Monday, January 14, 2008

உணர்வில் வெளியிட இயலாத நாடும் நடப்பும் - 23

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. ..

வ அலைக்கு முஸ்ஸலாம். வாங்க ஒமர் பாய். என்ன கையில சூட்கேஸோட வந்துருக்கீங்க. வெளியூர் போறீங்களோ.

போகல அஹமது. இப்பத்தான் சென்னைல இருந்து வர்றேன்.

சென்னைல இருந்தா!.. .. அப்போ ஏகப்பட்ட மேட்டர் இருக்குமே.

ஆமாமா. எப்போ இந்த நாரதர் சோ, நர மாமிச பட்சிணியான நரேந்திர மோடியை அழச்சுட்டு வரப்போறதா சொன்னாரோ அப்போ இருந்தே சென்னை பரபரப்பாயிடுச்சு. எப்பயும் போல இந்த மாதிரியான இஸ்லாமிய விரோதிகள, எல்லோருக்கும் இனங்காட்டுறதுக்காக தமுமுக பல போராட்ட முறைகள கட்டமைக்க ஆரம்புச்சுட்டாங்க.

அதுதான் எல்லா பத்திரிக்கையிலயும் வந்துருச்சே. நம்ம ததஜ கூட ஆர்பாட்டம்லாம் செஞ்சதா சொன்னாங்களே.

அதுல தான் வெஷயமே இருக்கு. நரேந்திர மோடிய எதுக்குறதுக்காக தமுமுக ஒரு வலுவான முன்னணியவே ஜனவரி 7ஆம் தேதியில உருவாக்கிடுச்சு. அந்த முன்னணியோட ஆலோசனைக் கூட்டம், பத்திரிகையாளர் சந்திப்புன்னு பரபரப்பா செயல்பட்டு மோடியப் பத்துன விழிப்புணர்வ தமிழ்நாடு முழுக்க பரவ வெச்சுடுச்சு.

ஓஹோ.. .. ..அதுக்கப்புறமா தான் நம்மாளு முழிச்சுக்கிட்டாரோ.

ஆமா அஹமது. தமுமுக – பாசிச எதிர்ப்பு முன்னணின்னு ஒரு அணியவே உருவாக்கி இரண்டு நாளைக்கு அப்புறமா, இனிமேயும் சும்மா இருந்தா, நம்மள சமுதாயம் உண்டு இல்லைன்னு பண்ணிடுவாங்கன்னு பயந்து போயி தான் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு செஞ்சுருக்காரு.

ஆர்ப்பாட்ட அறிவிப்ப அவரு எங்க செஞ்சாரு ஒமரு பாய். முனீரும் தொண்டியப்பாவும் தானே செஞ்சாங்க.

வாஸ்தவம் தான். சென்னைல அவுங்க தான் அறிவிப்பு செஞ்சாங்க. ஆனா அப்புறமா யாரு என்ன சொன்னாங்களோ தெரியல. நம்ம நந்தினிக்காக பிரிஞ்சு, நந்தினிக்காக சேர்ந்த இரண்டு பேரும் அதாங்க பிஜேயும், பாக்கரும் திருச்சில வச்சு பிரஸ் மீட் நடத்துனாங்க.

அப்புடியா சேதி... .. நம்ம தலவரு பிரஸ் மீட் வரைக்கும் தைரியமா வந்தாரா.. ... .. ஆனா ஆர்ப்பாட்டம் எதுலயும் அவரு தலய காணோமே.. .. ஒருவேள நாந்தான் சரியா கவனிக்கலியா.. ..

நீங்க சொன்னது சரிதான் அஹமது. நீங்க மட்டுமில்ல தமிழக முஸ்லிம்கள் எல்லோருமே சரியா கவனமா நம்ம தலவரோட திருகுதாளங்கள கவனிச்சுகிட்டு தான் இருக்காங்க. கருணாநிதிய எதிர்க்கிறதுக்கு மட்டும் உடனடியா களத்துல எறங்குற PJ, JJ வ எதுக்குறதுன்னா மட்டும் ஏன் ஓடி ஒளியுறார்ங்குறது தான் இப்போதைக்கு தமிழ் முஸ்லிம்கள் கேக்குற Million Dollar கேள்வி.

அதென்னங்க ஒமர் பாய் அம்மான்னு சொன்னாலே பணத்தோட தான் எதயும் சொல்லணுமா.

அப்புடியில்லிங்க அஹமது. எல்லோரும் கேக்குற கேள்வின்னு சொல்லப் போக அது எதேச்சயா அமைஞ்சுடுச்சு. ஆனா உண்மையிலேயே சில பேரு, அண்ணன் இப்புடி பம்முறதப் பாத்தா, போயஸ் தோட்டத்து பணப்பயிர் இப்பவும் அவருக்கு அபிஷேகம் செய்யப்படுதோன்னு கேக்கத்தான் செய்யுறாங்க.

