உணர்வில் வெளியிட இயலாத நாடும் நடப்பும் - 20
பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
வ அலைக்கு முஸ்ஸலாம் .. .. வாங்க வாங்க ஒமர் பாய். என்ன ஆச்சு உங்களுக்கு.. .. ஒரு மாசத்துக்கு மேலா ஆளையே காணாமே.. ..
என்ன பண்றது அஹமது, ரமளான் வந்ததா.. .. அப்புடி கொஞ்சம் பிஸியாகிட்டேன். பெறகு ஈத் அது இதுன்னு வேலயாப் போச்சு போங்க.. ..
சரி சரி பரவாயில்லை.. .. என்ன லேட்டஸ்ட் விஷயம் அதச் சொல்லுங்க கேப்போம்.
ஒண்ணா ரெண்டா அஹமது. அது கெடக்கே ஏகப்பட்டது. எதுல இருந்து ஸ்டார்ட் பண்றதுன்னு தான் யோசிக்கிறேன்.
இதுல யோசிக்க என்னங்க இருக்கு ஒமர் பாய். நம்ம சமுதாயத்துக்கு கெடச்ச இட ஒதுக்கீட்ல இருந்தே ஸ்டார்ட் பண்ணலாமே.
அதுவுஞ் சரிதான். இட ஒதுக்கீடு அறிவிப்பு வந்து அஞ்சாறு நாளா கம்முனு கெடந்த நம்ம தலவரு, யோசிச்சுப் பாத்து எட்டு நாள் களிச்சு வெள்ளி மேடைல நம்ம ததஜவுனால தான் கலைஞரு இட ஒதுக்கீடு குடுத்தாருன்னு குண்டப் போட்டாரு, பாருங்க.. ..
அதுதான் நமுத்துப் போன புஸ்வானமாப் போச்சே. கனிமொழிட்ட குடுத்த கோரிக்கை தான் கனிவோடு பரிசீலிக்கப்பட்டு கருணையோடு கவனிக்கப்பட்டு அவசர சட்டம் போட்டாங்கன்னு சொன்னத கேட்டு நம்மாளுங்களே சிரிப்பா சிரிச்சாங்களே.
ஆனா தமுமுககாரன் அளவுக்கு இல்லாட்டாலும், நாமளும் முற்றுகை போராட்டம்லாம் நடத்தத் தான செஞ்சோம்.
ஹோல்டான் அஹமது. என்ன ஒளர்ரீங்க. முற்றுகைப் போராட்டம் எப்போ நடந்துச்சு.
ஏன் நாந்தான் படிச்சனே, கும்பகோணம் பேரணி, ஜன 29 ஆர்ப்பாட்டம், சிறை நிரப்பு போராட்டம் அப்புறம் சட்டசபை முற்றுகை எல்லாம் நடந்து, அதுனால தான் அரசு பயந்து போய் குடுத்துருச்சுன்னு எளுதியிருந்தாங்களே.
சரியாப்போச்சு போங்க. கும்பகோணம் பேரணிங்குறது எதுக்குனு நம்ம தலைவரே, அந்தம்மா முன்னால கைய கவட்டுக்குள்ள வச்சுக்கிட்டு சொன்னாரே. அத மறந்துட்டீங்களா.
யாரு, ஜெயலலிதாட்டயா, என்ன சொன்னாரு, எனக்கு நெனைவில்லையே.
அந்த சந்திப்புல நம்மாளு ரெண்டு வெஷயத்த ஒத்துக்கிட்டு வந்தாரு. முதலாவது கும்பகோணத்துல கூடி கூத்தடிச்சது ஒரு இலட்சம் பேர் தான்னும், ரெண்டாவதா, இதுனால கோனிகா பஷீருக்கு இந்த தேர்தல்ல 4 இடமாச்சும் குடுக்கணும்னும் தான் சொன்னாரு.
அட ஆமா. எனக்கே மறந்து போச்சே.
