பொய் முகம் காட்டும் ஃபோர்ஜரி யார்?
பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
சமீபத்தில் நமக்கு 'நபிதரசன்' என்பவர் பெயரில் ஒரு மெயில் உமர் ஐடியிலிருந்து வந்தது. உளறுவாய் உமருக்கு உள்ள பல திருநாமங்களில் இதுவும் ஒன்றாக இருக்கலாம். உளறுவாய் உமர் என்ற பெயரே தறுதலை ஜமாஅத்தில் கள்ள மெயில் அனுப்பப்படும் ஐடிக்களில் ஒன்று என்பதனை சகோ. முகவைத் தமிழனின் கட்டுரை மூலமாக அறிந்து கொண்டதால் இதிலுள்ள விஷயங்கள் எமக்கு ஆச்சரியமளிக்கவில்லை.
பொய்முகங்களும், ஃபோர்ஜரிகளும் என தலைப்பிடப்பட்ட அந்த கட்டுரை அச்சு அசலாக கிரிமினல் பிஜே அவர்கள், தமிழக முஸ்லிம்களின் தனிப்பெரும் இயக்கமான தமுமுகவிலிருந்து விலகி ஓடிய பின் பலருக்கு அனுப்பிய மெயில்களில் உபயோகப்படுத்தப்பட்ட ஃபாண்ட்டிலும் பாணியிலும் அமைந்திருக்கக் கண்டவர்கள், பிஜே தான் இதனை வேறொரு பொய்முகம் காட்டி ஃபோர்ஜரியாக அனுப்பியுள்ளதாக கருத்துத் தெரிவித்துள்ளனர்.
இது அவர்களின் சந்தேகம். உண்மையாகக்கூட இருக்கலாம்.
'தான் தான் அறிவாளி. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தில் உள்ள அத்துணை பேரும் முட்டாள்கள் - என்ற நினைப்பு!' - என்று அக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு தறுதலை ஜமாஅத்தில் நடக்கும் மோசடிகளையும், பித்தலாட்டங்களையும் வெளிச்சம் போட்டு காட்டும் யாரும் இவ்வாறு எண்ணுவதில்லை. விட்டில் பூச்சிகளாய் விழுந்து கிடக்கும் அந்த சகோதரர்கள், தவ்ஹீத் என எண்ணிக் கொண்டு தக்லீதின் பிடியிலுள்ள அச்சகோதரர்கள், உண்மை தவ்ஹீதை உணர்ந்து திருந்த வேண்டும். போலி ஆன்மீகவாதி பிஜேயின் பிடியிலிருந்து மீள வேண்டும் என்ற எண்ணத்தில் தான் தறுதலை ஜமாஅத்தின் தப்புத் தாளங்களை பட்டியலிட்டுக் கொண்டுள்ளனர்.
ஒருவேளை மேற்குறிப்பிட்டுள்ள ஸ்டேட்மெண்ட் தறுதலை ஜமாஅத்தின் தலைவர் கிரிமினல் பிஜேவின் எண்ணப்பாடாக இருக்கலாம்.
ஏனெனில் அவர் தான்,
தியாகங்கள் செய்து மார்க்கத்தை பரப்பிய இமாம்களை இழிவாகப் பேசுபவர்.
தியாகச் செம்மல்களான உத்தம சத்திய சஹாபாக்களை கிரிமினல் என்றும் ரவுடி என்றும் நாகூசாமல் விமர்சித்தவர்.
கண்ணியத்திற்குரிய உம்மஹாத்துல் முஃமின்களை கண்ணிய குறைவாக விமர்சித்தவரை அருகில் வைத்து, நெஞ்சோடு அரவணைத்து உலக மகா தாயீயாக உயர்த்திப் பிடிப்பவர்.
இமாம்கள், நபித்தோழர்கள், நபித்தோழியர், நபிகளாரின் மனைவியர் என படிப்படியாக முன்னேறி நபி தாவூத் (அலை) அவர்களைப் பற்றி கூட இட்டுக்கட்ட தயங்காதவர்.
இவையும் இவற்றுக்கு மேலும் (இழி) குணங்கள் நிறைந்தவரான கிரிமினல் பிஜே மேற்கண்ட ஸ்டேட்மெண்ட் படி எண்ணுவதில் வியப்பொன்றுமில்லை.