ஆமா. ஒங்ககிட்ட கேக்கணும்னு நெனச்சுகிட்டு இருந்தேன். இந்த கோனிகா பஷீரு இப்பவும் அதிமுக கூட்டணியில தான் இருக்கோம்னு அறிக்கை உட்டாராமே. உண்மையா.

அந்த வெக்கக்கேட்ட ஏங் கேக்குறீங்க அஹமது. அந்தம்மாவே புடிச்சு தள்ளிவுட்டா கூட இவரு அங்கயிருந்து எளும்ப மாட்டாரு போல. இவருக்காக கும்பகோணத்துல கூடி கூத்தடிச்சத நெனெச்சா அத விட அவமானமா இருக்கு.
இதுக்கே இப்புடி வருத்தப்படுறீங்களே ஒமர் பாய். நடக்குற நடப்பப் பாத்தா நம்ம தலைவரு பிஜே கூட அங்கயிருந்து வெலகுனா மாதிரி தெரியலியே.

எப்புடி சொல்றீங்க அஹமது.

பின்ன என்னங்க. ஆட்சியில இருந்த போது அமைச்சர்களுக்கே மாடியிலிருந்து போஸ்குடுத்த பால்கனி பேபி ஜெயலலிதா, நரபலி புகழ் நரேந்திர மோடிய வரவேற்க போயஸ் தோட்டத்து வாசல்ல நின்னு காத்து கெடந்தாங்கன்னு செய்திலாம் வந்த பிறகு கூட கமுக்கமா இருந்தா என்ன அர்த்தம். கோனிகா பஷீர் மாதிரி சூடு சொரண இல்லாம ஒட்டிக்கிட்டு இருக்கமா அல்லது மோடிய விருந்துக்கு அழச்சதுக்கு கண்டனம் தெரிவிச்சு அதிமுக கூட்டணியில இருந்து விலகிட்டமா ஒண்ணுமே பேசாம இருந்தா என்ன அர்த்தமுங்க.

ஹா.. ..ஹா.. ..ஹா.. .. அண்ணனோட பாலிடிக்ஸே புரியாம பேசுறீங்க அஹமது. அவரு ஒண்ணுஞ் சொல்லாம இருந்தா தான், நீங்களோ நானோ ஃபோன் போட்டு கேட்டா, 'கலைஞரு இட ஒதுக்கீடு தந்தப்புறமா அவருக்குத் தான் ஆதரவுன்னு எப்பவோ எளுதி குடுத்தட்டமே அப்பவே நாம அதிமுக கூட்டணியில இல்லைன்னு தானே அர்த்தம்' அப்டீனு சொல்ல முடியும்.

அப்போ அதிமுக காரங்க கேட்டா!

நாங்க தான் டிசம்பர் 28 ல கூட்டம் போட்டு திமுகவுக்கு நாங்க எளுதி குடுத்தது படி நடக்க மாட்டோம்னு பப்ளிக்கா அறிவிச்சுட்டமே. அப்புடின்னா ஒங்களோட இருக்கோம்னு தான அர்த்தம்னு ஒரே போடா போட்டிருவாருல.

அடச்சே. ரொம்ப கேவலமா இருக்கு. இவரு தவ்ஹீதுன்னு சொன்னத நம்பி வந்த நமக்குத்தான் இப்போ தலகுனிவா இருக்கு.

இதயும் கேளுங்க அஹமது. 2004 ல அம்மா கிட்ட வாங்குன பணத்தல விண் டிவி ய வாங்கி, திரும்ப விண் டிவிய அம்மா கிட்டயே வித்து சில கோடிகள் சம்பாதிச்சாங்களே நம்ம நந்தினி நாயகர்கள். அந்த டிவி ய அம்மா கிட்ட திரும்ப விக்கும் போது போட்டுக்கிட்ட ஒப்பந்தத்துல தான் சஸ்தாவா ஒரு மணி நேர புரோக்கிராம் நடத்திக்கிட்டு வர்றாங்க. இவுங்க உண்மையிலேயே நரேந்திர மோடிக்காக ஜெயலலிதாவுக்கு கண்டனம் தெரிவிக்கிறதா இருந்தா ஒண்ணு போயஸ் தோட்டத்த முற்றுகை இட்டிருக்கணும், அல்லது விண்டிவி ல இருந்து வெளியேறி இருக்கணும். இது ரண்டுமே நடக்காதப்போ, இந்த கண்டணம்லாம் சும்மா நமக்காக நடத்தப்பட்ட கண்துடைப்பு நாடகம் தான்னு பல பேரு பேசிக்கிறாங்க போங்க.

என்னமோ போங்க ஒமர் பாய். இவரு வெளயாடுற அரசியல் சித்து வெளயாட்டுல நாம தான் அப்பாவி பலிகடாவா ஆகிகிட்டு இருக்கோம்னு நெனக்கிறேன்.

சரி சரி ரொம்ப கவலப்படாம கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க. எனக்கும் பிரயாண அசதியா இருக்கு, பெறகு சந்திப்போம்.

வஸ்ஸலாம்
முல்லா 15.01.2008

0 Comments:

Post a Comment

<< Home