Tuesday, March 14, 2006

உண்மையாகிப் போன தினகரன் நியூஸ்:
தமுமுகவை விட்டு பீஜே பிரிந்து செல்வதற்கு வாயில் வந்தவாரெல்லாம் பல காரணங்களை பீஜே கூறினார். அவைகளாவன.
1. தமுமுக தன்னை திட்டமிட்டு சதிசெய்து நீக்கிவிட்டதாக கூறினார்.

பல காரணங்களுக்காக அவர் கூறும் இந்த வாதத்தை ஏற்க எனது மனம் மறுத்தது. (அ) தமுமுகவுக்கு என்று தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் வேறு பல பதவிகளில் பொறுப்பாளர்கள் இருந்தாலும், பீஜேயின் சொல்லை அப்படியே பின்பற்றக் கூடியவர்களாக அவர்கள் இருந்தார்கள். அவர்கள் மட்டுமின்றி கடைநிலை தொண்டன் கூட அவரது சொல்லுக்கு மதிப்புக் கொடுத்தான். இன்னும் சொல்லப்போனால் தமுமுகவின் மீது பீஜே அவர் பிரிந்து செல்லும் வரை எதேச்சை அதிகாரம் செலுத்தி வந்தார். இது நான் அறிந்த செய்தியாகும். தமுமுகவில் இருக்கும் மற்றவர்கள் திட்டமிட்டிருந்தாலோ அல்லது சதித்திட்டம் தீட்டியிருந்தாலோ ஒரேயொரு வார்த்தையில் அவற்றை தட்டிவிட்டிருக்க முடியும். அடுத்து,
(ஆ) மசூரா என்னும் ஆலோசனைக் கூட்டம் என்பது நபி (ஸல்) அவர்களின் சுன்னத் என்றும் நடைமுறையாகும். இயக்கம் என்று இருந்தால் ஒரு நிர்வாகி மற்ற நிர்வாகிகள் மீது தவறான எண்ணம் தோன்றவோ, மனத்தாங்கள் ஏற்படவோ வாய்ப்பு உள்ளது. இப்படிப்பட்ட கசப்பான சம்பவங்களை ஒருவருக்கொருவர் பரஸ்பரம் விவாதித்து மீண்டும் சுமுக நிலைக்கு வருவதற்குத் தான் இந்த மசூராக்கள் கூட்டப்படுகின்றன.ஆனால் இந்த மசூராவில் பீஜே தன்னைப்பற்றிய விமர்சனங்களை கேட்டவுடன் அதற்கான பதிலையும் தந்துவிட்டு ஓர் அறிவிப்பையும் செய்கிறார். தான் தமுமுகவிலிருந்து அனைத்துப் பொறுப்புக்களிலிருந்தும் அடிப்படை உறுப்பினரிலிருந்தும் கூட விலகிக் கொள்வதாக அறிவித்தார். மனிதர்கள் என்றால் விமர்சனங்களுக்கு அப்பார்ப்பட்டவர்களா?இப்படியொரு சம்பவத்தை நடத்திக்காட்டி மசூராவிற்கு புது இலக்கணம் வகுத்ததோடு, மசூரா என்றால் நன்மை ஏற்படுவதை விட தீமைதான் ஏற்படுகிறது என்ற மனப்போக்கிற்கு வழி வகுத்தார்.

2.தமுமுக தவ்ஹீது கொள்கைக்கு எதிரானது என்று குற்றம் சுமத்தினார்.