இதன் மூலம், ததஜவிலுள்ள அனைவரும் முட்டாள்கள் என தலைமை கொண்டுள்ள எண்ணம் வெளிப்பட்டுள்ளதால், சிந்திக்கும் திறன் படைத்தவர்கள் புரிந்து கொள்வார்கள் என்ற நம்பிக்கை துளிர்க்கிறது.
விஷயத்திற்கு வருவோம்.
ஷரீஅத் தீர்ப்பாயம் - என்ற பெயரில் லெட்டர் ஹெட் வைத்து, இஸ்லாம் தடை செய்த அவதூறு பரப்பும் பணிக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதை தோலுரித்து காட்டியதன் பின் தனது கிரிமினல் மூளையை கசக்கி, வழமை போல் சம்பந்தமில்லாத ஒன்றைக் காட்டி எடுத்து வைக்கப்பட்ட ஆதாரத்தை பொய்ப்படுத்த பெரு முயற்சி செய்துள்ளனர்.
இது ததஜவின் வழக்கமான தகிடுதத்தங்களில் ஒன்று என்பதால், இனியும் ஏமாற சமுதாயம் தயாராக இல்லை.
அதாவது, மக்காவிலிருந்து அவதூறு பரப்ப ஆலோசித்து முடிவெடுத்து அங்கீகாரத்துக்காக தலைமைக்கு அனுப்பி வைக்கப்பட்டது 10.08.2005. (இதனை அவர்கள் மறுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது) இதற்கு தலைமையிலிருந்து அங்கீகாரத்துடன் அனுமதி கடிதம் அனுப்பப்பட்டது 15.09.2005 இல்.
ததஜ சவுதி கூட்டமைப்பின் 10.08.2005 தேதி கடிதத்தை மறுக்காதவர்கள், ததஜ தலைமையின் 15.09.2005 தேதி கடிதத்தை மட்டுமே ஃபோர்ஜரி எனக் கூக்குரலிடுகின்றனர்.
இக்கடிதம் ஃபோர்ஜரி அல்ல என்பதனை நிரூபிக்கும் முன், நமது கேள்வி.
சவுதி ததஜ கூட்டமைப்பின் 10.08.2005 தேதி கடிதத்திற்கான தலைமையின் பதில் என்ன? பதில் என்றய தேதியில் அனுப்பப்பட்டது?
இந்த கேள்விகள் யாருக்கும் எழுந்து விடக்கூடாது என்ற எண்ணத்தில் தான், மக்காவிலிருந்து அனுப்பப்பட்ட 10.08.2005 கடிதத்திற்கு சற்றும் சம்பந்தமில்லாத, தம்மாம் கிளையின் உட்கட்சி தகராறுகளையும், அதற்கென நடைபெற்ற கட்ட பஞ்சாயத்து தகவல்களையும் தந்து அத்தோடு அதற்கு தீர்வாக 'ஷரீஅத் தீர்ப்பாயம்' லெட்டர் ஹெட்டில் அனுப்பப்பட்ட கடிதத்தையும் வெளியிட்டு வாசகர்களின் கவனத்தை திசை திருப்பும் திருகுதாள முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
முஸ்லிம் சகோதரர்களே! உண்மை தவ்ஹீத் சிந்தனைவாதிகளே! சுதாரித்துக் கொள்ளுங்கள் இல்லையேல் இந்த போலி ஆன்மீகவாதியின் பிடியில் சிக்கி இம்மையில் சீரழிவதோடு, மறுமையிலும் நஷ்டத்தை அனுபவிக்க நேரிடும்.
குர்ஆன், ஹதீஸ் மேற்கோள்கள் எதுவுமே இல்லாமல், தன் சுய இலாபத்திற்காக அவதூறு பரப்ப அனுமதித்தும், தனது கட்சி நிர்வாகிகளை அங்கீகரிப்பதற்கும் ஏற்படுத்தப்பட்ட உலகின் முதன்முதல் 'ஷரீஅத் தீர்ப்பாயம்' - வெட்கம் வெட்கம்.