இப்புடி எல்லோரும் மறந்திருப்பாங்கன்னு தான் இப்போ பிளேட்ட மாத்தி ஓட்டுறாரு. இரண்டாவதா என்னது ஜன 29 ஆர்ப்பாட்டம். இது எதுக்கான்னா, பஷீருக்கு சீட்டு கேட்கத்தான் கும்பமேளாவ நடத்துனோம்குறத மறச்சு இடஒதுக்கீட்டுக்காகத் தான் இதச் செஞ்சோம்னு மறு பிரகடனம் செய்றதுக்காக நடத்தப்பட்டுச்சு.
அப்ப சிறை நெரப்பு போராட்டம், சட்டசபை முற்றுகைலாம்.. ..
சிறை நெரப்பு போராட்டம் கூட, தமுமுக அடுத்தத்த காய் நகர்த்தல்களை வேகமாச் செஞ்சுக்கிட்டு வருதே, கூடிய சீக்கிரம் இட ஒதுக்கீடு வாங்கிடுவாங்க போல இருக்கே, அப்ப நாமளும் சொல்லிக்கிறதுக்கு என்னவாச்சும் வேணுமேன்னு நடத்தப்பட்டது தான்கிறது ஒங்களுக்குத் தெரியாதா?
அப்ப சட்டசபை முற்றுகைப் போராட்டம்.. ..
ஹா ஹா .. ஹா.. .. என்ன அஹமது இவ்வளவு ஏமாளியாவா இருப்பீங்க.. சட்டசபை முற்றுகைன்னு தான் சொன்னோமே இல்லாம தேதியச் சொன்னோமா.. .. இல்லியே. இதுல இருந்தே தெரியலியா இது சும்மா ஊலலல்லான்னு. ஆனா தமுமுக என்ன செஞ்சுச்சு. டிசம்பர் 31க்குள்ள இட ஒதுக்கீடு தரலன்னா திடீர் போராட்டங்களை பல தினுசுல, பல வழியில நடத்துவோம்னு கெடு குடுத்து மெரட்டுனாங்கள்ல்ல. ஜனவரி 1 ஆம் தேதிலேயிருந்து ஒரு நாள் பஸ் ஓடாது, ஒரு நாள் ரயில் ஓடாது, ஏன்? ஒரு நாள் எந்த விமானமும் கூட பறக்காதுன்னு படு தெம்பா அறிக்கையெல்லாம் கொடுத்தாங்களே! அரசு அதுக்கு அசையுமா? சும்மா முற்றுகைன்னு சொல்லிட்டு கையகட்டிக்கிட்டு ஒக்காந்து இருக்குறதுக்காக அசையுமா?
அட ஆமா ஒமர் பாய். நீங்க சொல்றது சரிதான். அதுனால தான் தமுமுக முன் நின்று முதல்வருக்கு பாராட்டு கூட்டம்லாம் போடுறாங்க போல இருக்கு.
இல்லையா பின்ன. பாராளுமன்ற தேர்தல்ல இருந்து திமுகவோட நெருக்கமா இருந்து அவுங்களோட ஒவ்வொரு கூட்டத்துலயும் தவறாம கலந்து, மறக்காம இட ஒதுக்கீட்டுக்காக குரல் குடுத்தப்ப எல்லாம் தமுமுக காரங்கள நாம எப்புடி கொச்சைப் படுத்துனோம். அவ்வளவு அவமானத்தையும் சமுதாயத்துக்காக தாங்கிக்கிட்டதுனால அவுங்களோட முயற்சிக்கு அல்லாஹ் வெற்றிய குடுத்தான். அதுக்காக விழா எடுக்குறாங்க. நம்மாளு தான் கலஞரு, மோடிய விட மோசக்காரன்னு ஜெயலலிதா கட்சி மேடைல பேசுனாரே. அவரா போயி விழா எடுக்க முடியும்.
ஆமா ஒமர் பாய். கேக்கனும்னு தான் இருந்தேன். மோடி பத்தி இவ்வளவு விஷயம் வெளிய வருதே. இந்த மோடிக்கு முடிசூட்டப் போன ஜெயலலிதாவுக்கோ, இடஒதுக்கீடு தந்த கருணாநிதிய விட இந்த நரபலி மோடி தங்கம்னு சர்ட்டிபிகேட் குடுத்த நம்ம அண்ணனுக்கோ இது தெரியாமலா இருந்திருக்கும்.
