Monday, October 22, 2007

தனி இடஒதுக்கீடு சட்டம் சட்டசபையில் நிறைவேறியது

சிறுபான்மையினருக்கு தனி இடஒதுக்கீடு சட்டம்
சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேறியது

கலைஞர்

சட்டமன்ற வரலாற்றில் இது ஒரு பொன்னாள்; சமூகநீதி வரலாற்றில் புரட்சிகரமான நாள், முதல்வர் கலைஞர் உருக்கம்.

தமிழகத்தில் கல்வி மற்றும் அரசு வேலை வாய்ப்புகளில் முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு தலா 3.5 சதவீத இடஒதுக்கீட்டிற்கு வகை செய்யும் சட்ட மசோதாவை முதல்வர் கருணாநிதி சட்டமன்றத்தில் (22.10.2007) தாக்கல் செய்தார்.

இச்சட்ட முன் வடிவை ஆதரித்து பீட்டர் அல்போன்ஸ் (காங்கிரஸ்) ஜி.கே. மணி (பாட்டாளி மக்கள் கட்சி) பால பாரதி (இ.கம்யூனிஸ்ட்) ராமசாமி (வ.கம்யூனிஸ்டு) செல்வப் பெருந்தகை (விடுதலைச் சிறுத்தைகள்) ஆகியோர் பேசினர். மசோதா ஒருமனதாக நிறைவேறியது.

சிறுபான்மையினருக்கான இடஒதுக்கீடு சட்டமசோதாவை முதல்வர் கருணாநிதி இன்று சட்டசபையில் தாக்கல் செய்தார். இம்மசோதா குரல்வாக்கெடுப்பு மூலம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.

முன்னதாக சட்ட மசோதாவை வரவேற்று பேசிய அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் நன்றி தெரிவித்து முதல்வர் கருணாநிதி பேசியதாவது:

இந்த மசோதா தாக்கல் செய்யப் பட்டுள்ள இந்த நாள் சமூக நீதிக்கான போராட்டத்தில் மற்றும் சட்டமன்ற வரலாற்றில் ஒரு பொன்னாள். சமூகநீதி வரலாற்றில் ஒரு புரட்சிகரமான நாள். 50, 60 ஆண்டுகளுக்கு முன்பு நீதிக்கட்சி வரலாற்றில் இதற்கான விதை ஊன்றப்பட்டது. அதை தொடர்ந்து பல்வேறு கட்டங்களாக பல்வேறு தலைவர்களால் சமூகநீதிக்கான போராட்டம் முன் எடுத்து வரப்பட்டது. இதற்காக எத்தனை தடங்கல்களை சந்திக்க வேண்டி இருந்தது. இப்போராட்டம் முற்று பெறவில்லை. தொடர்ந்து நடைபெறும். நாம் அனைவரும் ஒருங்கிணைந்து போராட்டத்தை தொடர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

நன்றி: தமுமுகவின் அதிகாரப்பூர்வ இணையதளம்

0 Comments:

Post a Comment

<< Home