Tuesday, September 11, 2007

உணர்வில் வெளியிட இயலாத நாடும் நடப்பும் - 19

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. ..


ஆக்டர் பிஜே ஆன் மூவ்

வ அலைக்கு முஸ்ஸலாம். அடடே வாங்க ஒமர் பாய். சௌக்கியமா?

சௌக்கியம் தான் அஹமது. என்ன நீங்க மண்ணடி கூட்டத்துக்கு கூட வராம போயிட்டீங்க.

எது? மலேசியாவுல அடிவாங்கிட்டு மண்ணடில மீசை முறுக்குன மீட்டிங்குக்கா. அதுதான் ஏர்போட்ல வச்சே சொல்லி முடிச்சாச்சே. அதுக்கு மேலா என்ன இருக்கப் போவுதுன்னு தான் மீட்டிங்குக்கு வரல.

சரியாப் போச்சு போங்க. எல்லாம் ஒரே மாதிரியாவா இருக்கும். இடத்துக்கு இடம் கொஞ்சம் கொஞ்சமா மெருகேத்துவாரே தலைவரு. அது தெரியாதா ஒங்களுக்கு.

சரி ஒமர் பாய் என்னதான் நடந்ததுன்னு சொல்லுங்களேன். கேப்போம்.

அஹமது. இந்த மலேசிய பயணம் சம்பந்தமா கடந்த 20.08.2007 ல இருந்து பல செய்திகள் பலவிதமா வெளிவந்துகிட்டு இருக்கு. ஆனாலும் ஆளுங்க எப்படி எப்படியெல்லாம் பல்டி அடிக்கிறாங்க, எந்தெந்த வகைல எல்லாம் பில்ட் அப் பண்றாங்கன்னு நெனெச்சாத்தான் ஒரே வேடிக்கையா இருக்கு.

சொல்லுங்களேன் ஒமர் பாய் நாமளும் கொஞ்சம் தெரிஞ்சுக்கலாம்.

அதாவது அஹமது நெட்ல வந்த ஃபோட்டோ, பத்திரிக்கை கட்டிங்லாம் போன தடவையே சொன்னேனே.. .. ..

ஆமாமா. இவுங்களே காசு குடுத்து மலேசிய மக்கள் ஓசைல போட்டுட்டு, அத என்னமோ அந்த பத்திரிக்கை வெளியிட்ட செய்தி மாதிரி நெட்டுல போட்டு ஏமாத்தி இருக்காங்கன்னு விவரமா சொன்னீங்க தான். அது இல்லாம வேற எதாச்சும் இருக்கா.

ஏன் இல்லாம? அஹமது.. .. நம்ம தலைவருக்கு நம்மளப்பத்தி ஏகப்பட்ட நம்பிக்கை இருக்கு. அதுனால சகட்டு மேனிக்கு அள்ளி வுடறாரு பாருங்க. தாங்கமுடியலடா யப்பா.. ..

சரி ஒமரு. சொல்ல வந்தத சொல்லுங்க. இவரு ஜக்காத் விஷயத்துல தொடங்கி எல்லாத்துக்கும் பூம்பூம் மாடு மாதிரி தலையாட்டியே பளக்கப்பட்டதால என்னதான் உண்மைய வெளங்குனாலும் இப்பவும் அவரு சொன்னா தலையாட்டுறதா தான இருக்கோம். அந்த தெம்புல அவுத்துவுட்டுருப்பாரு. நீங்க சொல்லுங்க.

சைட்ல இப்புடி போட்டு இடி வாங்குனதுனாலயோ என்னமோ, இந்த படத்த இப்ப வந்த உணர்வுல போடாம, சும்மா ஒரு செய்தியா போட்டிருக்காங்க போல.

அதுல என்ன கொறய கண்டுபுடிச்சீங்க.

