Saturday, December 01, 2007

நன்றி அறிவிப்பு மாநாட்டில் மன நிறைவைத் தந்த குறைகள்

அசத்தி விட்டது, கலக்கி விட்டது கோவை த.மு.மு.க.

கோவையிலிருந்து வந்திருந்த தமுமுக ரயில்

த.மு.மு.க. நடத்திய நன்றி அறிவிப்பு மாநாடு சிறப்பாகவும் மன நிறைவாகவும் நடைபெற்று முடிந்தது. அது பற்றிய உள்ளும் புறமும் நிறைந்த நிறைவான செய்திகள் பலவற்றை பல வழிகளில் தெரிந்து இருக்கிறீர்கள். எனவே நிறைவான செய்திகள் பற்றி எழுதாமல் குறைகள் பற்றி எழுத உள்ளோம்.

100க்கு 100 அல்ல 100க்கு 200 என்ற அளவில் டபுள் வெற்றி பெற்றுள்ளது. இதற்கு ஒரே ஆதாரம் மாநாட்டுக்குப் பிறகு விண் டி.வி.யில் தோன்றிய நந்தினி நாயகர்கள் 3 நாட்களாக கொட்டிய வயிற்றெரிச்சல் வார்த்தைகளே.

மனப் பால் குடித்துக் கொண்டிருந்தார்கள்.

மாநாடு பிசு பிசுத்து விடும் என நந்தினி நாயகர்கள் கூறிக் கொண்டிருந்தார்கள். கோரிக்கை வைக்கத்தான் மக்கள் கூட்டம் கூட்டமாக வருவார்கள். நன்றி தெரிவிக்க யார்தான் வருவார்கள் என்று அவர்களுக்கு அவர்களே ஆறுதல் கூறி மனப் பால் குடித்துக் கொண்டிருந்தார்கள்.


முனீர் என்பவர் அவ்வப்போது தகவல் சொல்லிக் கொண்டே இருந்துள்ளார்.

மாநாடு அன்று திருவாளர் பி.ஜெ. கும்பகோணத்தில் இருந்துள்ளார். அவ்வப்போது மாநாடு பற்றிய லைவு - நேரடி தகவல்களை கேட்டுக் கொண்டே இருந்துள்ளார். மாநில செயலாளரான முனீர் என்பவர் அவ்வப்போது தகவல் சொல்லிக் கொண்டே இருந்துள்ளார்.

எதிர்பாரா கூட்டம் கூடி விட்டது. பல்லாயிரக் கணக்காணவர்கள் உள்ளே நுழைய முடியாமல் வெளியில் நிற்கிறார்கள். பஸ்களும் வேன்களுமாக வாகனங்களில் வந்தவர்களின் பல வாகனங்களை நிறுத்த விடாமலேயே ஒருவரைக் கூட கீழே இறக்க விடாமலேயே போலீஸாரால் திருப்பி விடப்பட்டுள்ளன.

இப்படி பல மாவட்ட வாகனங்கள் போலீஸாரால் திருப்பி விடப்பட்டுள்ளன. குறிப்பாக சேலம் மாவட்டத்திலிருந்து வந்த பஸ்களில் வரிசையாக வந்த 8 பஸ்கள் ஒட்டு மொத்தமாக யாரையும் இறங்க விடாமல் உள்ளும் புறமும் நிறைந்து விட்டது என்று கூறி போலீஸார் திருப்பி விட்டுள்ளார்கள்.

இதன் பிறகு வந்த வாகனத்தார், பராவாயில்லை ரோட்டோரமாக நின்று கேட்கிறோம் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். அதன் பிறகு அடுத்தடுத்து வந்த வாகனத்தாரிடம் நிகழ்ச்சி முடிந்து விட்டது என்று சொல்லி நிகழ்ச்சியின் ஆரம்பத்திலேயே போலீஸார் ஏராளமான வாகனங்களை திருப்பி அனுப்பி விட்டுள்ளார்கள்.

நேரடி தகவல்களை கேட்பதை நிறுத்திக் கொண்டார் வயிறு எரிந்த பி.ஜெ.