நான் அறிந்தவரை தவ்ஹீது என்பது தனி மனிதனின் பால்பட்டது. அதை இயக்கத்தோடு தொடர்புபடுத்துவது என்பது சரியில்லை. தமுமுகவில் இருக்கக்கூடிய அத்தனை பேரும் தவ்ஹீதுவாதிகள் அல்ல. ஜாக் இயக்கத்தில் இருக்கும் அத்தனை பேரும் எப்படி தவ்ஹீதுவாதிகள் இல்லையோ அப்படி. ஏன் தவ்ஹீது வட்டத்தில் இருக்கும் தங்களை தவ்ஹீதவாதிகள் என்று சொல்லிக் கொள்ளுபவர்களுக்கு இடையிலும் தவ்ஹீதை பின்பற்றாதவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.தமுமுக தவ்ஹீதுக்கு எதிரான இயக்கம் என்பது போன்ற மாயையை பீஜே ஏற்படுத்தினார். முதலில் தமுமுக தவ்ஹீதுக்காக ஏற்படுத்தப்பட்டது அல்ல. தவ்ஹீதுவாதிகளால் கலிமாச் சொன்ன அனைத்து முஸ்லிம்களுக்காக ஏற்படுத்தப்பட்ட சமுதாய பேரியக்கம் தான் தமுமுக. இதில் தமுமுகவை எந்தவகையில் தவ்ஹீதோடு தொடர்புபடுத்த முடியும். தமுமுகவா? தவ்ஹீதா? என்ற கேள்வியே பிழையான கேள்வியாகும். அதாவது, சமுதாயமா? தவ்ஹீதா? என்று கேட்பது எவ்வாறு தவறானதோ அதுபோன்ற கேள்வியாகும். யாராக இருந்தாலும் இரண்டும் வேண்டும் என்று தான் கூறுவார்கள். இந்த சமுதாய பேரியக்கத்தைத்தான் தவ்ஹீதோடு தொடர்பு படுத்தி இது தவ்ஹீதுக்கு எதிரானது என்று பீஜே செய்யும் பிரச்சாரத்தை ஒன்றும் அறியா மக்கள் நம்பி சரி காணுகிறார்கள். அல்லாஹ் அவர்களுக்கு தெளிவைத் தருவானாக. அதனால் நான் அறிந்தவரை இதுவும் அவர் தமுமுகவிலிருந்து விலகிச் செல்வதற்கு சரியான காரணமாக எனக்குப்பட வில்லை.

3.இதற்கிடையில் தினகரனில் ஒரு செய்தி 25.04.2004 அன்று வெளியாகி இருந்தது. அந்த செய்தியில்,
அனைத்து முஸ்லிம்களின் முழு ஆதரவைப் பெற்ற தமுமுகவை சிதைப்பதற்காக அம்மா கட்சியினர் திட்டமிட்டனர் என்றும், அதற்காக முன்னால் அமைப்பாளர் ஒருவரை தேடிப்பிடித்தார்களாம் என்று எழுதப்பட்டுள்ளது.

கா.அ.முஹம்மது பழுலுல் இலாஹி, துபையிலிருந்து சொல்கிறார்.
நான் தாயகத்தில்; இருந்தபோது ஒரு அதிகாரி 2005 ஆம் ஆண்டே சொன்னார். வருகின்ற தேர்தலில் த.த.ஜ. ஆதரவு அ.தி.மு.க.வுக்குத்தான். எல்லாம் முடிந்து விட்டது. பார்லிமெண்ட் தேர்தலில் த.மு.மு.க.வை உடைக்க பி.ஜெ.க்கு நாங்கள்தான் பணம் வாங்கிக் கொடுத்தோம் என்றார். அதிகாரி சொல்லாமல் பொய்யாக நான் இதைச் சொல்லி இருந்தால் அல்லாஹ் என்னை நாசமாக்கட்டும். அதிகாரி சொல்லாமல் பழுலுல் இலாஹி பொய் சொல்கிறார் என்று யார் மறுத்தாலும். அவர்கள் மறுப்பது பொய்யாக இருந்தால் அல்லாஹ் அவர்களை நாசமாகட்டும் என்று கூறி மறுக்கச் சொல்லுங்கள். பி.ஜெ. பின்னால் இருப்பவர்களில் அப்பாவிகள் இருந்தால் அவர்களது ஹிதாயத்துக்குத் துஆச் செய்வோம். பொய் என்று தெரிந்து கொண்டே பி.ஜெ. மாதிரி பித்தலாட்டம் பண்ணி சமுதாயத்திற்கு துரோகம் செய்தால். யா அல்லாஹ் நீ அவர்களை எப்படி பிடிக்க வேண்டுமோ அப்படி பிடி என பிரார்த்திப்போம்.
முஸ்லிம்களிடம் அதிக செல்வாக்கைப் பெற்ற தமுமுக எனும் தன்னலமற்ற இயக்கத்திலிருந்து விலகுவதற்கு பீஜேக்கு எப்படி மனது வந்தது என்று யோசித்துக் கொண்டு இருக்கும் போது பீஜே சொன்ன அத்தனை காரணங்களும் பச்சைப் பொய், அதிமுகவினர் சந்தித்தது தான் காரணம் என்று இப்போது விளங்கிக் கொண்டேன்.
அபூஅன்சாரி 15.03.2006