அஹமது.. .. இப்பல்லாம் நம்மாளுங்க எந்த விசயத்தையும் தனக்கு சார்பா வளைச்சு நெளிச்சு பெண்டு எடுத்து தான பேசுறாங்க. அதுனால அதுல நா மட்டுமில்ல யார் வேணும்னாலும் கொஞ்சம் யோசிச்சா பல விசயம் முரண்பாடா இருக்குறத தெரிஞ்சுக்க முடியும்.

சரி சரி நீங்க யோசிச்சத சொல்லுங்களேன்.

பொறுங்க அஹமது. மலேசியா எஸ்.டி.சி ஹால்ல நடந்த மீட்டிங் போட்டோ வ நெட்ல இருந்து எடுத்து வந்து காட்னேன்ல.

ஆம் நானும் பாத்தேன். பொம்பளங்கல்லாம் கூட இருந்தாங்களே.

அதக்கூட தமுமுக காரங்க, 'என்னப்பா பெண்களுக்கு தனி இட வசதின்னு சொல்லிட்டு ஒரு மறப்பு கூட கட்டாம உக்கார வச்சுருக்கீங்களே' ன்னு கேலி பேசுறானுவ.

ஏம் பேச மாட்டாங்க. சரி அவனுகள விடுங்க. நம்மாளுங்களுக்கு சும்மா நம்பர ஏத்தி சொல்லிட்டு, வாங்கி கட்டிக்கிறதே வாடிக்கையாப் போச்சு.

என்னன்னு வெளங்கலியே.

நீங்க பாத்த போட்டோவுல பொம்பளய்ங்க ஒரு கால்வாசி பேரு இருந்திருப்பாங்களா.

ஆமா இருந்திருப்பாங்க.

அண்ணனும் உணர்வுல எழுதியிருக்காரு. அதுல 75 பெண்கள் உட்பட 900 பேரு கலந்துகிட்டாங்கன்னு எழுதியிருக்காரு.

அப்புடியா எளுதியிருக்காரு. அந்த கூட்டத்தப்பாத்தா இவரு சொன்ன பொம்பளய்ங்களோட எண்ணிக்கப் பிறகாரமே பாத்தாலும் 300க்கு மேல தேறாது. அட ஒக்காந்து இருந்தவங்களே சுத்தி நிண்டவன் நெளிச்சவன்னு கணக்கு பாத்தாலும் 400 க்கு மேல தேறாது. இதப்போயி ஏன் 900ம்னு சொல்லனும்.

இதுவாவது பரவாயில்லை. மலேசியா போலிஸு அலக்களிக்கன்னா 5000 பேரு வந்திருப்பாங்கன்னு பில்ட் அப் பண்றதும் அவருக்கே கொஞ்சம் ஓவரா தெரியல.. .. பாவம். ஏன் இப்புடி நடந்துகிறாருன்னு தான் நமக்கு புரிய மாட்டேங்குது.

ஏன் புரியாம. எல்லாம் இந்த அரசியல்ல அடி எடுத்து வைக்கத்தான். மலேசியாவுல கூட எனக்காக 5000 பேரு கூடுவாங்கன்னு சொன்னா தானே மத்த அரசியல்வாதிகள்ட்ட ஒரு கெத்து கிடைக்கும். ஏன் கும்பகோணத்துல 10 இலட்சம் பேர்னு சொன்னது கூட அப்புடி படம் காட்டத்தான.

அப்புடி சொன்னதுக்கு தான் சவுதில இருந்து ஹஜ்ஜுக்கு வர்றவுங்களோட படத்தப் போட்டு ஒருத்தர் செம்மையா சூடு வச்சு எளுதி கிளிச்சுப்புட்டாரே. நீங்க தான எனக்கு சொன்னீங்க.

அதயெல்லாம் அப்பப்ப ஜனங்க மறந்துடுவாங்கங்குற நம்பிக்கைல தான அண்ணன் அடிச்சு வுடறாரு. அவரு மேக்கொண்டு எளுதியிருக்குறத கேளுங்க அஹமது.