அஹமது, தெஹல்கா வெளியிட்ட இந்த விபரங்கள் முழுசும், இந்தியாவுல உள்ள எல்லாருக்குமே தெரியும். ஆனா சாட்சி சொல்லத்தான் ஆளு கிடைக்காம அல்லாடிக்கிட்டு இருந்தாங்க. அதுனால அம்மாவுக்கும் சரி அண்ணனுக்கும் சரி இதெல்லாம் நல்லாவே தெரியும். தெரிஞ்சாலும், நான் ஒரு பாப்பாத்திதான்னு சட்டசபைலயே சொன்ன அந்த அம்மா, வெளிப்படையா நான் இஸ்லாமிய விரோதிதான்னு டிக்ளேர் பண்ற மாதிரி மோடிக்கு முடிசூட்டப் போச்சு. ஆனா நம்ம அண்ணன் பிஜே தான் அம்மாட்ட வாங்குன பொட்டிக்காக, முஸ்லிமா இருந்துகிட்டே மோடிக்கு நல்ல சர்டிபிகேட் குடுத்தாரு.
ஆனா, தமுமுக இட ஒதுக்கீட்டுக்காக நடத்துன போராட்டத்துலேலாம் 2004க்கு முன்னால நாமளும் தானே கலந்துகிட்டோம். அத நம்மாளு சொல்றதுல என்ன தப்பு கண்டு புடிச்சீங்க.. ..
அப்புடி சொன்னாத்தான் பரவாயில்லையே அஹமது. என்னமோ இவரு தான் எல்லாத்தையும் செஞ்சது மாதிரியில்ல சவுண்டு வுடுறாரு. இவரு தஞ்சாவூர் பேரணிய தடுமாற வைக்கணும்கிறதுக்காகவே நடுவுல நெஞ்சப் புடிச்சிக்கிட்டு ஆசுபத்திரில போயி படுத்தாருங்குறது மறந்து போயிருமா என்ன.. ..
ஒமர் பாய். இதுல கூட பாத்தீங்களா. நம்ம அண்ணனுக்கும் ஜெயலலிதாவுக்கும் உள்ள ஒத்துமைய பாத்தீங்களா. அவுங்களும் கோர்ட் கேஸுன்னு வந்துட்டா ஒடனே ஆஸ்பத்திரியில போயி அட்மிட் ஆயிடுவாங்களே.. .. ஹா.. ஹா.. ஹா..
தமிழ்நாட்டு இடஒதுக்கீடு விஷயத்துலதான்னு இல்லாம, புதுச்சேரி, மத்திய அரசுல கூட இடஒதுக்கீடு குடுத்தாங்கன்னா அதுக்கும் காரணம் ததஜன்னு நம்ம தலைவர் சொல்லியிருக்காரே.
வேற என்ன சொல்வாரு நம்மாளு. என்னதான் சொன்னாலும், எளுதினாலும் முஸ்லீம்களுக்கான இடஒதுக்கீடு அப்டீங்குற விஷயத்த பொறுத்த அளவுள, அத முன்னெடுத்து முயற்சி பண்ணுனதும், அதுக்காக இடைவிடாம போராடுனதும், அத வாங்குவதற்காக பல தியாகங்களைச் செஞ்சதும் தமுமுக தான்கிறது ஊரறிஞ்ச உண்மையாப் போச்சு. அதுல போயி பங்கு கேக்கணுமாயிருந்தா என்னவாவது பொய்யச் சொல்லித்தான நாமளும் அதுக்காக பாடுபட்டோம்னு சொல்லிக்க முடியும்.
என்ன அப்புடி சொல்லிட்டீங்க ஒமர் பாய். நாம என்ன செய்யாததையா சொன்னோம். இப்ப கூட பாருங்க நம்ம அடிச்சுக்கிட்டு வந்த பத்திரிக்கைல, புதுவை முதலமைச்சர சந்திச்ச ஃபோட்டோவுலாம் வந்திருக்கே. நீங்க பாக்கலியா.. ..