ஷரீஅத் தீர்ப்பாயம் - என்று பெயர் வைத்துக் கொண்டு அவதூறுக்கு அங்கீகாரம் அளித்த ததஜவின் தோலுரிக்கப்பட்ட தினம் 28.10.2006.
இக்கடிதம் ஃபோர்ஜரி என பொய்யாக கூறி அதனை நிரூபிக்க பொய் முகம் காட்டி ஃபோர்ஜரியாக செட்அப் செய்து ததஜவின் அடிவருடி மெயில் அனுப்பிய தினம் 08.11.2006.
ஆக எதையாவது எழுதி, உளறிக்கொட்டி கிளறி மூட எடுத்துக் கொண்ட காலம் - 12 நாட்கள்.
(ஃபோர்ஜரியாக தகவல்களை புரட்ட 12 நாட்கள் மூளையை கசக்கி இப்படி ஒரு பித்தலாட்ட மெயில் அனுப்பி அசிங்கப்படத்தான் வேண்டுமா?)
பிஸ்மில்லாஹ்வை அரபியில் எழுதுவது, தமிழில் எழுதுவது என்ற வேறுபாட்டை வைத்துக் கொண்டு இதனை ஃபோர்ஜரி என நிரூபிக்க முயற்சித்துள்ளார்.
இது தான் கிரிமினல் பிஜெயின் வழிமுறை.
இந்த வித்தியாசத்தை சுட்டிக்காட்டி இரண்டும் ஒரே இடத்திலிருந்து வந்ததல்ல - என்று ஒரு தமுமுககாரன் முதலிலேயே சொல்லியிருந்தால் .. .. .. - கைலியை மடித்துக் கொண்டு அரபியில் எழுதினால் என்ன, தமிழில் எழுதினால் என்ன. இரண்டும் ஒன்று தானே. இதனைக்கூட புரிந்து கொள்ள முடியாத இவர்கள் எப்படி இஸ்லாத்தை புரிந்து கொள்வார்கள் என கர்ஜித்திருப்பார்.
உடனே தொண்டரடிப்பொடியினரும் அப்படியே வழிமொழிந்திருப்பர் (அவரது பாஷையில் வாந்தி எடுத்திருப்பர்)
ஆனால், இப்பொழுது காட்சி வேறு. ஏனவே தான் வழமையாக தமிழில் மட்டுமே எழுதப்படுவது போலவும், இதில் அரபியில் எழுதியுள்ளதால் ஃபோர்ஜரி என்றும் புலம்பியுள்ளார்.
பாவம், அவர் அரபியிலும் எழுதிய பல தபால்கள் பல பேரிடத்தில் உண்டு என்ற உண்மையை மறந்து விட்டார்.
அதேபோல் 15.09.2005 இல் எங்கும் குடந்தை வசூல் ஆரம்பிக்கும் முகாந்திரம் கூட இருக்க வில்லை என முகாரி பாடியுள்ளார்.
நாமறிந்தவரை ஆகஸ்ட் 2005 இலேயே கும்பகோணத்திற்கான வசூல் வேட்டை துவங்கி விட்டது. தேவைப்பட்டால் அதை ஆதாரங்களோடு நிரூபிப்போம். இன்ஷா அல்லாஹ்.
ஒரு வாதத்திற்காக செப்டம்பர் 2005 இல் வசூல் வேட்டை நடத்தப்பட வில்லையென வைத்துக் கொண்டால், ரமளான் மாதத்தில் ஊருக்கு ஊர் டிஜிட்டல் பேனர் வைக்கப்பட்டது எப்படி? ஒருவேளை போயஸ் தோட்டத்து பொன் மகளின் மந்திரமோ???
எப்படி உளறுவாய் உமரின் உளறல்களுக்கு எல்லையில்லையோ, அதேபோல் தறுதலை ஜமாஅத் கிரிமினல் பிஜேயின் ஃபோர்ஜரிகளுக்கும், பொய்முகங்களுக்கும் முடிவேயில்லை.
விரிவான தகவல்களுடன் விரைவில்.. .. ..
வஸ்ஸலாம்
ராவுத்தர் 11.11.2006
0 Comments:
Post a Comment
<< Home