Wednesday, January 02, 2008

உணர்வில் வெளியிட இயலாத நாடும் நடப்பும் - 22

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. .. ..


வ அலைக்கும் அஸ்ஸலாம். வாங்க. வாங்க. ஒமர் பாய். ஒங்களத்தான் எதிர்பாத்துக்கிட்டு இருந்தேன்.

நானும் தான் ஒங்கள்ட்ட பல விஷயங்களப் பத்தி பேசுறதுக்காக இன்னைக்கி சீக்கிரமா ஓடி வர்றேன்.

சரி சரி. நேரத்த கடத்தாம, விறுவிறுன்னு எடுத்து வுடுங்க.

அஹமது. கடந்த முற நாம சந்திச்சப்போ, சென்னைல நடந்த மாநாட்டப்பத்தி பேசிக்கிட்டோம்ல, அத மாதிரி இன்னிக்கு சென்னைல நடந்த ஆர்ப்பாட்டத்துல இருந்து ஆரம்பிப்போம்.

அதுவும் சரிதான். நானே கேட்க நெனெச்சேன். சொல்லுங்க சொல்லுங்க.

அந்த கொடுமைய எப்புடிச் சொல்றது அஹமது. சுருக்கமா சொன்னா, நரேந்திர மோடிக்குப் பின்னால கூடுன கூட்டத்துக்கும், இப்போ பிஜேக்கு பின்னால கூடுனவுங்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லைன்னு சொல்லலாம்.

என்ன ஒமர் பாய். இப்புடி சொல்லிப்புட்டீங்க.

தப்பே இல்லீங்க அஹமது. முன்னால் முதல்வர் ஜெ.ஜெக்கு மோடியும் கூட்டாளி, நம்மாளு பிஜேவும் கூட்டாளி தானே.

அதுக்காக இப்புடியா சொல்லுவாங்க.

இது மட்டுமில்லீங்க. அஹமது பாய். தேர்தல் பிரச்சார கூட்டத்துல போலி என்கவுண்டர நியாயப்படுத்தி மோடி சொன்னதும், அங்க இருந்தவங்க எல்லோரும் அத ஆமோதிச்சாங்களே, அதே மாதிரி, இப்போ பிஜே விவரங்கெட்ட தனமா பேசுன எல்லாத்துக்கும் ஒத்து ஊதி, கூப்பாடு போட்டு முஸ்லீம்கள்ல இப்படியும் ஒரு மந்தைக் கூட்டமான்னு மத்தவங்க கேலி பேசுறமாதிரி ஆக்கிட்டாங்க போங்க.

அவரு பின்னால இப்போ நிக்கிற கூட்டம், எதையும் யோசிக்க இயலாத ஆட்டு மந்தைக் கூட்டம்னுதான் எல்லோருக்கும் தெரியுமே. நீங்க அவரு பேசுன விஷயத்த சொல்லுங்க ஒமர் பாய்.

விவரங்கெட்ட பேச்சுன்னு தான் முதல்லயே சொல்லிட்டேனே. அப்புறம் அத வேற வெளக்கமா முதல்ல, இவரு எந்த வெளம்பரத்த புடிச்சு தொங்கிக்கிட்டு உளர்ராரோ அது போன மாசமே வந்திருக்கு. அத பாத்ததும், தமுமுக சம்பந்தப்பட்ட அதிகாரிகள புடிச்சு விசாரிச்சதுல, அது பழைய ஜி.ஓ, அதுனால சுழற்சி முறைல வர்ற வேலைவாய்ப்புன்னு தெரிஞ்சுகிட்டு ஒடனடியா முஸ்லிம்கள், கிருத்துவர்கள்னு தனித்தனியா லிஸ்ட் போட்டிருக்குறதுனால கிருத்தவர்கள் 16 வது இடத்துலயும், முஸ்லிம்கள் 28 ஆவது இடத்துலயும் இருக்குறத கண்டுபுடிச்சு, உடனடியா அத மாத்தி கிருத்தவர்களும் முஸ்லிம்களும் அடுத்தடுத்து லிஸ்ட்ல வர்றா மாதிரி திருத்தி அமைக்கனும்னு அதிகாரிகளுக்கு எழுதியிருக்காங்க. அதுனால இனி வரக்கூடிய வேலைவாய்ப்புகள்ல முஸ்லிம்களுக்கு உடனடியா வாய்ப்பு கிடைக்கும் சந்தர்ப்பம் அமைஞ்சுருக்கு. ஆனா இப்புடி எதயுமே செய்யாம, சும்மா கூட்டத்தக் கூட்டி, அவுங்களுக்கும் தவறான தகவல் தர்ற இவர மோடியோட ஒப்பிட்டதுல என்ன தப்பு இருக்கு சொல்லுங்க பாப்போம்.

