Sunday, September 09, 2007

சகோதரர் சைபுத்தீனுக்கு விளக்கம்

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்
சகோதரர் சைபுத்தீன் அவர்களின் மெயிலுக்கு ராவுத்தர் பதிலளிக்கிறார் (சைபுத்தீனின் மெயிலை பார்க்க கீழே செல்லவும்)
அன்புச் சகோதரர் சைபுதீன் அவர்களுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. ..

எமது 'மலேசிய பயணமும் மறைக்கப்பட்ட உண்மைகளும்' கண்டு அதிர்ச்சியுற்றதாக குறிப்பிட்டிருந்தீர்கள். பலரும் அதிர்ச்சியுறவே செய்தார்கள். அறிஞர் என்று தாம் நம்பிய ஒருவர் ஆடிய அரசியல் சித்து விளையாட்டுக்களை அறிந்த பலர் உண்மையிலேயே அதிர்ச்சி அடைந்ததனால் தான் நாம் எழுதியிருந்த கேள்விகளை எழுப்பினார்கள்.

ஆனால் தங்களின் அதிர்ச்சி அந்த வகையினால் அல்ல என உணர முடிகிறது.

நாம் மதிக்கும் ஒருவரைப் பற்றிய உண்மைகள் இந்த அளவிற்கு உள்ளதா என்ற அதிர்ச்சியினால், தாங்கள் கொண்டிருக்கும் பெரு மதிப்பு உண்மையை ஏற்றுக் கொள்ள தடையாக இருக்கின்ற காரணத்தால் ஏற்படுகின்ற அதிர்ச்சி.

அதனால் தான், நாம் எழுதியுள்ளவற்றில் பெரும்பாலானவை கற்பனை என குறிப்பிட்டுள்ளீர்கள். நாம் எழுதியுள்ளவற்றில் பெரும்பான்மையாக பிஜேவின் பேச்சுக்களை மேற்கோள் காட்டி உள்ளதால் அவ்வாறு தங்களுக்கு தோன்றியிருக்கலாம். பீஜேயின் பேச்சுக்கள் அனைத்தும் அக்மார்க் கற்பனை கதைகள் தான் என புரிந்து கொண்டமைக்கு நன்றி.

மாறாக நாம் எழுதியுள்ள 19 ஆம் தேதி எஸ்.டி.சி. க்கும் 20 ஆம் தேதி ஒரு வீட்டில் நடைபெற்ற விருந்துக்கும் இடையிலான விபரம் குறித்து தாங்கள் கற்பனை என கருதுவீர்களேயானால், மலேசிய பத்திரிக்கைகள் மற்றும் மலேசியாவிலுள்ளவர்களின் பேட்டி என எமக்கு கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் தான் அவை எழுதப்பட்டது என தங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்.

அந்த ஆதாரங்களையும் கூட அண்ணன் கூறினால் தான் ஏற்றுக் கொள்வோம் என ஆட்டு மந்தை கூட்டமாக இருக்க மாட்டீர்களென நம்புகிறோம்.

பிஜே உடன் இருந்தது போல் எழுதியுள்ளீர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளீர்கள். எமது கூற்றை மறுக்கும் தாங்கள் பிஜே வோடு இருந்தீர்களா. ஒருவேளை அவ்வாறு ஒன்றாக பயணப்பட்டவர்களில் தாங்களும் ஒருவர் எனில் நாம் எடுத்து வைத்திருக்கும் வினாக்களுக்கு ஆதாரத்துடன் பதில் அளித்து விடலாமே.

எம்மைப் போன்ற இன்னும் பலர், இதுபோல எழுதுவதன் மூலம் பிரபலமாக முயற்சிப்பதாகவும் எழுதியுள்ளீர்கள். சல்மான் ருஷ்டி, தஸ்லீமா நஸ்ரீன் போன்றோரை தோலுரித்து காட்டுபவர்கள், தாம் பிரபலமடைய வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படுவதில்லை. மாறாக உண்மையான மார்க்கம் களங்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக களம் இறங்குபவர்கள். நானும் அத்தகையோரில் ஒருவன். எனக்கு பிரபலமாக வேண்டும் என்ற எந்த எண்ணமும் கிடையாது.

