Thursday, March 22, 2007

சிறுபான்மையினருக்கு பிரதிநிதித்துவம்

பணியாளர் தேர்வுக்குழுக்களில் சிறுபான்மையினருக்கு பிரதிநிதித்துவம்
மத்திய அரசுக்கு தமுமுக நன்றி!

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத் தலைவர் பேராசிரியர். எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் வெளியிடும் அறிக்கை

பத்து அல்லது அதற்கு மேற்பட்டோரை அரசு வேலைக்கு தேர்ந்தெடுப்பதற்காக அமைக்கப்படக்கூடிய பணியாளர் தேர்வுக்குழுக்களில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்த தலா ஒருவர் கட்டாயம் இடம்பெற வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதை மாநிலங்களவையில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஏ.ஆர். அந்துலே நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.

மத்திய அரசின் இம்முடிவை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறது.

கடந்த மார்ச் 7ம் தேதி தமுமுக சார்பில் நடத்தப்பட்ட டெல்லி பேரணியிலும், சமூகநீதி மாநாட்டிலும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பிரகடனமாக வெளியிட்டிருந்தோம். இப்பிரகடனத்தை இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் அவர்களிடம், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் திருமதி சோனியா காந்தி அவர்களிடமும் நேரில் வழங்கினோம். தமுமுக முன்வைத்த கோரிக்கைகளில் ஒன்றை நிறைவேற்ற இப்போது உத்தரவிடப்பட்டுள்ளது.

மேற்கண்ட உத்தரவை வழங்கியதற்கு மாண்புமிகு இந்திய பிரதமர் மன்மோகன் சிங், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி அவர்களுக் கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

டெல்லி பிரகடனத்தில் ஒரு கோரிக்கை அரசு அறிவிப்பாக வெளிவந்திருப்பதில் ஆறுதலாக இருக்கிறது. இதன் மூலம் ரயில்வே, மாநில மற்றும் மத்திய போலீஸ் படைகள், வங்கிகள், அரசுத் துறை நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு பணியாளர்களை தேர்ந்தெடுக்கும்போது சிறுபான்மையினர் இனி கவனத்தில் கொள்ளப்படுவார்கள் என நம்புகிறோம்.

இது அறிவிப்பாக அல்லாமல், நடைமுறையில் செயலாக்கம் பெற வேண்டும். இதற்காக மத்திய, மாநில அரசுகள் கண்காணிப்பகம் ஒன்றையும் அமைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.

(எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ்)

நன்றி: தமுமுகவின் அதிகாரப்பூர்வ இணையதளம்


0 Comments:

Post a Comment

<< Home