இந்த மாதிரியான செய்திகளைக் கேட்டு வயிறு எரிந்த பி.ஜெ. மாநாடுன்னா கூட்டம் வரத்தானே செய்யும் என தனக்குத் தானே ஆறுதல் கூறி தனது வயிற்றெரிச்சலை ஆற்றிக் கொண்டார். முனீருக்கும் ஆறுதல் கூறிவிட்டு வயிற்றெரிச்சல் தாங்க முடியாமல் மாநாடு பற்றிய லைவு - நேரடி தகவல்களை கேட்பதை நிறுத்திக் கொண்டார் வயிறு எரிந்த பி.ஜெ.

மாநாடு என்றால் மாதக் கணக்கில் விளம்பரங்கள் செய்வார்கள். 29 நாட்கள் இடைவெளியில் தேதி கூறப்பட்ட மாநாடு. எனவே மாதக் கணக்கில் விளம்பரங்கள் செய்வதற்கான வாய்ப்புகளே இல்லை. ஜனவரி 29 பேர்வழிகளான நந்தினி கட்சியினர் மாதிரி கோடிக் கணக்கில் செலவுகள் செய்து விளம்பரங்கள் செய்யவே இல்லை.

பெரும்பாலான சுவர்களில் டிசம்பர் 6 க்கான விளம்பரங்கள் எழுதப்பட்டு விட்ட பின்னரே நன்றி அறிவிப்பு மாநாடு தேதி அறிவிக்கப்பட்டது. எனவே மாநாட்டுக்கான போதிய சுவர் விளம்பரங்கள் செய்யவே இல்லை.

பகீரத முயற்சிகள் இல்லை. அலம்பல்கள் இல்லை. சலம்பல்கள் இல்லை. ஆட்களை திரட்டிக் கொண்டு வரவேண்டும் என்ற மிகச் சாதாரண முயற்சிகள் கூட செய்யப்படவே இல்லை.

நவம்பர் 24 நன்றி அறிவிப்பு மாநாடு என்ற மிக மிகச் சாதாரண அறிவிப்புகளையே அழைப்புகளாக ஏற்று மக்கள் வந்து விட்டனர்.

மாநாட்டுக்கு முன்பு வரை த.மு.மு.க.வினர் முறையாக மக்களை அணுகவில்லை. மக்களிடம் கொண்டு போய் செய்திகளை சேர்க்கவில்லை. சென்னையிலும் அதன் சுற்றுப் புற மாவட்டங்களிலும் தான் ஓரளவு பணிகள் நடக்கின்றன. தென் மாவட்டங்களில் நன்றி அறிவிப்பு மாநாட்டுப் பணிகள் அறவே நடக்கவில்லை என குறைபட்டுக் கொண்டேன்.

பட்டும் படாமலும் நடந்த கர்பலா காட்சிகள்.

நவம்பர் 24 நன்றி அறிவிப்பு மாநாடு நடந்து கொண்டிருக்கும்போது வெளியில் பட்டும் படாமலும் நடந்த கர்பலா காட்சிகள் பற்றி அறிந்ததும் மகிழ்ச்சி அடைந்தேன். த.மு.மு.க.வினர் முறையாக மக்களை அணுகாதது நல்லதாக ஆகி விட்டது.

வந்தால் வரட்டும் என்ற விதமாக நடந்து கொண்ட பின் கூட இவ்வளவு கூட்டம். அப்படியானால் முறையாக அழைத்து இருந்தால் நேரு உள் அரங்கத்தில் மாநாடு நடந்த அதே வேளையில் வெளி அரங்கில் கர்பலாதான் நடந்து இருக்கும். அல்லாஹ் காப்பாற்றி விட்டான். தென் மாவட்டங்களில் நன்றி அறிவிப்பு மாநாட்டுக்கான அழைப்புப் பணிகள் சரியாக நடைபெறாதது போதிய விளம்பரங்கள் செய்யாதது நல்ல காரியமாக ஆகி விட்டது.

நந்தினி நண்பர்கள் செய்திகளை பரப்பி மகிழ்ந்து கொண்டிருந்தார்கள்.