பாத்தேன். பாத்தேன். அஹமது. ஏன் ரங்கசாமிக்கு மகள் இல்லியா? கனிமொழி மூலமாக தமிழ்நாட்டில் இடஒதுக்கீடு வாங்கியது உண்மையாக இருந்துச்சுன்னா, ரங்கசாமி மகள்கிட்டேயே மனு கொடுத்தால் போதுமே என்று சில பேரு நக்கலா கேட்டதையும் சகிச்சுக்கிட்டேன். ஆனா நான் சொல்ல வந்தது என்னான்னா, புதுவை முதலமைச்சரோட நம்ம ஆளுங்க இருக்கிற ஃபோட்டோவ போட்டு நாங்க முயற்சி செய்றோம்னு சொன்னா பத்தாதா. ஏன் தமுமுக காரங்களோட படத்தையும் போடணும்??
அப்படி போட்டு அதுக்கு ஒரு கமெண்ட் வேற.
அது தானே ஒமர் பாய் நம்மாளோட ஸ்பெஷாலிட்டி. எல்லாரையும் இப்புடி கொச்சைப்படுத்தலன்னா, எப்புடி அவரோட இமேஜ பாதுகாக்க முடியும்.. ..
கரெக்ட் தான். இந்த விஷயத்துல நம்மாளும் மோடியும் ஒண்ணு தான். அந்த ஃபோட்டாவுல ஏதோ போறபோக்குல குடுக்கப்பட்ட மனு. அதுனால தான் ரங்கசாமி வந்தவங்கள ஒக்கார கூட வுடாம நின்ன மேனிக்கு மனுவ வாங்கிக்கிட்டு தமுமுக காரனுவள விரட்டி அடிச்சுட்டாருங்குற மாதிரில எளுதியிருக்காரு. ஆனா அது உண்மையா.. .. ..
என்ன இப்புடி சந்தேகத்தை கிளப்புறீங்க ஒமர் பாய். அதுதான் ஆதாரத்துக்கு படம்லாம் போட்டிருந்தாரே.. .. ..
என்னத்த சொல்றது அஹமது. எதையாவது ஒண்ணப் போட்டு, அதுக்கு சம்பந்தமில்லாத ஒண்ணு தான் இதுன்னு சொன்றது அவரோட வழக்கமாப் போச்சு. அதக் கேட்டு தலையாட்டுறதும் தமுமுக காரனோட மல்லுக்கு நிக்கிறதும் நம்மளோட வழமையாப் போச்சு போங்க .. .. ..
சரி சரி .. .. சலிச்சுக்காம விஷயத்த வெளக்குங்க.
அதாவது, கடந்த 23.10.2007 அன்னிக்கு, சில ததஜ நிர்வாகிகள் புதுவை முதலமைச்சரை சந்திச்சது உண்மை தான். ஆனா அதுக்கும் முன்னால 04 ஆம் தேதியே காரைக்கால் மாவட்ட தமுமுக காரங்க மனு குடுத்துட்டாங்க. அதப் பாத்ததுக்கு பின்னால தான் 23 ஆம் தேதி நம்ம மாநில நிர்வாகி துணைக்கி நமச்சிவாயத்த அளச்சுகிட்டுத்தான் போய் பாக்க முடிஞ்சுது.
அதாவது, தமிழ்நாட்டுல இடஒதுக்கீடு அவசர சட்டம் அறிவிப்பு வெளியானதுமே, தமுமுக நிர்வாகிகள் கலைஞரைப் போய் பாத்து நன்றி தெரிவிச்சாங்க. அதுக்குப் பிறகு தான் நம்மாளுங்க போயி கலைஞரப் பாத்தாங்க. அதுமாதிரி தான் புதுவையிலும் நடந்திருக்குன்னு சொல்ல வர்றீங்களா.
