பிஜேயின் கைது – பாக்கரின் சதியா?!
தமிழ்நாடு தறுதலை ஜமாஅத் என பெயர் பெற்று விளங்கும் ததஜவின் தலைவர்கள் சமீபத்தில் மலேசிய சுற்றுப்பயணம் மேற்கொண்டனர்.
செல்லும் இடங்களில் மார்க்கத்தின் பெயரால் கூட்டத்தைக் கூட்டி அதனை தனது அரசியல் கட்சியின் வளர்ச்சிக்காக விளம்பரப்படுத்திக் கொள்வது அவர்களின் வாடிக்கை.
அந்த வாடிக்கைப்படி ஏற்பாடு செய்தவர்கள், முறையான அரசு அனுமதி எதுவும் பெறாமல் கூட்டத்தை நடத்த துணிந்துள்ளனர்.
தகவல் அறிந்த காவல்துறை உடனடி நடவடிக்கை எடுத்து கூட்டத்தை கலைத்துள்ளனர்.
இந்நிலையில் அனுமதி பெறாமல் கூட்டம் கூட்டியதற்காக தறுதலை ஜமாஅத்தின் தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். என்றாலும், நவீன அரசியல்வாதிகளாகி விட்ட அத்தலைவர்கள் அவர்களின் அரசியல் குருவான ஜெயலலிதா மற்றும் அவளது குருவான சாவர்கரின் வழியில், உள்ளே சென்று அதிகாரிகளிடம், தங்களுக்கு அந்நாட்டு சட்ட திட்டங்கள் தெரியாமல் நடந்து கொண்டதாகவும் அதனால் மன்னித்து விடுதலை செய்யுமாறு கேட்டுக் கொண்டு, அதனடிப்படையில் வெளியே வந்து விட்டனர்.
ஆனால் ஊர் திரும்ப ஏற்பாடு செய்து கொண்டிருக்கும் வேளையில், நாங்கள என்ன தவறாக பேசி விட்டோம், தேவைப்பட்டால் இதனைப் பாருங்கள் என்று ஒருவர் சீடியைக் கொடுத்ததால், பிஜே மீண்டும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதாக பத்திரிக்கை செய்தி குறிப்பு கூறுகிறது.
அப்படியானால் அந்த சீடி கொடுக்கப்படாமல் இருந்திருந்தால் பிஜே சிறையில் அடைக்கப்பட்டிருக்க மாட்டார் என்பது விளங்குகிறது.
அப்படிப்பட்ட தவறுதலான சீடியைக் கொடுத்தவர் யார் என அறிய ஆவலாக உள்ளதா?
ஹோல்ட் ஆன்.
அந்த சீடியை அதிகாரிகளிடம் கொடுத்தது சாட்சாத் பாக்கர் தான்.
இந்த செய்தி அறிந்த பிஜேவின் அடிவருடிகள் பாக்கரின் மீது கடுங்கோபத்தில் இருப்பதாக அறிய முடிகிறது.
பாக்கர் ஏன் அப்படி நடந்து கொண்டார்?
ரதி மீனா பேருந்து சம்பவத்தை தேவைக்கு அதிகமாகவே கிளுகிளுப்பாக்கி உலகம் முழுவதும் பரபரப்பாக்கிய கிரிமினல் பிஜே, தன்னை கேவலப்படுத்தியதாக கருதிய பாக்கர் சந்தர்ப்பத்தை எதிர்நோக்கி காத்திருந்ததாகவும், கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி பிஜேவை சிறைக்குள் தள்ளிவிட்டதாக ததஜவினர் கடும் சந்தேகத்தில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாக்கரின் சதியால் கைதானாரா பிஜே என்பது தான் இப்பொழுது ஹாட் டாபிக்.
மேலும் விபரங்கள் விரைவில்.. .. ..
---மண்ணடிவாசி.
0 Comments:
Post a Comment
<< Home