போதிய விளம்பரங்கள் இல்லை என அரசு தரப்பு குறைபட்டுக் கொண்டது. இது வாரப்பத்திரிக்கைகளிலும் செய்தியாக வந்தது. போதிய விளம்பரங்கள் இல்லை என உளவுத் துறை முதல்வருக்கு தகவல் கூறி விட்டது. எனவே கூட்டம் வராது. எனவே முதல்வரும் வரமாட்டார் என்று நந்தினி நண்பர்கள் செய்திகளை பரப்பி மகிழ்ந்து கொண்டிருந்தார்கள்.

போதிய விளம்பரங்கள் இல்லை என எந்த உளவுத் துறை முதல்வருக்கு தகவல் கூறியதோ அந்த உளவுத் துறை நவம்பர் 24ஆம் தேதி என்ன செய்தது தெரியுமா? மாலை 4 மணிக்கே வெளி மாவட்டங்களிலிருந்து மட்டும் நாற்பதாயிரத்துக்கு மேற்பட்டவர்கள் சென்னைக்கு வந்து விட்டார்கள் என்ற தகவலை பதிவு செய்துள்ளது.

அமைச்சர்களும் முதல்வரும் டிராபிக் ஜாமில் சிக்கிக் கொண்டார்கள்.

6.30க்கு மேல் 7மணிக்குள் அரங்கத்துக்கு வருவதாக முடிவு செய்து இருந்தார் முதல்வர். 4 மணிக்கே நாற்பதாயிரத்துக்கு மேற்பட்டவர்கள் வெளி மாவட்டங்களிலிருந்து வந்து விட்டார்கள் என்ற உளவுத் துறையின் இந்த தகவலை அறிந்தார் முதல்வர். உடனே 6 மணிக்கு முன்பே அரங்கத்துக்குள் போய் விட வேண்டும் என முன்னதாகவே உற்சாகத்துடன் புறப்பட்டுள்ளார். ஆனால் மாநாட்டுக்கு வந்தவர்கள் அவரை வர விடவில்லை. வழி நெடுகிலும் போக்கு வரத்து ஸ்தம்பித்து அமைச்சர்களும் முதல்வரும் டிராபிக் ஜாமில் சிக்கிக் கொண்டார்கள்.

மின்னல் வேகத்தில் வர வேண்டிய முதல்வர் மற்றும் அமைச்சர்கள் வாகனங்கள் டிராபிக் ஜாமில் மாட்டிக் கொண்டதால் மிதந்து வந்து அரங்கத்தை அடைந்தது. இவையெல்லாம் ஒருவகைக் குறைகள்தான் என்றாலும் மனக் குறைகள் அல்ல. மன நிறைவைத் தந்த குறைகள்.

நிறைவான செய்திகள் பற்றி எழுதாமல் குறைகள் பற்றி எழுத உள்ளோம் என கூறிவிட்டு மன நிறைவைத் தந்த குறைகள் பற்றி எழுதி உள்ளோமே. மன நிறைவைத் தந்த குறைகள் என்றாலே நிறைவான செய்திகள்தானே. இவை குறைகளே இல்லையே என எண்ணாதீர்கள். உள்ளும் புறமும் குறைந்த குறைமதியாளர்களால் கூறப்பட்ட குறைகள் பற்றியும் எழுத உள்ளோம்.

த.மு.மு.க.வின் நன்றி அறிவிப்பு மாநாட்டுக்கு செல்லாதீர்கள் என்று திருவாளர்கள் பிரச்சாரம் செய்தார்கள். நன்றி அறிவிப்பு மாநாடு நடத்துவது கீழ்தரமான செயல் என்றார்கள். இறுதியாக விண் டி.வி.யிலேயே தோன்றி போகாதீங்கம்மா என்று கெஞ்சினார்கள். இப்பொழுது புரிந்து இருப்பீர்கள். நந்தினிக்காகவே பிரிந்து நந்தினிக்காகவே சேர்ந்தார்களே அந்த திருவாளர்கள்தான் இந்த மாதிரி கெஞ்சினார்கள் பிரச்சாரம் செய்தார்கள்.