3 Comments:

At 1:05 AM, Blogger முத்துப்பேட்டை said...

This comment has been removed by a blog administrator.

 
At 1:06 AM, Blogger முத்துப்பேட்டை said...

Anonymous has left a new comment on your post "3/15/2006 11:00:04 AM":

neenga ipppo enna thaan sola varinga pj tmmk irrunthu poonathu sariya thaaavara

sari endral athaapathi neenga enn kavalai paduringa ..attumandaigal ellarukum veeduthalai keedaithathu endru rebublic day maathiri celebrate paanalame

athai vitu en sir avvar paranthu poonare endru paaduhiri....

 
At 1:15 AM, Blogger முத்துப்பேட்டை said...

நீங்க இப்ப என்ன தான் சொல்ல வர்ரீங்க, பிஜெ தமுமுக (விலி)ருந்து போனது சரியா? தவறா?

சரி என்றால் அதைப்பத்தி நீங்க ஏன் கவலைப் படுறீங்க! .. ஆட்டுமந்தைகள் எல்லோருக்கும் விடுதலை கிடைத்தது என்று ரிபப்ளிக் டே மாதிரி செலிப்பரேட் பண்ணலாமே! (இது ஆங்கிலத்தில் உள்ள விமர்சனம் படிப்பதற்கு ஏதுவாக தமிழில் தந்துள்ளோம்.)

விமர்சனம்:

அவர் தமுமுக விலிருந்து விலகியது சரியா? என்றால்,
ஆமாம், மிகச் சரியான செயல். ஆனால், அதற்காக மக்களிடம் எடுத்து வைத்த வாதங்கள் தவறானவை. இட்டுக் கட்டப்பட்டவை. உண்மைக்கு மாற்றமானவை.

அவர் விலகியது சரிதான். ஏனெனில், சமுதாய முன்னேற்றத்திற்காக பாடுபடும் ஓர் இயக்கத்தில் சமுதாய மக்களை ஏமாற்றிப் பிழைக்கும் எண்ணமுள்ள ஒரு சுயநலவாதி எப்படி இருக்க முடியும்?

ஆனால் விலகிய சமயத்தில் தமுமுக தவ்ஹீதுக்கு எதிரானது என்றார். உண்மையில் தமுமுக வின் சேவைகளை முன்னிறுத்தியே பல இடங்களில் தவ்ஹீது மேடை போடப்பட்டதை மறந்தார். மக்களிடம் மறைத்தார்.

அதேபோல் அமானிதமாக ஒப்படைக்கப்பட்ட பொறுப்புகளை அலட்சியமாக கைகழுவினார். அமானிதமாக ஒப்படைக்கப்பட்ட சொத்துக்களை சுருட்டிக் கொண்டார்.

எல்லாவற்றிற்கும் மேலாக சமுதாயத்தை அரசியல்வாதிகளிடம் (ஜெ ஜெவிடம்) அடகு வைத்தார். அல்ல தவறு விற்றுவிட்டார். எனவே அவை குறித்த உண்மைகளை அவ்வப்போது சமுதாய மக்களிடம் சேர்க்க வேண்டியது கடமையாகிறது. அதனால் தான் அவரின் பொய் முகமூடிகளை அவ்வப்போது தோலுரித்துக் காட்கிறோம்.
(முத்துப்பேட்டையான் 12.04.2006)

 

Post a Comment

<< Home