சொல்லுங்க ஒமர் பாய்.

ஏர்போர்ட்லயோ, நெட்லயோ சொல்லாத ஒரு விஷயத்த எளுதியிருக்காரு. அதாவது அவர ஷரீஅத் கோர்ட்ல நிப்பாட்டி 10 கேள்விங்க கேட்டாங்களாம். அதுல மொத 2 கேள்வி தீவிரவாதம் சம்பந்தப்பட்டது. அதுக்கு என்ன சொன்னேன்னு எளுதுனவரு, மீதி உள்ள 8 கேள்விக்கும் என்ன பதில் சொன்னாருன்னு எளுதாம, ஆதாரங்கள அள்ளிப் போட்டேன்னு மட்டும் எளுதியிருக்காரு. எந்த ஆதாரங்கள அள்ளிப்போட்டாருன்னு தெரிஞ்சா தான், ஜக்காத் விஷயத்துல ஸஹாபாக்கள் விஷயத்துல எல்லாம் இவரு தன்னோட கருத்த மாத்திக்கிட்டாரான்னு தெரிய வரும். இப்புடி மொட்டையா எளுதுனா, மலேசிய ஷரீஅத் கோர்ட்டும் இவரு சொல்ற ஜகாத் முறய ஏத்துக்கிட்டாங்கன்டுல அர்த்தம் வரும்.

அதானே. அப்போ மலேசியாவுலயும் இவரு சொல்ற மொறப்படி ஜக்காத் குடுக்கப்போறாங்களா என்ன. ஒண்ணுமே புரியலியே. எதுத்து பேச முடியாத ஆதாரம்னு சொல்றதா இருந்தா அது எல்லோரும் கடப்புடிக்கிற ஜகாத் மொறயா தானே இருக்கணும். அப்புடீன்னா இவரு அவுங்க முன்னால அத ஏத்துக்கிட்டாரோ. அப்புடி இல்லாம இவரோட ஜகாத் கொள்கைய சொல்லியிருந்தா உடனே புடிச்சு உள்ளய்ல தள்;ளியிருப்பாங்க. அப்போ இவரு அறையில ஒண்ணும் அம்பலத்துல ஒண்ணும் பேசுவாருங்குறது சரிதான் போல.

இதயும் கேளுங்க அஹமது. ஞாயிற்றுக்கிழமை (19.8.07) மீட்டிங்குக்கு பெறகு, திங்கக்கௌம (20.8.07) அன்னக்கி நைட்டு ஒரு வீட்டுக்கு சாப்புடப்போனதாகவும் அங்க வச்சு போலீஸ் சுத்தி வளச்சு கூட்டிக்கிட்டு போனதாகவும் எளுதியிருக்காரு.

போலீஸ் சுத்தி வளச்சு கூட்டிக்கிட்டு போனாங்கன்னா கைது பண்ணி வெலங்கு போட்டு கூட்டிக்கிட்டு போனாங்களா.

அப்புடித்தான் இருக்கும் போல. அத இவரு சரியா எளுதல. ஆனா மலேசியாவுல விசாரிச்சு அப்புடித்தான் வெலங்கு போட்டு கூட்டிக்கிட்டு போனாங்கன்னு எளுதுன நக்கீரன் நிரூபர புடிச்சு காச்சி எடுத்துட்டாராம். அதுக்கும் மேல திங்கக்கிழம நைட்டு விசாரிச்சுட்டு வுட்டுட்டாங்க. செவ்வாக்கழம ஷரிஅத் கோர்ட்டுக்கு வரச் சொன்னாங்கன்னு எளுதி இருக்காரு.

அதுக்கென்ன வந்தது. முதல் கட்ட விசாரணை ஒரு இடத்துலயும் அடுத்த கட்டமா வேற எடத்துலயும் நடக்கத்தான செய்யும்.