எடுபிடிகள் வாயடைத்துப் போனார்கள்.

நன்றி சொல்ல வேண்டியதுதான் அதற்காக இவ்வளவு மக்களை கூட்டி நன்றி சொல்ல வேண்டியது இல்லை. இப்படி தங்கள் எடுபிடிகள் மூலம் டி.வி.யில் பேச வைத்தார்கள். எந்த மக்களை கூட்டி கோரிக்கை வைக்கப்பட்டதோ அந்த மக்களை கூட்டி நன்றி தெரிவிப்பதுதான் முறை என்றதும் எடுபிடிகள் வாயடைத்துப் போனார்கள்.

நன்றி அறிவிப்பு மாநாடு என்பது குண்டி கழிவும் வேலை என நந்தினிக்காகவே ராஜினாமா செய்தவர் கூறி இருக்கிறார். சிலரைப் பார்த்து நடு ரோட்டில் நின்று குண்டி கழிவ போகிற கூட்டம் என கூறி இருக்கிறார்.

தேர்தலிலின்போது இட ஒதுக்கீடு கோரிக்கையை நிபந்தனையாக வைத்தார்கள். கருணாநிதி இட ஒதுக்கீடு தருவார் என ஓட்டு கேட்டார்கள். அப்படிப்பட்டவர்கள் நன்றி அறிவிப்பு மாநாடு நடத்துவதை கு.. க.. வேலை என கொச்சையான வார்த்தையால் விமர்சிக்கிறீர்கள். கருணாநிதி இட ஒதுக்கீடு தர மாட்டார். நரேந்திர மோடியை விட மோசமானவர் கருணாநிதி என்று சொன்னவர்கள் நீங்கள். அப்படிப்பட்ட நீங்கள். பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு நிபந்தனையற்ற ஆதரவு என்கிறீர்களே அது .. .. .. (இந்த இடத்தில் இருந்த இரண்டு எழுத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன) கிற மாதிரிதானே என பொதுவான ஒருவர் பதில் கூறி இருக்கிறார். இது நவம்பர் 22ஆம் தேதி நடந்த சம்பவம்.

தமிழகத்தின் மோடியும் நந்தினிக்காகவே ராஜினாமா செய்தவரும்.

நந்தினிக்காகவே பிரிந்து நந்தினிக்காகவே சேர்ந்தவர்கள் மாநாட்டுக்குப் பிறகு வயிறு எரிந்து விண் டி.வி.யில் பேசியதைப் பார்த்து இருப்பீர்கள். அவர்கள் வயிற்றில் எரியும் எரிச்சல் தீயை அணைக்க மேட்டூர் அணையை உடைத்து விட்டாலும் காணாது. அந்த அளவுக்கு வயிறு எரிந்து கிடக்கிறார்கள். த.மு.மு.க.வின் நன்றி அறிவிப்பு மாநாடு வெற்றி. வயிற்றெரிச்சலில் ஜே.ஜே, பி.ஜெ. என நவம்பர் 24 இரவு 9 மணிக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பப்பட்டது. அதை தேவை இல்லாத ஒன்று என்று சொன்னவர்கள் உண்டு. அவர்கள், மாநாட்டுக்குப் பிறகு விண் டி.வியில் தமிழகத்தின் மோடியும் நந்தினிக்காகவே ராஜினாமா செய்தவரும் பேசியதை கேட்ட பிறகு உண்மையை உணர்ந்து இருப்பார்கள்.

மாநாட்டின் உச்சம் கோவையிலிருந்து வந்த தமிழ்நாடு முன்னேற்றக் கழக எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் என்று சொன்னால் அது மிகையாகாது. அது மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி விட்டது.