அப்போ சரிதான். அது இருக்கட்டும். அங்க கூடுன கூட்டத்துல ஒரு விஷயத்த கவனிச்சீங்களா.. .. தவ்ஹீது, தவ்ஹீதுன்னு பேருக்கு அடிச்சுகிறவுங்க ஆணும் பெண்ணுமா கலந்து நின்னத கவனிச்சீங்களா.

நாசமாப் போச்சு. இந்த தர்ஹாவாதிகள்ல்லாம் களியக்காவிள விவாதத்துக்கப்புறமா நம்மளப் போட்டு பொறட்டி எடுத்துக் கிட்டிருக்குற நேரத்துல இப்புடி நடந்துருச்சேன்னு நான் அமுக்க நெனச்சா நீங்க கிண்டுறீங்க.

அது எப்புடிங்க ஒமர் பாய் கண்டுக்காம விட முடியும். ஆரம்ப காலத்துல தர்ஹாவுல நடக்குற அனாச்சாரம்ன எதயெல்லாம் பிஜே சொன்னாரோ, அது இப்போ அவரு கூட்டத்துல நடக்கும் போது எப்புடி சொல்லாம இருக்க முடியும்.

அஹமது.. .. ஆணும், பொண்ணும் கலந்து நின்னதப்பாத்து இவ்வளவு ஆவேசப்படுறீங்களே. இந்த ஆர்ப்பாட்டத்த அவுங்க ஸைட்ல போட்டிருக்குறத பாத்தா என்ன சொல்லுவீங்களோ.. .. ..

அப்புடி என்ன போட்டிருக்காங்க ஒமர் பாய்.

அஹமது, தொழுகைக்கு நிக்கிற வரிசயப்பத்தி ரஸுலுல்லாஹ் என்ன சொல்லியிருக்காங்க.

முதல் வரிசையில ஆண்களும், அப்புறமா சிறுவர்களும், கடைசியா பெண்களும் வரிசையா நிக்கணும்னு சொல்லியிருக்காங்க.

அப்புடித்தான் நிக்கணும். ஆனா அங்க என்ன நடந்ததுன்னா.. .. ..

எல்லோரும் கலந்து நின்னு தொழுதாங்களோ.. .. ..

வரிசை மாறி மாறி நின்னது மட்டுமில்லாம, அத ஃபோட்டோ எடுத்து நம்ம ஸைட்டுல போட்டிருக்காரு பாருங்க அஹமது.. .. அதுல தான் நம்ம நந்தினி மணானனோட டச் இருக்கு.

அப்புடி என்னத்த செஞ்சுட்டாரு.

நம்ம பெண்கள இப்புடி காடசிப் பொருளாக்கியிருக்க வேணாம்னு பல பேரு திட்டுற அளவுக்குள இருக்கு.

சரி விடுங்க. பெண்கள் விஷயத்துல எந்த அளவு மூடி மறைச்சாலும், நம்ம தலைவருங்க பிஜே, பாக்கரு, சைபுல்லாஹ். அத்துர்ரஹ்மான்னு பல பேரோட லட்சணம்தான் சந்தி சிரிச்சுடுச்சே. இதுக்கு மேலயும் அதுல புதுசா என்ன இருக்கு. விடுங்க. வேற என்ன செய்திகள் ஆர்ப்பாட்ட கூட்டத்துல. அதச் சொல்லுங்க.

வேற அதுல குறிப்பிட்டு சொல்றா மாதிரி வேற ஒண்ணுமில்லை. ஆனா கொஞ்ச நாளா ஒரு விஷயத்தை ஒங்ககிட்ட பகிர்ந்துகணும்னு நெனெச்சேன்.

அது என்னங்க ஒமர் பாய்.

அதாவது அஹமது, நம்ம தலைவர்கள் மும்மூர்த்திகளா எல்லா இடத்துலயும் நிப்பாங்களே, ஆனா இப்போ அது இருவர் அணியாயிடுச்சே. மூணாமவருக்கு என்ன ஆச்சுன்னு தான் யோசனை.

வெளங்களியே ஒமர் பாய்.