இதுல நான் சொல்ல வந்ததே வேற. இங்க தமிழ்நாட்டுல செவ்வாக்கௌம காலைல (21.08.07) தமுமுக காரங்க பிஜே கைதுன்னு எஸ்.எம்.எஸ் குடுத்தாங்களாம். செவ்வாக்கௌம நைட்டு ஷரீஅத் கோர்ட்ல இருந்து வெளிய வந்தப்புறமா தான என்னய போலீஸு லாக்கப்ல அடைச்சுச்சு. ஆனா காலைலயே கைதுன்னு செய்தி அனுப்புறதா இருந்தா அது இவுங்க பண்ணுன ஏற்பாடுன்னு வெளங்கிக்க போதுமான ஆதாரமா இருக்குன்னு வேற எளுதி இருக்காரு.

அதுசரி. 30 போலீஸ் சுத்தி வளச்சு, மால போட்டா கூட்டிக்கிட்டு போவாங்க. அந்த சேதிய கேட்டு இவுங்க பிஜே கைதுன்னு எஸ்.எம்.எஸ் அனுப்புச்சிருப்பாங்க. அதுக்குப் போயி ஏன் இப்புடி சுத்தி வளச்சு வியாக்கியானம் பண்ணனும்.

அஹமது .. .. நாம செய்றது தான நமக்கு மொதல்ல நெனப்புக்கு வரும். 2004.ல பிரபல ரவுடி கோட்டூர் ரஃபீக்க வச்சு தமுமுக தலைமையகத்த கைப்பத்த திட்டம் போட்டாரே. அப்ப நம்ம குணச்சித்திர நடிகர் அலாவுதீன் தானே கீழ வுளுந்து அடிச்சுட்டாங்க, மிதிச்சுட்டாங்கன்னு கூப்பாடு போட்டாரே அப்போ, சம்பவம் நடந்த அரைமணி நேரத்துல மேலப்பாளையம், பாளைங்கோட்டைல எல்லாம் போஸ்டர் ஒட்டுனாங்களே, ஞாபம் இருக்கா. குணச்சித்திர நடிகர் அலாவுதீன வச்சு நாடகம் போட ஏற்பாடு செஞ்சதுனால தான் போஸ்டர்லாம் அடிச்சு ரெடியா வச்சுருந்திருக்காங்க. இல்லாட்டி அரைமணி நேரத்துல எப்புடி ஒட்ட முடியும்னு அப்போ தமுமுக காரங்க சொன்னாங்களே அதுதான் ஞாபகம் வருது போங்க. தான் அப்புடி முன்னேற்பாடா இருந்தது மாதிரி தான் இப்பவும் நடந்திருக்கும்னு நெனக்கிறாரு போல.3

ஆனா ஒண்ணு, இவரு செவ்வாக்கௌம காலைல வெளிய இருந்தது பெயில்ல தான்னு வேற பேசிக்கிறாங்க. பெயில் வாங்கிக் குடுத்தவரு தமிழக வம்சாவளியச் சேர்ந்தவருண்ணும் பேசிக்கிறாங்க. ஆனா இவரு சாமர்த்தியமா அதப்பத்தி ஒண்ணுமே சொல்லாம எளுதாம மறைச்சுட்டாரு.

அவருக்கு சார்பா இல்லைன்னா ஹதீஸ்களயே கூட மறச்சுருக்காரு. இது என்ன பெரிய விஷயம். சரி ஒமர்பாய் வேற எதுவும் சங்கதி இருக்கா.. ..

ஏன் இல்லாம அஹமது. நம்மாளுங்க, கற்பனைய தட்டி வுட்டு கத சொல்றதுல சின்னத்திரை சீரியல் கதாசிரியர்களையும் மிஞ்சிட்டாங்க போங்க.

அட, சீரியலை மிஞ்சுற அளவுக்கு என்ன நடந்துச்சு ஒமர் பாய்.