கோவையிலிருந்து சென்னை செல்லும் தமிழ்நாடு முன்னேற்றக் கழக எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் முதல் பிளாட்பாரத்திற்கு இன்னும் சிறிது நேரத்தில் வந்து சேரும். இரண்டாவது பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருக்கிறது. 5ஆவது பிளாட்பாரத்திலிருந்து இன்னும் சிறிது நேரத்தில் புறப்படும் என கோவையிலிருந்து சென்னை வரையிலான ஒவ்வொரு பெரிய ரயில் நிலையங்களிலும் செய்யப்பட்ட அறிவிப்புகள் பெரிய எழுச்சியை ஏற்படுத்தி ரயிலில் வந்தவர்களுக்கு புத்துணர்ச்சியை ஊட்டியதுடன் மாநாட்டு விளம்பரமாகவும் ஆகி விட்டது.

சென்னை சென்ரல் ரயில் நிலையத்திலிருந்து கோவை செல்லும் தமிழ்நாடு முன்னேற்றக் கழக எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் 10ஆவது பிளாட்பாரத்தில் நிற்கிறது. ரயில் நிலையத்தில் சொல்லப்பட்டுக் கொண்டிருந்த இந்த அறிவிப்பைக் கேட்பதற்கென்று ஒரு கூட்டம் பிளாட்பார்ம் டிக்கட் எடுத்து சென்று கேட்டு மகிழ்ந்தது.

நன்றி அறிவிப்பு மாநாடு பற்றி ஒவ்வொரு ரயில் நிலையங்களிலும் நின்ற எல்லா சமுதாயத்தவரும் கேட்டு தெரிய வைத்தது. கோவையிலிருந்து வந்த தமிழ்நாடு முன்னேற்றக் கழக எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில்.

கோவையிலிருந்து வருகிறது என்றதும் மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி விட்டது என்றால் அதற்கு வழங்கப்பட்ட மிகப் பெரிய பாதுகாப்பு வளையம் அதை விட கூடுதலான மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி விட்டது. கோவை முஸ்லிம்கள் என்பதால் இந்த பாதுகாப்பு என இரு பொருள்பட பலர் பேசிக் கொண்டனர்.

கோவை மக்களின் பாதுகாப்புக்காகவே அந்த மிகப் பெரிய பாதுகாப்பு.

மாநாடு முடிந்த பின்னர் த.மு.மு.க. ஸ்தாபகர் குணங்குடி ஹனீபா அவர்களை சென்னை புழல் சிறை சென்று சந்தித்தோம். அப்பொழுது கோவையிலிருந்து வந்த தமிழ்நாடு முன்னேற்றக் கழக எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயிலுக்கு எஸ்கார்டு சென்ற ஒரு அதிகாரியைக் கண்டோம். ஏன் மிகப் பெரிய பாதுகாப்பு வளையம் அமைத்தீர்கள். கோவை மக்கள் மீது இன்னும் நம்பிக்கை வரவில்லையா என்று கேட்டோம். அப்படி இல்லை, தனி ரயிலில் வந்த கோவை மக்களின் பாதுகாப்புக்காகவே அந்த மிகப் பெரிய பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டது. அவர்கள் நல்ல முறையில் திரும்பப் போய் சேர வேண்டும் இல்லையா? என்றார்.

அசத்தி விட்டது, கலக்கி விட்டது கோவை த.மு.மு.க.

ஆக நன்றி அறிவிப்பு மாநாட்டு நிகழ்ச்சியில் முதலிடம் பிடித்து இருப்பது தமிழ்நாடு முன்னேற்றக் கழக எக்ஸ்பிரஸ் ரயில். டெல்லி பேரணியில் எந்தக் கிளையும் எதிர்பாரா அணிவகுப்பு நடத்தி முதல் இடத்தை தட்டிச் சென்றது கோவை. அது போல் எந்தக் கிளையும் எதிர்பாரா சிறப்பு ரயில் ஏற்பாடு மூலம் நன்றி அறிவிப்பு மாநாட்டிலும் முதல் இடத்தைப் பிடித்து விட்டது கோவை. எழுச்சி, புத்துணர்ச்சி, பரபரப்பு, ஒவ்வொரு ரயில் நிலையங்களிலுமுள்ள விளம்பரங்கள் என அசத்தி விட்டது, கலக்கி விட்டது கோவை த.மு.மு.க.

நன்றி: பஸ்லுல் இலாஹி

0 Comments:

Post a Comment

<< Home