ஆமாமா. இப்பல்லாம் தமுமுக பின்னாடி தான் நாம போக வேண்டியிருக்கு. சமுதாயப் பிரச்சனைகள கையாள்றதுல அவுங்க தான் எல்லோருக்குமே முன்மாதிரியா இருக்காங்க.
அது வாஸ்தவம் தான். இந்த போட்டோ விபரத்த சொல்றேனுட்டு என்னன்னமோ பேசுறீங்க.
அதத் தான் சொல்ல வந்தேன். நம்ம தலவரு வெளியிட்டிருக்குற படம் ஒருவேள இந்த காரைக்கால் மாவட்ட தமுமுக காரங்கள முதல்வர் ரங்கசாமி சந்திச்ச படமா இருக்கலாம். மாநில நிர்வாகிகளுக்கு கெடக்கிற மரியாத மாவட்ட நிர்வாகிகளுக்கு கெடக்கிறத விட கொஞ்சம் அதிகமாத்தான் இருக்கும்கிறது எல்லாருக்குமே தெரியுமே. இதுல தமுமுக காரனுவள கொச்சைப் படுத்துற அளவுக்கு என்ன இருக்கு.
அதுக்கும் மேலா, ஒரு மாவட்டத்தச் சேர்ந்த நிர்வாகிகள் எந்த ஒரு சிபாரிசும் இல்லாம நேரடியா முதல்வர் ரங்கசாமிய சந்திக்க முடியும். ஆனா நமக்கு மாநில நிர்வாகியாவே இருந்தாலும் ஒரு சிபாரிசு தேவப்படுதே இத நெனச்சு வருத்தப்படுறத வுட்டுட்டு, இந்த மாதிரி எளுதி அற்ப சுகமடையனுமான்னு பலர் கேக்குறாங்க.
அதுவுஞ் சரிதான் ஒமர் பாய். இன்னொன்னையும் கவனிச்சீங்களா. இந்த புதுச்சேரி முஸ்லிம்கள் இடஒதுக்கீடு விஷயத்துல ஆரம்பத்துல இருந்தே தமுமுக முன்னணியில தான் இருக்கு. 2005ல் நடந்த கவன ஈர்ப்பு மாநாட்டுல இருந்து இப்போ நடந்த இரு சக்கர பேரணி வரைக்கும் வித்தியாசமான அணுகுமுறைகள்ல இடஒதுக்கீடு கோரிக்கைக்கு அழுத்தம் குடுத்துக்கிட்டுத்தான் இருக்காங்க.
ஆமா அஹமது. போராட்ட முறைகள்ள புதுமைகளை கொண்டு வந்து மத்தவங்களுக்கு முன்மாதிரியா இருக்குறது இன்னக்கி தேதியில தமுமுகவாத்தான் இருக்க முடியும். அதிலேயும் தமுமுக டில்லியில நடத்துன ஆர்ப்பாட்டத்துக்குப் பிறகு அகில இந்தியாவே தமுமுகவ திரும்பிப் பாக்குதுனு சொன்னா தப்பில்ல.
ஆனா வர வர தலவரு களப்போராட்டத்த விட கனிமொழிய சந்திச்சோம். ரங்கசாமிகிட்ட மனு குடுத்தோம். டில்லிக்கு தபால் போட்டோம்னு போற போக்கப் பாத்தா முஸ்லிம் லீக்குக்கு ஆன கதி தான் நமக்கும் ஆகும் போல தெரியுது.
சரியாச் சொன்னீங்க அஹமது. களுத தேஞ்சு கட்டெறும்பா போன கதயாத்தான் நம்ம கத ஆகிப்போச்சு.
சரி சரி .. .. ரொம்ப நேரமாச்சு. பக்கத்துல ஒரு வேலய முடிச்சுட்டு வந்துர்றேன்.மத்த விஷயங்களைப் பத்திப் பிறகு பேசலாம்.
சரிங்க ஒமர் பாய். போய்ட்டு சுருக்கா வந்துருங்க.
அஸ்ஸலாமு அலைக்கும்.. ..
முல்லா 04.11.2007
0 Comments:
Post a Comment
<< Home