எதனைச் செய்வதற்கு முன்பாகவும் அல்லாஹ்வை அஞ்சிக் கொள் என அறிவுறுத்தி உள்ளீர்கள். நன்றி. எதற்கும் இந்த அறிவுரையை பிஜேவுக்கும் சொல்லி வைப்பீர்களேயானால் உங்களுக்கு புண்ணியமாய் போகும். ஏனென்றால் அவர்தான் அல்லாஹ்வின் அச்சம் சிறிதுமின்றி ஆதாரம் இல்லாமல் அடுத்தவர் மேல் சேறு வாரி பூசிக் கொண்டு திரிகிறார். அவர் தான் அல்லாஹ்வின் அச்சமின்றி அவன் விதித்த ஜகாத் கடமையை தன் விருப்பம் போல் வியாக்கியானம் அளித்து வருகிறார்.

அவர் தான் அல்லாஹ்வின் அச்சமின்றி திருக்குர்ஆன் வசனத்தை திரித்து வளைத்து பொருள் எழுதி விரிவாக்கம் என்ற பெயரில் அற்ப கிரயத்திற்கு விற்பனை செய்து வருகிறார்.

அவர் தான் அல்லாஹ்வின் அச்சமின்றி சுவர்க்கம் நரகம் என்பதெல்லாம் கற்பனை. இன்றளவும் அவை படைக்கப்பட வில்லை. இதே பூமியில் தான் அவை உருவாக்கப்படும் என உளறி வருகிறார்.

அவர் தான் அல்லாஹ்வின் அச்சமின்றி அல்லாஹ்வின் வல்லமையோடு விளையாட்டுத்தனமாக நடந்து கொள்கிறார்.

எனக்கும் திருவாளர் பிஜேவுக்கும் தனிப்பட்ட எந்த பிரச்சனைகளும் இல்லை என்பதால் அவரை சென்று சந்திக்கவோ, பேசித் தீர்த்துக் கொள்ளவோ எமக்கு எவ்வித தேவையுமில்லை.

ஜகாத் தொடங்கி சுவர்க்கம் நரகம் ஸஹாபாக்கள் என்பன உள்ளிட்ட பல்வேறு மார்க்க விஷயங்களில் அவர் தெரிவித்து வரும் கருத்து தனிநபரின் கருத்து என கூறட்டும். அப்பொழுதும் எமக்கும் அவருக்குமிடையில் எவ்வித தேவையும் ஏற்படப்போவதில்லை.

மாறாக இவற்றை, வீட்டுக்கு வீடு பிரச்சாரம் செய்வதால், எதிர்க்க வேண்டிய மார்க்க கடமை எமக்கிருக்கிறது. அவரைப் பின்பற்றி மார்க்கத்திலிருந்து விலகிச் செல்லும் தங்களைப் போன்றோர் உண்மை மார்க்கத்தை உணர்ந்து அதில் உறுதியோடு நிலைத்து நிற்க வேண்டும் என்பதற்காகவே அவரின் சமீபத்திய சுயநலமிக்க செயல்பாடுகளின் சுயரூபத்தை வெளிச்சம் போட்டு காட்ட வேண்டியுள்ளது.

வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழி காட்டி, சுயநல ஷைத்தானின் தீங்குகளிலிருந்து நம்மை பாதுகாப்பானாக.

வஸ்ஸலாம்
ராவுத்தர் 10.09.2007

From:Ahamed Saifudeen (ஜங்க் மெயில்களை தவிர்க்க மெயில் முகவரியை நீக்கி விட்டோம்.)
Date: Sep 4, 2007 1:57 PM
Subject: Re: [முத்துப்பேட்டை] மலேசியா பயணமும் மறைக்கப்பட்ட உண்மைகளும்
To: Muthupettai Admin <muthupettai@gmail.com>

Dear Brother,

Assalamu Alaikum.

I shocked to see your mail. Just to gain popularity you are spreading Fithah's. Most of your mail content is based on assumptions. You have drafted a mail as if you were with PJ that time. There are many people like you who are doing the same thing to gain popularity. They were part of some movements earlier, due to some reasons they kicked off from that.

Anyway before doing anything, fear Allah. If you have some problem with PJ, go and meet PJ and solve it. Don't spread fitnah in the Ummah.

Instead doing this, do some good deeds and do dawah which will help you in the hereafter.

Thanks for your great effort (with lot of assumptions).

Your Brother,
Saifudeen

0 Comments:

Post a Comment

<< Home