2004 ல மிகப்பெரிய மேடை நாடகத்துல குணச்சித்திர வேடத்துல நடிச்சு எல்லோருடைய அனுதாபத்தையும் பெற்றாரே நம்ம மர்மஸ்தான அடி புகழ், ஸ்டான்லி நாயகரத்தான் சொல்றேன்.

அடேடே... .. ஆமா நாங்கூட மறந்துட்டேன். நம்ம அலாவுதீனுக்கு என்ன ஆச்சுங்க ஒமர்பாய். ததஜவுல இருந்து வெலகிட்டாரா, என்ன ... .. ஒரு நெகழ்ச்சிலயும் பாக்க முடியலியே.

அஹமது.. .. ..அவரு மட்டுமில்ல. அவர மாதிரி இன்னுஞ்சில பேரு எந்த காலத்திலியும் நம்ம தலவரு பிஜேவ விட்டுட்டு போக மாட்டாங்க. அந்த அளவு ஸ்;ட்ராங்கான பொருளாதார காரணங்கள் இருக்கு.

அதெல்லாம் சரி. இப்போ எங்கதான் போனாரு அவரு.

நமக்கு கெடச்ச தகவல்படி, இதுவர தவ்ஹீது பேரச் சொல்லி வசூல் பண்ணுனது, போயஸ் தோட்டத்து பணப்பயிர அறுவடை செஞ்சதுன்னு ஏகப்பட்ட சொத்து சேர்ந்துடுச்சுல்ல. அத முதலீடு பண்ண மலேசியாவுல பினாமியா உக்காந்து கிட்டு இருக்குறதா தகவல்.

அடப்பாவமே. கத இப்புடிப் போவுதா. அதுதான் ஆளக் காணமா.

நீங்க கவனமா பாத்தீங்க வையுங்க. 2004 ல இருந்து ஒட்டிக்கிட்டே இருக்குற இரட்டப் பிறவிங்க இரண்டே பேரு தான். மத்தவங்களய்லாம் தேவைக்கு ஏத்தாப்ல நம்ம தலைவரு பிஜே சேத்துக்குவாரு. காரியம் முடிஞ்சதும் களட்டி வுட்டுடுவாருன்னு ஒங்களுக்குத் தெரியாதா.

என்ன ஒமர்பாய். நீங்க இப்புடி பெரிய குண்டா தூக்கிப் போடுறீங்க.

அட 2004ல இருந்து பாருங்களேன். எஸ்.எஸ்.யு.வ மாநிலத் தலைவர்னாரு. அதுக்குப் பெறகு தானே தானைத் தவைராகி எஸ்.எஸ்.யு.வ து.தலைவருன்னாரு. இப்போ பாத்தா எந்த சந்திப்புலயும், எந்த மீட்டிங்லயும் அவர பாக்க முடியலியே.

அட ஆமா.

இப்புடி லிஸ்ட் போயிகிட்டே இருக்கு. ஆனா, அதப்பேசினா நமக்கு தான டயம் வேஸ்ட்.

யாரு வந்தாலும் போனாலும், நீங்க சொன்ன மாதிரி நந்தினி நாயகன் மட்டும் ஒட்டிப்பிறந்த இரட்டயரா அல்லவா இருக்காரு.

அந்த அளவுக்கு ஸ்ட்ராங்கான வியாபார ஒப்பந்தம்ல இருக்கு. அதுனால தான தவ்ஹீத காப்பாத்தப் போறோம்னு பேருக்கு சொல்லி வசூல் வேட்டைய வெற்றி அடைஞ்சாலும், விபச்சார குற்றம் சொல்லி வெளியேத்தியவரை மறுபடியும் ஞான ஸ்னானம் செஞ்சு பொதுச் செயலாளரா பதவி உயர்வு குடுத்து பக்கத்துல வெச்சுக்கிட்டாரு.

என்னத்த செய்றது ஒமர் பாய். நாமளும் தவ்ஹீதுங்குற பேற நம்பி இவரு பின்னால வந்துட்டு இப்போ விக்கவும் முடியாம கக்கவும் முடியாம பொலம்பிக்கிட்டு இருக்கோம்.

சரி சரி ரொம்ப கவலப்படாதீங்க. கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க. மறுபடியும் வேற விஷயங்களோட மறுபடியும் சந்திப்போம்.

சரி ஒமர்பாய். போயிட்டு வாங்க.


வஸ்ஸலாம்

முல்லா 31.12.2007

1 Comments:

At 5:40 AM, Anonymous Anonymous said...

What about JAQH?

 

Post a Comment

<< Home