அஹமது, நம்ம தலைவர் மலேசியாவுல இருந்து விடுதலயானத பெங்களூரு டாக்டர் ஹனீஃப் ரேஞ்சுக்கு கத வுட்ட நம்மாளுங்க, பிஜே விடுதலையில் பெரும் பங்காற்றிய மத்திய மாநில அரசுகளுக்கும் விண் டிவி தேவநாதனுக்கும் நன்றி சொன்னாங்கல்ல... அத நிரூபிக்கிற விதத்துல என்னமாச்சும் சொல்லனும்ல அதுக்காக .. ..

அதுக்காக.. .. ..

பொறுங்க அஹமது. சொல்றேன். அதாவது 21ம் தேதி செவ்வாக்கிளம, பிஜேவ 30 போலீஸு படையோட வந்து கைது பண்ணிக்கிட்டு போனாங்கல்ல அந்த நைட்டு இங்க மெட்ராஸுல ததஜ ஆபீஸுல நம்ம அலாவுதீன் தலமைல ஆலோசனை நடந்துச்சாம். அதுல அடுத்த நாள் அதாவது 22ம் தேதி காலைல மலேசிய துணை தூதரகம் முன்னால போராட்டம் நடத்துறன்னு முடிவாச்சாம்.

ஆர்ப்பாட்டம் சாயங்காலமாவுல நடந்துச்சு. அதுவும் பிஜே பிளைட்ல ஏறுனதுக்கு அப்புறமாவுல நடந்துச்சு.

அதேதான். கொஞ்சம் அவசரப்படாம கேளுங்க புரியும். நாந்தான் சொன்னேனே. மத்திய மாநில அரசுகள் கேட்டுக்கிட்டதுனால விடுதல பண்ணுனாங்கன்னு சொன்னாத்தான் டாக்டர் ஹனீஃப் ரேஞ்சுக்கு போகலாம்னு சொல்லிட்டாங்க. அத ஊர்ஜித படுத்துறதுக்கான கத தான் இவ்வளவும்.

சரி சரி மேல சொல்லுங்க.

22ம் தேதி காலைல முற்றுகைன்னு முடிவு செஞ்சுட்டு, 21ம் தேதி நைட்டு சைட் விசிட்டுக்கு தவ்ஃபீக்குறவரு போனாராம். அங்க போய் பாத்தா ததஜ மக்கள் ஏற்கனவே வந்து குழமி இருந்தாங்களாம்.

அதாவது தலைமைல இருந்து தகவல் கெடக்கிறதுக்கு முன்னாலேயே வந்துட்டாங்களாமா. என்ன கொடுமை சார் இது.

அப்புடி என்னமாவது கத சொன்னாத்தான் மக்கள் எழுச்சியப் பாத்து மலேசியா மிரண்டதுன்னு வீர வசனம் பேசலாம்.

உண்மைல, காலைல நடத்த முடிவு செஞ்சத சாயங்காலத்துக்கு மாத்துனதே, காலைல என்னமாவது ஆர்ப்பாட்டம்னு நடத்தப்போக, அங்க உள்ள வச்சுருக்க ஆள உள்ளயே நிரந்தரமா மொடக்கிருவாங்களேன்னு பயந்ததுனால தான ஃபிளைட் டைம பாத்து ஜாக்கிரதயா சாயங்காலமா ஆர்ப்பாட்டம் செஞ்சுருக்காங்க. இந்த லெட்சணத்துல இப்புடி ஒரு கத வசனம்.

சேச்சே. வர வர தரம் ரொம்ப தான் கீழே போய்க்கிட்டு இருக்கு. எங்க போயி முட்டுமோ தெரியலியே.

சரி அஹமது. நேரமாயிடுச்சு. பெறகு சந்திப்போம்.

வஸ்ஸலாம்

முல்லா 11.09.2007

0 Comments:

Post a Comment

<< Home