறு பார்த்துக் கொள்வார். இப்படிப்பட்ட அயோக்கியரிமிருந்து தமிழகம் இப்பொழுது தான் விடுதலை பெற ஆரம்பித்துள்ளது.

ஹதீஸ்கள் விஷயத்தில் அவர் கையாண்ட கடைசி கட்டம் தான் ஸஹீஹான ஹதீஸாக இருந்தாலும் கூட அறிவுக்கு ஒத்து வர வில்லையானால் நிறுத்தி வைத்துக் கொள்வது. அதாவது இந்த 'நிறுத்தி வைத்துக் கொள்வது' என்ற வார்த்தை 'அந்த ஹதீஸை தூக்கிப் போடு' என்ற வாசகத்தின் நளினமான வார்த்தைப் பிரயோகமாகும். இந்த நிலைபாடு அபாயகரமான நிலைபாடு என்பதை பிஜேயும் ததஜவின் குஞ்சுகளும் புரிந்து கொள்ள வேண்டும்.

ஸஹீஹான ஹதீஸ்கள் அறிவுக்கு பொருந்த வில்லையானால் மறுக்கலாம் என்று இதுவரை எந்த மார்க்க அறிஞரும் கூறாத ஃபத்வாவாகும்.

ஸஹீஹான ஹதீஸ்களை மறுப்பது குர்ஆன் வசனங்களை மறுப்பதற்கு ஒப்பானதாகும்.

பால்குடி சம்பந்தப்பட்ட ஹதீஸை பிஜே மறுப்பது இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

ஸஹீஹ் முஸ்லிமில் இடம் பெறக்கூடிய இந்த ஹதீஸ் ஹதீஸை எடை போடும் அளவு கோலில் மிக மிக உயர்ந்த தரத்தில் அமைந்த ஹதீஸாகும். இந்த ஹதீஸை ளயீபாக்குவதற்கு அவரால் முடியாத அளவுக்கு முஸ்லிமில் இடம் பெற்ற ஹதீஸாகும். அதனால் லாஜிக் எனும் மனிதனின் ளயீபான பகுத்தறிவை வைத்து அளந்து பார்க்கிறார் இந்த பீஜே. எப்படி தெரியுமா? இந்த ஹதீஸ் ஆதாரப்பூர்வமானதாக இருந்தாலும் மற்ற ஹதீஸ்களோடு மோதுவதால் ஏதோ ஒரு குறைபாடு இருக்க வேண்டும் என்று கூறி தள்ளி வைக்க முனைகிறார். இந்த ஹதீஸில் எந்த வித குறைபாடும் இருக்க வாய்ப்பில்லை என்பதை நபி (ஸல்) அவர்களின் இரண்டு மனைவியர்கள் இந்த ஹதீஸ் விஷயமாக கலந்துரையாடல் செய்ததை இதே முஸ்லிம் ஹதீஸ் தொகுப்பில் இதே ஹதீஸ் இடம் பெறும் பாடத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு பிறகும் எப்படி ஏதோ ஒரு குறைபாடு இருக்க முடியும்.

இந்த பிஜே தனது தவறான ஃபத்வாவை உணர்ந்து வாபஸ் பெற வேண்டும். ஹதீஸ்களை மறுக்கும் விஷயத்தில் தனக்கு புரியாத ஹதீஸை, 'இதன் விளக்கத்தை இறைவன் நன்கு அறிவான்' அல்லது 'இதற்கான விளக்கம் எனக்குத் தெரியாது' என்று சொல்லப் பழகிக் கொள்ள வேண்டும்.

அல்லாஹ் பிரிதொரு நேரத்தில் அதற்கான விளக்கத்தை அறிஞர்கள் மூலம் வெளிப்படுத்த போதுமானவன்.

இப்னு ஃபாத்திமா 12.11.2006


0 Comments:

Post a Comment

<< Home